பங்கு சந்தையின் போக்கு – 07.10.2008


மாறும் என்ற சொல்லை தவிர அனைத்தும் மாறும் –  ஏற்றமோ இறக்கமோ எதுவும் நிரந்தரம் இல்லை.  ஆகையால் இது மாதிரியான நிலைகளில் பொறுமைதான் கை கொடுக்கும். 

வச்சா குடுமி, அடிச்சா மொட்டை – இப்படிதான் அனைவரும் பேச ஆரம்பித்துள்ளார்கள், மக்கள் பீதியில் இருக்கும் போது அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய மீடியாக்கள் மேலும் பயத்தை ஏற்படுத்துகிறார்கள்.  4900 / 5200 உறுதி என்று சொன்னவர்கள் கூட 2000 என்று பயம் காட்டு கிறார்கள்.  

தற்போதைய சந்தையை பற்றி பார்ப்போம்…

4100 உடை பட்டால் 3800 என்ற வலுவான சப்போர்ட் வலுவிலக்கும் என்று சொன்னது போல் நடந்து விட்டது.  ஒரு நாளில் தலை கீழ் மாற்றம். 3 மாத காலமாக சப்போர்ட்டா இருந்து வந்த 3800 ஒரே நாளில் ரெஸிஸ்டண்ஸ் – ஆக மாறி விட்டது.  

கேப் பில்லிங் தியரி படி சந்தையை மேலே இழுக்கும் இடவெளிகள் அதிகம் உள்ளது. நிப்டியார் அனைத்து ஆம்னி பஸ்களிலும் (3850 / 3990/ 4190/ 4300 ) – சீட்டு ரிசர்வ்(துண்டு) செய்து வைத்துள்ளார்.  ஒரு நல்ல காரணம் கிடைக்கும் பட்சத்தில் சிங்க நடை போடுவார்.

அதே போல் அரசும் அடுத்த பொது தேர்தலுக்கும் முன்பாக சந்தையில் பெரிய சரிவை விரும்பவில்லை.

ரிசர்வ் வங்கியின் – CRR குறைப்பு,   செபியின்  P-Notes  கட்டு பாடுகளில் தளர்வு ஆகியவை சிறிய அளவில் உதவும் என்றே நினைக்கிறேன்.

இன்று சந்தை நேற்றைய இழப்பை மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன்.

நிப்டி ஃபூயுச்சர் 3650 க்கு மேலே செல்லு பட்சத்தில் 3764  – 3850 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.

================================================================

குறைந்தது சில நூறு வணிகர்கள் இந்த வலை பூவை படித்தாலும் ,  குறிப்பிட்ட 10 நபர்கள் மட்டுமே தொடர்ந்து பீன்னூட்டம் எழுதுகிறார்கள்,  இதில் எனக்கு வருத்தமே அவர்களுக்கும் வேலை பளு இருக்கும், அவர்களுக்கும் தொடர்ந்து எழுதுவது ஒரு வித சலிப்பினை ஏற்படுத்தும். சரி சிலர் தொலைபேசியில் பேசும் போது தமிழில் எழுத தெரியாது, அதனால் பீன்னூட்டம் எழுதுவதில்லை என்று சொன்னதால் சனிகிழமை அமர்ந்து NHM writer என்ற மென்பொருள் பற்றி எழுதி இருந்தேன், இது வரை அந்த 57 நபர்கள் டவுன் லோடு செய்திருக்கிறார்கள், எனக்கு  மகிழ்ச்சி.  பயனடைந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.  வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

Advertisements

10 responses to this post.

 1. வணக்கம் சார்
  நிங்கள் சொல்வது போல் கேப் டோவ்ன் நிறைய இருக்கிறது. ஏதேனும் positive
  news வந்தால் சந்தை மேலே செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  In between cash market and future market more than differernt for example ranbaxy 08/09/08 cash market Rs.450 but futute is Rs.424.
  ஏனிந்த வித்தியாசம் இதனால் இந்த பஙகு இறங்கும் என்று எதிர்பார்கலமா. தய்வு
  செய்து பதில் இடவும்

 2. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 7, 2008 at 9:27 முப

  திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய இன்றைய பதிவில் சந்தையைப் பற்றியும் நமது நாட்டு மீடியாக்கள் பற்றியும் சரியாக கூறியுள்ளீர்கள்.

  சந்தை மேலே சென்றுகொண்டு இருக்கும்பொழுது இன்னும் 500 புள்ளிகள் மேலே செல்லும் என்பதும் நன்கு இறங்கியதும் இன்னும் பாதாளத்திற்குள் செல்லப் போகிறது என்று சொல்வதும் தானே அவர்களது வேலை. இதைத்தானே கடந்த பல வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  இன்றைக்கு மட்டும் என்ன அவர்கள் அதனை மாற்றிக் கொள்ளவா போகிறார்கள்? நமது தலை எழுத்து அதை பார்ப்பது என்று நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

  சந்தை மேலே விட்டு வந்துள்ள நான்கு இடைவெளிகளை கொடுத்தது சற்றே ஆறுதலாக உள்ளது சாய்.

  சந்தை மீண்டும் 4000, 4200 என்ற நிலை வந்தால் பரவாயில்லை என்கிற நிலையில்தான் அனைவரின் மனநிலையும் உள்ளது.

  பொறுத்திருந்து பார்ப்போம். இனிய காலை வணக்கம்.

 3. சாய் காலை வணக்கம் , தாங்கள் அளித்த விளக்கம் அனைவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கும் என நம்புகிறேன். average செய்ய சரியான நாள் இன்று .தாங்கள் கொடுத்திருக்கும் நிலைகளில் நஷ்டம் இல்லாமல் வெளியே வர சரியான சந்தர்ப்பம்.மேலும் crude oil விலை $ 80 க்கும் கீழ் நிலைபெறும் பட்சத்தில் நம் அரசாங்கம் தேர்தல் நெருங்குவதால் பெட்ரோல் டிசெல் விலை குறைப்பதற்கு முயற்சிக்கும் என நம்புகேறேன்.மேலும் நான் ஒரு இணைய தளத்திற்கு சென்ற போது அதில் கருத்துக்கள் ஒலி வடிவிலும் கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது .ஏன் எனில் 40 வரிகள் மட்டுமே இருந்தது ஆனால் சுமார் 6 நிமிடங்கள் விளக்கம் ஒலி அலைகளால் இருந்தது .தாங்களும் முயர்ச்சித்தால் இன்னும் ஒரு வைரக்கல் .அந்த வலை தளம் http://vaaramorualayam.blogspot.com/

 4. thank you for your info sai

 5. இன்று மிக அவசரமாக ups மூலம் கணினியை உயிரூடியவுடன் நான் தேடிய முதல் வலை தங்களுடையதுதான். இன்று என்ன குறிப்பட்டுள்ளீர்கள் என்பதை காண மிக ஆர்வம். இப்பொழுது என் ஆர்வத்துக்கு தீனி போட்டு விட்டீர்கள்.

  //நிப்டி ஃபூயுச்சர் 3650 க்கு மேலே செல்லு பட்சத்தில் 3764 – 3850 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.//

  இந்த வரிகளை பார்த்த பின்பு தான் நான் trading platform பக்கம் சென்றேன். அங்கே +100 . இதற்க்கு மேல் என்ன சொல்வது. நேற்றைய அறிவிப்பின் தாக்கம் எப்படி இருக்கும் என்று இப்பொழுது தெளிவாகிவிட்டது.

  நன்றி சார்.

 6. வணக்கம்.
  //மக்கள் பீதியில் இருக்கும் போது அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய மீடியாக்கள் மேலும் பயத்தை ஏற்படுத்துகிறார்கள்.//
  கவனிக்க படவேண்டிய விஷயம் சாய்!
  நமது நாட்டு மீடியாக்கள் பற்றியும் சரியாக கூறியுள்ளீர்கள்.

  கவனிக்க படவேண்டிய விஷயம் சாய்!

 7. அப்பப்ப வந்து பார்ப்பேன். ஆனால் பின்னூட்டங்கள் அதிகம் இடாதவர்களில் நானும் ஒருவன் என்பதை வருத்தத்துடன் கூறிக்கொள்கிறேன்.

  பங்கு சந்தையை பற்றிய நிலவரத்தை தெரிந்துக்கொள்வதற்காகவே பார்க்கிறேன். முதலீடுகள் எதுவும் இதுவரை செய்ததில்லை.

 8. மஞ்சூர் ராசா – வருகைக்கு நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: