விவாத மேடை. 15.10.2008


இன்றைய விவாதங்களை கருத்து பறிமாற்றங்களை இங்கு தொடருங்கள்..  அசோக் அவர்கள் கேட்ட ஆப்ஸனில் வாங்க ஆள் இல்லை என்றால்? என்ற கேள்வி எனக்கும் புதிய தகவல் அதற்கு நண்பர் மோகன் ராஜ் அளித்த பதிலும் எனக்கு தெரியாததே… அதே போல் பிரியாவின் Core Project பற்றிய கேள்வி, ஹரினியின் பெட்ரோல் விலை குறைவு பற்றிய கேள்வி ஆகியவை புதிய தகவல்களை தருகிறது. இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்.

இன்னும் அதிகமான பங்கு வர்த்தகர்களுக்கு நமது வலை தளத்தை தெரிய வில்லை,  தினமும் புதியவர்கள் வருகிறார்கள்.  உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.  நன்றி.

 

70 responses to this post.

 1. Posted by தென்றல் on ஒக்ரோபர் 15, 2008 at 7:18 முப

  தினவர்த்தகம் எளிதா? 90சதவிகிதம் இழந்தவர்களே எனச்சொல்கிறார்கள்.. அந்த 90% யாருக்குப்போய்ச் சேர்கிறது? பரிந்துரைகள்கூட இங்கே எப்படி நீச்சல் அடிப்பது என்று பாடம் சொல்லிக் கொடுப்பதுபோல. அதைநம்பி நீரில் குதித்து மூழ்கியவர்கள் நிறைய.. தினவர்த்தகத்தில் 10ஆயிரத்தை 20ஆயிரம் ஆக்குவது எளிது.. இதில் வெற்றி 20ல் 10ஆயிரத்தை வெளியே எடுத்துவிட்டு மீண்டும் 10ஆயிரத்தை 20ஆக்கமுடிந்தால்.. நிச்சயம் உங்கள் பயணம் வெற்றியை நோக்கி.. ஆசைப்படாத மனம் வேண்டும்.. அயராத திடம் வேண்டும்.. போதும் என்றமனமே பொன் செய்யும் மருந்து- பொன்மொழி சந்தையின் வேதம். இது சரியா தவறா தெரியாது! தெரிந்தவர் சொல்லுங்கள்- இது எனக்கு கெட்டபின் வந்த ஞானம்.

 2. தென்றல்,

  நீங்களே,

  கேள்வியும் கேட்டு பதிலையும் சொல்லி விட்டீர்கள்..

  உண்மைதான்.. அதிக மானவர்கள் இங்கு நஷ்டமடைகிறார்கள். ஆனால் 80% , 90% என்பது கொஞ்சம் அதிகபடியான மதிப்பீடு.

  சரி நஷ்டமடைய அவர்கள் தான் காரணம், ஒரு தொழில் தர்மம் என்பது – நியாயமான லாபத்தை எதிர் பார்த்ததாக இருக்க வேண்டும். அதை விடுத்து 10 யை 20 ஆக்கும் டபுளிங் – காக பார்த்தால் நிச்சயம் நஸ்டத்தில் தான் முடியும்.

  என்னிடம் ஆலோசனை வாங்குபவர்களிடம் நான் சொல்வது இதுவே…

  என்னிடம் 2500 கட்டிவிட்டு 2.5 லட்சம் சம்பாதிக்க ஆசை படாதிர்கள். சின்ன சின்ன லாபத்தில் திருப்தி அடையுங்கள். சந்தை எங்கும் போகாது என்றும் இருக்கும் ஆனால் நாம் என்றும் இத்தொழிலில் இருக்க வேண்டும் என்று ஆசை படுங்கள்.

  ஏற்கனேவே சொன்னது போல்

  ஆசைதான் நம்மை நல் வழி நடத்துகிறது, தவறில்லை பேராசைதான் இங்கு நஷ்டத்திற்கு அழைத்து செல்கிறது…

 3. தென்றல் நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் சரி.உங்கள் வரிசையில் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்.நம்ம சாய் சார் சொன்ன மாதிரி, நம்ம பணத்தை வேற எதில் போட்டாலும், 2-4% வட்டி தான் கிடைக்கும்.ஆனால் சந்தைக்குள் பணத்தை போட்ட நம்ம மக்கள் உடனே குறைந்தபட்சம் 50% எதிர்பார்பது தான் பெறும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

 4. சாய் GoodMorning! இன்று இன்றைய போக்கு பகுதியை காணோம்?

 5. பேராசை பெரும் நஸ்டம்

 6. அனைவருக்கும் காலை வணக்கம்

  பிரியா இதோ எழுதி கொண்டிருக்கிறேன்…

 7. டியர் சார்,
  தமிழில் டெக்னிகல் அனலிசிஸ் பற்றி தினம் அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறையாவது எழுதுங்கள்.கண்கள் இல்லா குறுடன் போல உள்ள எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
  நன்றி.

 8. வணக்கம் சாய் சார் ,உங்களுடைய கூற்று முற்றிலும் சரியே,இலவசமாக கிடைப்பதை இளப்பமாக நினைப்பது நமக்கு குறிப்பாக தமிழர்களுக்கு கைவந்தகலை .நானும் இதுபோல் சில பயிற்சி வகுப்புகளுக்கு சென்றுவிட்டு வெளியில் வரும்போது என்னனடந்ததேன்பதே ,தெரியாத குழப்பத்தில் வந்துள்ளேன். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு அனுபவம் இது போன்று இருக்கலாம்.நன்றி

 9. Dear Sir,

  Day trading is good, normaly iam doing whenever market loose 700 (bse) points , 2 rs gain is good for trading,also your recomendation is valid most of time, thanks

  Murugesan
  Abudhabi

 10. Posted by சுரேஷ் குமார் வீ on ஒக்ரோபர் 15, 2008 at 9:39 முப

  தென்றல்…

  தாங்களும் என்னைப் போலவேவா மன்னா…

 11. sai,
  sir vanakkam, thangalin internet arumai, naan siriya alavil muthliidu seythuvittu sinna sinna day tradem seythu varukiren aanaal periya laabam illai. enn maathiriyaana veettil irukkum penkalukku, sinna sinna labam paarkka kuraintha kattanaththil sevai thanthaal uthaviyaaka irukkum.
  enathu muthleede 20000 thaan. enakku thinasari 200-300 kitaiththaalum santhosam.

  nari.

 12. மலர் மேடம்,

  உங்களை போன்று மேலும் பல்ர் இதே போன்று
  கேட்டுள்ளார்கள்,

  நல்ல விசயம் தான், பெரும்தனக்காரர்கள்/மூழு நேர வணிகர்கள் டிப்ஸ் வாங்கி / டெக்னிகல் கற்று பிழைத்து விடுகிறார்கள். அதிகம் நஷ்டம் அடைவது பகுதி நேரமாக செய்பவர்களும் சிறிவர்க்ளும் தான்.

  எனது நோக்கம் பணம் அல்ல, நான் தரும் ஆலோசனை லாபத்தை தர வேண்டும் அதனால் எனக்கு சிறிய ஊதியம் கிடைத்தால் போதும்.

  குறைக்கலாம் சொல்லுங்கள் நண்பர்களே.. எந்த அளவு குறைத்தால் பயனுள்ளதாக இருக்கும், செய்துடால்ம் திபாவளி தள்ளுபடி..

 13. எனது பின்னூட்டங்கள் அதிகமாக மட்டுறுத்தலுக்கு மாட்டுகிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் பதிவு ஆசிரியர் இதை பார்த்து விரைவில் சரி செய்யுமாறு கோரிக்கை வைக்கிறேன். :)))

 14. இன்று காலையிலேயே மின்சாரத்துறை தமது கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து இங்க பீஸ புடுங்கி விட்டார்கள். எனவே இன்றைய விவாதத்தில் நான் பங்குபெற முடியாத நிலை…

 15. சாய், கொஞ்சம் coreproject சார்ட் எப்படி இருக்குன்னு சொல்றீங்களா.

 16. சாய்,

  தங்களது வலைப்பதிவு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது.விவாத மேடை சிறப்பாக வழிநடக்கிறது. அதில் கலந்து கொள்ளாவிட்டாலும் கூட அதனை பார்ப்பவர்களுக்கு மற்றவர்களின் கேள்வி பதில்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.நிறைய தெரியாத விஷயங்கள், நம் மனதில் கேள்வியாக இருக்கும். ஆனால் கேட்க தோன்றாது.உங்கள் விவாத மேடையில் அது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி. விவாத மேடையில் கலந்து கொள்பவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.அதை பார்க்கும் எங்களுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.

  தொடரட்டும் உங்கள் சேவை.
  வாழ்த்துக்கள்.

  விவாத மேடையில் கலந்துகொள்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  keep it up.

 17. coreproject – வாங்கவா? இல்லை ஹோல்டிங் இருக்கா?

 18. வாங்கத்தான் சாய்

 19. வாங்கலாம் என்பது எனது நிலை,
  இன்னும் கீழே சென்றாலும் 40-45 க்கு
  கீழே செல்லாது என்று நினக்கிறேன்.

  இல்லை 2/3 நாட்கள் காத்திருக்கலாம்
  நிப்டி 3200-3000 என்ற கூச்சல் மீண்டும் கேட்கிறது.

 20. ரொம்ப நன்றி சாய்.

 21. ஹலோ சாய்,

  இந்த உள் குத்து, சித்தர்கள், மற்றும் பல சொற்றொடர்கள் நாங்கள் எங்கள் வட்டாரத்தில் பயன் படுத்தப்படும் மொழிகள். நிங்களுமா,

  ஓகே வேர் ஆர் யு பரம் மிஸ்டர் சாய்

  ஜெய் ஹிந்து
  ரமேஷ்

 22. கண்ணதாசனை பெற்றெடுத்த காரைக்குடி… நான் ஒரு நாடோடி, பிறந்தது ஓர் ஊர், வளர்ந்தது சில் ஊர், பிழைப்பது ஓர் ஊர், இன்று இருப்பது ஓர் ஊர்.. பயணம் அதுவும் தனியாக என்றால் அப்படியொரு இஸ்டம். வழி துனை புத்தகங்கள் தான். எதார்த்தமான வார்த்தைகள் எழுத்துகள் பிடிக்கும்.. அப்படி மனதில் தங்கிய வார்த்தைகள் தான் இவை.

  உங்களுக்கு எந்த ஊர்…

 23. My guess nifty spot level is 3444.15 @3.30pm

 24. தென்றல்,

  தினவர்த்தகமோ குறுகிய/நீண்ட கால முதலீடோ, லாப/நஷ்டங்கள் நமது கைகளில்தான் உள்ளது.

  1. சந்தை எந்தப் பக்கம் போனால் என்ன, எனது லாபம் இன்று இவ்வளவு வேண்டும், அதேசமயம் இந்த அளவு நஷ்டம் வந்தால் வெளியே வந்து விடுவேன்.

  2.எவ்வளவுதான் சாதக/பாதக விசயங்கள் சந்தையில் தென்பட்டாலும், நான் இந்த அளவு லாப/நஷ்ட நிலைகளில் வெளியேறி விடுவேன் என டிரேடிங் செய்தோமானால், நீண்ட நாள் சந்தையிலும் தாக்கு பிடிக்கலாம், கணிசமான் லாபமும் மீட்டலாம்.

  ஆனால்,இன்றைய சந்தைகளில் இது போன்ற நிலையை எடுக்க மிகுந்த மன உறுதி வேண்டும்.ஏனெனில்,சந்தை அந்த அளவு மிகுதியான லாப/நஷ்டங்களை குறுகிய கால அளவில் அனைவருக்கும் வாரி வழங்குகிறது.

 25. Niftly closer 3440.3

 26. Fine sai

  My native is Kumbakonam, spent more times in other states, currently (more than 10 yrs) in Chennai.

  Regards
  Ramesh

 27. To day’s closure would be 3353

  Regards
  Ramesh

 28. இன்றைய போட்டி முடியுற்றது என்று நினைக்கிறேன்.
  பாசில் – அ சேர்த்து 16 பேர்னு நினைக்கிறேன்.

 29. உயர்திரு சாய்,

  தங்களின் தின வணிக குறிப்புகள் மிகவும் அருமை. அதிலும் நேற்று தாங்கள் கொடுத்த அனைத்து தகவல்களும் மிகவும் அருமையாக நிறைவேறின. தங்களின் chart analysis திறமை என்னை வியக்க வைக்கிறது.

  வாழ்த்துக்களுடன்,
  ச. கார்த்திகேயன், கரூர்.

 30. சில வேலையின் காரணமாக கடந்த சில நாட்களாக வலைத்தளம் பக்கம் வர முடியவில்லை அப்பப்பா கடந்த இரண்டுநாள என்ன ஒரு ஆரோக்கியமான விவாதங்கள் கருத்து பறிமாற்றங்கள் இங்கு நடக்கின்றது படித்து முடிக்கவே சில மணி நேரம் தேவை… நாமும் நமக்கு தெரிந்த சில விசங்களை போடுவோம்…..

  GUJNRECOK அல்லது Sesa Goa Ltd. (இதை பத்தி Rediff Money பக்கத்துலா சில நாள் முன்பு வாங்கலாம் சொல்லிக்கிட்டே இருந்தாங்க யாரவது விபரம் தெரிந்த பதிவு போடுங்க…)

  3I INFOTECH LIMIT (133 61% Loss) and NIIT (70 55% Loss) என்ன செய்யலாம் இதை? மேலே வங்கலாம் அல்லது இன்னும் இறங்கட்டும் வைட் பண்ணலாமா?….

 31. என்ன செய்றது பிரியா… டெக்கிகல் யுசு பட்டன அமுக்கு நேரம் பார்த்து Browser ஹேங்க ஆயுடுட்சு IE7.0 இப்ப இப்படித்தான் செய்யுது…

  ஏன் சாய் நீங்க 20-50 பாய்டு கம்மியா சொன்னா அதுக்கு தகுந்த மாதிரி ஒரு மாசம்ங்கிறது பதிலா எதே கம்மியா பார்த்து கொடுங்கலேன்?…..

 32. ஆஹா இன்று 16 பேரா சந்தோஷம் கூடிய விரைவில் 160 ஆகட்டும் தினசரி ஒரு வெற்றியாளரை எதிர் பார்க்கிறேன்…

  ஈரோடு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, 5 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு மாதம் இரு முறை வந்திருக்கிறேன்.. அனைத்து இடங்களும் நன்கு பரிச்சயம்..

 33. dear sai
  oct. nifty will end in 3424

 34. நானே சொல்கிறேன்

  சிம்பா – திருப்பூர், ஆர் கே/ மோகன்ராஜ் / கார்திகேயன் – கருர், பைசல் – சிங்கப்பூர்

 35. நம்ம வலைப்பூ பல மாவட்டங்களை இணைத்திருக்கும் போல

 36. SAI

  NOW, WHERE ARE YOU OPERATING FROM ?

 37. மாவட்டம் என்ன பல நாடுகளையே இனைக்கிறது..

  துபாய், மலேசியா சிங்கபூர், அபுதாபி லண்டன், யூ எஸ் என்று….

  (கோபால் பல் பொடி விளம்பரம் போல் இருக்கிறதா?)

 38. கார்த்தி,

  தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அனைத்து பெருமையும் சாய் + கணேஷையே சேரும்…

  இதுவும் ஜோதிடம் போல் தான் சிலருடைய கணிப்பு.. சரியாக இருக்கும் அது போலத்தான்.

  அப்படியொரு ஜோதிடர் உங்கள் ஊர் அருகில் (சிவகிரியில்) இருக்கிறார்… அவரை சந்தித்த பிறகு தான் எனக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வந்தது..

 39. செந்தில் கேட்ட கேள்வி,gap up, gap down ஆக என்ன காரணம்.யாராவது பதில் தெரிந்தால் சொல்லலாமே.சிம்பா இன்று 50 வது post க்கு நான் முந்திட்டேன்.

 40. பைசல் – நீங்கள் கொடுத்துள்ள பங்குகளை பற்றி மாலை எழுதுகிறேன்…

  நிப்டி -கியுஸ் மீயூசிக் சேர் மாதிரி தான் ஆளுக்கு ஒரு எண் சொன்னால் ஒருத்தர் வின்னர்..

  இன்னும் சுவரசியமாக்க ஆலோசனைகள் / விதி முறை மாற்றங்கள் வரவேற்க படுகின்றன.

  மனிகண்ட்ரோல்.காம் இல் இறுதி இரண்டு இலக்கத்தை 3490.70 என்றால் புள்ளிக்கு அப்பால் வரும் இரண்டு இலக்கத்தை வைத்து போட்டி நடத்தினார்கள்.

 41. gap up, gap down ஆக என்ன காரணம்.யாராவது பதில் தெரிந்தால் சொல்லலாமே

 42. ப்ரியா உங்க கேள்விக்கு ஏற்க்கனவே 2 பதில் வந்திருக்குன்னு நினைக்கிறேன். இதற்க்கு 2 அல்லது 3 பதிவுக்கு முன்னால பார்க்கவும்.

 43. சாரி நான் பார்க்கலை.பார்த்துக்கிரேன்.நன்றி சிம்பா(நண்பா)

 44. gap up, gap down பற்றி சிம்பா முதல் விவாத மேடையில் கேட்டிருந்தார்.. அதற்கு ஆர் கே பதில் சொல்லி இருந்தாரே….

  சிம்பா பாருங்க அதை ரீ போஸ்ட் செய்துடுங்க…

 45. மாலை சில பின்னூட்டங்களை எடுத்து விடுவேன் முக்கியமான தகவல் பறிமாற்றங்களை தவிற…

  படிப்பதற்கு எளிதாக இருக்க….

  ஆகையால் தவறாக நினைக்க வேண்டாம் .. அப்போது 50 வது இடம் யாருக்கு கிடைக்க போகுதோ தெரியாது…

 46. SAI

  I GOT THE ANSWER I FAILED TO SEE YOUR EARLIER COMMENT, SINCE I AM TRAVELLING, I HAVE SOME WIRELESS CONNECTIVITY PROBLEM

  ANY WAY I HAVE GIVEN MY TO DAYS CLOSURE, HOPE IT REACHED TO OUR SITE.

  REGARDS
  RAMESH

 47. நாளின் ஆரம்பத்தில் உண்டாகும் gap up மற்றும் gap down க்கு off market orders தான் காரணம்.மற்ற காரணிகளை பொறுத்து, சந்தை ஆரம்பிக்கும் முன்னரே நிப்டி பங்குகளில் ஆர்டர்கள் காலையில் போட பட்டு விடுகின்றன. முந்தைய முடிவு விலைகளை விட அதிக விலைக்கோ அல்லது குறைந்த விலைக்கோ..முக்கியமாக தரகர்களால் நடக்கும் ஐந்து நிமிட ஆக்சன் மார்கெட்டில் இது முடிவாகிறது..

  thagaval. R.K

 48. நன்றி சிம்பா மற்றும் ஆர் கே.

 49. கூடவே ADR / SGX Nifty ஆகியவற்றில் நிகலும் மாற்றமும் ஒரு காரணம்… டெக்னிகல் காரணம் மிக குறைவு.. ஆனால் புற காரணங்கள் அதிகம் தீர்மானிக்கின்றன. அதன் அடிப்படையில் கேப் – அப் அல்லது கேப் டவுன் நிகழ்கிறது.

 50. volume based selling happening in CORE PROJECT. so better stay away from that stock. this is the second time happening like this.

 51. ஏகப்பட்ட பேர் இந்த வலைப்பூவை படித்தாலும், கொஞ்ச பேர் மட்டும் தான் விவாதத்தில் பங்கு பெருகின்றனர்.ஏன் எல்லோரும் பங்கெடுத்துக்கலாமே.

 52. நல்ல கேள்வி,

  ஆனா அனைவரும் 9.55 க்கு டென்சன் ஆனார்கள் என்றால் 3.30 க்கு தான் நகம் கடிப்பதை நிறுத்தும் நிலையில் இருக்காங்க.. விவாத மேடையில் வேண்டாம் காலையில், ஒரு பின்னூட்டம் போட நேரம் இல்லாதவர்கள் அவர் அவர் சூழ்நிலை… நாம் என்ன சொல்ல முடியும்..

 53. மோகன்ராஜ் ம் 3346.65 னு சொல்லிருக்கார்

 54. Posted by தென்றல் on ஒக்ரோபர் 15, 2008 at 3:39 பிப

  வெட்டி அரட்டைக்கென தனிப்பகுதி ஒதுக்கி விடுங்கள்.. அங்கே அரங்கேரட்டும் கச்சேரிகள். சந்தைசார்ந்தவை தனியாக இருக்கட்டுமே. பயன்பெருவோர் பயப்படாமல் இருக்கட்டும்.

 55. நீங்கள் சொல்வதும் சரிதான் தென்றல்.வெட்டி அரட்டையை குறைக்க வேண்டும் போல.tension குறையட்டும்னு தான் இப்படி பேசிட்டிருந்தோம்

 56. ஹம்ம்ம் அப்போ நான் அப்பீட்டு….

  சந்தைகளின் நிலவும் இறுக்கமான மனநிலையை மாற்றவே இந்த முயற்சி. போகிற போக்கில் லாபம் பார்த்து செல்லலாம்.

 57. ப்ரியா நமக்கும் டென்ஷன்கும் ரொம்ப தூரம். நீங்க அப்போ அப்போ நம்ம வீட்டுக்கும் வந்துட்டு போங்க…

  http://pulithikkaadu.blogspot.com/

 58. தென்றல் தங்களின் கருத்துகளுக்கு நன்றி,

  இன்னும் அதிகமானவர்கள் கலந்து கொண்டால் இது மாறும், ஒருவர் ஒரு கருத்தை சொல்லும் போது அவரோ நானோ அதை அரட்டை என்று முடிவு எடுக்க முடியாது, அதை உணர்ந்ததால் தான்
  மேலே ஒரு இடத்தில் சொல்லி விட்டேன் மாலை இதில் இருந்து பல பின்னூட்டங்கள் நீக்க படும் என்று.. தினசரி அவ்வாறே..
  ஏற்கனவே கலந்துரையாட யாரும் முன் வராத சமயத்தில், வரும் ஒரு சிலரை அதை செய்யாதே இதை செய்யாதே என்றால் அவர்களும் பின் வாங்க நேரிடும்…

 59. உயர்திரு சாய்,

  அளப்பரிய திறமைகளை வைத்துக் கொண்டு மிகவும் அடக்கமாய் அவை அனைத்தும் இறைவனால் தான் என்கிறீர்கள். தங்களை நினைத்து உண்மையிலேயே வியக்கிறேன் சாய்.

  ஏனென்றால் technical analysis சம்பந்தமான வகுப்புகளை எனக்கு தெரிந்த பல பேர் கற்றுக் கொண்டு அது சம்பந்தமான மென்பொருளையும் வாங்கி வைத்து பார்த்தனர். சில நாள் மட்டும் பார்த்துவிட்டு அது அனைத்தும் ஏமாற்று வேலை என்றும் வீண் செலவு என்றும் கூறினர்.

  உண்மையில் அவர்களிடம் முழு அர்பணிப்பு இல்லை என்பதுதான் நிஜம். எதுவும் மிகவும் எளிமையாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். முழு ஈடுபாட்டுடன் உழைப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதுதான் அவர்களும் ஏற்க மறுக்கும் ஒரு விஷயம்.

  ஆனால் தாங்கள் இந்த “Technical Analysis” பற்றிய விஷயத்தில் உங்களையே அர்பணித்து கொண்டு உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் எண்ணம் முழுவதும் அதில்தான் மூழ்கியுள்ளது.

  இந்த அர்பணிப்பு எதிர்காலத்தில் உங்களை மிகவும் உயர்ந்த இடத்த்தில் வைக்கும். நீங்கள் கூறிய உங்கள் இரு நிறுவனங்களை கையகப் படுத்தும் உங்கள் எண்ணம் நிச்சயமாக இடேரும். சாய் + கணேஷ் இருவரும் என்றும் உங்களுக்கு துணை புரிவர்.

  தாங்கள் கூறிய அந்த சிவகிரி ஜோதிடரைப் பற்றி தகவல்கள் தெரிந்து கொள்ள ஆசை(ஜாதகம் பார்ப்பதற்காக).

  வாழ்த்துக்களுடன்,
  ச. கார்த்திகேயன், கரூர்.

 60. நானும் ஒரு நாளாவது பரிசு வாங்கிடலாம்னு நினைக்கிறேன்.முடிய மாட்டீங்குது…

 61. பைசல் தான் இன்றைய வெற்றியாளர்..

 62. வாழ்த்துக்கள் பைசல்

 63. அனைவருக்கும் மாலை வணக்கம்… மீண்டும் நாளை சந்திப்போம்…

 64. 50 விட்டாச்சு அதுக்காக 100 எப்படி விட முடியும். எதுக்கு இப்போ வந்தேன்னு பார்கறீங்களா.. R.B.I நடவடிக்கைக்கு ஒரு “o” போடத்தான்…

 65. டியர் சார்,
  தமிழில் டெக்னிகல் அனலிசிஸ் பற்றி தினம் அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறையாவது எழுதுங்கள்.கண்கள் இல்லா குறுடன் போல உள்ள எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
  நன்றி.

 66. நேத்து நல்ல டிப்ஸ் கொடுத்திங்கன்னு இன்வடர்லாம் ரெடி பண்ணி பார்த்த, விருந்தாளின்னு சொல்லி இந்த பக்கமே வராம போயிட்டியளே நாயமா

 67. Dear Friends,

  It is the doubt as well as question to you….
  15.10.2008(3.30pm)
  “UTVsof price in spot is Rs649.75 but
  in Future is 356.55(Oct),283.10(Nov)”

  How to utilize this share by going shaort in cash or by going long in future (oct or nov)????

 68. Dear Friends,

  Anybody know Which shares are holding by FII’s and the no of shares and amount still pending to sell??????

 69. hi

  nifty oct fut will open around 3120 (down by 7&)

  market freeze may not be ruled out, either at opening or by 12.45+PM.

  really a bad day.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: