சந்தையின் போக்கு – 16.09.2008


எதிர் பார்த்ததை போல் அண்ணன் பெரிய அணுகுண்டு சோதனையை நடத்தி விட்டார்.     நம் அளவுக்கு யாரும் சமீப காலத்தில் எழுத்து பூர்வமாக சந்தையின் பலவீனத்தையும்  3800 என்ற நிலை வரும் என்றும் சொல்ல வில்லை.  இரண்டு முறை அண்ணன் 4600 நிலைக்கு சென்ற பொழுதும் 4650 க்கு மேலே செல்ல மாட்டார் என்று சொன்னோம் யாரும் நம்ப வில்லை.   

நேற்றைய தினம் முன்ணனி ஆங்கில தொலை காட்சிகளை பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது. ஏதோ எல்லாம் எதிர் பாராமல் நடந்து விட்டதை போலவும். அப்படி ஆனது  இப்படி ஆனது என்று ஒரு துக்கம் விசாரிப்பதை போல் தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.  ஒவ்வொரு  சரிவின் போதும் இவர்கள் இப்படி தான் பேசிவருகிறார்கள்.  அதே போல் நாளை சிறிய ஏற்றம் வந்தால் அதற்கு தகுந்தாற் போல் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

இது எதுவும் எதிர்பாராதது இல்லை எதிர் பார்த்தது தான் –  நம்ம அண்ணன் நிப்டியார் ரெம்ப நல்லவர்.  அவர் மேலே செல்லும் முன்பாக “மாப்ள நான் ஒரு வேலையாக மேலே போறேன்,  திரும்பி வருவேன் அதனால் இந்த சீட்டை பார்த்துகடா” என்று பஸ்ஸில் இடம் பிடிக்க துண்டு போட்டு வைப்பது போல், அங்க அங்க இடை வெளி (கேப் அப்)  வைத்து செல்கிறார்.   “எப்ப மச்சான் வருவீங்க?” ன்னு மாப்ள கேட்டா – “எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்தில் சரியா ப்வருவேன்” என்று சொல்வார்.  தற்போதும் மேலே இரண்டு இடத்தில் துண்டு போட்டு  விட்டு வந்துள்ளார். 

இயற்கை சீற்றங்கள் வருவதற்கு முன்பாக தட்ப வெப்ப நிலைகளில் சில மாற்ற                        -ங்கள்  அறிகுறிகள் தோன்றுவது போல் கடந்த   29/8/2008  அன்றிலிருந்து  சந்தை தினசரி கேப் அப்,   கேப் டவுன் என்று இருந்தது.  எனது அனுபவத்தில் தொடர்ச்சியாக இப்படி பட்ட  நிலைகளை  நான் பார்த்ததில்லை.

Fraud International Investors  – எனும் சர்வேத கொள்ளையர்களின் ஆட்டத்தினால் நேற்றும் பலர் துகிலுரியப்பட்டார்கள். 

இன்றைய நிலைக்கு யார் காரணம்? –  அமெரிக்க பொருளாதாரத்தை நம்பியே நமது கொள்கைகளும் வகுக்கப்படுகிறது.  இந்த Fraud International Investors  பங்கு சந்தையில் முதலீடு செய்வது அவசியாமா? என்று முடிவு செய்ய வேண்டும்.  குறைந்த பட்சம் அவர்கள் நினைத்த மாத்திரத்தில் வெளியேற அனுமதிக்க கூடாது.   இங்கே நிறுவனங் களை / தொழிற்சாலைகளை ஆரம்பித்து இருப்பவர்கள் இப்படி ஓட முடியாது அவர்கள் நலிவடைந்தால் அதை முறைப்படி வேறு சரியான நபரை வாங்குவதற்கு தேடிபிடித்து ஒப்படைத்து விட்டு தான் செல்ல முடியும்.  ஆனால் பங்குகளில் முதலீடு செய்பவர் களுக்கு எந்த ஒரு கட்டுபாடும் இல்லை.   முதலீடு செய்யுங்கள் ஆனால் விற்பனை செய்ய ஆசைபட்டால் அதற்கு என்ட்ரி எக்ஸிட் என்று சில வரிகள் அல்லது செபியின் முன் அனுமதி பெறவேண்டும், சிறிது சிறிதாகத்தான் வெளியேற வேண்டும், என்பது போன்ற சில கட்டு பாடுகள் அவசியம்.  அவன் நாட்டில் அவன் திவாலானா அதற்கு நம் மக்கள் பலரும் திவாலாக வேண்டுமா??  அவனிடம் நாம் நேரடியாக எந்த முதலீடும் செய்ய வில்லை பிறகு ஏன் இந்த நிலை????

அதே போல் இன்றைய சூழ்நிலையில் கரண்சி வர்த்தகம் அவசியமா?  சிலருக்காக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 40/- க்கு கீழே சரியாமல் பார்த்து கொண்டார்கள்.  இன்று அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் கண்டு வருகிறது அவர்களே மொய் விருந்து நடத்துகிறார்கள் இந்த நிலையிலும் நமது மதிப்பு குறைந்து வருவது எப்படி?- டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு 46/- என்று 10 நாட்களுக்குள் 5/- ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது. ஏற்கனவே வோட் பேங்க் எனப்படும் விவசாயிகள் கோவனாண்டிகளாக உள்ளார்கள். தற்போது பங்கு வணிகர்களையும் அந்த நிலைக்கு தள்ளுகிறார்கள்.  

இன்று எப்படி இருக்கும்? என்று பார்ப்போம் – நான் பெரிதாக சொல்ல வேண்டியது இல்லை பக்கத்தில் உள்ள உலக பங்கு சந்தைகளின் நிலையை பாருங்கள். அனைத்தும் ரத்த ஆற்றில் மிதக்கிறது.  அமெரிக்காவில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகளுக்கு உலக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். 

Fannie மற்றும் Freddie – ஆகியவை அமெரிக்க பொதுதுறை நிறுவனங்கள் என்பதால் பெடரல் வங்கி காப்பற்ற முன் வந்தது. 

Lehman Brothers – வடிவேல் மாதிரி – “முடியல” இந்தங்கடா மஞ்ச கடுதாசி என்று நேற்று கொடுத்து விட்டார்கள்.

Merrill Lynch  – நல்ல வேலை இவர்களை வாங்க பேங்க் ஆப் அமெரிக்கா முன் வந்து விட்டார்கள்.

அடுத்து AIG 

சிறு வணிகர்கள் சில வாரங்களுக்கு தங்களது நிலைகளை அடுத்த நாட்களுக்கு எடுத்து செல்லாதீர்கள்.  லாபமோ நஷ்டமோ அன்றே உறுதி செய்ய பாருங்கள். அல்லது ஒதுங்கி இருந்து வேடிக்கை பாருங்கள் ஏற்கனவே ஒரு முறை சொன்னது போல் இந்த சந்தை தினசரி 100 புள்ளிகள் சரிந்து 40 நாளில் மூடி விடுவார்களா என்றால் இல்லை.  உடனடியாக விட்டதை பிடிப்போம் என்று காட்டாற்றின் வெள்ளத்தில் இறங்க வேண்டாம்.  பொறுமையாக இருந்தால் வெற்றி நிச்சயம். ஒரு சில தினங்களில் சந்தை நிலைப்படும்.

நேற்றைய முடிவின் அடிப்படையில் 4200 ஐ நோக்கி சந்தை மேலே செல்ல வேண்டும் ஆனால் இந்த ரத்த வெள்ளத்தில் அது சாத்தியமா என்பது தெரிய வில்லை.  3800 தற்போதைக்கு மிகவும் வலுவான சப்போர்ட் அது உடைபட்டால் இந்த ஆண்டிற்கான புதிய கீழ் நிலைகளை காணலாம். 3900-3800 இல் ஒரு இடைவெளி நீண்ட காலமாக இருந்து வருகிறது. 3900க்கு பக்கத்தில் சந்தை சென்றால் 3820 வரை நிச்சயம் செல்லும்.

================================================================ 

நேற்றைய தினம் பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்      மன மார்ந்த நன்றிகள்

Advertisements

11 responses to this post.

 1. திரு சாய்,

  தங்களுடைய நெடுநாளைய சந்தை சரியும் என்ற கணிப்புகள் நிறைவேறி வருவது மகிழ்ச்சியே. தங்களை சிலர் விமர்ச்சித்ததாக முன்பு சொன்னீர்கள். அவர்கள் அனைவரும் தற்பொழுது புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன் தாங்கள் கூறியது சரி என்று.

  மேலும் தங்களுடைய அமெரிக்க நிதி நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை. மேலும் அதோடு நிற்காமல் தங்களது வலைப்பூவில் உலக பங்கு சந்தைகளின் குறியீடுகள், குருட் ஆயிலின் சார்ட், தங்கம் மற்றும் டாலர் சார்ட் ஆகியவற்றையும் ஏற்றி கலக்கி இருக்கிறீர்கள் சாய்.

  தங்களுடைய வலைப்பதிவு தற்போது அனைத்து விசயங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. வாழ்த்துக்கள் சாய்.

  தங்களுடைய இந்த பணி என்றும் தொடர வேண்டும்.

  இனிய காலை வணக்கம்,,,,,

 2. சூதாடி சித்தர்களை அரசு கண்டுகொள்ளாத பட்சத்தில் விரைவில் பங்குச் சந்தைக்கு நாம் குட்பை சொல்ல வேண்டியிருக்கும்

 3. சாய் தங்களின் சரியும் என்ற கணிப்பு நிறைவேறி உள்ளது !!! எப்போது சந்தை நிமிரும் என்று கூற இயலுமா?

 4. good info plz keep it up

 5. வணக்கம் சாய். மிகத் துல்லியமான கணிப்பு. மிக்க நன்றி.ஒவ்வொரு blog-ஆக சென்று சேகரிக்க வேண்டியதை ஒரே blog-இல் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

 6. என்னைபோன்ற சிறு முதலீடாளர்களுக்கு மிகுந்த பக்கபலமாய் இருக்கும் சாய்கணேஷ் ,மிக்க நன்றி.என்னுடைய முதலீட்டை கையில் வைக்க சொன்னது இப்போது சரியும் சந்தையிலும் மனத்தைரியத்துடன் என்னை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்கிறது.நன்றி.

 7. //இறைவா எங்களுக்கு ஓர் வாழ்வில்லையா? இந்த ஏற்றதாழ்விற்கு ஓர் முடிவில்லையா? சிலர் (எப் ஐ எஸ்) வாழ பலர் (நாங்கள்) வாடும் நிலை மாறுமா? சிலையான அரசுக்கு இந்த நிலை தெரியுமா?//

  மிக அருமையான வார்த்தைகள் சாய் சார். சந்தைகளை நமது போக்கில் செலுத்த நம்மால் முடியாது. ஆனால் சந்தைகளின் போக்கில் நம்மால் செல்ல முடியும் என்பதை நீங்கள் வலியுறுத்தி வருகிறீர்கள். உண்மை. 6000 நிலையில் அதனை பேரும் லாபம் பார்க்கவில்லை. 4000 நிலையில் அனைவரும் நஷ்டம் அடையவில்லை. பொறுமையும், முடிவெடுக்கும் தன்மையுமே இந்த புயலில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும்.

  நன்றி சார்.

 8. இன்று நீங்கள் எழுதிய பதிப்பில் தான் நேற்று உங்களுக்கு பிறந்தநாள் என்பதை தெரிந்து கொண்டேன். நீங்கள் நீண்ட நெடு நாள் வாழ வேண்டும். உங்கள் சேவை தொடரவேண்டும். இதே போல் நூறாவது வருட பதிப்பிலும் உங்கள்ளுக்கு வாழ்த்து அனுப்ப வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 9. Thank you very much for your views sir.

 10. Dear Sai,

  Be lated hearty wishes for you. God will give you full of happiness, wealthness and long life.

  Thank You.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: