இன்றைய சந்தையின் போக்கு 14.10.2008


இன்று மீண்டும் ஒரு கேப்-அப் ஓபனிங் நாள்,  ஏற்கனவே சொன்னது போல் அதி வேகம் நமது சந்தைக்கும் நல்லது அல்ல.  சரிவின் வேகத்தை விட ஏற்றத்தின் வேகம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.  இங்கு ஒன்றை நினைவில் வைத்து நமது வர்த்தகத்தை மேற்கொள்வது நல்லது.  கடந்த சில நாட்களில் பல ஜாம்பாவண்களை (சூதாடிகள்) கூட ஏழைகளாகவும் சில புதியவர்களை புது பணக்காரர்களாகவும் சந்தை மாற்றியுள்ளது. ஆகையால் சந்தையின் போக்கை பற்றி அதிகம் பேசாமல் அதன் போக்கில் சென்று வணிகம் செய்வதுதான் நன்று, அதே சமயம் விட்டதை பிடிக்கும் ஆசையில் அதிகம் ரிஸ்க் எடுக்காதிர்கள்.  நம்மை விட சித்தர்களின் சித்து விளையாட்டுகள் அதிகம் இருக்கும்.  இது போன்ற நேரங்களில் தான் அதிகம் விளையாடுவார்கள்.

அமெரிக்க சந்தைகள்  ஒரே நாளில் 10% எழுச்சியடைந்துள்ளது..  ஆனால் இந்த எழுச்சியை அதனால் தக்க வைத்து கொள்ள இயலுமா? என்றால் சந்தேகமே.  இன்னும் எந்த புற்றுக்குள் எந்த பாம்பு இருக்கு என்ற தெரியாத சூழ்நிலை,  திவால் சீசன் முடிந்ததா இன்னும் யாரும் காத்திருக்கிறார்களா?  தெரிய வில்லை..

நேற்றைய தினம் நமது சந்தை கேப் அப் ஆக துவங்கி உடனடியாக நழுவியது ஆனால் நிதியமைச்சரின் பிரஸ் மீட்டுக்கு பிறகுதான் மேல் நோக்கி பயணம் செய்தது. 3445 இல் இருந்து 3548 வரை 10ம் தேதி அன்று ஏற்பட்ட இடைவெளியை நிரப்பியது. 

இந்த இடத்தில் ஒரு விசயத்தை எழுதிவிடுகிறேன்…  மீண்டும் அண்ணன் நிப்டியார் 3300 நிலைக்கு வருவார்.   எப்ப வருவார்?  ஏன் வருவார்? எப்படி வருவார்?  என்று தெரியாது.  ஆனால் வரவேண்டிய நேரத்தில் நிச்சயம் வருவார்..

இன்று துவக்கம் 3650 க்கு அருகில் இருக்கும், 3750-800  வரை செல்லலாம் . 3800 ஒரு வலுவான மேல் நிலையாக இருக்கும்.  அதை கடப்பது ஐரோப்பிய சந்தைகளில் ஏற்படும் உற்சாகத்தை பொறுத்து முடிவாகும்.   ஆனால் டெக்னிகலுக்கு எதிரான ஏற்றம் இது.  3800 -3900 களில் சந்தை ஒரு சில நாட்கள் நிலை பட்டால் 4100 வரை செல்லலாம்.

முதலீட்டிற்கு

சன் டிவி மற்றும் ரிலயன்ஸ் பவர் குறுகிய கால முதலீட்டிற்கு உகந்த நிலையில் உள்ளது.

நிப்டியின் முடிவு என்ன?   1.00 மணிக்குள் தங்களின் பதில்களை பதிவு செய்யவும்.

 

Advertisements

15 responses to this post.

 1. Good morning and thank you very much for your views sir.

 2. your wordings are 100%true

 3. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 14, 2008 at 9:49 முப

  திரு சாய் அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம். சந்தை பெரியதாக சரிந்து அதில் சிறிதே மீண்டாலும் இந்த சிறிய மீட்சியைக் கூட (ஒரே நாளில் ஏற்பட்டதால்) நம்ப மனம் மறுக்கிறது. சந்தேகக் கண்ணோடே சந்தையை பார்க்கிறது.

  எனினும் இந்த மீட்சி மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இந்த உயர்வு தன் ஆயுள் காலம் இன்னும் எத்தனை நாள் என்றல்லவா எண்ணிக் கொண்டுள்ளது. நீடித்தால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.

  “மீண்டும் அண்ணன் நிப்டியார் 3300 நிலைக்கு வருவார். எப்ப வருவார்? ” என்ற வார்த்தைகள் இந்த நேரத்தில் எங்களுக்கு உபயோகமான ஒன்று சாய்.

  தங்களுடைய கட்டுரை வழக்கம் போல் கலக்கல்தான்,,,,,,,,,,,,,,

 4. இன்று RBI ரெப்போ வட்டி விகிதத்தை 9% ஆகா குறைத்துள்ளது. இதன் மூலம் சுமார் 20000 கோடி தற்காலிக பணப்புழக்கம் வரும். இந்த வட்டி 14 நாட்களுஉகு என்று அறிவித்துள்ளது. என்னை பொறுத்தவரை அவசர கதியில் சந்தையை எதோ ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி இழுத்துசெல்வதாக தோன்றுகிறது.

  அது வரை அன்றாடம் புது புது அறிவிப்பை அரசு வழங்கும் என்று தெரிகிறது. முடிந்தவரை இந்த உயர்வை நமக்கு சாதகமாக பயன்படுத்தி லாபம் பார்ப்பதே சிறந்தது. ஒரு வேலை அமெரிக்கா சந்தைகள் நேற்றைய உயர்வை தக்க வைத்தாலே போதும். நமது சந்தைகள் மேலும் சிறிது மேலே செல்ல வாய்பாக அமையும். இது எனது தனிப்பட்ட கருத்து.

 5. இன்றைய சந்தை 3630 இல் முடியும்
  என்று எதிர்பார்கிறேன் சார்….
  நன்றி…………. vadivelsamy coimbatore

 6. இன்றைய சந்தை 3615 முடியும் என எதிர்பார்க்கிறேன்

 7. my assumption is 3595.

  regards
  Ramesh

 8. Dear Sai

  today My prediction is NIFTY close at 3542.60

  Murugesan
  Abudhabi

 9. today nifty will close around 3550 to 3560

 10. THANK YOU SIR.

 11. nifty may make low 3550.4 today

 12. today nifty may close at 3600

 13. nifty will close today at 3565

 14. இன்னைக்கு min திரு.முருகேசன்-3542.6 ம் max சிம்பா-3666 ம் சொல்லிருக்காங்க.போற போக்கை பார்த்தா, திரு.முருகேசன் அவர்களுக்கு தான் மகுடம் போல…

 15. // இந்த இடத்தில் ஒரு விசயத்தை எழுதிவிடுகிறேன்… மீண்டும் அண்ணன் நிப்டியார் 3300 நிலைக்கு வருவார். எப்ப வருவார்? ஏன் வருவார்? எப்படி வருவார்? என்று தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் நிச்சயம் வருவார்.. //

  இந்த மாதிரி போற போக்கில் போட்டு விட்டு போய்விடுகிறீர்கள்..4500 ல இருந்தப்ப எழுதினப்ப மாதிரி(chat-ல் நாம் 1000 பாயிண்ட்களை நிப்டி இழப்பதற்க்கான அறிகுறி கூட உள்ளதாக கூறினீர்கள்)..அதனால் இனிமேல் இந்த மாதிரி போல்ட் லெட்டர் கமெண்ட்டுகளை தனியாக சேகரிக்கிறேன்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: