சந்தையின் போக்கு – 23.09.2008


நேற்றைய தினம் சந்தை நம் எதிர்பார்த்ததை போல் நகர்ந்தது.. சரிவுகள் நிதர்சனம்  ஆன  பிறகும்  கீழே விழுந்தேன் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்காக தாங்கி  பிடித்தார்கள். இன்னும் மேலே எடுத்து செல்ல, உலக சந்தைகளில் ஏதாவது ஒரு துருப்பு சீட்டு கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பில் தான்.  பங்காளி அமெரிக்கா லாபம் உறுதி செய்யும் பொறுட்டு 378 புள்ளிகள் சரிவடைந்துள்ளார்.

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமி தற்போதைக்கு ஓய போவதில்லை,  இந்த நிலையை அடைய எவ்வளவு காலம் ஆனதோ அதே போல் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப காலங்கள் ஆகும் அது வரை பூசி மெழுகும் வேலைகள் தான் தொடரும்..

நமது சந்தையை பொறுத்த அளவில் –  3800 என்பது மிகவும் ஸ்ட்ராங்கான அஸ்திவாரம் அது உடைபடாதவரை பெரிய அளவில் கவலை இல்லை..  அனைவரும் ரசிக்கும் அளவுக்கு என்னை போன்றவர்களால் FII’S -ன் பங்கு சந்தை முதலீட்டை ரசிக்க முடிய வில்லை…  இவர்களும் தீவிரவாதிகளை போல் தான்.  எந்த நேரம் உள்ளே வருவார்கள் எந்த நாளில் வெளியேறுவார்கள் என்று தெரியாதநிலை காணப்படுகிறது.  இந்த பொருளாதார தீவிர வாதிகளால் 3800 என்ற வலுவான அஸ்திவாரமும் ஆட்டம் காணாது என்பது நிச்சயம் இல்லை..  அண்மை காலமாக பங்குசந்தையின் வளர்ச்சியை நாட்டின் பொருளாதார வளர்ச்சியாக பார்க்கும் பழக்கம் தோன்றிஉள்ளது.. அது ஏற்புடைய வாதம் இல்லை.. 

இன்றைய நிலையில் சந்தை – 4200க்கு கீழே நழுவினால்,  குறிப்பாக 4140 என்ற நிலையில்  சரிவுகளின் வேகம் அதிகரிக்கும், 4050-3990 வரை செல்லலாம்.

இன்றைய நிப்டி ஃப்யூச்சரின் நிலைகள்

4369 – 4326 – 4285 4249 – 4204 4179 – 4112 – 3998

================================================================ ரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றும் வேலையை பெட்ரோலே (கச்சா எண்ணை) செய்கிறது..  கச்சா எண்ணை யின் விலை 127-130$  என்று ஒரே நாளில் ஏறி உள்ளது.   மாப்ள இதுல பணத்தை போடுடான்னு ஒரு மாதமா சொன்ன நண்பனின் பேச்சை கேட்க வில்லை…  வியாழன் அன்று 94$ இன்று 130$ யோசித்து பார்த்தாலே தலை சுத்துகிறது. ================================================================

சில தினங்களுக்கு முன்பு திரு பைசல், எப்போது ஏற்றம் என்று கேட்டிருந்தார்கள் சிலர் நண்பர்களும் தற்சமயம் முதலீடு செய்யலாமா? என்று கேட்டு வருகிறார்கள்.

தற்சமயம் முதலீடு செய்யலாம்.. என்பது என் கருத்து..   அதற்கு முன்பாக சில உண்மைகளை ஏற்று கொள்ள வேண்டும். இன்றைய நிலையிலும் 2005/2006 இல் கூட பப்ளிக் இஷ்யூ வெளியிட்ட பல நல்ல   நிறுவன பங்குகள் தங்களது வெளியீட்டு மதிப்பை விட அதிகமாக விலையில் தான் வர்த்தகமாகிறது.  உதாரணம் ஜி எம் ஆர்  இன்ப்ரா – இந்த பங்கு 220 என்ற விலையில் வெளியிடப்பட்டது, அதற்கு அடுத்த நாட்களில் 207-230 என்ற என்ற அளவில் தான் சிலமாதங்கள் வர்த்தகம் ஆனது, அதற்கு அடுத்து வந்த சில மாதங்களில் ஜெட் வேகத்தில் 1000 வரை சென்றது அந்த சமயம் போட்டி போட்டு வாங்கினார்கள்.  அந்த பங்கு 5 ஆக பிரிக்க பட்டது என்று நினைக்கிறேன். தற்சமயம் 90 என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது.   தற்போது பார்த்தோம் என்றாலும் அதன் வெளியீட்டு மதிப்பை விட இரு மடங்கில் தான் வர்த்தகமாகிறது.  200/5 = 40 தான் ஒரு பங்கின் விலை ஆனால் 90 தற்போதைய விலை.   இந்த பங்கினை நீண்ட கால முதலீடாக வாங்கலாம்… 

அதேபோல் சன் டி வி – நீண்ட கால முதலீட்டிற்கு வாங்கலாம்.

அதேபோல் –  ரிலையன்ஸ் பவர் 450 என்ற வெளியீட்டு விலைக்கு போட்டி போட்டு ஏதோ கோவில் பிரசாதம் போல் 10 பங்குகளை வாங்கிய நாம் தற்போது 150ல் ஏன் வாங்க கூடாது? – இதுவும் நீண்ட கால முதலீட்டிற்கு உகந்தது.

சென்ற வாரம் நிப்டி 3820 அடைந்த நிலையில் 4250 போகும் என்று வாங்குங்கள் (யாஹூ நண்பர்களிடம்) என்று சொன்னால்  யாரும் வாங்க வில்லை ஆனால் 4250 வந்த உடன் 4700 போகும் என்று வாங்குகிறார்கள். இவர்கள் தான் பலியாடு ஆகிறார்கள்.

