பங்கு சந்தையின் போக்கு 13.10.2008


கடந்த 10-15 நாட்களாக என்னதான் எதிர்ப்பு சக்தி இருந்தாலும் அமெரிக்காவில்  விழுந்த ஒவ்வொரு  மரண அடியின் தாக்கமும் ஆசிய சந்தைகளில் குறிப்பாகா ஜப்பான் சந்தையில் காலையில் எதிரொலித்து.  அந்த வலி நம்மீதும் பிரதி பலித்தது.  கடந்த சில நாட்களாக நமது சந்தை நம்பிக்கையுடன் முடிவதும், அடுத்த நாள் அங்கு நடக்கும் நாடகத்தின் காரணமாக மீண்டும் வீழ்வதுமாய் இருந்தது.

கடந்த வெள்ளியன்று அமெரிக்க சந்தையை ஆரம்பம் முதல், முடிவு வரை யாரெல்லாம் பார்த்தீர்கள்? மீண்டும் அப்படியொரு காட்சி காண கிடைக்குமா என்று தெரியாது. அப்படியொரு நிலைமை வர வேண்டாம்.  ஆரம்பித்த் உடன் -10% என்று கீழ விழுந்து  அங்கு இருந்து மேலே சென்று +1% என்ற நிலையை 1 மணி நேரத்தில் அடைந்தது.  ஒரு ZIC ZAC ஆகத்தான்ஹிருந்தது.  நாளின் இறுதியில் நம்பிக்கையுடன் முடிந்தது, ஆறுதலான் விசயம்.  எப்படி என்றால் இது போன்ற ஒரு மோசமான சூழ்நிலையில்  10% விழுந்து மீண்டும் +4% என்று மீழ்வது என்பது சாதரணம் இல்லை, நமது கவலை அமெரிக்க  சந்தை  வேக மாக மீண்டெழவில்லை என்றாலும் பரவாயில்லை இந்த இடத்தில்  தன்னை  தக்க  வைத்து கொண்டாலே போது.  

அந்த காட்சியை காணாதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யவும். http://finance.yahoo.com/echarts?s=^DJI#chart4:symbol=^dji;range=1d;indicator=sma(65)+volume;charttype=line;crosshair=on;ohlcvalues=0;logscale=on;source=undefined

இன்று துவங்கியுள்ள ஆசிய சந்தைகளில் பசுமை தெரிய ஆரம்பித்துள்ளது.

Index of Industrial Production என்ற IIP யின் குறியீடு மிகவும் குறைவாக வெளி வந்துள்ளது, வருத்தமான் விசயம் தான் ஆனால் கடந்த மாதங்களில் இருந்து வந்த பணவீக்கம், மற்றும் உள்நாட்டு காரணிகள்தான் அதற்கு காரணம்.

பணவீக்கம் நிலைபட்டு வருவது (11.8%) மற்றும் குறைந்து வரும் கச்சா எண்ணை ஆகியவை நம்பிக்கையான உள்நாட்டு காரணிகள். அதே போல் ஐஎம் எப் -உலக நாடுகளிலேயே இந்திய பொருளாதாரம்  மிக வலுவானதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது மேலும் ஒரு நல்ல விசயம்.

பணபுழக்கத்தை அதிகரிக்க – ரிசர்வ் வங்கியின் CRR குறைப்பின் மூலம் 60000 கோடிகளுக்கு வழி வகுத்துள்ளது.  இது போன்ற வழிமுறைகள் உலகமெங்கும் துவங்கியுள்ளன.   இன்னும் சில வழிகள் பற்றி அரசு ஆரய்ந்து வருவதாக தகவல்கள் வருகிறது.

இன்று நமது சந்தை (60 புள்ளிகள் வரை) கேப் அப் ஆக துவங்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. ( கவனத்தில் கொள்ளுங்கள் இந்த மாதிரியான கீழ் நிலைகளில் கேப் அப் நல்லது அல்ல,  அந்த இடைவெளி நிரப்ப படவேண்டும் அல்லது நிரப்ப படாமல் மேலே சென்றால் கண்டிப்பாக மீண்டும் அந்த நிலைகளை கடந்து செல்லும். ) 

இன்றைய நிப்டி ஃப்யூச்சர் நிலைகள் 

 3670 – 3698 – 3609 –3566 – 3510 – 3452 – 3321 – 3309

முதலீட்டிற்கு

AXIS Bank  – 550 என்ற விலையில் வாங்கலாம் டார்கெட் – 720.

Aban Offshore –  1000  என்ற விலையில் வாங்கலாம்.  டார்கெட் 1650

நண்பர்கள் முதலீட்டிற்கு ஆலோசனை கேட்கும் போது – குறுகிய காலம் நீண்ட காலம் என்று கேட்கிறார்கள்.  என்னை பொறுத்தளவில் அப்படி (இன்றைய சூழ்நிலையில்) பிரித்து பார்ப்பதில் அர்த்தம் இல்லை முதலீடு செய்யலாம் 20% வரை உயர்ந்த உடன் அதில் இருந்து முழுவதுமாக அல்லது லாபத்தை மட்டும் வைத்துகொண்டு நமது முதலீட்டை வெளியில் எடுத்துவிடுவது நல்லது. அடுத்து வேறு ஒரு பங்கில் முதலீடு செய்வது நல்லது.

Advertisements

6 responses to this post.

 1. மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய தகவல்களுக்கு நன்றி. வெள்ளியன்றைய நிப்டி கணிப்பு பற்றிய போட்டியில் நான் நிப்டி ஸ்பாட் 4290 என்று கொடுத்திருந்தேன். அன்று நிப்டி முடிவடைந்தது 4279.90 என்ற நிலையில். தாங்கள் +/-10 புள்ளிகள் என்று கொடுத்திருந்தீர்கள். அதன்படி மேலே நிப்டி 4289.9 என்ற நிலைக்குள் கொடுத்திருந்தால் தேர்வாவதற்கு வாய்ப்பு இருந்துள்ளது. ஆனால் நான் 0.10 புள்ளிகள் சேர்த்து 4290 என்று கொடுத்திருந்தேன்.

  தாங்கள் மனது வைத்து அந்த 0.10 என்ற வித்தியாசத்தை ஏற்றுக் கொண்டால் தங்களுடைய ஒரு மாத வணிக குறிப்புகளை பெறுவதற்கு தகுதியாவேன். ஆனால் இந்த வேண்டுகோள் தங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளவும்.

  மிக்க நன்றி.

 2. ஏற்புடையேதே நண்பர்,

  ஏற்கன்வே மேலே தங்களை வெற்றியாளராக அறிவித்து விட்டோம் …

  வாழ்த்துகள்.

 3. Dear Mr. Sai,

  I did not listen that article and now i saw that.

  Thank You very much Sai,

 4. //கவனத்தில் கொள்ளுங்கள் இந்த மாதிரியான கீழ் நிலைகளில் கேப் அப் நல்லது அல்ல, அந்த இடைவெளி நிரப்ப படவேண்டும் அல்லது நிரப்ப படாமல் மேலே சென்றால் கண்டிப்பாக மீண்டும் அந்த நிலைகளை கடந்து செல்லும்//

  இது என்ன புதுசா இருக்கு. சார் இன்றைய துவக்கம் நீங்கள் சொல்வது போல் +60. ஆனால் இந்த இடைவெளியை நிரப்பும் பொருட்டு சந்தை கீழே வந்தால் மீனு எழுமா..

  நிப்டி நிலை மிகவும் அருமை…

 5. Nifty closing prediction -3560 +/-10

 6. Thank you very much for your views sir. Today’s market went up to 220 pts(Nifty).Profit booking may take place in tomorrow’s market. I think so.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: