பங்கு சந்தையின் போக்கு 06.10.2008


சென்ற வாரம் எதிர் பார்க்கபட்ட உயர்வு  சாத்திய படவில்லை,  ஆனால் உலக சந்தைகளோடு ஒப்பிடும் போது ஏற்பட்ட நமது சரிவு அதிக மில்லை,  ஒரளவு நிலை பட்டு உள்ளது என்றே சொல்லலாம்.

உலக நாடுகள் அனைத்தும் பெரிதாக எதிர் பார்த்த/ ஏன் நமது நிதி அமைச்சரே எதிர் பார்த்த “பெயில் அவுட் திட்டம்” பாஸ் ஆனாலும் சந்தைகளில்  பெயில் ஆகிடுச்சு.

இந்திய அரசு மற்றும் பங்கு சந்தை வணிகர்களால் அதிகம் எதிர்பார்க்க பட்ட அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்து ஆவதில் தாமதம்,  வர வர காதல் கசக்குதையா! என்று இந்தியா வந்த ரைஸ் ஏதோ ஒரு காரணம் சொல்லிவிட்டு திரும்பி விட்டார்.  அமெரிக்கவுடனான ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் முன்பாக, பிராண்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்தது,  ரஸ்யாவுடனான அணு வர்த்தக பேச்சு வார்த்தை வேக மெடுத்துள்ளது அமெரிக்காவை எரிச்சலடைய செய்துள்ளது.  அதிகமான வர்த்தகம் தங்களுடன் தான் இருக்கவேண்டும் என்பது அவர்களது விருப்பம், ஆமா அப்பதனே அவர்களின் வளர்ப்பு பிராணியின் (வால் வீதி)  உதட்டு சாய செலவுக்கு ($700 பி) சம்பாதிக்க முடியும்.

இன்று துவங்கியுள்ள ஆசிய சந்தைகளும் ”சரிவின் நிறம் சிவப்பு” என்று பறை சாற்றுகிறது.

அனைத்து சாதகமான காரணிகளும் பாதகமாக மாறி வருகின்றன,    தொட்டால் பற்றி கொள்ளும் நிலையில் தான் உள்ளது, ஒரு சின்ன காரணம் கிடைத்தாலும் ஒரு Up Trend  – Short Recovery  உருவாகும்.

இன்றைய ஆரம்பத்தில் நிப்டி ஃப்யூச்சர் 3865-70 க்கு மேல் நிலை பட்டால் கூட ஒரு டிரெண்ட் ரிவர்சல் உருவாகும்.  அதே நேரத்தில் 3730 உடை பட்டால் 4300 என்பதே குறுகிய கால கனவாக இருக்காது நீண்ட கால கனவாக மாறிவிடும் என்பதை ஏற்று கொண்டாக வேண்டும்.

இன்றும் ஏதோ ஒரு காரணத்தால் சந்தை தன்னை தக்கவைத்து கொள்ளும் என்று நம்புகிறேன். ஒரு பிரஸ் மீட் கூட அதை செய்யலாம்.

சென்ற வாரத்தின் அடிப்படையில் இந்த வாரத்திற்கான பிவோட் நிலைகள் –

4234 – 4125 – 3990 – 3881 3746 – 3637 – 3502 

கவனிக்க வேண்டிய விசயம் – திவால் எல்லாம்   கூட்டமா வந்தது,  சிங்கம் சிங்ளா தான் வரும் என்பது போல், பங்கு சந்தையின் பிதாமகன்  வாரண் பப்பட் என்ற சிங்கம்   இவ்வளவு நாளா அமைதியா இருந்தது, தற்போது அது நகர்வலம் வருவது  நம்பிக்கையான விசயம்.  கடந்த சில தினங்களில் அவர் மேற்கொண்டுள்ள இரு முதலீட்டின் மொத்த மதிப்பு $ 8 பில்லியன்.   அவருடைய முடிவு இதுவரை தவறாக அமைந்தது இல்லை,  இது முதலீடு செய்ய சரியான நேரம் என்று அவர்  நினைப்பதால்  தான்  இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்கிறார்.  அவர் எப்பொழுதும் So Called  பொருளாதார வல்லுநர்களுக்கு அனலிஸ்ட்களுக்கு எதிரானவர்.  இவர்கள் சிறிய ஏற்றம் வந்தாலும் – ஏற்றம், ஏற்றம் என்றும் சிறிய சரிவு  என்றாலும் சரிவு என்று சொல்வதால்.

================================================================

நண்பர் திரு கார்த்திகேயன்,

தங்களின் பின்னூட்டத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்…  இத்தனை நாட்கள் பின்னூட்டம் எழுத வில்லை என்றாலும் அதற்கு எல்லாம் சேர்த்து எழுதியது போல் அமைந்திருந்தது, என்னை மேம்படுத்தி கொள்ள நான் செய்யும் இந்த செயல் பலருக்கு பயனளிக்கிறது என்றால் மிகுந்த சந்தோசமே.  இன்னும் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன்.

நண்பர்கேளே,

தொடர்ந்து நன்றி, வாழ்த்துகள் என்ற சம்பிரதாய வட்டத்திற்குள் சிறைபடாமல் பின்னூட்ட பகுதியை ஒரு ஆரோக்கியமான விவாத மேடையாக மாற்ற முன் வாருங்கள். தங்களின் சந்தேகங்களை அனுபவங்களை கேள்விகளை எழுதுங்கள்.  அதற்கு நான் மட்டும் தான் பதில் எழுத வேண்டும் என்றில்லை, தெரிந்தவர்கள் பதில் கூறலாம்.  அதே போல் உங்களிடம் பயனுள்ள செய்தி/ அனுபவம்  / குறிப்பு / கட்டுரை இருந்தால் எனக்கு ஈ.மெயிலில் அனுப்புங்கள் அதை பதிவாக போட்டு விடலாம். அனைவருக்கும் பயன் படட்டும்.  இதை நண்பர் மோகன் ராஜ் / ஆர் கே  நீங்கள் இருவரும் துவக்கி வையுங்கள் இரண்டு பேரிடம் இருந்தும் கட்டுரை எதிர் பார்க்கிறேன்.

வாருங்கள் ஊர் கூடி தேர் இழுப்போம்..

சன் டீவி மட்டும் தான் காமெடி திரை ஆரம்பிக்க முடியுமா, நாமும்  அதை செய்து விடலாம்,  நண்பர்களின் ஆலோசனைகளின் படி  டைம் பாஸ் க்கு என்றே தனி வலை பூ ஒன்று இனிதே உதய மாகிறது.   இனிமேல் இங்கு ஜோக்ஸ் இடம் பெறாது. 

Advertisements

16 responses to this post.

 1. Good Morning and thank you very much for your views sir. Markets will trade in the range of 12500-14000 level. This is my prediction. Any fall below 12500 level may lead to free fall upto 11900.

 2. காலை வணக்கங்கள்!

  // பங்கு சந்தையின் பிதாமகன் வாரண் பப்பட் என்ற சிங்கம் இவ்வளவு நாளா அமைதியா இருந்தது, தற்போது அது நகர்வலம் வருவது நம்பிக்கையான விசயம் //

  உற்று நோக்கப்பட வேண்டிய இந்த நிகழ்வினை எடுத்து காட்டியதற்க்கு நன்றி. நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய விரும்புவோர், இன்னும் சரிவுகளை எதிர்நோக்காமல், இப்பொழுது முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்..

 3. Markets may trade in the volatile range of 12500-14000 level in near future.If it breaks the support level of 12500, then the market will go below 12000 level. This is my prediction for next few days.

 4. Good Morning – Thank You sir

 5. thank you sai

 6. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 6, 2008 at 9:50 முப

  Dear Sai,

  Thank you very much for your market information.

  Good Morning and Have a nice day,,,,,,

 7. very useful articles about share market add ur post to thamilbest.com

 8. // பங்கு சந்தையின் பிதாமகன் வாரண் பப்பட் என்ற சிங்கம் இவ்வளவு நாளா அமைதியா இருந்தது, தற்போது அது நகர்வலம் வருவது நம்பிக்கையான விசயம் /

  சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு !

 9. நானும் சில மாதங்கலாக கவணித்து வருகின்றேன் இந்த ஸ்டாக் (UTV SOFT. COMM. L)மட்டும் அதிக இறங்கமா ஷ்டாங்கா இருக்கு ஏன்னு யாருக்காவது தெரியுமா?

  RK அவர்களுக்கு :

  நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய விரும்புவோர், அனுபவத்தில் சொல்லுகிறேன் (கடந்த 2 மாத்தில் மட்டும் 28% சரிவு) இன்னும் சற்று பொறுக்கலாம். சந்தை மீண்ட பின்பு 10ரூபாய் அதிகம் ஆனாலும் அவசரபடாம வங்கலாம் இப்ப நல்ல பங்கு எது எப்ப வங்கலாம் என்று திட்டமிலாம் என்பது என் கருத்து.

  நம்ம சரவணன் கூட //நீண்ட கால முதலீட்டாளர்கள் சந்தையில் உள் நுழைய இது சரியான தருண்ம் இல்லை. குறுகிய கால முதலீட்டாளர்கள், இம்மாதிரியான ஒவ்வொரு உயர்வினையும் பயன் படுத்திக் கொள்ளவும். //

 10. வாரண் பப்பட் பற்றி நீங்க கொடுத்துள்ள தகவல் மட்டுமே இன்னைக்கு ஆறுதலான விஷயம். ஏதாவது நன்மை நடக்க வேண்டும் என்று காத்திருப்பதை தவிர இந்நிலையில் வேறெதுவும் செய்ய முடியாது.

  நன்றி சாய் சார்.

 11. thank you for your information sai sir.

 12. பைசல்,

  UTV – சரிவடைந்து தான் உள்ளது 820ல் இருந்து 650 க்கு வந்து விட்டது.

  மாருதி – பங்கினை கவனியுங்கள் கடந்த இரண்டு மாதமாக எந்த ஒரு ஏற்ற இறக்கம் இல்லாமல் இருப்பதை பார்க்கலாம். டெக்னிகல் சவுண்ட் தான் காரணம்.

  ஆர் கே – சொல்வது சரிதான். தற்சமயம் முதலீடு செய்யலாம். திரு சரவணன் அவர்களின் கருத்தை
  நாம் விவாதிக்க வேண்டாம்.

 13. faizal,

  கண்டிப்பாக இந்த சரிவு அனைவருக்கும் பீதியை கிளப்பி முதலீடுகளை மறுபரிசீலனை செய்ய வைக்கும்.

  நீங்களும் நானும் தினமும் சந்தை கூடவே பயணிப்பதால், நாம் இன்னும் இறங்கட்டும் என காத்திருக்கிறோம். ஆனால், முதன்மை சந்தையில் மட்டும் முதலீடு செய்து பங்குகளை வாங்கி வரவு வைத்து விட்டு மற்ற வேலையை பார்க்கும் சில நண்பர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம்.

  ஏனெனில் அவர்களை பொறுத்தவரை 2/3/5 ஆண்டுகளுக்கான முதலீடு அது.ஒரு நீண்ட கால முதலீட்டாருக்கு இதை போன்ற சந்தர்ப்பங்கள் மிக அரிதாகத்தான் கிட்டும்.நம்மை போன்ற சிறு முதலீட்டாளர்கள் bottom fishing செய்வதென்பது, மிக கடினமான காரியம்.

 14. Posted by K. Mohanraj, Karur on ஒக்ரோபர் 6, 2008 at 6:26 பிப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரையில் கடைசியில் தாங்கள் குறிப்பிட்டுள்ள படி “தொடர்ந்து நன்றி, வாழ்த்துகள் என்ற சம்பிரதாய வட்டத்திற்குள் சிறைபடாமல் பின்னூட்ட பகுதியை ஒரு ஆரோக்கியமான விவாத மேடையாக மாற்ற முன் வாருங்கள்” என்ற வாக்கியங்கள் சிந்திக்க வைக்கின்றன சாய்.

  தினமும் தங்களுடைய கட்டுரைகளை படித்து விட்டு நன்றி என்று சொல்வதைக் காட்டிலும் சந்தை பற்றிய ஏதாவது ஒரு விஷயத்தை தினமும் விவாதத்திற்கு கொண்டு வரலாம். மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

  மேலும் தங்களுடைய தனிப்பட்ட சந்தை அனுபவங்களைக் கூட இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று தாங்கள் உரைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

  கடந்த FnO settlement- கு பிறகே சந்தையின் போக்கினை பார்க்கும்பொழுது தலை சுற்றுகிறது. தலை மட்டுமா சுற்றுகிறது, உடம்பிலுள்ள ரத்தம் அனைத்தையும் எடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது சாய்.

  இன்றாவது சந்தை மேலே வரும் என்று பார்த்திருந்து பார்த்திருந்து விழிகள் தான் சோர்வடைந்து விட்டன. இரண்டு மூன்று மாதங்களில் நிப்டி கீழ் நிலைகளை பார்ப்போம் என்று நினைத்திருந்தால் அவை அனைத்தையும் ஒரே மாதத்திற்குள்ளாக சந்தை காண்பித்து விடுகிறது.

  அதுவும் இன்றைய சந்தையை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் மிகவும் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது என சொல்லலாம் என்று நினைக்கிறேன். மற்ற நண்பர்களுடைய கருத்து என்னவென்று தெரியவில்லை.

  மிகுந்த சரிவுகளை கண்டுவிட்டோம். சிறிது மீட்சியையாவது எதிர்பார்த்தால் சந்தை அதற்கு மாறாக பெரிய சரிவுகளையே தருகிறது. என்று சந்தை மீள்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  மேற்கண்ட கருத்துக்கள் எனது தனிப்பட்டவை.இவற்றின் மீதான மாற்றுக் கருத்துகள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்.

  தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களையும் இந்த வலைத்தளத்தில் பின்னூட்டத்தின் மூலம் வெளிப்படுத்த வாய்ப்பளித்த திரு சாய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  இனிய மாலை வணக்கம்.

 15. Posted by ச. கார்த்திகேயன் on ஒக்ரோபர் 6, 2008 at 7:14 பிப

  உயர்திரு சாய் அவர்களுக்கு,

  இனிய மாலை வணக்கம். தங்களுடைய கட்டுரை மிகவும் அழகாக இருக்கிறது. சந்தை இன்னும் சில மாதங்களில் 3000 என்ற நிலைகளுக்கு கீழ் செல்லும் தாங்கள் முதலில் கூறி இருந்தீர்கள்.

  ஆனால் தற்போது சந்தையில் nifty இறங்குவதை காட்டிலும் நிறைய பங்குகளின் விலைகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இறங்கிவிட்டன. எட்டு மாதங்களுக்கு முன்பு 600 ரூபாய் என்ற அளவில் வர்த்தகம் ஆகிக் கொண்டிருந்த கட்டுமானத்துறை பங்குகள் கூட தற்போது ரூபாய் 100- யை உடைத்து வர்த்தகம் ஆகிக் கொண்டிருப்பது நாம் அனைவரும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று.

  தற்பொழுது என்னுடைய சந்தேகம் என்னவென்றால் நிப்டி 3620 என்ற நிலை வந்த பொழுதே பங்குகளின் விலை இவ்வாறு அடிமட்ட விலைக்கு வந்துவிட்டது என்றால் இன்னும் நான்கைந்து மாதங்களில் (அவ்வளவு நாள் சந்தைக்கு தேவைப் படாதேன்றே நினைக்கிறேன்) சந்தை மிகவும் கீழே வரும்பொழுது இந்த பங்குகளின் நிலைமையை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

  இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை நாளை ஏற்படும்பொழுது, ஏன் இன்றைக்கே கூட நிறைய நண்பர்கள் சந்தைக்குள் இனிமேல் நீண்ட கால முதலீட்டிற்கு கூட வருவது சரியா என யோசிக்க(பயப்பட) தொடங்க விட்டனர்.

  நிறைய வணிகர்களுக்கும் தற்போது இந்த எண்ணம்தான் உள்ளது. மேலும் எனது நண்பர் திரு பெருமாள் அவர்கள் சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு ஒரு சில பங்குகளையும் அவை என்ன விலை வந்தால் வாங்கலாம் என்றும் கூறினார்.

  அவர் கூறிய பங்குகளில் ஒரு சில பங்குகளின் விலையை கீழே குறிப்பிட்டுள்ளேன்.

  icici bank – 500 ரூபாய் அவர் கூறியபொழுது இந்த பங்கின் அன்றைய விலை 1150 ரூபாய்.

  இதேபோல் jp associat என்ற பங்கு அப்பொழுது 450 ரூபாய் என்ற அளவில் வணிகம் ஆகிக் கொண்டிருந்தது. அவருடைய பரிந்துரை விலையாக ரூபாய் 200 கொடுத்தார். அப்பொழுது அவருக்கும் எங்களுக்கும் நிறைய வாக்கு வாதம் வரும் இந்த விலை எல்லாம் எப்படி வரும் என்று.

  ஆனால் தற்பொழுது சந்தை அதற்கும் கீழாக அகல பாதாளத்திற்குள் சந்தை சென்று கொண்டிருக்கிறது.

  தற்போது நாம் அனைவரும் வேண்டிக்கொள்வது என்னவென்றால் சந்தை உடனடியாக மேலே வரவேண்டும் என்பதல்ல. இந்த நிலையிலாவது தன்னை நிலைப் படுத்திக் கொண்டால் பரவாயில்லை என்பதுதான்.

  இதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

 16. Mohanraj
  //இன்றைய சந்தையை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் மிகவும் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது என சொல்லலாம் என்று நினைக்கிறேன்//.

  கண்டிப்பாக இதே கருத்துதான் என்னுடையதும். ஏமாற்றம். இப்பொழுது இதற்கு விடிவு இருக்குமா என்று என் மனது ஆராய தொடங்கிவிட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: