Archive for ஒக்ரோபர் 20th, 2008

விவாத மேடை 20.10.2008

இன்றைய விவாதங்களை இங்கு தொடரலாம்.. 

அசோக் தங்களின் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை,  இந்த மாத இறுதி வரை காத்திருந்து பேப்பர் டிரேடு மூலமாக சோதித்து பார்ப்பது இல்லை அதில் இறங்கி ஆழம்(ரிஸ்க்) பார்ப்பது இந்த இரண்டு வழிகள் தான்.

திரு ரமேஷ் குமார்.  பங்கு வணிகத்தை சூதாட்டமாக என்னால் ஒப்பு கொள்ள இயலாது.. சூதாட்டம் என்பது மொத்தத்தையும் இழப்பது.  உதாரணத்திற்கு குதிரை பந்தயம்.

ஓடுகின்ற குதிரை அனைத்திலும் பணத்தை கட்டுகிறோம்….  ஒரு குதிரை தான் வெற்றியடையும் அதில் பணத்தை கட்டியவர் மட்டுமே வெற்றியாளர்.  மற்ற குதிரைகளில் கட்டிய பணம் அப்படியே போய் விடும், யாரும் உங்கள் குதிரை 2வது இடம் வந்தது அதனால் 75%,  மூன்றாவது வந்த குதிரைக்கு 50% என்று நமது பணத்தை திருப்பி தருவது இல்லை, இதே தான் அனைத்து சூதாட்டத்திற்கும் பொதுவான விதி அப்படி இருக்கையில் எந்த வகையில் பங்கு வணிகத்தை சூதாட்டமாக சொல்ல முடியும்.

இங்கு ஒரு நிறுவனத்தின் பங்கினை உதாரணத்திற்கு ரிலையன்ஸின் பங்கினை 2500/- க்கு வாங்குகிறோம்,   அது ஒரே நாளில் 25/- ஆக போவதில்லை,  100, 50 என்று தான் ஒவ்வொரு நாளும் குறைகிறது.  எந்த நிலையில் வேண்டுமானாலும் நாம் குறிப்பிட்ட நஷ்டத்தில் வெளியேறலாம்.  அது அவரவர் மன நிலையை பொறுத்தது.  இப்படி உங்களால் எந்த சூதாட்டத்தில் வெளியேற முடியும். 

நீங்கள் கூறியது போல் – அந்த நிறுவனத்தின் லாப நஸ்டத்தை பார்த்து முதலீடு செய்தவர்கள் யாரும் இன்றும் வெளியேற வில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் அசைக்க முடியாத நிலையில் உள்ளது ஆண்டு தோறும் டிவிடண்ட் வழங்கி வருகிறது, இன்னும் பெரிய வளர்ச்சியை நோக்கி அதன் பயணம் அமைந்துள்ளது.  அப்படி இருக்கையில் நமது முதலீடு அந்நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது என்றால் 2500 போனால் என்ன 250 ஆனால் என்ன என்று அமைதியாக காத்திருக்க வேண்டும். அப்படி எத்தனையோ மக்கள் காத்திருக்கிறார்கள்.  ஆனால் பலர் நிறுவனத்தின் லாப நஷ்டத்தில் அக்கறை கொண்டு முதலீடு செய்வதில்லை,  பங்கு வணிகத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தில் கிடைக்கும் அதிக லாபத்திற்கு ஆசை பட்டுதான் முதலீடு செய்கிறார்கள்.  அதில் லாபமும் உண்டு நஷ்டமும் உண்டு.   இன்னும் விரிவாக எழுதுகிறேன். இப்படி பங்கின் விலை உயரும் என்று எதிர் பார்த்து முதலீடு செய்து அதன் விலையேற்றத்தால் கிடைக்கும் லாபத்திற்கு ஆசைபாடுபவர்கள் அதை தவிர்த்து தின வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

 

இன்றைய சந்தையின் போக்கு 20.10.2008

அனைவருக்கும் வணக்கம்,

தீப திரு நாளை கொண்டாடுவதற்கு அனைவரும் தயாராகி கொண்டிற்கும் இந்த வேளையில் நம்ம அண்ணன் நிப்டியாரும் இந்த தீபாவளியை வெகு விமரிசையாக (ஏற்றத்துடன்)  கொண்டாட ஆயத்தமாகிறார் என்று நினைக்கிறேன்.  விரிவாக பார்ப்போம்.

டெக்னிகல்

 நாம் 2 பார் கீ ரிவர்சல் என்ற அமைப்பை பற்றி ஆகஸ்டில் பேசினோம்,  அதனுடைய இன்றைய நிலை என்ன என்பதை பார்ப்போம்..

நாம் ஆகஸ்ட் மாதம் எழுதியது –  இந்த அமைப்பு வாராந்திர சார்ட்டில் அமைந்துள்ளது..  10 வாரங்களுக்கு இதன் தாக்கம் இருக்கும்.  4560 ஐ சந்தை உடைத்து மேலே உயராது என்று. 

இந்த அமைப்பு உருவாகி சென்ற வாரத்துடன் 10 வாரம் மூழுமை அடைந்து விட்டது.. அதன் தாக்கம் இனி இருக்காது.   சரி அதன் தாக்கம் முடிவடைந்ததுக்கு வேறு அறிகுறிகள் உருவாகியுள்ளாதா..? என்றால் ஆம் சில வாரங்களுக்கு சந்தை கரடியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் என்று கருதுகிறேன்.. எப்படி என்றால்?.

இந்த படத்தை பார்ருங்கள், முதல் சரிவு ஒரு 8-9 வாரத்தில் முடிவடைந்தது.. அதன் பிறகு ஒரு ஹேமர் என்ற அமைப்பு உருவாகி மாற்றத்தை காட்டியது. 

தற்போது தொடர் சரிவுக்கு பிறகு ஒரு இன்வர்ட்ட் ஹேமர் என்ற அமைப்பு உருவாகியுள்ளது.  அதாவது சென்றா வாரத்தின் கீழ் நிலை ஒரு வலுவான சப்போர்ட் ஆக இருக்கும் (சில வாரங்களுக்கு)  

சரி இது நமது சந்தையின் போக்கு,  ஆனால் கடந்த ஒரு மாதமாக சந்தை உலக பங்கு சந்தைகளாலும் குறிப்பாக அமெரிக்க பங்கு சந்தையாலும் வழி நடத்த படுகின்றன. அப்படி இருக்கையில் இன்னும் அமெரிக்கா சரிவடைந்தால் ?? என்று விதன்டா வாதம் செய்பவர்களுக்கு..   ஆகஸ்ட் மாதம் நமது அண்ணன் நான் கரடியின் கைகளுக்கு செல்கிறேன் என்று முன்னறிவிப்பு (2 பார் கீ ரிவர்சல்) செய்த போது,  அமெரிக்காவில் இந்த நிலைமை இல்லை.  பின் எப்படி  ஆகஸ்ட் 2 வது வாரத்திலேயே FII’s / Treaders ன் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்படுவதை காட்டியது. ??

இதை எழுதுவதற்கு முன்பாக டவ் ஜோன்ஸ் சார்ட் பார்த்தால்.. அங்கும் வாரந்திர சார்டில் ஒரு இன்சைடு பார் உருவாகியுள்ளது. அங்கும் 8000 என்பது தற்போதைய சப்போர்ட்டாக இருக்கும் என்று தெரிகிறது.

தற்போதைய சரிவு புதியதல்ல ஜனவரி சரிவின் மீதம்/தொடர்ச்சி தான். இரண்டு முறை அதிலிருந்து மீழ்வதற்கு (Relief Rally) முயற்சித்தது ஆனால் அதில் வெற்றி பெறவில்லை.

 

அதே கண்ணோட்டத்தில் டவ் ஜோன்ஸ் ஐ பார்ப்போம், அவர்கள் கடந்த 4 வருடத்தில் ஒரு சீராண ஏற்றத்தில் தான் இருந்துள்ளார்கள் ஆனால்  நமது ஏற்றத்தின் வேகம் மிக மிக அதிகம். ஆனால் அவர்களின் வீழ்ச்சியின் வேகம் தான் அதிகம் ஆனால் நம் வேகம் குறைவு தான்.

டெக்னிகல் விசயம் போதும் – இந்த வாரம் ஒரு முக்கியமான வாரமாக அமையும், அது இனிதாகவும் சுகமாகவும்  அமைய வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும்.  அடுத்த வாரம் திபாவளி அப்போது நடக்கும் லக்ஷ்மி பூஜை 1 மணி நேர வணிகத்தின் போது இந்த ஆண்டு ++இல் முடிவடையும் என்றும் எதிர் பார்க்கிறேன். அதுவும்  சந்தையின் ஒரு செண்டிமெண்ட் ஆகையால்.

இன்றைய சந்தை

இன்றைய துவக்கம் சிறியஅளவில் கேப் அப் ஆக இருக்கும்,   3120 முக்கியமான தடை கல்லாக இருக்கும் அதனை அடுத்து 3155 / 3180 / 3255 ஆகியவை இருக்கும்.

குறுகிய கால முதலீடு

Bongaigaon Refinery & Petrochemicals Ltd  – தற்போதைய விலையான 44 இல் வாங்கலாம் இலக்கு விலை – 65.00  ஸ்டாப் லாஸ் 35-37/-

பரிந்துரைகளின் செயல் பாடு

 

Friday, October 17, 2008
Cash and Future -Day Trading
Calls Target Result
Sella DlF 3xx 310/305/300 Target Achieved – Low – 285
SELL ONGC 8xx 790.00 Target Achieved – LOW – 760
Future
Calls Target Result
SELL NIFTY AT 33XX 3245/219/175/ All Targets Achieved
இன்றைய நிப்டியின் முடிவு என்ன?
தங்களின் பதில்களை இந்த பதிவிலேயே பின்னூட்டமாக எழுதாலாம்.