Archive for ஒக்ரோபர், 2008

ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு…

பங்கு சந்தை பற்றிய ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு…
தற்சமயம் பதிவுலகில் இரண்டு விதமான தொடர்பதிவு அனைவரும் எழுதி வருகிறார்கள்.

1. சினிமா….

2. பயன் படுத்தும் மென்பொருள்.

இதில் சினிமா மிகவும் பரபரப்பாக எழுத பட்டு வருகிறது. நமக்கும் ஒரு அழைப்பு வந்தது..  நமக்கு சினிமா என்றால் வேப்பங்காய், திருமணத்திற்கு பெண் பார்க்கும் போதே சினிமாவுக்கு அழைத்து செல்ல மாட்டேன், சம்மதமா என்று கேட்ட ஆள்.   சரி வேற என்ன தொடர் பதிவு நாம எழுதுவது.   

10 லட்சத்திற்கு போர்ட்போலியோ போடலாம்…    (திருந்த மாட்டான் என்கிறீர்களா)   ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.   உங்களிடம் 10 லட்சம் இருந்தால் எந்த பங்குகளில் முதலீடு செய்வீர்கள்…. என்று ஒரு லிஸ்ட் தயார் செய்யுங்கள். 

இத்தொடர் ஓட்டத்துக்கு நான் அழைக்கும் நண்பர்கள்….. 
1. திரு. பைசல்.
2. திரு.  ஆர் கே.
3. திரு. பங்கு வணிகம் சரவணன்.
4.  திரு. சிம்பா அருண்
5. திரு. பதிவுபோதை -ரமேஷ்
6. திரு.  ராஜ் (டிஜி-டிஜி)
7. திரு. ஜான் கிருஸ்டி
8. திரு.ராம் பிரசாத்.
9. திரு. மங்களூர் சிவா.
10.திரு. அசோக்.
11. திரு.பெருமாள்.
12.  திரு.மோகன் ராஜ்
13. திரு.ஷேர் ஹண்டர் ஜோஸ்
14. திரு.ஆஸ்கார் பாரதி.

ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்,  உங்களுக்கு தெரிந்த மற்ற நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்.  

போர்ட் போலியோ பராமரிக்க  – நான்  Moneycontrol.com  பயன் படுத்துகிறேன், நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.   எப்பொழுது வேண்டுமானலும் எந்த பங்கினை, வேண்டுமானலும் வாங்கலாம் விற்கலாம்,  அடுத்த ஒரு வருடத்தில் இந்த 10 லட்சத்தின் மதிப்பை எந்த அளவுக்கு அதிகரிக்க செய்யலாம் என்று முயன்று பார்ப்போம்.  ஒவ்வொரு மாதம் 1ஆம் தேதி அவர் அவர் போர்ட்போலியோவின் மதிப்பு என்ன என்பதை பதிவிடுவோம். இது ஒரு வருடத்திற்கான தொடர் ஓட்டம்.

இன்றைய சந்தையின் போக்கு – 31.10.2008.

நமது சந்தையில் சரிவுகள் மீதமிருக்கின்றன். அதிவேகமான சரிவு, அதை தொடர்ந்து ஒரு (2200-2700) எழுச்சி என்பது எல்லாம் F&O Expiry யை மையமாக வைத்து நிகழ்த்தபட்ட ஆட்டங்கள் தான்.   அடுத்து வரும் நாட்களில் எனது உடனடி டார்கெட் 2445/2300. இன்றும் சந்தை மேடு பள்ளங்களுடன் தான் காணப்படும்.  அமெரிக்க சந்தைகள் ஒரு நிதானமான் ஏற்றத்துடன் பக்கவாட்டில் நகர்வது  குறிப்பிடதக்கது. 

2924,  2722,  2672, 2649, 2587, 2559, 2388

சிறு வேலை பளு காரணமாக விரிவாக எழுத இயல வில்லை.. திங்கள் முதல் எப்பொழுதும் போல் எழுத முயற்சிக்கிறேன்.

இன்றைய விவதங்களைஇங்கு தொடரலாம்…. அதே போல் இன்றைய நிப்டியின் முடிவு என்ன என்பதை இங்கு பின்னூட்டம் எழுதுங்கள்.

இன்றைய சந்தையின் போக்கு 29.10.2008

சுப முகூர்த்த நேர வணிகம் எதிர் பார்த்ததை போல பாசிட்டிவாக முடிந்தது,  நல்ல விசயம்,  செண்டிமெண்ட்.. ..   (உலகத்திலேயே செண்டிமெண்டா 1 மணிநேர வணிகம் செய்வது நாமகத்தான் இருக்கும்… )

இன்றைய சந்தையில் சரிவினை எதிர்பார்க்கிறேன், காரணம் இரண்டு நாள ஏற்பட்டுள்ள மீழ்ச்சியின் வேகம் கொஞ்சம் அதிகம். கடந்த ஒரு மாதத்தில் இது போல் ஏற்பட்ட ஒவ்வொரு சிறு ஏற்றமும் நீர்குமிழி போல அமைந்தது குறிப்பிடதக்கது.

  ஆனால் டவ் ஜோன்ஸில் நேற்றையதினம் ஏற்பட்ட ஒரு அபரிதமான ஏற்றத்தின்  (800+)  தாக்கம் இங்கும் இருக்கலாம்,  அவ்வாறு நிகழ்ந்தால் 2800 வரை செல்லலாம் ஆனால் அந்த ஏற்றத்தை தக்கவைக்குமா என்பது சந்தேகமே… இன்று இந்த மாத  ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஸனின் எக்ஸ்பயரி நாள்.  நாளை நமது சந்தைக்கு விடுமுறை..  ஆகையால் ஒரு குழப்பமான மன நிலையில் தான் டிரேடர்கள் இருப்பார்கள். 

2913, 2865, 2754 2667, 2645, 2595, 2554, 2496

நேற்றைய நிப்டியின் முடிவு என்ன போட்டியின் வெற்றியாளர்… திருமதி சுமதி அவர்கள்.

இன்றைய நிப்டியின் முடிவு என்ன என்பதை இந்த பதிவில் பின்னூட்டமாக எழுதுங்கள்..

புத்தாண்டு (போர்ட் போலியோ) முதலீடு

 எனது புத்தாண்டு முதலீடு… சந்தையில் சாப்பிங் போகும் போது மலிவான விலையில் கூரு கட்டி வைத்திருந்தார்கள்…  

S. Stocks Buy Qty Amount
no
Rate

1 3i Infotech 42.00 200 8400.00
2 Aban Offshore 652.00 60 39120.00
3 Adlabs Films 145.00 200 29000.00
4 Allahabad Bank 45.00 100 4500.00
5 Alok Industries 17.00 3000 51000.00
6 Bajaj Hindusthan 43.00 100 4300.00
7 Balaji Telefilms 71.00 98 6958.00
8 Bharat Heavy Electricals 1080.00 20 21600.00
9 Bharti Airtel 550.00 30 16500.00
10 Biocon 105.00 100 10500.00
11 DLF 190.00 100 19000.00
12 ETC Networks 62.00 160 9920.00
13 GMR Infrastructure 49.00 500 24500.00
14 HDFC Bank 935.00 25 23375.00
15 Hotel Leela Venture 26.00 400 10400.00
16 ICICI Bank 310.00 100 31000.00
17 Infosys Technologies 1250.00 10 12500.00
18 Ispat Industries 10.00 500 5000.00
19 IVRCL Infrastructure 64.00 200 12800.00
20 Nitco limited 50.00 100 5000.00
21 ONGC 620.00 30 18600.00
22 PBM Polytex 10.00 500 5000.00
23 Petronet LNG Ltd 35.00 100 3500.00
24 Power Grid Corporation 58.00 200 11600.00
25 Reliance Capital 550.00 30 16500.00
26 Reliance Communications 200.00 100 20000.00
27 Reliance Industries 1075.00 30 32250.00
28 Reliance Infrastructure 390.00 60 23400.00
29 Reliance Natural Resources 40.00 500 20000.00
30 Reliance Petroleum 75.00 260 19500.00
31 Reliance Power 90.00 200 18000.00
32 Rural Electrification 58.00 325 18850.00
33 Seshasayee paper 60.00 200 12000.00
34 State Bank of India 1050.00 25 26250.00
35 Sun TV Network 130.00 100 13000.00
36 Suzlon Energy 47.00 475 22325.00
37 Tamil Nadu Newsprint 61.00 200 12200.00
38 Tata Consultancy Services 500.00 50 25000.00
39 Tata Motors 140.00 100 14000.00
40 Tata Power Company 570.00 45 25650.00
41 Tata Steel 150.00 150 22500.00
42 TVS Motor Company 28.00 500 14000.00
43 Unitech 42.00 250 10500.00
         
  Total   749998

நண்பர் இருவரின் வேண்டுகோளுக்கு இணங்க நீண்ட கால முதலீட்டிற்கு பரிந்துரைகளை தயார் செய்தேன்.  நானும் மேலே உள்ள பங்குகளில் நேற்றும் இன்றும் முதலீடு செய்கிறேன்,  இந்த போர்ட் போலியோவின் நிலை என்ன என்பதை ஒவ்வொரு மாதமும் இங்கு அப்டே செய்ய உள்ளேன்.  பார்க்கலாம் என்ன லாபம் வருகிறது என்று.

இன்றைய சந்தையின் முடிவு என்ன என்பதை, இந்த பதிவில் பின்னுட்டமாக 6.45 க்கு முன்பாக எழுதவும், இன்று ஒரு நாள் மட்டும் 10 புள்ளிகள் +/- குறிப்பிடும் அனைவருக்கும் பரிசு உண்டு.

WISHING YOU  A HAPPY MUHURTH TRADING DAY

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

நண்பர்களுக்கும், நண்பர்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
 
இன்றைய சந்தையின் போக்கு எப்படி வேண்டும் என்றாலும் அமையட்டும் அதன் போக்கில் நாமும் ஜாலியா போவோம்..  அதனால் அதை பற்றி அதிகம் பேச வேண்டாம்.

இன்றைய சந்தையின் போக்கு – 24.10.2008

சிறு வணிகர்களின் / முதலீட்டாளர்களின் பயம் இன்னும் போக வில்லை தேவைக்கு அதிகமாக பயம் ஆட்டி படைக்கிறது.  கூடவே சந்தையின் வேலை நேரத்தில் அரசும் சில அறிக்கைகள் என்று குழப்புகிறார்கள், அறிக்கைகளை பிரித்து மேய்ந்து சூடான செய்தி என்று தொலைகாட்சிகளும் அந்த குழப்பத்தை அதிகபடுத்துகின்றன.

நேற்றையதினம் எதிர் பார்த்தது போல 2950 களில் துவங்கி மேலே வந்த சந்தையால் அந்த மீழ்ச்சியை தக்கவைக்க இயலவில்லை.  ஆனால் மிகவும் அருமையான தின வர்த்தக நாள். 

அமெரிக்க டவ் ஜோன்ஸ்ம் நமது சந்தையை போலவே மிகுந்த ஏற்றத்தாழ்வுகளுடன்  இருந்தது ஆனால் நாளின் இறுதில் 174 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.

ஜூலை/ஆகஸ்ட் மாதம் – சந்தை 2800 வரை செல்ல வாய்ப்பு உள்ளது என்று எழுதியது போல் 2800க்கு வந்து விட்டது.  அடுத்த 2 அல்லது 3  மாதங்களில் 4290 வரை மீண்டும் உயர வேண்டும், அதற்கான சாத்திய கூறுகளை மறுக்க முடியாது.  (4000 நிலைகளில் சொன்னது 3730 உடைபட்டால் 4300 என்பதே நீண்ட கால கனவு என்று)

அடுத்த 3 நாடகாளும் சூதாடி சித்தர்களின் ஆதிக்கத்தில் சந்தையின் நகர்வுகள் இருக்கும். நேற்றைய முடிவின் படியும் டவ் ஜோன்ஸ் தன்னை தக்கவைத்து கொண்டதையும் பார்த்தால் சிறிய ஏற்றம் இருக்க வேண்டும் ஆனால் அதற்கு நேர் மாறாக சந்தையை வழி நடத்துவார்கள்.  காரணம் முக்கிய மான சப்போர்ட் நிலையை உடைத்து விட்டது, கூடவே இன்று வெள்ளி கிழமை, திங்கள் அன்று திபாவளி அதிகம் வர்த்தகம் இருக்க வாய்ப்பு குறைவு, செவ்வாய் ஒரு மணி நேரம் தான் வணிகம், புதன் கிழமை ப்யூச்சர் அண்ட் ஆப்சனின் குலோசிங் நாள்.  ஆகையால் இன்றையதினம் டெக்னிகலின் கட்டு பாட்டில் சந்தை இருக்க வாய்ப்பு இல்லை, மிகுந்த ஏற்ற இறக்கம் இருக்கும்.

நிப்டியின் இன்றைய முடிவு என்ன போட்டியின்,  நேற்றைய வெற்றியாளர், திரு அசோக் / திருநெல்வேலி அவர்கள்,  அவர்களுக்கு மன மார்ந்த வாழ்த்துகள்.  இன்றைய முடிவு என்ன என்பதை இந்த பதிவிலேயே பின்னூட்டமாக குறிப்பிடலாம்.

பரிந்துரைகளின் செயல்பாடுகள்…   

 

Thursday, October 23, 2008
Calls Target Result
BUY ONGC -74X 775.00 Target Achieved -High 787
BUY REL CAP 64x 660.00 Target Achieved – High 725
Buy Dlf – 26X 273.00 Target Achieved – High 278
SELL ONGC -769 745.00 Target Achieved
Sell relcap 690 680/635 Target Achieved
Future
Calls Target Result
Buy Nifty at 2950 3002/3050/75 All target achieved – profit 6-7000 per lot
Short Nifty at 3012 2970/2932 2 trgts achievd –profit 2-3500 per lot
      

      

 
Buy Nifty – 2925 3250 Still in open position
Option
Calls Target Result
3200 call option 21 55.00 Target Achieved – High 52. Profit 140 %
      

      

      

நேற்றையதினம் மிக அதிகம் லாபம் கிடைத்திருக்கும், இது போன்ற சமயங்களில் சிறியவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது அந்த லாபத்தை தக்கவைக்கும் பொறுட்டு.

இதே லாபம் அடுத்த அடுத்த நாட்களிலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உடன் வணிகம் செய்யாதிர்கள். போட்டியில் வென்று பரிந்துரைகளை பெறும் சிறு வணிக நண்பர்கள்  மற்றும் புதிதாக சந்தா கட்டி வணிகம் செய்யும் நண்பர்கள் கடந்த ஒரு வாரமாக் எடுத்துள்ள லாபத்தை தக்க வைத்து கொள்ளுங்கள். வணிகத்தின் அளவை அதிகபடுத்தாதிர்கள். முடிந்தால்  ஒரு சில நாட்கள் இடைவெளி விட்டு வணிகத்தை தொடருங்கள்.

ஒரு சின்ன வருத்தம்..

பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அல்லது பேராசையுடன் நான் இதை செய்யவில்லை.  ஆனால் இது எனது தொழில் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் அதற்கு சிறு கூலி அல்லது தட்சனை வாங்குகிறேன்.  தங்களுக்கு கிடைக்கும் லாபத்தை கணக்கிட்டால் 2500 என்பது பெரிய விசயம் இல்லை, ஆனால் அவ்வாறு வாங்கும் வணிக குறிப்புகளை பலருடன் பகிர்ந்து கொள்வது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை,  ஒருவர் வாங்கி பல ஊர் நண்பர்களுக்கு அனுப்புவதும் அதே பரிந்துரை எனக்கே திரும்பி வருவதும் வருத்த அளிக்கிறது.  தயவு செய்து யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். இரண்டு, ஒரு  நண்பர்கள் ஆர்வகோளாறால் அப்படி செய்திருக்கலாம் அதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.     

விவாதங்களை இங்கு தொடரலாம், நேற்றை தினம் டாக்டர் சந்திரமோகன் அவர்களின் பின்னுட்டம் கண்டு மகிழ்ந்தேன்,  பல மாதங்களுக்கு பிறகு பின்னுட்டம் எழுதி உள்ளார்கள், வலைபூ ஆரம்பித்த் உடன் பாராட்டி வாழ்த்திய மனிதர்.

 

இன்றைய சந்தையின் போக்கு 23.10.2008

சாண் ஏறினாலும் முழம் சருக்கும் – என்ற பழமொழிக்கு ஏற்ப நமது நிலைமை உள்ளது.  சின்ன சின்ன நம்பிக்கையும் அவ்வப்போது உடைந்து வருகிறது

இன்று ஒரு பெரிய சரிவு காத்திருக்கிறது,  ஆரம்பம் 2950 நிலைகளில் துவங்கலாம் அங்கு இருந்து அடுத்த கட்ட நகர்வு எப்படி அமைய போகிறது என்பதை பொறுத்தே,  மற்றவை அமையும். இரண்டு நாட்களாக  டெக்னிகலுக்கு எதிராக சந்தையை செலுத்து கிறார்கள்.  

 3400, 3550 3320, தற்போது 3250 என்று ஒவ்வொரு இடத்திலும் கிடைத்த அறுபுதமான வாய்ப்புகளை தக்க வைக்க வில்லை. 

டவ் ஜோன்ஸ் ஒரு வாரத்தில் அடைந்த ஏற்றத்தை இழந்தாலும்  8000 என்ற நிலையை உடைக்காதது கவனிக்க வேண்டிய விசயம். 

முதலீட்டாளர்கள் கவனத்திற்கு வெளிவரும் அனைத்து நிறுவனங்களின் ரிசல்ட் மிகவும் அருமையாக உள்ளது.  குறிப்பாக பேங்க ஆப் இந்தியாவின் ரிசல்ட் சூப்பர் டூப்பர். அதை அவர்கள் பிசினஸ் லைன் பத்திரிக்கையின் முதல் பக்க விளம்பரம் ஆக்கியது மிகவும் அருமை, இதை இங்கு குறிப்பிட காரணம் பங்குகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவு உலக நிலவரங்களால் தான்,  நிறுவனங்களின் தனிபட்ட செயல் பாடுகளால் அல்ல.   

சந்தையில் அளவுக்கு அதிகமாக சார்ட் செல்லிங் நடந்துள்ளது,  ப்யூச்சர் அண்ட் ஆப்ஸன் இந்த மாத முடிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ளது.  நிச்சயம் சார்ட் கவரிங் -ன் வேகம் அதிகமாக இருக்கும்.  அதேபோல் அடுத்த மாதத்திற்கு யாரும் தங்களது சார்ட் நிலைகளை எடுத்து செல்ல மாட்டார்கள் என்ற செய்தியும் வருகிறது. அகையால் லாங் போனவர்கள் காத்திருக்காலாம் அல்லது மனதைரியத்துடன் லாஸ் புக் செய்து இரண்டு தினங்கள் வேடிக்கை பார்க்கலாம்.

நிப்டியின் இன்றைய முடிவு என்ன போட்டியின்,  நேற்றைய வெற்றியாளர்,

திரு வடிவேல் சாமி அவர்கள்,  அவர்களுக்கு மன மார்ந்த வாழ்த்துகள்.  இன்றைய முடிவு என்ன என்பதை இந்த பதிவிலேயே பின்னூட்டமாக குறிப்பிடலாம்.

இன்றைய விவாதங்களை இங்கு தொடரலாம், நேற்றை தினம் சுரேஸ்குமார் அவர்களின் பின்னுட்டம் கண்டு மகிழ்ந்தேன்,   அவர் இதை சாய் எதற்காக செய்கிறார் என்று கேட்டிருந்தார்,

சுரேஸ் –  இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த உங்களை பெரிய பின்னூட்டம் எழுதவைத்ததே ஒரு வெற்றி தான் / எனக்கு கிடைத்த பரிசுதான்.  எனது நோக்கம் நஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவது தான், இதில் வெற்றி பெற முடியும் என்று போராட செய்து அவர்களுக்கு உதவதும் தான்.   ஒவ்வொரு நாளும் பல விதமான மனிதர்களுடன் பேசுவதில் கிடைக்கும் அனுபவம் என்னை மேம்படுத்தி கொள்ள உதவுகிறது.   இன்று தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்களிலும் ஒரு நெருங்கிய நண்பராவது இருக்கிறார் என்ற பெருமிதம் இந்த தளத்தின் வெற்றி.  எங்கு போனாலும் எனக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் ஆஹா… இதைவிட வேற என்ன வேண்டும்.

டெக்னிகல் வகுப்புகளை பற்றி – அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.