இந்திய பங்கு சந்தையின் போக்கு 30.09.2008


சோதனை தீர வில்லை சொல்லி அழ யாருமில்லை… இப்படிதான் உலக பங்கு சந்தைகள் அனைத்தும் பாடிகொண்டிருக்கின்றன…  கூடவே மீடியா வேற புள்ளி விவரம் என்ற பெயரில் அலறுகின்றன..  சன் நீயூஸ்-ம் ஏனைய செய்தி தாள்களும் அலறுவதை பார்த்துவிட்டு, நம்ம வீட்டுக்கே பலர் நலம் விசாரிக்க வந்துவிட்டார்கள்…  பங்கு சந்தையில் அடியாமே.. உன் வீட்டு காரர் எப்படி இருக்கார்.. பார்த்தும்மா அந்த மனுசனுக்கு புத்தி மதி சொல்லி, காசு சேர்த்து பொழைக்கிற வழியை பாரு என்று…  இன்று குடிகாரனை கூட ஏற்று கொள்வார்கள் போல பங்கு வணிகர்களை மூணு சீட்டு சூதாடி சித்தர்களை போலத்தான் பார்க்கிறார்கள்.

அமெரிக்க அரசு அவசர கோலத்தில் கொண்டுவந்த மசோதாவை,  அவர்களின் பாராளுமன்றம் உறுப்பினர்களும்  பொறுப்பின்றி 225-205 என்ற ஓட்டில் தோற்கடித்து விட்டார்கள்.  அவர்களின் தனிபட்ட பிரச்சினைக்கு இன்று உலக நாடுகள் அனைத்தும் ஆட்டம் கண்டுள்ளன.   இருந்தும் அவர்களின் செயல் பொறுப்பில்லாமல் அமைந்தது.  இன்று என்ன புதிய திட்டம் கொண்டு வருகிறார்கள் என்று பார்ப்போம். அதிபரின் தனிபட்ட அதிகாரம் பயன் படுத்தபடும் போல் தெரிகிறது….  

இன்று சந்தையில் அது நடக்கும் இது நடக்கும் என்று சொல்ல விரும்ப வில்லை, நானும் வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.  இந்த அளவு பயம் வேண்டாம் இன்னும் சில நாட்கள் உறுதியான மனதோடு காத்திருப்பது நல்ல பயனை தரும். அதை விடுத்து  அவசரபட்டு நஷ்டத்துடன் வெளியேறினால் கிராமங்களில் சொல்லும் பழமொழி – காத்திருந்தவன் ……….  என்ற நிலைக்கு தள்ளபடுவோம்.  இன்று அரசிடம் இருந்து சில அறிக்கை / அறிவிப்புகள் ஏதாவது வெளி வரலாம்.  

இன்றைய நிலையில் நான் அடிக்கடி நண்பர்களிடம் கேட்கும் கேள்வி தான் ஆறுதலாக இருக்கும்….

தினசரி 100 புள்ளிகள் குறைந்தால் – இன்னும் 38 நாடகளில் சந்தையை மூடி விடுவார்களா??

3800 என்ற அஸ்திவாரத்தை அசைத்து பார்த்து விட்டோம்…  இருந்தும் அக்டோபர் மாதத்தின் உயர் நிலையாக குறைந்த பட்சம் 4250-4300 இருக்கும்…. இது என்னோட நிலைப்பாடு.  3600 க்கே சென்றாலும் அடிபட்ட பாம்பின் சீற்றம் போல் வேகமெடுக்கும்.

முதலீடு செய்ய விரும்பும் நண்பர்களே ….   ஆடி தள்ளுபடி ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம் என்ற சலுகை விலையில் அனைத்து பங்குகளும் கிடைகின்றன…  இந்த பங்குகளை வாங்கலாம்.

RCOM, ICICIBANK, POWERGRID, UNITECH,  ALOKTEXTILES,  TATA STEEL, RPOWER, RPL ETCC…

================================================================

நண்பர்களே,

தங்களின் வேண்டு கோளுக்கு இணங்க சில செய்திகளை எடுத்து விட்டேன்…. அதே போல் இது போன்ற விமர்சனங்கள் பற்றிய செய்திகளை இனிமேல் குறிப்பிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்…  தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி..  

Advertisements

13 responses to this post.

 1. எனக்கு மிகுந்த பக்கபலமாய் இருந்து சரியாக வழிநடத்துவதற்கு மிக்க நன்றி.

 2. THANK YOU FOR YOUR INFORMATION SAI.

 3. hi,dont care about bad comments,just go on with your work. you are doing a great job yaar.

 4. சாய்,

  காலையில் இருந்து மீடியா வைக்கும் ஒப்பாரி சகிக்க முடியவில்லை..”அடுத்த அம்பானி நானாகத்தான் இருப்பேன்” சிரிக்க வைத்தது…
  இது போன்ற தருணங்கள் நமது பொறுமையை சோதிப்பவை..நிதானத்துடன் செயல்பட்டால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.தங்களின் ஆடி தள்ளுபடி கருத்தும் மிகச்சரியே..if you people are rushing to buy icici rights issue@900 then why do you shy away for 480 now???

 5. Dear Sai

  I am Ramesh I am watching your blog site regularly for past 4-5 months, every action is basically structured in probability basis only. Here you are the predictor based on your technical skills and the strong knowledge about the world share market trend. You are doing this job firstly to shine and update your knowledge and also that knowledge you are spreading the way of this blog.

  Your answer for those people is very correct, which you have mentioned in your today’s last paragraph.

  If they get benefit these idiots will appreciate; at the same time if end up with slight negative also they will start YELL at you. Simply ignore those USELESS comments,

  Keep doing your regular work. Like me you have your supports always.

  Jai Hind

  Regards
  Ramesh

 6. //நேற்றைய பதிவில் கேப் அப் எதிர்பார்ப்பதாக எழுதி இருந்தேன்… நடக்க வில்லை தோல்வி தான் ஒப்புகொள்கிறேன்… //

  ITHIL ENNA THOLVI?
  PREDICTION ENBATHU SILA SAMAYANGALIL THAVARI POGALAAM.

  //பல நண்பர்கள யாஹுவில் கிண்டல் செய்யும் விதமாக கேள்வி எழுப்பினார்கள்…. //

  ITHARKKAGAVE SILA PER IRUPPAARGAL. ATHAI PATRI KAVALAI KOLLA VENDAAM.NEENGAL ITHU PONDRA VIMARSANANGALAI PORUTPADUTHAAMAL UNGAL SEVAIYINAI THODARAVUM.

  //தினசரி நான் சொல்கிற படிதான் மார்கெட் இருக்கும் என்றால் அடுத்த அம்பானி நானாகத்தான் இருப்பேன். //

  UNMAITHAAN SAI.

 7. அனானி கள் உங்களை பலவீன படுத்த அனுமதிகதிர்கள். அது நம் வளர்ச்சி இல் எங்கும் உதவாது, சந்தேகம் இல்லாமல் உங்கள் பணி சிறப்பானது .அனானி பற்றிய தகவல் ப்ளொக்கில் தேவை இல்லை

 8. திரு ரமேஷ்

  தங்களின் இந்த கருத்து 100% உண்மை…

  //You are doing this job firstly to shine and update your knowledge //

  எனது முதல் நோக்கம் இது தான்… தினசரி எனது எதிர்பார்ப்புகளையும்… கணிப்புகளையும் ஒரு ஸ்டேட்மென்டாக இங்கு எழுதி வருவதால் இன்னும் என்னை மெருகேற்றி கொள்ள உதவுகிறது… அதையே பலரின் பார்வைக்கு வைப்பதால் ஒரு எச்சரிக்கை உணர்வு ஏற்படுகிறது.

  தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி..

 9. திரு மஹாராஜா,

  தாங்கள் கூறுவது உண்மைதான் … இனிமேல் அவர்களை பற்றி கண்டு கொள்ள மாட்டேன்…

  உங்களை போன்ற ஒரு சில நல்ல நண்பர்களை அடையாளம் காட்டிய அனானிகளுக்கு நன்றி…

  தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி..

 10. திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரைகளை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன். சந்தை பற்றிய தங்களுடைய தனிப்பட்ட கருத்துகளை தாங்கள் இங்கே வழங்கி வருகிறீர்கள்.
  மேலும் இந்த கட்டுரைகளை பார்த்து எந்த தனிப்பட்ட முடிவும் எடுக்க வேண்டாம் என்றும் தெளிவாக முன்னரே கூறிவிட்டீர்கள்.

  இவை எவற்றையும் பார்க்காமல் தங்களுடைய கட்டுரைகளையும் தினசரி படிக்காமல் என்றோ ஒரு நாள் பார்த்துவிட்டு அநாகரிகமான முறையில் பின்னூட்டம் இடும் நபர்களைப் பற்றி தாங்கள் என்றும் கவலைப் பட வேண்டாம்

  சந்தை பற்றி தாங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் அருமையாக நிறைவேறியிருக்கின்றன. ஆனால் அவைகளைப் பற்றி அவர்கள் ஒன்றும் எழுத மாட்டார்கள் சுயநலவாதிகள்.

  அவர்கள் அனைவரும் உங்களுடைய வளர்ச்சி பிடிக்காமல் இவ்வாறு செய்கிறார்கள் என்றுதான் நினைக்க தோன்றுகிறது சாய்.

  அவர்களை விட்டுத் தள்ளுங்கள். உங்கள் நலம் விரும்பிகள் நாங்கள் நிறைய பேர் இருக்கின்றோம். என்றும் உங்களுக்கு பக்க பலமாய் இருப்போம் சாய். எனவே தாங்கள் இந்த சேவையை எங்களைப் போன்றவர்களுக்காக தொடர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

  இனிய காலை வணக்கத்துடன்,
  கே.மோகன்ராஜ்,கரூர்.

 11. Hi,
  Nice, Great, you message i cant able to stop laughing, the way you wrote is very nice,
  Keep it up.

  btw, Mohan me too from Karur. how is your trade?

 12. hello sir

  U share ur KNOWLEDGE & EXPERIENCE of STK MKTs with us.

  I repeat (Vazhi_mozhi_dhal)
  Mr. கே.மோகன்ராஜ்,கரூர்’s feedback here.

  Final Words…

  SUCCESS MANTRA:
  ===============
  A Sincere TRADER/INVESTOR won’t FIND TIME+MIND to COMPLAINT others for their FAILURES.

  with regards.

 13. உங்கள் நலம் விரும்பிகள் நாங்கள் நிறைய பேர் இருக்கின்றோம். என்றும் உங்களுக்கு பக்க பலமாய் இருப்போம் சாய். எனவே தாங்கள் இந்த சேவையை எங்களைப் போன்றவர்களுக்காக தொடர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: