Archive for ஒக்ரோபர் 10th, 2008

விவாத மேடை 10.10 – 12.10.2008

அடுத்த 3 நாட்களுக்கான விவாதங்களை இங்கு தொடரலாம்.  யாருடைய கேள்விக்காவது பதில கிடைக்க வில்லை என்றால் மீண்டும் கேளுங்கள். மற்றபடி சிலருக்கு மட்டும் தான் பதில் என்ற பாகு பாடு இல்லை.  7/10 அன்று திரு ராஜேந்திரன் இந்த கேள்வியை கேட்டிருந்தார், நான் ரான்பக்ஸியை அதிகம் கவனிப்பதில்லை, வேறு யாருக்காவது பதில் தெரிந்தால் ஏன் இந்த அளவி வித்தியாசம் என்று எழுதுங்கள்

//வணக்கம் சார்
நிங்கள் சொல்வது போல் கேப் டோவ்ன் நிறைய இருக்கிறது. ஏதேனும் positive
news வந்தால் சந்தை மேலே செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

In between cash market and future market more than differernt for example ranbaxy 08/09/08 cash market Rs.450 but futute is Rs.424.
ஏனிந்த வித்தியாசம் இதனால் இந்த பஙகு இறங்கும் என்று எதிர்பார்கலமா. தய்வு
செய்து பதில் இடவும்

சந்தையின் போக்கு 10.10.2008

உலக சந்தைகளில் ஒரு அமைதி ஏற்படுவது போல் தெரிந்தது, ஆனால் நேற்று இரவு வணிகம் முடியும் நேரத்தில் பங்காளி அமெரிக்கா அடித்தார் பாருங்க ஒரு பல்டி ஆஹா அதை வேடிக்கை பார்த்த நமக்கே அர்த்த ராத்திரியுலும் பார் நினைவுக்கு வந்தது.  அதை அனுபவிப்பவன் நிலைமை..

ஒரு நாட்டின் பிரச்சினை – உலக நாடுகள் குறிப்பாக வளரும் நாடுகள் அனைத்தையும் மிக கடுமையாக பாதிக்க ஆரம்பித்துள்ளது.  இதற்கு மேல் பொறுக்காமல் வளரும் நாடுகள் தங்களது பொருளாதார கொள்கைளை வகுக்க வேண்டும்,  இதே போன்று நாளை நமது நாட்டில் ஏற்பட்டால் அமெரிக்கா தங்களையும் பாதிக்க அனுமதிக்குமா? இன்னும் எவ்வளவு நாள் அமெரிக்காவை தாங்கி பிடிக்கும் வேலைகளை வளரும் நாடுகள் செய்ய போகின்றன. அவர்களின் சகாப்தம் முடிந்தது.  அவர்களே அதை ஒப்பு கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது இந்த கார்ட்டூன்

இதை பற்றி ஐ.நா. சபையில் ஆண்டறிக்கையின் மீது நடந்த விவாதத்தில் இந்திய தூதர் நிருபம் சென் பல குற்றசாட்டுகளை எழுப்பியுள்ளார்.  சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வளரும் நாடுகள் நசுக்க பட்டு வருகின்றன், அதை ஐ.நா செயலகம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. வால் வீதியுடன் உலக எல்லை முடிவடைய வில்லை.  உலகில் எல்லாம் தாங்கள் தான் என்று இருந்தவர்கள் மண்ணை கவ்வி உள்ளார்கள். இந்த மண் எல்லார் வாயிலும் பரவி வருவது என்ன நியாயம் என்று விலாசி உள்ளார்..  நமது ஆசை இந்த விளாசல் வெறும் வாய் சவுடாலாக மட்டும் இல்லாமல் சில ஆக்க பூர்வமான செயல்களின் துவக்கம் ஆக அமைந்தால் நன்றாக இருக்கும் இப்படி மண்ணை கவ்வியவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள என்ன குதுகலம்.

நமது சந்தை தன்னை நிலைபடுத்தி கொள்ளதான் ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிறது, ஆனால் தினசரி அவர்களது சந்தையில் அடுத்த அடுத்த நாட்களில் நடக்கும் நிகழ்வுகள் இங்கும் எதிரொலிக்கின்றன. 

தனி வழி காண்போமா அல்லது இன்றும் ஆசிய சந்தைகளில் ஒடும் ரத்த வெள்ளத்தில் நாமும் சங்கமிப்போமா?? 

இந்த நிலையில் நிப்டி நிலைகளை தருவதில் அர்த்தமில்லை என்பதால் அதை தவிர்த்து விட்டேன். ஆனாலும் எனது நிலை பாடு உலக பங்கு சந்தைகள் அனைத்திலும் டெக்னிகலின் அடிப்படையில் இன்னும் சரிவுகளை மீதம் வைத்துள்ளன. ஆனால் இந்திய பங்கு சந்தையில் சரிவுகள்  இருந்தாலும் 100-200 புள்ளிகளுக்கு மேல் இருக்காது என்றும்  தனது போக்கில் தனி வழி கான முற்படுகிறார் என்றே நம்புகிறேன்.  நமது சந்தையை வழிநடத்தும் அனைத்து முன்னனி நிறுவனங்களின் போக்கிலும் ஒரே மாதிரியான ஒரு மாற்றம் காணப்படுகிறது. அடுத்த வாரம் சில் ஆச்சரியங்கள் காத்திருக்கலாம்.

இன்றைய கேள்வி .

இந்த அளவு ஆட்டம் கண்டு வரும் அமெரிக்கவின் டாலர் மதிப்பு மட்டும் எவ்வாறு உயர்ந்து வருகிறது இது நல்லதா கெட்டதா. இந்த நிலை நீடிக்கும் என்ற ஆசையில் இதை அடிப்படையாக கொண்டு புதிய ஆர்டர்களை பெறும் ஒரு ஏற்றுமதியாளரின் நிலைமை நாளை என்னவாகும்.?

இன்றைய நிப்டியின் முடிவு என்ன ….  இப்போது இருந்தே இங்கு எழுதலாம். 2.30 மணிக்கு பிறகு வரும் பின்னூட்டங்கள் ஏற்று கொள்ள பட மாட்டாது. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள்  +/- 10 புள்ளிகளுக்குள் பதில் அளித்தால் மிக அருகாமையில் உள்ள நபர் தேர்ந்தெடுக்க படுவார்.  மிக்சரியாக பதில் அளிக்கும் அனைவருக்கும் பரிசு உண்டு.

எனது கட்டண சேவை பற்றிய விவரம் அறிய நாளை காலை நமது வலை பூவை பார்க்கவும்.

இன்றைய சாதனை – 50000 ஹிட்ஸ்

ஒரு துறை சார்ந்த பதிவு எழுத ஆரம்பித்து சில்  மாதங்களில் 50,0000 ஹிட்ஸ் களை பெற்று உள்ளது நமது வலை பூ.  வெற்றி நடை போட உதவிய அனைத்து  நல் உள்ளங்களுக்கும் மன மார்ந்த நன்றி.

(என்னடா சினிமா காரங்க மாதிரி  இதற்கெல்லாமா போஸ்டர் ஒட்டுவது என்று கவுண்ட மணி ஸ்டைலில் திட்டும் நண்பர்களுக்கும் நன்றி   🙂   🙂