இன்றைய சந்தையின் போக்கு 17.10.2008


விருப்பம் இல்லை என்றாலும் சிறிது காலத்திற்கு அமெரிக்க சந்தைகளை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.  நேற்றையதினம் பங்காளி DOW  – ZIC ZAC ஏற்ற இறக்கத்துடன், இறுதியில் 400 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்தது நல்ல விசயம்.

நமது சந்தையை பொறுத்தவரை நேற்று எதிர் பார்த்தது போலவே நகர்ந்தது. 3100 க்கு கீழே நலுவாததும்.  மதியம் ஏற்பட்ட எழுச்சியும் நம்பிக்கையான விசயங்கள். 

இன்றைய துவக்கம் 30-40 புள்ளிகள் கேப் அப் ஆக துவங்கி அந்த இடைவெளியை நிரப்பும் பொறுட்டு கிழே வரலாம், 

அல்லது நேற்றைய முடிவில் இருந்து மந்தமாக துவங்கலாம்.   3360-3400 க்கு மேல் நிலைப்பட்டால் கொஞ்சம் மீழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இல்லையென்றால் சாண் ஏற முழம் சருக்கும் விளையாட்டு தான்.

இன்று துவங்கியுள்ள ஆசிய சந்தைகளும் ஒரு வித குழப்பதில் உள்ளது.  சீனாவின் நிறம் சிவப்பு, ஜப்பானின் நிறம் பச்சை என்று.  

குறுகிய கால முதலீட்டிற்கு.

Union Banka Of india –   இலக்கு விலை –  190.00   பாருங்க அஞ்சா நெஞ்சன் மாதிரி 90 இல் இருந்து ஏறியது இன்றும் 161 இல் அசையாமல் நிற்கிறது.  (ஆச்சரியம் இங்கு இதை எழுதி விட்டு பிஸினஸ் லைன் பார்த்தால் அவர்களும்  பரிந்துரைத்துள்ளார்கள்.)

DLF  –   இலக்கு விலை –  450/475.
Advertisements

6 responses to this post.

 1. சீற்றங்கள் இல்லாத அமைதியான நாளாக இருக்கும் என்பது உண்மை. ஆனால் அனைத்து சந்தைகளும் over come their losses. போற போக்க பார்த்தா இன்னைக்கு நம்ம ஆளு neutral போட்டாலும் போடுவான் போல.

  சாய் சார் UBI உண்மையிலேயே சிறப்பான பரிந்துரை. நீங்கள் முன்பு ஒரு முறை கூறியதில் இருந்து அதனை பார்கிறேன். நீண்ட கால அடிப்படையில் மிகவும் சிறந்த முதலீடு…

 2. வரலாறு நமக்குத் திரும்பத் திரும்ப ஒரே பதிலைத்தான் வழங்குகிறது. எப்போதுமே blue chip எனப்படும் பெரிய நிறுவனங்களே கடைசியாக சரிவு காணும். அதன் பிறகு இறக்கம் பெரிதளவு நின்றுவிட்டதாகப் பொருள் காணலாம். தற்போதையை நிலை அப்படித்தான் தோன்றுகிறது.

  நிதியமைச்சர் சிதம்பரத்தின் வார்த்தைகளைக் கடன் வாங்கினால், “பயத்தில் முடிவெடுக்காதீர்கள். Take informed decisions”

  வாரன் பஃபட் வார்த்தையில் சொன்னால், “மற்றவர்கள் பேராசை கொள்ளும் போது பெரும்பயம் கொள்க, பெரும்பயம் கொள்ளும் போது பேராசை கொள்க”

  வரலாறு இன்னொன்றையும் திரும்பத் திரும்பச் சொல்கிறது: “பங்குச் சந்தையின் ஒவ்வொரு ஏற்ற இறக்கச் சுழற்சியிலும் பழைய முதலீட்டாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள், புதிய முதலீட்டாளர்கள் உருவெடுக்கிறார்கள்”

  பழையவர்கள் வெளியேறுவதற்கும், புதியவர்கள் உருவெடுப்பதற்கும் இடையே கால அவகாசம் தேவைப்படுகிறது. அது சில மணி நேரங்களில் இருந்து சில ஆண்டுகள் வரை நீளலாம்
  I READ THIS IN NET

 3. ஜான்சி அக்கா கலக்கல்..

 4. thank you for your information sir.

 5. ஜான்சி அக்கா,

  தங்களுடைய பின்னூட்டம் மிகவும் அட்டகாசம். தங்களது கூற்று முற்றிலும் உண்மை. அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

  Warren Buffet எப்போதுமே காலையின் ஆதிக்கத்தில் சந்தை இருக்கும்பொழுது உள்ளே வரமாட்டார். ஆனால் அந்த மாதிரியான நேரங்களில்தான் நம்மை போன்றவர்கள் உள்ளே வருவோம்.

  ஆனால் அவர் சந்தை நன்கு இறங்கியிருக்கும் போதுதான் உள்ளே வருவார். நாம் அப்போது சந்தையைக் கண்டு மிரண்டு கொண்டு இருப்போம் தற்போது உள்ளது போல.

  அவர் மேற்கொள்ளும் முதலீடுகள் நீண்ட கால முதலீடுகள் மட்டும்தான். ஒரு முதலீட்டை மேற்கொள்ள அவர் எட்டு ஆண்டுகள் கூட சந்தை இறங்கும் வரை பொறுத்திருந்துதான் உள்ளே வருவாராம்.

  அந்த பொறுமைதான் அவரை இன்று புகழின் உச்சிக்கு கொண்டு சென்று இருக்கிறது. உலகமே அவரை பார்த்து பாடம் கற்றுக் கொண்டு இருக்கிறது.

  அவரை பற்றி எழுத வேண்டுமென்றால் பல பக்கங்கள் எழுதித் தள்ளலாம். ஆனால் நமக்கு நேரம்தான் இல்லை.

 6. TRY HIGHLY TRADED VOLUME STOCKS IN NSE FOR INTRADAY. FOR EXAMPLE IF YOU TRY RNRL, CHAMBAL FERTILISERS, IFCI WHICH ARE HIGH VOLUME TRADED STOCKS. GO SHORT/LONG ACCORDING TO MARKET TREND. IF YOU TRADE IN 100s or 1000s , YOU CAN EARN 500 TO 2000 RUPEES PROFIT. THE STOCKS WILL GO 0.50 PAISE TO RE.2 ON EITHER SIDE. IF YOU TRADE IN 1000s , THEN 0.15 TO 0.25 PAISE PROFIT PER SHARE IS ENOUGH. THIS IS THE ONE OF SIMPLE TRADING TECHNIQUE IN INTRADAY TRADING WHICH I AM FOLLOWING.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: