Archive for செப்ரெம்பர் 18th, 2008

சந்தையின் போக்கு – 18.09.2008

அமெரிக்காவில் ஏற்பட்ட  பொருளாதார புயல் “திவால்” தற்போது ஓயாது போல் தெரிகிறது….  அவர்களுக்கு இது “திவால்” வாரம், அடுத்தடுத்து வரிசையா வருகிறானுங்க..  வரட்டும் வரட்டும் நாம தான் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிற நல்லவங்களாச்சே….

நேற்றைய தினம் சூதாடி சித்தர்களின் கை ஓங்கி இருந்தது நன்றாகவே தெரிந்தது. 

இன்று மீண்டும் உலக பங்கு சந்தைகள் அனைத்தும் கரடியாருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளன.  நாம மட்டும் என்ன ஜல்லி கட்டா நடத்த போறோம்.

நேற்றைய முடிவின் படி நான் இன்று எதிர்பார்த்தது ஒரு சின்ன கேப் அப் 4070 வரை. ஆனால் இந்த சிவப்பு கம்பள விரிப்பை பார்த்தால் அது வரும் ஆனா வராது என்று நினைக்க தோன்றுகிறது.

இன்றைய நிப்டி ப்யூச்சரின் நிலை

4196 – 4138 – 4096 – 4053 – 4002 – 3893

NSE  பங்குகளுக்கான Pivot Point –   NseIndiaPivotLevel18092008.pdf இதை கிளிக் செய்யவும்.

எனது தனிப்பட்ட கருத்து – இரண்டு வாரமாக உள்நாட்டு காரணிகளுக்கு சந்தை ஆட்படவில்லை, இன்று மதியம் அல்லது நாளை – காளைகளுக்கு அலங்கா நல்லூர் ஜல்லிகட்டு இல்லை என்றாலும் சின்ன மஞ்சு விரட்டாவது நடக்கும்/ நடத்த படும்.  அதாவது 4250 வரை சந்தை செல்ல வேண்டும்.

நினைவூட்டல் – 

2 பார் கீ ரிவர்சல் பற்றிய எழுதிய போது ஆகஸ்ட் 2/3 வது வாரத்தில் ஏற்பட்ட அமைப்பை பற்றி சொல்லி இருந்தேன். தற்போதைய நிலையை பாருங்கள் ரிசல்ட் கிடைத்து விட்டதா.. அதை எழுதும் போது லேஹ்மன், மெரில் லின்ச், ஏ ஐ ஜி இவர்கள் எல்லாம் யாரு என்றே நமக்கு தெரியாது.

அதே போல் – டபுள் பாட்டம் பற்றி எழுதிய போது யூனியன் வங்கியை பற்றி பேசினோம் பாருங்கள் 160 டார்கெட்டை அடைந்து விட்டது தற்போதைய சுனாமியிலும் 148-50 இல் நிலைத்து நிற்கிறது.  எப்போதும் முதலீடு செய்யலாம் டெக்னிகல் உதவியுடன்.

நேற்றைய வருத்தம்

ஐசிஐசிஐ வங்கி பற்றிய வதந்தி – இது போன்ற வதந்திகள் இத்துறையில் நீண்ட காலமாக உள்ளவர்களுக்கு புதிது இல்லை என்ன 10 வருடங்களுக்கு முன்பு இந்த அளவு தகவல் தொடர்பு வசதி இல்லை. ஆனால் தற்போது எஸ் எம் எஸ் மற்றும் யாஹூ போன்றவற்றின் உதவியுடன் காட்டு தீ போல் பரப்ப படுகிறது.  பொறுப்புள்ள நாம் அவ்வாறு செய்ய கூடாது அப்படி வந்தால் கூட தயவு செய்து அனுப்பாதீர்கள்.  நேற்று தோகா கத்தாரில் இருந்து ஒரு நண்பர் இந்த வதந்தியால் பயந்து தொலை பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார், உடனடியா ஊருக்கு வரட்டுமா சார்? என் பணம் எல்லாம் அதில் தான் உள்ளது என்று கேட்டார், அவரது மன உளைச்சலுக்கு என்ன சொல்வது.

நேற்று ரசித்த செய்தி

கடந்த 1 வாரத்தில் இந்த செய்தி மட்டும் குறைந்தது 20 முறைக்கு மேல் நண்பர்கள் அனுப்பி உள்ளார்கள்.  உங்களில் பலரும் படித்திருக்கலாம்

In 1980, IDBI bank refused to give loan to Mr. Dhirubhai Ambani, when he was strugling for a loan. Now in 2008 his son Mr Mukesh Dhirubhai Ambani is in process to buy IDBI Bank

மாறும் என்ற சொல்லை தவிர அனைத்தும் மாறும்   –  காரல் மார்க்ஸ் சொன்னது சரியாக உள்ளது, 

சிறிய வேண்டுகோள்

நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட அல்லது வேறு ஒருவரின் வர்த்தக முடிவுகள் / ஆலோசனைகள் பற்றிய எனது கருத்துகளை சந்தையின் வேலை நேரத்தில் கேட்காதீர்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறோம், அதை தவறு சரி என்று அடுத்தவர்கள் சொல்ல இயலாது.  சொல்வதும் தவறு.  கூடவே சரியாக சார்ட் பார்க்காமல் சொல்லமுடியாது அனைவரின் கேள்விக்கு சார்ட் பார்த்து சொல்வது என்பதும் சாத்தியம் இல்லை.  என்னை பற்றிய விவரம் உங்களுக்கு தெரியும், அதே போல் முதன் முதலில் என்னை தொடர்பு கொள்ளும் போது அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.  எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல் ஹாய் சொன்ன உடன் – சந்தையை பற்றிதான் கேட்கிறார்கள்.  மாலை 4 – 6 , மற்றும் 9-10 யாஹுவில் என்னுடன் பேசலாம்.  இந்த வேண்டு கோள் தனிபட்ட யாருக்கும் இல்லை பொதுவான வேண்டு கோள்.