விவாத மேடை 13.10 – 14.10.2008


இந்த வார விவதங்களை இங்கு தொடரலாம் வாங்க.

சென்ற விவாத மேடையில் திரு ராஜேந்திரன் அவர்களின் கேள்விக்கு நண்பர் ஆர் கே அளித்த பதில் அருமை..

அதே போல் SGX NIFTY பற்றிய கேள்வியும் அருமை, அதை பற்றிய ஒரு சிறு குறிப்பு  PDF File ஆக உள்ளது படித்து பார்க்கவும்.

 niftybrochurenov2007

Advertisements

88 responses to this post.

 1. Good Morning to all And have a Great Gap-Up Morning!

 2. பிரியா மேடம் இப்படியெல்லாம் கூட வாழ்த்தலாமா?

 3. நம்ம ஆளுகளுக்கு இப்படி தானே சிம்பா வாழ்த்தணும்

 4. நமது FM காலையிலேயே வந்து ஆத்து ஆத்துன்னு சொற்பொழிவு ஆத்திட்டு போய்ட்டார். அதன் தாக்கமோ என்னவோ இன்று சந்தை தனது உயர்வை இதுவரை தக்க வைத்துள்ளது.

  தேவைப்பட்டால் நாளின் பிற்ப்பாதியில் மீண்டும் வருவேன் என்று கூறியும் சென்றுள்ளார்.

  என்னதான் திரு.புஷ் கூட்டறிக்கை, தனியரிக்கை விட்டாலும் அமெரிக்கா சந்தைகளை தூக்கி நிறுத்த முடியவில்லை. அவ்வாறு பார்த்தல் நம்ம சந்தைகள் எவ்வளவோ பரவாஇல்லை.

 5. போற போக்க பார்த்தா ப்ரியா நீங்க நம்ம சாய் சார்க்கு போட்டியா ஒரு வலைத்தளம் போடிருவீங்க போல.

 6. நீங்கள் சொல்வது சரி தான் சிம்பா.சந்தை இந்த உயர்வை தக்க வைத்தால் சரி.

 7. அய்யய்யோ!எனக்கும் சாய் சார் க்கும் சண்டை போட்டு வச்சிடுவிங்க போல!

 8. ம்ம்ம்ம்
  சரியான போட்டி… என்ன இன்று மார்கெட் ஏறிய பிறகும் இங்கு பின்னூட்டட்ம் கம்மியா இருக்கு அருன்

 9. நம்ம மக்களோட பண்பு என்னன்னா சந்தோசம்னாலும் சரி துக்கம்னாலும் சரி அத கொண்டாடுறதுதான் வழக்கம். ஒரு வேலை அப்படி எதா கொண்டாட போய்டாங்களோ என்னவோ..

 10. என்ன ப்ரியா இப்படி சொல்லிடீங்க. நான் ஒரு சமாதான பறவை. காலைல ரொம்ப bore அடிச்சுது. இங்க வந்தா நீங்க மட்டும் தான் இருந்தீங்க. அதான்… இன்றைய உங்கள் வணிகம் என்ன…

 11. ஆஹா அது தான் உங்க ஊர்ல நிறைய டாஸ் மார்க்
  சேல்ஸ் ஆகுதா…?

 12. வசதி படைச்சவங்க வீட்லயே வச்சு கொண்டாடலாம். எங்க ஊரு ஏழைகள் அதிகமா இருக்கிற ஊரு. அதனால் அந்த ஒரு வழிதான் எங்க ஊரு மக்களுக்கு.

 13. SBIN 1415 க்கு வாங்கினேன்.1435 க்கு வித்துட்டேன்.அவ்வளவு தான் சிம்பா.உங்களுடைய வணிகம் எப்படி?

 14. நம்மது ரொம்ப மோசம். 3700 நிலைகளில் options உள்ளே நுழைந்தேன். எனவே சந்தை மேலும் 200 புள்ளிகள் சேர்க்காமல் என்னால் எந்த வணிகமும் செய்ய இயலாத நிலை.

  சாய் சார் real estate துறை பங்குகளின் எதிர்காலம் என்ன. அமெரிக்கா நாட்டில் அவர்களது வீட்டு மதிப்பு 1500 USD கீழ் சரிந்துள்ளது என்று சொல்கிறார்கள். அந்த நிலை இங்கும் வருமா. (ரொம்ப நாலா நாமலே ஒரு வீடு வாங்கலாம்னு ஒரு சின்ன ஆசை.. ஹி ஹி..)

 15. இப்போதைய நிலையில் நான் தின வணிகத்தில் மட்டும் தான் ஈடுபட்டு கொண்டு இருக்கிறேன்.நான் சந்தை க்குள் புகுந்தது ஜனவரி ல் தான்.புகுந்ததில் இருந்து கரடியின் பிடியில்.பல இழப்புகளயும் சில லாபங்கலயும் சந்தித்து இருக்கிறேன்.

 16. எனக்கும் தான் அருன் ஆசை, நாலு மெட்ரோவிலும்
  வீடு வாங்கனும் என்று தற்போதைக்கு மும்பையில் வீடு இருக்கு, மற்ற நகரங்களில் வாங்க காத்திருக்கிறேன்.. அமெரிக்கா அளவிற்கு இல்லை என்றாலும்… இங்கும் நிச்சயம் விலை குறையும்.
  குறிப்பாக பெரு நகரங்களில்.

 17. Today nifty close at 3504

 18. My prediction today nifty close 3490

 19. I expect nifty spot will close at 3570

 20. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 13, 2008 at 2:12 பிப

  திரு சாய் அவர்களுக்கு,

  நீண்ட சரிவுகளுக்கு பிறகு சந்தையில் பங்குகளின் விலைகளை பச்சை வண்ணத்தை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.

  என்ன பங்குகளின் நிலையையும் விலையையும் பார்த்தால்தான் பரிதாபமாக உள்ளது. தற்போது சந்தை மீள (?) ஆரம்பித்திருப்பது ஆறுதலாக உள்ளது.

  இந்த நிலை நீடித்தால் நன்றாக இருக்குமல்லவா,,,,,,,,,,,,,,,,,பார்ப்போம்,,,,,,,,,

  இன்றைய தினத்தில் நிப்டி 3440 என்ற நிலையில் முடியுமென எதிர்பார்க்கிறேன்,,,,,

 21. Today Nifty will close at 3500

 22. K. Mohanraj

  //இந்த நிலை நீடித்தால் நன்றாக இருக்குமல்லவா//

  நான் இதை கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்.

 23. இந்த நிலை நீடிக்கும் என அண்ணண் நிப்டியார் சார்பாக நான் கன்னா பின்னாவென்று உறுதியளிக்கிறேன்

 24. My guess is Nifty spot is around 3490

 25. //இந்த நிலை நீடித்தால் நன்றாக இருக்குமல்லவா//

  நீடிக்கும் !!! ஆன நீடிக்காது !!!!!

 26. core project க்கு என்ன ஆச்சு?யாறாவது சொல்றிங்களா?

 27. திரு சாய் ஒரு நாளைக்கு ஒருத்தருக்கு தான் பரிசா?அல்லது ஒருத்தருக்கு மேல உண்டா?

 28. இன்றைக்கு அதிக்கப்படியான வெற்றியாளர் இருப்பதால் சீட்டு குலுக்கி போட்டு தேர்ந்து எடுக்கலாம். ஹி ஹி

 29. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 13, 2008 at 5:57 பிப

  திரு சிம்பா மற்றும் பிரியா,

  இருவரும் இந்த வலைத்தளத்தில் திரு சாய் அவர்களுடன் சேர்ந்து கலக்கி கொண்டு இருக்கிறீர்கள்.

  உங்கள் இருவரின் வரவால் இந்த வலைத்தளம் மிகுந்த உற்சாகத்துடன் காணப் படுகிறது.

  தொடரவும்.

  வாழ்த்துக்களுடன்,
  கே. மோகன்ராஜ்.

 30. Posted by ச. கார்த்திகேயன் on ஒக்ரோபர் 13, 2008 at 6:03 பிப

  திரு சாய்,

  இன்றைய நிப்டி முடிவு பற்றிய போட்டி மிகவும் கடுமையாக இருந்திள்ளது.

  நல்ல வேலை நம்மள ஒரு நாள் கண்டுக்காம விட்டுட்டாங்க. அதனால வெள்ளிக் கிழமை நான் பரிச தட்டிட்டு போயிட்டேன்.

 31. பிரியா
  //அய்யய்யோ!எனக்கும் சாய் சார் க்கும் சண்டை போட்டு வச்சிடுவிங்க போல!//

  அய்யோ எதுக்கு சண்டை? வாங்க உங்களிடம் உள்ள தகவல்களை வலைபூவாக வழங்கலாம்.

  ஏற்கனவே பல இல்லதரசிகள் சமையல் குறிப்புகள், கதை, கவிதை என்று கலக்கி வருகிறார்கள்..

  // SBIN 1415 க்கு வாங்கினேன்.1435 க்கு வித்துட்டேன்.//

  அருமையான டிரேடு செலக்ஸன் – தங்களின் சுய முடிவா இல்லை யாருடைய ஆலோசனையா?

  //நான் தின வணிகத்தில் மட்டும் தான் ஈடுபட்டு கொண்டு இருக்கிறேன்//

  நல்ல விசயம் அப்படியே தொடருங்கள்.தின வர்த்த்கத்தில் வரு லாபத்தை முதலீடாக மாற்றுங்கள் 2-5 பங்குகள் என்று..

  //core project க்கு என்ன ஆச்சு?//

  டெக்னிகல் படி – 280 இல் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது ஆனால் அங்கு இருந்து இந்த அளவு சரிவடைய காரணம் அது மட்டும் காரணமாக இருக்க முடியாது.

  வதந்தி
  Market reports suggest that one big operator had pledged shares which results in stop losses getting triggered.

  அதே நேரத்தில் -Commenting on the price fall, Prakash Gupta, CEO, Core Projects, said promoter holdings is still intact. “One reason could be that approximately 20 lakh FCCB shares were converted last month. In view of the global meltdown these shares could have been sold in the market. Also, some high networth individuals have some position in the company. This fall in price could be a result of some unwinding of positions.”

  அருமையான நிறுவனம் முதலீடு செய்யலாம் இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து.

  //திரு சாய் ஒரு நாளைக்கு ஒருத்தருக்கு தான் பரிசா?அல்லது ஒருத்தருக்கு மேல உண்டா?//

  ம்ம்ம் ஒரே பதிலை ஒருவருக்கு மேல் சொல்லும் போது நிச்சயம் அனைவருக்கும் பரிசளித்து விடலாம்

  இன்னும் இப்போட்டியினை சுவாரசியாமாக மாற்ற ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

  ஸ்பான்ஸர் கிடைத்தால் பரிசுகளை அதிகபடுத்தலாம்..

 32. அனைவருக்கும் வணக்கம்… எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்… Gap up/Gap down எப்படி ஆகுது?
  1. Open price – நேற்றைய closing price ஐ விட மிகவும் கீழேவோ இல்லை மேலேவோ இருக்கும் போதா?
  2. After hours market la இடப்படும் ‘market orders’ காலையில் execute ஆகும் போதா ?

  இல்லை, வேறெந்த காரணமா?

 33. இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்…

 34. வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி மோகன்.சாய் எல்லா கேள்விகளுக்கும் சேர்த்து சொல்லிட்டிங்க.நன்றி.
  வலைப்பூ ஆரம்பிக்கும் அளவுக்கு அனுபவம் எனக்கு பத்தாது சாய்.சந்தை யை பொருத்த வரை நான் இப்ப தான் ஒண்ணாம் வகுப்பு சேர்திருக்கேன்.sbin trade selection சுய முடிவு தான் சாய்.இது வரை யாருடைய பரிந்துரையும் பெற்றதில்லை.உங்கள் பரிந்துரையில் ஆர்வம் கொண்டுள்ளேன்.

 35. Suppose I bought RPL 180 PA for Rs 25 some days before this month contract,and now the spot price is 121.60.. In 180 put option counter ,no trading was taking place. I want to square off it(Because This put option is American type…so anytime between the contract period I can square off it…if it is true means how can I square off it? How can I give the instruction to Trading Member? Whether I will realize the profit before the contract expiry?

 36. சாய் சார்
  ak சார்
  மிக்க நன்றி தங்களின் விளக்கவுரை

 37. Dear ASHOK,
  dont worry,if no one is ready to buy also you will get the difference after expiry.

 38. திரு முருகேசன்

  ETF – பற்றி மேலும் தகவல் அறிய

  http://finance.yahoo.com/etf/education

 39. Dear jai,

  Now the profit is more (180-121.60=Rs58.40)…If the end of the expiry, Rpl spot price is 155 means (180-155=Rs25), no profit for me….so that i am asking “Is there any facility to square off the position before expiry date(I mean today) through NSCCL?”

 40. அசோக்,

  நிச்சய்ம் வழி உண்டு, நான் அந்த மாதிரியான சூழ்நிலையை இதுவரை சந்தித்தது இல்லை.. மோகன்ராஜ் இது மாதிரியான் சூழ்நிலைகளில் எவ்வாறு லாபத்தை உறுதி படுத்துவது என்று விளக்கவும்.

 41. அனைவருக்கும் காலை வணக்கம்.அனைவரும் லாபம் அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

 42. good morning friends.
  Please anybody answer emsenthil’s question.

  //அனைவருக்கும் வணக்கம்… எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்… Gap up/Gap down எப்படி ஆகுது?
  1. Open price – நேற்றைய closing price ஐ விட மிகவும் கீழேவோ இல்லை மேலேவோ இருக்கும் போதா?
  2. After hours market la இடப்படும் ‘market orders’ காலையில் execute ஆகும் போதா ?

  இல்லை, வேறெந்த காரணமா?//

 43. Hai all.
  The government raised the petrol, diesel price because of the crude gone for $140 levels.now it is half the price.why our government didnt reduce the price of fuel.if any body knows please reply me

 44. good morning friends.
  Please anybody answer emsenthil’s question.

  //அனைவருக்கும் வணக்கம்… எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்… Gap up/Gap down எப்படி ஆகுது?
  1. Open price – நேற்றைய closing price ஐ விட மிகவும் கீழேவோ இல்லை மேலேவோ இருக்கும் போதா?
  2. After hours market la இடப்படும் ‘market orders’ காலையில் execute ஆகும் போதா ?

  இல்லை, வேறெந்த காரணமா?//

 45. harini

  //why our government didnt reduce the price of fuel.//

  ஏற்கனவே அந்த துறை அமைச்சர் ஒரு அறிவிப்பு செய்து இருக்கிறார். அதாவது கச்சா என்னை பேரலுக்கு 67/USD வருமாயின் அப்பொழுது விலை குறைக்கப்படும் என்று.

  இருந்தாலும் இது வரும் தேர்தலுக்காக மத்திய அரசு வைத்திருக்கும் கடைசீ ஆயுதம். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைப்பு.

 46. MY GUESS IS NIFTY SPOT CLOSING AROUND 3628

 47. Dear Mr. Ashok and Mr. Sai,

  You should square off your put option with NSE by the help of your trading member.

  You inform this details with your broker office and they will sell your put option at your trading code at NSE.

  NSE will fix the price for the option if there is no trading with this option.

  This is the procedure for the all options if there is no buyer and seller.

 48. Dear Mohanraj

  thanks for your information…

  good morning simba and priya.

 49. harini,

  142$ இருக்கும்போது உயர்த்திய விலை உயர்வும் எண்ணை நிறுவனங்களுக்கு போதியதாக இருக்க வில்லை. தற்போதைய விலை குறைவால் சிறிய அளவு அவர்களது நஷ்டம் குறைய வாய்ப்பு உள்ளது.
  அருன் சொல்வது போல் தேர்தல் வரை தள்ளி போட படலாம்.

  இன்னொரு விசயம் – சர்வதேச கச்சா எண்ணை யூக வணிகம் / முன் பேர வர்த்தகத்தில் தற்போதைய பொறுளாதார நெருக்கடியால் விலை குறைந்து உள்ளது இந்த நிலை நீடிக்குமா என்றால் சந்தேகமே… ஆகையால் அரசு உடனடியாக விலை குறைப்பு நடவடிக்கையில் இறங்காது.

 50. gud morning sai sir.

  today my choice for nifty would be around 3666(spot).

 51. அப்பா எவ்வளோ நேரம் தான் 50 வது பின்னூட்டத்துக்கு காத்திருக்கிறது.. எப்படியோ me the 50th and 51st.

 52. கலக்கிட்டீங்க சிம்பா/அருண்.எது உங்க பெயர்?

 53. கலக்கிட்டீங்க சிம்பா/அருண்.எது உங்க பெயர்?

 54. அருண் என்பதே என்னோட பெயர் பிரியா. ஆனா வலைப்பதிவுல எழுவதற்காக இந்த புனை பெயர். எனக்கு புடுச்ச character. வேற ஒன்னும் இல்ல.

 55. ஆஹா நம்ம வீட்டுல தான் இருக்கிங்களா… இந்த வாரம் 500 பின்னுட்டம் வரனும் சிம்பா

 56. சார் அப்போ ‘பிம்பிளிக்கீ பிளாப்பி” மாதிரி ஆரம்பிச்சுடலாமா.. மாமா பிஸ்கோத்து…

 57. கும்மி யெல்லாம் ப்ளாக் ஸ்பாட் – இல் தான்
  இங்க வேண்டாம் சாமி

 58. thank you sai for the ETF information,but already i checked in yahoo site ,any how thank you

  murugesan
  abudhabi

 59. இன்று nifty 3595 ல் முடியும் என்று எதிர்பார்கிறேன்.

 60. Dear Sai

  Nifty spot may close at 3611.90 levels,,,,,,

 61. எனது எதிர் பார்ப்பு 3604.40

 62. I expect nifty will close at 3570

 63. என்ன சாய் சார், நீங்களும் போட்டில பங்கு பெறீங்களா?

 64. உயர்திரு சாய் அவர்களுக்கு,

  வணக்கம். நான் பெருமாள். எனக்காக சாய் பாபாவிடம் வேண்டிக் கொண்டதற்கு மிக்க நன்றி. தின வர்த்தகத்தில் நம்பிக்கையில்லாத எனக்கு தங்களின் டிப்ஸ் (கார்த்தி மூலமாக) பார்த்த பிறகு ஒரு நம்பிக்கை வந்துள்ளது. உங்களின் டிப்ஸ் நன்றாகவே work out ஆகிறது. தங்களின் இவ்வரிய பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  பெருமாள், கரூர்.

 65. அப்பா ஒரு வழியா போட்டி நேரம் முடிந்தது.இன்னைக்கு போட்டில 13 பேர் பங்கு எடுத்திருக்காங்க.இன்றைய மகுடம் யாருக்கு?பதில் இன்னும் 2 மணி நேரத்தில்.

 66. ஆனா எனக்கு சின்ன வருத்தம் பிரியா ஆயிரம் ஹிட்ஸ் இருந்தும் வெறும் 13 நபர்கள் தான் கலந்து கொள்கிறார்கள் என்பதால்…

  இது சும்ம ஒரு விளையாட்டு என்று எடுத்து கொண்டு ஆர்வம் கொள்வதில் என்ன சிரமம் என்று தெரிய வில்லை… சிரிப்பை மறந்து சீரியஸா இருந்து என்ன செய்ய போறோம்…

 67. கவலைப்படாதீங்க சாய்.1000 hits ஒரே நாளிலா நடந்தது.13 பேரிடம் பற்றிக்கொண்ட ஆர்வம் விரைவில் 130,1300….என்று போய் கொண்டே இருக்கும்.இப்போ தானே 6 பேருக்கு மகுடம் சூட்டி இருக்கோம்.ஆர்வத்தீ சீக்கிரம் நம்ம ஆளுகளுக்கு பத்திக்கும்.

 68. திரு சாய் மற்றும் இவ்வலைப்பூ நண்பர்களுக்கு, தமிழில் இப்படி ஒரு தகவல் மையம் உருவாக்கியதற்கும், அதற்கு ஆதரவு அளித்தமைக்கும் மிக்க நன்றி.ஆங்கிலத்தில் நுண்ணறிவு இருந்தால் மட்டுமே சில செய்திகளை புரிந்து கொள்ள முடியும் என்பது என்னை போன்றோரின் நிலை.அப்படிப்பட்டோரின் நிலை இப்போது உங்கள் வலைப்பூவினால் மேம்பட்டு இருக்கிற்து.ஆங்கிலத்தில் சில செய்திகளை படித்து மட்டுமே கொண்டிருந்த நான், அதே செய்திகளை உங்கள் வலைப்பூவின் உதவியுடன் புரிந்தும் கொண்டு இருக்கிறேன்.உலகெங்கும் இருக்கும் தமிழ் மக்களை ஒன்று சேர்க்கும் வலைப்பூவாக இது அமைகிறது.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவ்வலைப்பூவின் பயன்பாட்டாளர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.இன்று ஆயிரங்களை தொட்டிருக்கும் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கூடிய விரைவில் பன்மடங்காக பெருகும் என எதிர்பார்க்கும், ப்ரியா.

 69. சாய் இன்று அதிக வேலை இருந்ததால் என்னால் வர முடியவில்லை . கண்டிப்பாக நாளை போஸ்ட் பண்றேன்

 70. திரு சாய், download என்று ஒரு லிங்க் மேலே வச்சிருக்கிங்க.அது என்னன்னு நான் தெருஞ்சிக்கலாமா?

 71. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 14, 2008 at 3:18 பிப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய வலைத்தளத்தை தினந்தோறும் காண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

  அவர்களில் நிறைய பேர் நேரமின்மை மற்றும் சிறிது சோம்பேறித் தனத்தால் பின்னூட்டம் இடாமல் செல்கின்றனர்.

  இந்த நிலை சிறிது சிறிதாக மாறும் நாள் வெகு நாள் இல்லை.

 72. பிரியா என்ன பண்றது ஒரு வேலை மலை அளவு எதிர் பார்த்தல் மகுடலவாவது வருவான்னு தான் 3666 போட்டேன். ஆமா இன்னைக்கு உங்க எழுத்து பிரமாதமா இருக்கு. காலைல இருந்து எழுதி பழகின மாதிரி இருக்கு..

 73. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 14, 2008 at 3:22 பிப

  பிரியா அவர்களுக்கு,

  அது தமிழில் டைப் செய்வதற்கு தேவையான மென்பொருள். அதைத்தான் சாய் “download” என்ற தலைப்பில் கொடுத்துள்ளார்.

 74. பிரியா,

  ஆங்கிலத்தில் உள்ளது போல் தமிழில் இல்லையே என்ற வருத்தம் எனக்கும் ஏற்பட்டது, சிறிய அளவில் என்னால் முடிந்த தகவல்களை இங்கு தருகிறேன்… ஒரு சிலருக்காவது பயன் படட்டும் என்று. தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

  ஆம் தாங்கள் சொல்வது உண்மைதான் இன்று ஒரு நாளைக்கு ஆயிரம் ஹிட்ஸ் வருவது ஒரே நாளில் நடந்து விட வில்லை – ஆரம்ப காலத்தில் 50-60 ஹிட்ஸ் தான்.

  டவுன் லோட் – பகுதியில் பயனுள்ள சாப்ட்வேர் மற்றும் புத்தகம் ஆகியவற்றிற்கான லிங்க்ஸ் வழங்கலாம் என்று, இன்னும் முழுமையாக அதை செய்யவில்லை.

 75. http://nogunonlyfun.wordpress.com

  நமது புதிய வலைபூ…. அங்கும் சிம்பாதான் முத்ல் ஆள்.

 76. தமிழர்கள் தமிழ் எழுதி பழகனுமா சிம்பா.தானா வருது என்ன பண்றது.வர வர நம்ம nifty பையன் technicals சொல்ற பேச்சையும் கேக்கிறது இல்லை,நாம சொல்ற பேச்சையும் கேக்கிறது இல்லை.இந்த nifty பையனை என்ன செய்யலாம்.சின்ன பையன் தானே என்று விட்டுறலாமா?

 77. top10shares

  //நமது புதிய வலைபூ…. அங்கும் சிம்பாதான் முத்ல் ஆள்.//

  அவசரபட்டுடேனோ…

 78. priyashekar

  //சின்ன பையன் தானே என்று விட்டுறலாமா?//

  காத்தாடி விடும் போதே நெனச்சேன்:))))

 79. லாபம் வருமா என……

  பார்த்து பார்த்து கண்கள் பூத்து இருப்பேன் ….. லாபம் வருமா என….
  பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் ….. லாபம் வருமா என….

  GAP UP ஆஹ நீ வருவாயா HAPPY ஆகிறேன்…
  GAP DOWN ஆஹ நீ வருவாயா சோகமாகிறேன்….
  DIVIDEND ஆஹ நீ வருவாயா டாலடிக்கிறேன்……

  லாபம் வருமா என……லாபம் வருமா என……

  COMPANY TECHNICAL NEWS உனக்கென தினம் தினம் சேகரிக்கிறேன்…..
  தமிழில் பங்கு வணிகம் ,பணம் பண்ணலாம் வாங்க நீ படிப்பாய் என வாசகன் ஆகிவிட்டேன்…..
  சோம வள்ளியப்பன் புக்கோடு செல்லமுத்து குப்புசாமி புக்கை உனக்காய் சேமிக்கிறேன்…..
  கனவில்… உன்னை என்ன செய்யலாம் தினமும் யோசிக்கிறேன்….
  உன்னை பத்தி ஒரு நியூஸ் கிடைச்சாலும் அந்த SITE போய் பார்க்கிறேன்….
  லாபம் வருமா என……
  லாபம் வருமா என……

 80. கலக்கறீங்க அசோக்.

 81. ashok paattu nalla irukku. appadiye SEBI ku itha mailunga..

  etha nadakkuthaanu paarpom.

 82. ok friends.meet you tomorrow.bye.

 83. அசோக்,

  பாடல் அருமை

  ஆனா அண்ணன் நிப்டியாரும் ஒரு பாட்டு எழுதி அனுப்பி உள்ளார் இப்பதான் மெயிலில் கிடைத்த செய்தி…

  என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா

  என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா … தெரியுமா

  நீ பணமாலை சூட்டி பலபேரும் பார்க்க

  புது வீடு கட்டி! புது பாதை காட்டி!

  வளையாடும் கையின் விரலில்
  கணையாழி பூட்டி! நீ வாழ!

  வேண்டும் என அண்ணன் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்..

  இது சிம்பா… உட்பட திருமணம் ஆகாத https://top10shares.wordpress.com படிக்கும் அனைவருக்கும்….

 84. harini

  //why our government didnt reduce the price of fuel.//
  When crude oil was 140$- Doller was – RS 39,
  now curde oil is 83$ – Doller is – RS 48.
  So crude oil price is reduced by 40%. at the same time doller value is raised by 23%.

 85. BASHEER,

  அருமையான பதில்…. நன்றி… இதை…இதை தான் எதிர் பார்க்கிறேன்..

 86. சார் நீங்க சொன்ன பாட்டுக்கு அர்த்தம் புருஞ்ச மாதிரி இருக்கு. ஆனா புரியல.

  //வளையாடும் கையின் விரலில்
  கணையாழி பூட்டி! நீ வாழ!//

  இத எப்படி எடுத்துக்க…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: