விவாத மேடை 08.10.2008


விவாத மேடைக்கு கிடைத்த வரவேற்பில் சந்தோஷம்..    இன்றைய விவாதங்களை இங்கு தொடரலாம். இன்னும் அதிக மானவர்களிடம் இருந்து கருத்துகளை எதிர் பார்க்கிறேன்,  தோழி பிரியா, சிம்பா மற்றும் ஆர் கே ஆகியோருக்கும் நன்றி, சிம்பா கேள்வி மட்டும் கேட்காமல் பதிலும் சொல்லலாம்.

19 responses to this post.

 1. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 8, 2008 at 11:24 முப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தற்போதைய நிலையில் பங்கு சந்தைகள் நாம் முன்னர் எதிர்பார்த்தது போல கீழே வந்துவிட்டன. என்ன நாம் எதிர்பாராத நேரத்தில் ( 3800 என்ற நிலைகளில் மீண்டு சிறிது ஏற்றம் 4400 வரை தரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதை உடைத்துக் கொண்டு அசுர வேகத்தில் கீழே வந்து விட்டது.) மிகப் பெரிய சரிவினை கொடுத்து விட்டது.

  தற்போதைய நிலையில் சந்தையின் சரிவுகளை விட மிகவும் மோசமான நிலையில் அனைத்து பங்குகளும் (ஒரு சில பங்குகளை தவிர) இறங்கிக் கொண்டு வருகின்றன.

  இந்த நிலையில் இருந்து சந்தை சிறிது மீண்டாலும் மிகவும் மோசமாக இறங்கிய பங்குகளின் விலை இந்த சிறிது ஏற்றத்தில் எந்த அளவுக்கு மேலே வரும் என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி?

  நாளை சந்தை நாம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் கீழ் நிலையான 2900/2800 என்ற நிலை வரும்பொழுது இந்த பங்குகளின் நிலை என்ன?

  அந்த ஒரு நிலையில் சந்தையில் முதலீடு செய்ய நம்மை போன்ற சராசரி முதலீட்டாளர்களிடம் பணம் இருக்குமா? அப்படியே இருந்தாலும் அவர்கள் தைரியமாக சந்தைக்குள் நாளை வருவார்களா?

  மேலும் தற்போது உலக சந்தைகளில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் பெரும் பணம் எங்கே செல்கிறது என்ற சாய் அவர்களின் கேள்விக்கும் நண்பர்கள் பதில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 2. hai sai,i am also your website daily viewer in last few months.thanks.

 3. அன்பிற்கினிய சாய் அவர்களுக்கு,

  வணக்கம். நான் பெருமாள். உங்களுக்கு பின்னூட்டம் அனுப்பி வரும் கார்த்திகேயனுடைய நண்பர். எனக்கு தங்களிடம் ஒரு கேள்வி.

  தயவு செய்து வருத்தப்படாமல் பதில் தரவும். பங்கு சந்தையில் intraday என்பது சரியா தவறா? சரி எனில் நீங்கள் இதுவரை லாபம் சம்பாதித்து இருக்கீறீர்களா?

  பங்கு சந்தை என்பது வணிகம் செய்யும் இடமா அல்லது முதலீடு செய்யும் இடமா? எனது கருத்து என்னவென்றால் பங்குச்சந்தை என்பது முதலீடு செய்யும் இடம் மட்டும்தான். தயவு செய்து உங்களின் கருத்தை எழுதவும்.

  அன்புடன்,
  பெருமாள்,கரூர்.

 4. திரு பெருமாள்,

  வணக்கம், பக்கத்து வீட்டில் http://chinnathampi.wordpress.com/) இருந்து கொண்டே பேசாமல் இருப்பது என்ன நியாயம்,?

  ஒகே … உங்கள் கேள்விக்கு பதில்

  வருத்த பட இதில் என்ன இருக்கு…

  தின வர்த்தகம் என்பது சரியே… தவறில்லை, தின வர்த்தகம் இல்லை என்றால் பங்கு சந்தையே இயங்காது….

  நான் நஷ்டம் இல்லாமல் லாபம் ஈட்டும் ஒரு பங்கு வணிகன் என்பதை சொல்லி கொள்வதில் பெருமையே..

  முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் … இதில் 100% ரிஸ்க் இருக்கிறது. அதை மனதில் கொள்ள வேண்டும்.

  இங்கு ஆசை தான் நம்மை வழி நடத்து கிறது. பேராசைதான் நஷ்டத்தை ஏற்படுத்து கிறது…

  22000 சென்ற பொழுது 24-27000 ஆயிரம் என்றார்கள் 1 நிமிடம் இதே வேகத்தில் கீழே சென்றால் என்னவாகும் என்று யோசித்திருந்தால் சிறு முதலீட்டாளர்கள் யாரும் நஷ்டம் அடைந்திருக்க மாட்டார்கள்..

  இன்னொரு விசயம் நான் முதலீடு செய்வதில்லை குறிப்பிட்ட 2 நிறுவன பங்குகளை தவிர, எதிர்கால திட்டம் அந்த நிறுவனங்களை கையகபடுத்த வேண்டும் அல்லது போர்டு ஆப் டைரக்டர் ஆக வேண்டும் என்பது ஆசை. அந்த நிறுவன பங்கு 100 இல் இருக்கும் போதும் வாங்கினேன். இன்று 25 இல் இருக்கும் போது வாங்கு கிறேன். காரணம் அது 10 ஆண்டு கால முதலீடு அன்றைய தினம் அதன் நிலைமை வேறாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.

  கடந்த ஜனவரி – 2008 இல் இருந்து முதலீட்டாளர்கள் யாரும் லாபம் அடைய வில்லை..

  லாபம் பார்த்தவர்கள்/ பார்ப்பவர்கள் அனைவரும் திறமையான தின வர்த்தகர்கள் மட்டும் தான்.

  எந்த தொழிலுக்கும் முறையான் பயிற்சி/ அனுபவம் / ஆலோசனை அவசியம்.

  லாபம் வரும் போது துள்ளி குதிப்பதும் நஷ்டம் ஏற்படும் போது புலம்புவதும் தவறு.

 5. பெருமாள் சார்,

  இன்னும் விரிவாக அல்சுவோம்..உங்கள் பார்வையில் கையில் இல்லாமல் விற்று வாங்கும் முறை வேண்டு மானால் தவறாக இருக்கலாம்.

 6. உலக பங்கு சந்தைகளில் அனைத்திலும் இருந்து கடந்த 10 நாட்களாக வெளியேறும் பெரும் பணம் எங்கே செல்கிறது? அது மீண்டும் உள்ளே வருமா? அது எப்போது?

  I think all the money going to Treasury bill (when GOV issue bill they will pay better interest rate + safe so Bank & Investor going there.)

  அனைவரும் விற்கும் போது அதை வாங்க ஆள் இருக்க தானே செய்கிறார்கள். அடி மாட்டு விலைக்கு வாங்கும் அந்த நல்ல மனிதர்கள் யாருங்கோ?

  நம்மை போல் சிறு உள்ள சிறு முதலீட்டார்கள் தான் -)

  இன்று மீன் பிடிக்கலாம் என்று நினைத்தேன் இப்ப இருக்கிற நிலையை பார்த்தால் சில நாட்கள் வேடிக்கை பார்ப்பது தான் நல்லதுன்னு படுது அதனால நம்ம ஸ்டாக் எப்படி கீழ மேலா போதுன்னு வேடிக்கை பார்ப்போம்.

  சாய் நீன்ட கால முதலீட்டுக்கு நல்ல ஸ்டாக் இருந்த பட்யடில் போடுங்க…. இந்த நேரத்தில் வாங்கி வைக்க வசதிய இருக்கும்

 7. மில்லியன் டாலர் கேள்வி என்பதனை மாற்றி பில்லியன் அல்லது ட்ரில்லியன் என வைத்தால் நன்றாக இருக்கும்.

  இப்பொழுது உலக சந்தைகள் இருக்கும் நிலையில் இதற்கு மேல் ஏதாவது வார்த்தைகள் இருக்குமா என தேடும் நிலை. எனக்கு தெரிந்து MAARS SOFTWARE என்ற பங்கு சிறிது

  சிறிதாக தேய்ந்து கடைசியில் இல்லாமலே போனது என்று நினைக்கிறேன். இப்பொழுது suzlon மற்றும் rnrl போன்ற பங்குகள் இந்த நிலையை நோக்கி போவது போல் தெரிகிறது.

  என்னை பொறுத்தவரை இன்னும் ஒரு ஆண்டுக்காவது முதலீடு செய்வதை தவிர்த்து தினவர்த்தகம் மட்டுமே செய்யலாம்.

 8. திரு மோகன் ராஜ்,

  கவலை வேண்டாம், பகல் இரவு மாறி மாறி தான்
  வரும் எதுவும் நிரந்தரம் இல்லை…

  சரிவுகள் அனைத்தும் உலக காரணங்களால் தான்

  இருந்தாலும் இந்த சரிவுகள் நாம் எதிர் பார்த்தது தான். ஆனால் இந்த வேகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்க வில்லை. எப்போதும் மேலே ஏறுவது தான் கடினம் இறக்கத்தில் வேகம் இரக்கம் இல்லாமல் தான் இருக்கும் என்பது தான்.

  2 பார் கீ ரிவர்சல் பற்றி நாம் எழுதிய போது என்னை காய படுத்திய சம்பவமும் நடந்தது. அந்த அமைப்பு உருவாகியது வாரந்திர சார்ட்டில் இன்று 9 வாரம் ஆகி விட்டது. அதன் தாக்கம் குறையும்.
  சரியாக 1200 புள்ளிகள் சரிவடைந்தது.

  தாங்கள் சொல்வது உண்மைதான் தற்போது ஏற்பட்டுள்ள பயத்தில் யாரும் உள்ளே வர யோசிப்பார்கள். காரணம் தற்போது தேவைக்கு அதிகமாக செய்திகள் தினிக்கபடுகிறது தங்களுக்குள் உள்ள போட்டியால் செய்திகளை அப்படியே வழங்குவதில்லை. உருவாக்குகிறார்கள்.

  4500 இல் இருக்கும் போது 5200 பற்றிதான் பேசினார்கள்…. இன்றைய நிலையான 3500 சொல்லி இருந்தால் நல்லா இருந்திருக்கும். பயத்தில் இருக்கும் போது ஆறுதல் சொல்லாமல் மேலும் பயத்தை உண்டாக்குவது. உற்சாகத்தில் இருக்கும் போது எச்சரிக்கை செய்யாமல் மேலும் ஊக்கபடுத்தும் வேலைகளை தான் செய்கிறார்கள்.

 9. அண்ணே இது ஒரு ஜனநாயக நாடு, இங்க இப்படி கூட பேசலைனா அப்புறம் ஊமைனு சொல்லிருவாங்க. எனவே அவங்க பாட்டுக்கு பேசட்டும். பொழுது போகலைனா நாம அத பார்க்கலாம். இல்ல இந்தமாதிரி ஊடகங்கள் மற்றும் செய்திதாள்ல வர்ற எல்லாத்தையும் கண்டுக்காம விட்டறலாம். எப்படி…..

 10. Sila Per mattum thaan Simba Intha Mentality la iruppaanga. But most of the people Beleive 100% the news which are provided by the Media.If we ignore the news from media, then we almost miss all news at time.

 11. பிரியா நீங்கள் சொல்வதும் சரி தான். ஒரு முறை IIP Numbers வெளியிடுவதற்கு பதில் வேறு ஒன்றை வெளியிட்டு, அந்த தவறான செய்தி சந்தையை எவ்வாறு ஆட்டியது என்பதை நானும் பார்த்தேன்.

  ஆனால் வணிகர்கள் அனைவரும் தமது சொந்த சிந்தனையில் வணிகம் செய்யும் நாள் விரைவில் வரும்.

 12. சொந்த சிந்தனை endraalum Partially we are all dependent on media virtually.

 13. அன்பிற்கினிய சாய் சார்,

  தங்களின் busy and precious schedule- க்கு இடையில் எனக்காக பதில் எழுதியதற்கு மிக்க நன்றி. நானும் தங்களின் வீட்டுக்கு அருகாமையில் (http://chinnathampi.wordpress.com) இருந்தாலும் எனக்கு தின வர்த்தகத்தில் சுத்தமாக நம்பிக்கையும் ஆர்வமும் இல்லாமையால் தங்களின் வலைத்தளத்தை படிப்பதில்லை, மன்னிக்கவும். இருந்தாலும் நண்பர் கார்த்தி அவர்கள் தினமும் உங்கள் வலைத் தளத்தை படிக்கும்பொழுது அருகாமையில் இருந்து கவனிப்பது உண்டு.

  ஒரு சில கட்டுரைகளை படித்திருக்கிறேன். அது தின வர்த்தகத்திற்கு மிகவும் உபயோகமாக இருப்பதாக நண்பர் கார்த்தி சொல்லியிருக்கிறார். தங்களின் இந்த பணி மிகவும் பாராட்டுக்குரியது. இவ்வரிய உயர்ந்த பணியை தொடர்ந்து செய்ய எனது வாழ்த்துக்கள். எனது வலைத்தளத்தில் எனது மன அழுத்தத்தை போக்கிக்கொள்ள மட்டுமே எழுத ஆரம்பித்தேன். தற்சமயம் மிகுந்த மன பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதனால் எனது வலைப் பூவை தொடர்ந்து எழுத முடிவதில்லை. விரைவில் ஒரு புத்துணர்ச்சியோடு மீண்டும் எழுத ஆரம்பிப்பேன் என்று நம்புகிறேன்.

  நீங்கள் நண்பராக கிடைத்ததில் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. முக்கியமான ஒன்றை எழுத மறந்து விட்டேன், அது நீங்கள் தின வர்த்தகத்தில் சம்பாத்தித்து உள்ளதாக எழுதியிருக்கிறீர்கள். கண்டிப்பாக அது ஒரு சாதனைதான். உங்கள் சாதனைக்கும், இரு நிறுவனத்தை வாங்கும் முயற்சிக்கும் எனது மனபூர்வமான வாழ்த்துக்கள்.

  இனி உங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன். நன்றி.

  அன்புடன்,
  உங்கள் நண்பர்,
  பெருமாள்,கரூர்

 14. Simba Sir,
  “என்னை பொறுத்தவரை இன்னும் ஒரு ஆண்டுக்காவது முதலீடு செய்வதை தவிர்த்து தினவர்த்தகம் மட்டுமே செய்யலாம்.” என்று கூருகிரீர்கள் என்னை போன்ற தின வர்த்தகத்தில் ஈடு பட நேரமில்லாத சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது?

 15. If you see the FII activity, some % going to debt.
  Reporting Date Instrument Type Gross Purchases
  (Rs. Cr) Gross Sales
  (Rs. Cr) Net Investments
  (Rs. Cr) Net Investments
  (USD Millions)
  08/10/2008 Equity 2,797.60 3,345.70 -548.10 -135.90
  08/10/2008 Debt 149.30 59.50 89.80 22.30
  07/10/2008 Equity 1,995.20 3,116.60 -1,121.40 -278.00
  07/10/2008 Debt 187.00 95.70 91.30 22.70

 16. pankusanthai payan payam …

 17. Posted by ரவிகுமார் on ஒக்ரோபர் 9, 2008 at 11:48 முப

  அன்புள்ள சாய் அவர்களுக்கு,

  நல்லவர்களையும்,கெட்டவர்களையும் அடையாளம் காண சில நாள் பிடிக்கும்.அது போலத்தான் இன்று சில நல்ல நிறுவனங்களை அறிந்து கொள்ள முடிகிறது.ஆம். உதாரணமாக LUPIN, MARUTHI,HUL,BHARATI AIRTEL.Etc.,போன்ற நிறுவனங்களை கூறலாம்

 18. Posted by ரவிகுமார் on ஒக்ரோபர் 9, 2008 at 12:06 பிப

  அன்புள்ள சாய் அவர்களுக்கு,

  பொதுவாக முதலீட்டார்கள் செய்யும் தவறினை கீழே தெரிவித்து உள்ளேன்.அதனை அனைவர் கவனத்துக்கும் கொண்டு வரவும். நன்றி
  A common Investor’s thought

  1) 3850- confirmed downtrend market would fall

  2) 4250- got some confidence and try investing small

  3) 4550- got more overconfidence with the market and try investing more

  4) 4250- hopes market will go up any way

  5) 4000- Book his/her loss and waiting for the market to get normal

  6) 3600- advises his/her surroundings that market may go down further.

  7) And the cycle continues ((good one))

 19. பிரியா/ பைசல்,

  தங்களின் கருத்துகளுக்கு நன்றி… இன்று பட்டியல் போட்டு விடலாம்.

  சிம்பா – மேலும் கலக்குங்க நண்பா…

  திரு பெருமாள் – கூடிய விரைவில் உங்கள் மன அழுத்தம் நீங்க எனது குரு சீரடி சாய் பாபவும் முதல் கடவுள் கணேஷரும் அருள் புரியட்டும்.. தொடர்ந்து வாருங்கள். மின்னஞ்சலை எதிர் பார்க்கிறேன்.

  பஷிர் – நீண்ட கால முதலீடு என்பது உடனடி பலன் அளிக்க வாய்ப்பில்லை, ஆனால் சில டெக்னிகல் உதவியுடன் செய்யூம் குறுகிய கால முதலீடு பயனளிக்கும், அதை பற்றியும் இந்த பொறுளாதார சுனாமி முடிந்த பிற்கு அல்சுவோம்..

  குகன் – பயமறிந்தால் வெற்றி நிச்சயம்.

  ரவி – தகவல்களுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: