இன்றைய சந்தையின் போக்கு 15.10.2008.


ஆஹா அண்ணன் நிப்டியார் இன்றே… நமது ஆசையை (3300) நிறைவேற்றி விடுவார் என்று நினைக்கிறேன்.  அவரின் பயணம் கீழ் நோக்கியததாகத்தான் இன்று இருக்கும்.

டவ் ஏறத்தாழ நமது சந்தையை பின்பற்றுகிறது. நேற்றும் ஒரு பெரிய ஏற்ற இறக்கத்திற்கு பிறகு சிறிய சரிவுடன் முடிவடைந்துள்ளது.

நமது சந்ததை நேற்றையதினம் கேப் அப் ஆனாலும் அதை தக்க வைத்து கொள்ள இயலாமல் போனது வருத்தமே 3650 க்கு மேல் நிலை பட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  3400 க்கு கீழ் நழுவினால் மேலும் பலவீனமடையும்.

இன்றும் அரசு ஏதாவது மாய ஜால நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என்ற அதிக எதிர் பார்ப்பு / வதந்தி நிலவுகிறது.  ஆனால் இப்போதைய பிரச்சினைக்கு காரணம் நாம் அல்ல. பணவீக்கத்தை கட்டு படுத்த மந்திரகோல் இல்லை என்றவர்கள்,  இப்போது எத்தனையோ மந்திர கோல்களை கையில் எடுப்பது ஆச்சரியமாக இருக்கு. ஆனால் இப்படி பங்கு சந்தைக்குள் திறந்து விடப்படும பணம் நாளை காணமல் போனால்?  

நேற்றையதினம் ரிசர்வ் வங்கி 20000 கோடிகளை வங்கிகளுக்கு கடனாக தர முன் வந்து வங்கிகளால் 3500 கோடிகளை மட்டும் தான் கோரப்பட்டுள்ளன.  எஞ்சிய தொகையை மீயுச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. 

இன்று கேப் டவுனாக தான் துவங்கும் (60-80 புள்ளிகள்)  அது மேலும் சரிவடைவதையும், மீழ்வதையும் அரசிடம் இருந்து எதிர் பார்க்கும் அறிக்கைகள் தான் தீர்மானிக்கும்.

ஆர் கே நானும் அவ்வப்போது போகிற போக்கில் டெக்னிகல் மற்றும் கருத்துகளை சொல்லி விட்டு தான் போகிறேன்.   ஒரு சிலர் தான் கவனித்து வருகிறார்கள்.  அண்மையில் ஒரு டெக்னிகல் வகுப்பு நான் சாய் கணேஷ் என்று சொல்லாமல் சென்று வந்தேன்.  இரண்டு நாள் வெரும் கப் அண்ட் கேண்ட்ல்,  ஹெட் அண்ட் சோல்டர், இன்சைடு பார், டோஜி டபுள் டாப் / பாட்டம்  என்று மூன்று நான்கு விசயத்தை வைத்தே வகுப்பு எடுத்தார்.  ஆனால் நல்ல சாப்பாடு போட்டார்கள்.   அந்த விசயங்களே தெரியாத மக்கள் இருக்கிறார்கள் என்பது அந்த வகுப்பு முடிந்த உடன் அவர்கள் ஆச்சரிய பட்டதிலேயே தெரிந்தது.  அதையே இங்கு நாம் எழுதும் போது யாரும் கண்டு கொள்வதில்லை. இலவசத்திற்கு உள்ள மதிப்பு அவ்வளவுதான். 

ஒரு சாதரண வணிகன் எச்சரிக்கையாக இருக்க, அதிகம் நஷ்டம் இல்லாமல் சின்ன சின்ன லாபம் பார்க்க ஒரு 3 மணி நேரத்தில் ரகசியங்களை சொல்லி விடலாம் ஆனாலும் யாரும் செய்வதில்லை.   

Advertisements

9 responses to this post.

 1. Posted by சுரேஷ் குமார் வீ on ஒக்ரோபர் 15, 2008 at 9:35 முப

  உண்மை தான் திரு. சாய்…..

  “இலவசத்திற்கு என்றுமே மதிப்பு இல்லை தான்…”

 2. மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  தங்களின் கட்டுரைகளை படிக்க ஆரம்பித்த நாள் முதல் நானும் மற்ற நிறைய நண்பர்களும் தங்களிடமிருந்து நிறைய டெக்னிகல் விசயங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம்,கற்றுக் கொண்டும் வருகிறோம்.

  “கப் அண்ட் கேண்ட்ல், ஹெட் அண்ட் சோல்டர், இன்சைடு பார், டோஜி டபுள் டாப் / பாட்டம்” எவர்ரிற்காக மட்டுமே இரண்டு நாட்கள் வகுப்பு எடுத்தார்கள் என்று சொல்லி உள்ளீர்கள்.

  ஆனால் நாங்கள் தங்கள் கட்டுரைகளின் மூலம் மிகவும் எளிமையாக இன்னும் அதிகப் படியான விசயங்களை நீங்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளீர்கள். தங்களுடைய வலைப் பூவின் மூலமும் தங்களின் வழிகாட்டுதலின் பேரில்தான் நாங்கள் இது போன்ற விசயங்களை கற்றுக் கொண்டு வருகிறோம்.

  அந்த பெருமை யாவும் தங்களை மட்டுமே சேரும் சாய். உண்மையில் நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள், நீங்கள் எங்களுக்கு கிடைத்ததினால்.

  இனிய காலை வணக்கம்.

 3. IF U SAYS REALLY TRUE.MY QUEST. RAGASIYANGAL EANDRUM UNMYIAANAVAI THANAA……

 4. YOUR WRITING MAKES ME MORE CAUSIOUS

 5. வணக்கம் சார்.

  //டவ் ஏறத்தாழ நமது சந்தையை பின்பற்றுகிறது//. இது எவ்வளோ மகிழ்ச்சியா இருக்கு. இப்படியே நடந்தா எப்படி இருக்கும். நீங்க எதிர்பார்த்த மாதிரி -77 ல gap down. RIL பங்குகள் ஆரம்பமே அமர்க்களமா இருக்கு. ஆனா 3450 நின்னு திரும்பி பார்க்குது.(இதுக்கு பேர் தான் ஓடும் வர்ணனையா). put ஒப்டிஒன் ல அதிகப்படியான sellers. இருந்தும் விளைய ஏறுது..

  வேற என்ன… விவாதத்துல பார்க்கலாம்…

 6. //ஆனால் நல்ல சாப்பாடு போட்டார்கள்// சாய் டச்!! 🙂

 7. THANK YOU FOR YOUR INFORMATION SIR.

 8. thanking you for your idea sir

 9. Thank you for your views sir.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: