Archive for ஒக்ரோபர் 7th, 2008

இன்றைய வெற்றியாளர்

சிறிய குழப்பம்  நாம் போட்டி நிப்டி ஸ்பாட் ஆ இல்லை ஃப்யூச்சரா என்று சொல்லாததால், ஆகையால் இன்று மட்டும் இருவர் வெற்றியாளராக தேர்வு செய்ய படுகிறார்கள்.

1. நிப்டி ஸ்பாட் வெற்றியாளர் திரு செந்தில் குமார், ஹைதராபாத்.

2. நிப்டி ஃப்யூச்சர்  வெற்றியாளர் திரு செந்தில் குமார், சென்னை. 

இருவரும்

 

பங்கு சந்தையில் வெற்றி பெற வாழ்த்துகள்..  பரிசாக 1 மாதம் தின வர்த்தக குறிப்புகள் அனுப்பபடும்.

இந்த போட்டிக்கும் செந்தில் என்ற பெயருக்கும் என்ன பந்தம் தெரிய வில்லை சில மாதங்களுக்கு முன்பாக இப்போட்டியை துவங்கிய போது வெற்றி பெற்றவரும் இன்னொரு செந்தில் குமார் தான்.

இன்று ஒரு நாள் மட்டும் போட்டியின் விதி தளர்த்த பட்டது – நாகேஷ் அவர்களின் திரு விளையாடல் பட வசனம் “எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்து கொள்ளுங்கள்” என்பது போல். 6 புள்ளிகள் குறைத்து கொண்டோம்.

சென்னை செந்தில் குமார் – உங்களது மொபைல் நம்பரை தெரிவிக்கவும் வரும் திங்கள் முதல் தின வர்த்தக ஆலோசனைகள் 1 மாத்திற்கு அனுப்பபடும். வாழ்த்துகள்.

பங்கு சந்தையின் போக்கு – 07.10.2008

மாறும் என்ற சொல்லை தவிர அனைத்தும் மாறும் –  ஏற்றமோ இறக்கமோ எதுவும் நிரந்தரம் இல்லை.  ஆகையால் இது மாதிரியான நிலைகளில் பொறுமைதான் கை கொடுக்கும். 

வச்சா குடுமி, அடிச்சா மொட்டை – இப்படிதான் அனைவரும் பேச ஆரம்பித்துள்ளார்கள், மக்கள் பீதியில் இருக்கும் போது அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய மீடியாக்கள் மேலும் பயத்தை ஏற்படுத்துகிறார்கள்.  4900 / 5200 உறுதி என்று சொன்னவர்கள் கூட 2000 என்று பயம் காட்டு கிறார்கள்.  

தற்போதைய சந்தையை பற்றி பார்ப்போம்…

4100 உடை பட்டால் 3800 என்ற வலுவான சப்போர்ட் வலுவிலக்கும் என்று சொன்னது போல் நடந்து விட்டது.  ஒரு நாளில் தலை கீழ் மாற்றம். 3 மாத காலமாக சப்போர்ட்டா இருந்து வந்த 3800 ஒரே நாளில் ரெஸிஸ்டண்ஸ் – ஆக மாறி விட்டது.  

கேப் பில்லிங் தியரி படி சந்தையை மேலே இழுக்கும் இடவெளிகள் அதிகம் உள்ளது. நிப்டியார் அனைத்து ஆம்னி பஸ்களிலும் (3850 / 3990/ 4190/ 4300 ) – சீட்டு ரிசர்வ்(துண்டு) செய்து வைத்துள்ளார்.  ஒரு நல்ல காரணம் கிடைக்கும் பட்சத்தில் சிங்க நடை போடுவார்.

அதே போல் அரசும் அடுத்த பொது தேர்தலுக்கும் முன்பாக சந்தையில் பெரிய சரிவை விரும்பவில்லை.

ரிசர்வ் வங்கியின் – CRR குறைப்பு,   செபியின்  P-Notes  கட்டு பாடுகளில் தளர்வு ஆகியவை சிறிய அளவில் உதவும் என்றே நினைக்கிறேன்.

இன்று சந்தை நேற்றைய இழப்பை மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன்.

நிப்டி ஃபூயுச்சர் 3650 க்கு மேலே செல்லு பட்சத்தில் 3764  – 3850 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.

================================================================

குறைந்தது சில நூறு வணிகர்கள் இந்த வலை பூவை படித்தாலும் ,  குறிப்பிட்ட 10 நபர்கள் மட்டுமே தொடர்ந்து பீன்னூட்டம் எழுதுகிறார்கள்,  இதில் எனக்கு வருத்தமே அவர்களுக்கும் வேலை பளு இருக்கும், அவர்களுக்கும் தொடர்ந்து எழுதுவது ஒரு வித சலிப்பினை ஏற்படுத்தும். சரி சிலர் தொலைபேசியில் பேசும் போது தமிழில் எழுத தெரியாது, அதனால் பீன்னூட்டம் எழுதுவதில்லை என்று சொன்னதால் சனிகிழமை அமர்ந்து NHM writer என்ற மென்பொருள் பற்றி எழுதி இருந்தேன், இது வரை அந்த 57 நபர்கள் டவுன் லோடு செய்திருக்கிறார்கள், எனக்கு  மகிழ்ச்சி.  பயனடைந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.  வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

விவாத மேடை 07.10.2008

நண்பர்கேளே,

பின்னூட்ட பகுதியை ஒரு ஆரோக்கியமான விவாத மேடையாக மாற்ற முன் வாருங்கள். என்று சொன்னதற்கு ஒரு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது, கேள்வி பதில்களை அந்த அந்த பதிவின் கீழ் தொடர்ந்தால் சில சமயம் சில் விசயங்கள் விடு பட்டு விடலாம், அதற்காக தனி பக்கம் போடலாமா என்று யோசித்தேன், அப்படி செய்தால் அது அனைவரது  கவனத்திற்கும்  வருமா என்ற சந்தேகம்,  ஆகையால் விவாத மேடை என்ற ஒரு பதிவை எழுதி அது எப்பொழுதும் மேலே இருக்க செய்து விடலாம் என்று முடிவு செய்துள்ளேன். 

எப்பொழுதும் போல் சந்தையை பற்றிய தினசரி கட்டுரைகள் இந்த பதிவின் கீழ்  பதிய படும்.  பதிவு சம்மந்தபட்ட கருத்துகளை அந்த அந்த பதிவுகளில் எழுதலாம்.

தங்களின் பொதுவான, சந்தேகங்களை, அனுபவங்களை, கேள்விகளை இங்கு எழுதுங்கள்.  ஆங்கிலத்திலும், தமிழிலும் அல்லது புதிய மொழியான தமிழாங்கிலத்தில் எதில் உங்கள் சவுகரியமோ அதில் எழுதலாம். இது உங்க ஏரியா – யாரும் குறை சொல்வார்கள் என்ற தயக்கம் வேண்டாம்.