குறுகிய கால முதலீடு செய்பவர்கள் –  நல்ல டெக்னிகல் காரணங்கள் உள்ள பங்குகளை தேர்தெடுத்து முதலீடு செய்யுங்கள்.  5-10% லாபத்தில் வெளியேறுங்கள்.  அடுத்த பங்கினை தேடுங்கள்..  1 லட்சம் முதலீடு செய்ய நினைத்தால் 10-15 பங்குகளை தேர்ந்தெடுங்கள்.

நான் பலருக்கு சொல்லி வருவது – இன்றை நிலையில் நாம் அவசர தேவைக்கு நண்பர்களிடம் அல்லது  வேறு ஆட்களிடம்  பணம் வாங்கினால் / கொடுத்தால் – கிடைக்கும் / கொடுக்கும் வட்டி 3% மாதத்திற்கு.  இதையே அநியாயம் என்று சொல்கிறோம்.  அப்படி நாம் அண்ணன் தம்பிக்கோ அல்லது சொந்தகளுக்கோ கொடுத்தாலும் பணம் பத்திரமாக திரம்பிவரும் என்ற உத்திரவாதம் இல்லை. இதை ஏற்று கொண்டோம் என்றால் நிச்சயம் பங்கு சந்தையில் வெற்றி பெறலாம்.

3% வட்டியில் திருப்தி படும் நாம் இங்கு மட்டும் 30%  என்ற எதிர் பார்ப்பில் செயல் படுகிறோம்.. குறைந்த பட்சம்  5%  பிரதி மாதம் நம் முதலீடு வளர்ச்சி யடைந்தால் போதும் என்று முடிவு செய்தாலே வெற்றி நிச்சயம்.

Advertisements

7 responses to this post.

 1. Thank you very much for your views sir.

 2. நன்றி சாய் தங்கள் நிவைவு வைத்து ஆலோசனை வழங்கியமைக்கு நன்றி…

  தற்போது நான் 2 Portfolio வைத்து உள்ளேன்

  Proftfolio 1 (வங்கிய பங்குகள்)
  PUNJLLOYD,ACC,GRMINFRA,RPL,UNITECH,IDEA,BALAJITEL,SUNTV,3IINFOTECH,INDIANBANK,MOSERBAER,POWERGRID,IGS(IGATE)

  Proftfolio 2 (வங்கிய பங்குகள்)
  PUNJLLOYD,RPL,ABAN,SUZLON,RCOM,THERMAX,JPASSOCIA,NTPC,ORBITCORP,NIIT

  நான் பல நாட்களாக கீழ் வரும் பங்குகளை கவணித்து வருகின்றேன்
  BHEL,HCC,ALSTOM,IVRCLINFA,DLF,BHARTIART,TATACOM,JAINIRR

  சாய் தங்கள் நேரம் கிடைக்கும் போது நான் வாங்கிய பங்குகளின் நிலை மற்றும் கவணித்து வரும் பங்குகளின் நிலை பற்றி முடிந்தால் ஆலோசனை கூறவும் மேலும் புதிய நல்ல பங்குகள் எனது பட்டியலில் இனைக்க சில பங்குகளை பரிந்துரை செய்யவும்

  தற்போது GUJNRECOK போனஸ் பங்கு அளிப்பதாக அறிவிப்பு செய்து உள்ளது வாங்கலாமா????

 3. Your way of presentation is good &informative.Keep it up.

 4. THANK YOU FOR YOUR INFORMATION SAI.

 5. //இன்றை நிலையில் நாம் அவசர தேவைக்கு நண்பர்களிடம் அல்லது வேறு ஆட்களிடம் பணம் வாங்கினால் / கொடுத்தால் – கிடைக்கும் / கொடுக்கும் வட்டி 3% மாதத்திற்கு//

  நஷ்டத்தில் கணக்கு வைப்பவர்கள் லாபத்தில் கணக்கு வைப்பதில்லை. நானும் ஒரு சில நண்பர்களை பார்த்துள்ளேன். வணிகம் ஆரம்பிக்கும் சமயம் 500/1000 rs போதுமானது என்று தொடங்கி, அந்த இலக்கையும் அடைந்து, வெளியே வர மனது இல்லாமல் எடுத்த லாபத்தையும் விட்டு வந்துள்ளார்கள். வணிகத்தை பகுதி நேரமாக செய்யும் அன்பர்களுக்கு இந்த கணக்கு அருமை…

  tnx sir

 6. Dear Sai,

  Thank you very much for your view about the market.

  Good Morning and Have a nice day,,,,,,,,,,

 7. Hello Sir,

  Your comment on FII’s was just right.

  //அண்மை காலமாக பங்குசந்தையின் வளர்ச்சியை நாட்டின் பொருளாதார வளர்ச்சியாக பார்க்கும் பழக்கம் தோன்றிஉள்ளது.. அது ஏற்புடைய வாதம் இல்லை..//
  Well Said. (Namadhu dhuru_dhish_tangalul adhuvum ondru, Like WPI as INFLATION BASE for CALCULATION)

  from today onwards my town, power cut is from 9-12 noon. I don’t know when this will get corrected…

  Being a FULL time INVESTOR/TRADER/ANALYST, how you SORT out POWER FAILURES.

  If you SAY something about…
  UPS BRAND, KVA, BATTERY BRAND, BATTERY AmpereHour
  of yours, that will be of great help to me.

  Note:
  ======
  I Assume that you work from home. That’s why i asked you about UPS.

  Currently i use a 600VA, 10min back-up NUMERIC brand UPS.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: