சந்தையின் போக்கு 19.09.2008.


நீண்ட நாட்களாக எதிர்பார்த்த 3800 என்ற நிலை வந்தது மகிழ்ச்சியே,  இடைவெளியை நிரப்பும் பொறுட்டு மீண்டும் கிழே வரும் என்ற பயம் தற்போது இருக்காது (வேறு காரணங்களில் சரிவடையலாம் அது வேற விசயம்). 

ஆனால் நேற்று ஏற்பட்ட எழுச்சி பயமுறுத்தியது நம்ம நிப்டியார் கொஞ்சம் ஓவர் ஸ்பீடில் தான் சென்றார்,  அதிவேகம் ஆபத்து தான்.  அதேபோல் அனைத்து தரகு நிறுவனங்களும் நேற்றையதினம் கால் ஆப்ஷனை வாங்கு வாங்கு என்று கூவியதும் நல்லது அல்ல இது போன்று முந்தைய காலங்களிலும்  ஏற்பட்ட உற்சாகம் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பது உண்மையே. 

4100 க்கு மேல் சென்றால் 4240 வரை செல்ல வேண்டும் ஆனால் என்னுடைய தனிபட்ட கருத்து “இன்று சந்தை சிறிய அளவில் சரிவடையலாம்” காரணங்கள்….

நேற்றைய தினம் சீறிபாய்ந்த காளையின் வேகம் (ப்யூச்சர்) 4073 இல்  தடைபட்டது…  அதவது 15/9/2008 அன்று அதிக பட்ச நிலையான 4099 ஐ உடைக்காதது கவலை அளிக்கிறது உடைத்திருந்தால்   4240  இன்று உறுதி செய்யப்பட்டிருக்கும்.  

இன்று வெள்ளிகிழமை – இன்னும் 4 வர்த்தக தினங்களே F&O Expiry க்கு உள்ளது.  நேற்றைய தினம் கீழ்நிலைகளில் லாங் போனவர்கள் இன்று லாபத்தினை உறுதி செய்ய முற்படலாம்.  குறிப்பாக கால் ஆப்ஷன் எடுத்தவர்கள்,  அதனால் ஏற்படும் செல்லிங் அழுத்தம் சந்தையை சரிவடைய செய்யும்.

கூடவே நம்ம பங்காளி நேற்றைய தினம் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளார்.  அண்மைகாலமாக நம்ம அண்ணன் பங்காளிக்கு எதிராய் குறுக்கு சால் ஓட்டிவருகிறார். ஏதோ வாய்க்கா தகராறு.  நாட்டாமைகிட்ட சொல்லி பஞ்சாயத்தை கூட்டிடலாம்.

இன்றைய தினம்  நிப்டி ப்யூச்சரின் நிலை

4225 – 4182 – 4120 – 40684059 – 4036 3974 – 3949 – 3941 – 3914

===============================================================

மீண்டும் ஒருமுறை நினவூட்டுகிறேன் இங்கு நான் எழுதிவருவது அனைத்தும் எனது தனிபட்ட எதிர்பார்ப்புகள்தான் அது அப்படியே நடக்கும் என்ற உத்திரவாதமோ அல்லது அப்படி தான் நடக்க வேண்டும் என்ற அவசியமோ இல்லை.

அதே போல் இந்த 10 வரி கட்டுரையால் யாருக்கும் பெரிய சாதக / பாதகங்கள் இருந்து விட போவதில்லை என்ன ஒரு இப்படியும் சந்தையின் போக்கு அமையலாம் என்ற ஒரு கருத்தும் படிக்கும் மக்களிடம் ஏற்பட்டு ஒரு சின்ன மன நிறைவு.  ஒரு கையெழுத்து பத்திரிக்கை போல் தான்.   என்னை விமர்சிப்பவர்கள் உண்மையிலுமே என்னை விட அறிவாளிகள்தான், இந்த சந்தையின் நாடி துடிப்பை நன்கு அறிந்தவர்கள் தான், ஏன் அவர்களும் விமர்சிப்பதோடு நிறுத்தி கொள்ளாமால் குஜராத்திகளும், மார்வாடிகளும் கோலோச்சும் இந்த வணிகத்தில் தமிழ் சமுதாயமும் வெற்றி பெறட்டும் என்று தங்களுக்கு தெரிந்த விசயங்களை அடுத்தவர்களுக்கு சொல்லி தர முன்வரக்கூடாது. 

=================================================================

Advertisements

15 responses to this post.

 1. வணக்கம் சாய். இனிய காலை வணக்கம்.ஒவ்வொரு nifty நிலைகளுக்கும் காரணம் கூறி விளக்கி இருப்பது மிகவும் அருமை.சில அடிப்படை technical எளிதாக புரியும் படி விளக்குகிறீர்கள்.மிக்க நன்றி.
  உங்கள் பதிவுகளை குறிப்பிட்டு nifty-யின் போக்கை கூற வேண்டிய அவசியமில்லை. உங்கள் blog-ஐ தொடர்ந்து பார்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.புரிந்துகொள்ள முடியாதவர்களை blog-இல் குறிப்பிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமுமில்லை.
  தொடருட்டும் உங்கள் சேவை.வாழ்த்துக்கள் பல.

 2. I LIKE YOUR WAY OF WRITING.YOU INSPIRES &INFORMS PEOPLE,HELPING THEM TO REALIZE THEIR POTENTIAL.I AM BENEFITTING BECAUSE OF YOU.THANK YOU

 3. you are doing a good jop dont care about others..keep it up

 4. Dear Sai,

  Your view on both the stock market and some people are perfectly correct. Now days Each and every one are ready to command others without sense.

  But they are not ready to share even their little bit of knowledge. So please neglect all the bad commands and provide this service for us forever. God is always with us Sai.

  Thank you very much and have a nice day and happy week end,,,,,,,,,,,,,,

 5. Hello sir

  nifty sep fut will open around 4275 today.

 6. இந்த கட்டுரையில் உள்ள எழுத்துபிழைகளையும் சரி செய்யவும் சில தகவல்களையும், Pivot File – அப்லோடு செய்ய கடந்த 1 மணி நேரமாக முயற்சி செய்கிறேன். செர்வர் தகறாறு காரணமாக் “முடியல” ரெம்பவே வேர்டு பிரஸ் இன்று சோதித்து விட்டது.
  Pivot File – இந்த இணைப்பை பயன் படுத்தலாம்
  http://www.4shared.com/file/63569232/c25f5c77/NseIndiaPivotLevel19092008.html

 7. என்ன தான் சந்தைகள் நமக்கு சாதகமாக இருந்து நாம் ஒரு முடிவு எடுக்க நினைத்தாலும், மனதில் ஒரு சின்ன குழப்பம் இருக்கும். அப்பொழுது அனுபவப்படவர்களின் கருத்துகளே நம்மை செலுத்தும் காரணிகளாய் அமையும். எனக்கு நேற்றைய தினம் அவ்வாறுதான் அமைந்தது. லாங் கால் எடுக்க எண்ணி தயங்கிகொண்டிருந்தேன். அப்பொழுது நீங்களும் அதற்கு பச்சை கொடி காட்டினீர்கள். இனி வேறு என்ன வேண்டும். களத்தில் இறங்கி நாங்களும் காளைகளின் மீது ஏறி சவாரி போய்டோம்.

  சாய் சார் இரண்டாவது கட்டுரை மிகவும் அருமை. 3800 நிலைகளை குறிப்பிட்ட நீங்கள் இப்பொழுது 4500, 5000 நிலைகளை குறிப்பிடுகிறீர்கள். இதுவரை உங்களை கரடி என்று அழைத்தவர்கள் இனி காளை என்று அழைப்பார்கள். வாழ்க ஜனநாயகம்.

 8. Hello Sir

  19th sep
  //மீண்டும் ஒருமுறை நினவூட்டுகிறேன் இங்கு நான் எழுதிவருவது அனைத்தும் எனது தனிபட்ட எதிர்பார்ப்புகள்தான் அது அப்படியே நடக்கும் என்ற உத்திரவாதமோ அல்லது அப்படி தான் நடக்க வேண்டும் என்ற அவசியமோ இல்லை.//

  18th sep
  //நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட அல்லது வேறு ஒருவரின் வர்த்தக முடிவுகள் / ஆலோசனைகள் பற்றிய எனது கருத்துகளை சந்தையின் வேலை நேரத்தில் கேட்காதீர்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறோம், அதை தவறு சரி என்று அடுத்தவர்கள் சொல்ல இயலாது. சொல்வதும் தவறு.//

  Sariyana Vaarthai Prayogam. Porul Mikka Vaakiyangal..

  I find it very difficult to POST even a SENSIBLE FEEDBACK during MARKET HOURS, mkt is like that..

  Mkt draws all my attention during a TRADE.

  As u know, this BUSINESS requires more ATTENTION, DISIPLINE & PATIENCE of an INDIVIDUAL to Make SUSTAINABLE Profits.

  Here ANXIETY is the ROOT CAUSE of all FAILURES of a TRADER most times.
  =============================================
  16th
  “Pivot Point Trading” was a NICE ARTICLE.

  Thangal VALAIPOO(nthottiy)IL meendum oru AZHAGIYA MALAR…

  Note:
  —–
  Those 4 PNG files used in that ARTICLE would have been a TAD bigger (some thing in the range of 1000*800 pixels).
  =============================================

  In TOTAL your WORK is COMMENDABLE. So KEEP GOING.

  =============================================

  KURIPPU:
  ========
  Indha vanigham yaarukkum KATTAYAM alla (Nothing here is COMPULSORY).

  A INDIVIDUAL should SELECT this BIZ on his OWN.

  Idhai MARAPPAVARGAL, kaanaamal Pogum vaaippugaley adhigam.
  (En Kadandha Kaala Kasappugaley or udharanam)

  With REGARDS & THANKS,
  RAMPRASAD.V

 9. வணக்கம் சாய்,

  விமர்சனங்கள் என்பது வரத்தான் செய்யும்.

  ஒரு பழ மொழி உண்டு.

  “காய்க்கிற மரம்தான் கல்லடி படும்”.

  உங்களுக்கு வரும் விமர்சனங்களை நீங்கள் தடைக்கற்களாக எண்ணாமல் படிக்கற்களாக பாவித்து முன்னேறுங்கள்.

 10. Your work is fine and keep it up. Dont worry for other’s comments. We take it is a advice/precaution while doing trading. Thank you once again sir.

 11. Fantastic work sir…How could i learn gap filling theory sir?

 12. Fantastic work sir..

 13. good evening sai, first you’ve lot of humour sense. i like it. (நம்ம பங்காளி நேற்றைய தினம் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளார். அண்மைகாலமாக நம்ம அண்ணன் பங்காளிக்கு எதிராய் குறுக்கு சால் ஓட்டிவருகிறார். ஏதோ வாய்க்கா தகராறு. நாட்டாமைகிட்ட சொல்லி பஞ்சாயத்தை கூட்டிடலாம்.). and also using some photos for bullish trend, very creative. nowdays your blog more attractive to read. please keep the service, our god will give you good health and others. thank you very much.

 14. I don’t understand who is criticizing you and for what? Anyway it is really appreciable and exemplary initiative. Typing in Tamil is not a joke and it is really frustrating. I am unsuccessfully trying for the past 2 years. Nobody can always perfectly predict market movement. I again congratulate you for this initiative. I personally do not follow anybody’s advice on market investments. But all investors could not be expected of the same. They require a site like this. Keep it up, Sai

 15. Hi Sai, Thanks for your views. Everyday readgin your blog has become an habit… like readin newspaper… Thanks again… Your style of writing is also good.. Pls continue your efforts… 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: