கடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை


இன்று முக்கியமான நாள் – கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை தாரக மந்திரமாக சொன்ன மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 102 வது பிறந்த நாள்.

இன்று அந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அரசியலில் எந்த நிலையில் உள்ளது? என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இன்றைய தினம் அவரை நினைவு கூர்வோம், அவரின் எழுத்துக்களை படிப்போம் – அரசியலில் தான் இல்லை என்றாலும் நமது தனிப்பட்ட வாழ்வில் கடமையுடனும், கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் வாழ முயற்சிப்போம்….

குழந்தைகளுக்கு என்றும் அழியா சொத்தாகிய நல்ல கல்வியையும் / ஒழுக்கங்களையும் சேர்த்து / வழங்க சபதம் எற்போம் .

பணம் நிரந்தரம் இல்லை என்பதை பங்கு வணிகர்களாகிய நம்மை விட வேறு யாரும் சொல்லி விட முடியாது, இங்கு கோடிகளை ஒரே நாளில் தொலைத்து விடலாம்.. அதே போல் திறமை -யானவர்கள் ஆயிரங்களை கோடிகளாகவும் மாற்ற முடியும்….

ஆனால் கல்வியும் ஒழுக்கமும் என்று நிரந்தரமானது அதை கற்றவனே நினைத்தாலும் அவனால் அவனது HARD DISK -ன் மெமரியில் இருந்து அழிக்க முடியாது.

இன்று கல்வி அனைவருக்கும் கிடைக்கிறது, ஆனால் தனிமனித ஒழுக்கம் உள்ளதா? அல்லது போதிக்க படுகிறதா? என்றால் இல்லை என்பது வருத்தமே.

இன்றைய தினம் நம்மில் அதிகமானோர் பொய் சர்வசாதரணமாக பேசுகிறோம்,அதையே நம்மை அறியாமல் நம் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்கிறோம், எப்படி? என்றால் நம்மை கேட்டு தொலைபேசியில் அழைப்பவரிடம், நாம் வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று சொல்ல சொல்லி குழந்தைகளை பேச சொல்கிறோம்…

பணம் ஒரு மனிதனுக்கு அந்தஸ்தை தரலாம், காலத்தால் அழியாத அடையாளத்தை நிச்சயம் தராது.

இன்றும் நாம் அனைவரும் காந்தியையும், கர்ம வீரரையும், கக்கனையும் அண்ணாவையும் நினைவில் வைத்திருக்கிறோம்., அவர்கள் சமக்காலத்தில் வாழ்ந்த செல்வ சீமான்களை பற்றி யாருக்கும் தெரியாது…

70/- ரூபாய் தினக்கூலி கூட கிடைக்காத ஏழைகள் இன்றும் நம் நாட்டில் பலகோடி மக்கள் வாழ்கிறார்கள். கிடைக்கும் அந்த சொற்பவருமானத்தில் நிம்மதியாக வாழ்கிறார்கள் பல இடங்களில் நாம் பார்க்கலாம் வாரக்கூலி / தினக்கூலி வாங்கும் பலர் ஞாயிற்றுக்கிழமை மீன், மட்டன், சினிமா என்று குதூகலமாக இருக்கிறர்கள்.அவர்களுக்கு கூலி கொடுப்பவர்கள் வாழ்வில் அந்த குதூகலம் இருக்கிறதா? என்றால் இல்லை..

இத்தனை கோடி மக்கள் அன்றாட தேவைக்கு அல்லல் படும் இந்த சூழலில் நிரந்தரமான சம்பளம் அந்தஸ்துடன் வாழும் அரசியல்வாதிகள் குறிப்பாக அரசு உயர் அதிகாரிகள் இன்று ஊழலில் திரட்டும் வருமானம் அவர்களின் எதிர்கால சந்ததிக்கு தேடி தரும் அவமானம் தான்.

அண்மையில் ஒரு சுங்க இலாகா அதிகாரியின் வீட்டில் பலகோடி கட்டுக்கட்டாக ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக படித்த பொழுது வலித்தது…. யோசித்து பார்த்தால் அரசின் உயர்ப்பதவி -களுக்கு (IAS / IPS) வரும் பலர் நிச்சயம் செல்வ சீமான் களின் புத்திரர்களாக இருக்க மாட்டார்கள், கிராமத்தையும்/வறுமையையும் பின்ணனியாக அல்லது ஒரு நல்லாசிரியரின் / அரசு கடை நிலை ஊழியரின் வாரிசுகளாக தான் இருப்பார்கள். அவர்களின் தந்தைகள் தங்களது குழந்தைகள் உயர் பதவிக்கு வரவேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் தான் வளர்த்திருப்பார்கள். அப்படி இருக்கையில் இவர்கள் (ஊழல் செய்பவர்கள்) மட்டும் ஏன், தங்களின் பல தலைமுறைகள் எந்த லட்சியமும் இல்லாமல் மைனர் குஞ்சு மணிகளாக  வாழவேண்டும் என்று குறுக்கு வழியில் பணம் தேடுகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு விகடன் மதன் கேள்வி பதில் பகுதியில் உயர்ந்த மனிதர்கள் உருவாக வறுமை காரணமா? என்ற கேள்விக்கு – பாது காப்பற்ற சூழ்நிலை தான் உயர்ந்த மனிதர்கள் உருவாக காரணம் அதனுள்ளே வறுமையும் அடக்கம் என்றும் சொல்லி இருந்தார் அப்படி சொன்னவர் உலக புகழ் பெற்ற CNN நிறுவனத்தின் Founder Ted Turner அவர்களின் தந்தை .

 

Ted Turner அவர்களின் தந்தை தன் மகன் பெரிய நிலை யில் வர வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால், தன்மகனிடம் என்றும் அன்பாக நடந்து கொண்டதில்லையாம்.. அப்பா மகனுக்கு இடையில் என்றும் ஒரு பனிப்போர் போன்ற சூழ்நிலைதான்.. அவர் தந்தை படிக்க வைத்தார் ஆனால் தான் நடத்தி வப்ந்த நிறுனத்தில் மகனை சேர்த்துக்கொள்ளவில்லை, இந்த வெறியில் Ted Turner ஒரு வெறியுடன் செயல் பட்டு ஒரு விளம்பர நிறுவனத்தை ஆரம்பித்து விட்டார். அந்த சூழ்நிலையில் அவரது தந்தை அவரை பாராட்டாதது சோகமே… தனது வேலை காரியிடம் தன் மகனின் வளர்ச்சியைப்பற்றி பெருமையாக பேசியுள்ளார்.. ஏன், நீங்கள் உங்கள் மகனிடம் இந்த பாசத்தை பகிர்ந்து கொள்ள வில்லை? என்று கேட்டதற்கு Insecure Feel makes Great Man என்று சொல்லி விட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு தன் தந்தையின் நிறுவனத்தையும் சேர்த்து உலகின் மிக பெரிய மீடியா நிறுவனமாக சி என் என் உருவானது அனைவருக்கும் தெரியும். (இது தகவலுக்கே, இப்படி நாமும் இருக்க வேண்டும் என்று சொல்ல வில்லை)

 இன்று நாம் வம்பானிகளை பற்றி பேசுகிறோம் – நாளை அவர்களை மிஞ்சும் சில வம்பானிகள் வரலாம் ஆனால் சுதந்திர இந்தியாவில் குறிப்பாக 80 களில் அவர்களின் வளர்ச்சிக்கு நிகராக ஊழல் வளர ஆரம்பித்தது என்பதை மறக்க முடியாது. எந்த பொருளுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்வதை போல் இந்த நாட்டில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்தவர்கள்.

 

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப்பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.64 லட்சம் கோடியாம் (1456 பில்லியன் டாலர்கள்)!! இந்தியாவுக்கு தற்போதுள்ள வெளிநாட்டுக் கடனைவிட 13 மடங்கு அதிகம் இந்தக் கறுப்புப்பணத்தின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாயத்தில் மலிந்துவிட்ட லஞ்சம் மற்றும் நேர்மையின்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் தேசத்தின் மதிப்பு மீட்பு அறக்கட்டளை (Foundation for Restoration National Values -M.R NV) என்ற அமைப்பை சுவாமி பூமானந்தா தொடங்கியுள்ளார். இந்த அமைப்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன், மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் விட்டல் ஆகியோர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

 

சுவாமி பூமானந்தா கூறியதாவது: உலக நாடுகளை அச்சுறுத்தும் அளவுக்கு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைக்குலைந்து போகும்.

 

இந்தியாவின் கறுப்புப்பணத்தை முழுமையாக வெள்ளையாக்கினாலே போதும், முழுப் பிரச்சினையும் தீர்ந்து போகும். சுவீஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணத்தில் வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டாலே நாடு எங்கேயோ போய்விடும். சுவீஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கியிடம் கேட்டுப் பெறலாம். மத்திய அரசு நினைத்தால் இதைச் செய்ய முடியும் ஆனால் செய்வார்களா? என்றால் மாட்டார்கள்….. அணு சக்தி ஒப்பந்ததை விட நல்ல விஷயமாக இது அமையும்.

 

எங்கு? எதை உண்கிறோம்? என்ன உடுத்துகிறோம்? என்பதில் வேண்டுமானால்
வித்தியாசம் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை தேவை இரண்டு நேரம் உண்ண உணவு, உடுத்த உடை தான். மும்பையில் உருளை கிழங்கும், சதுர வடிவ பன்னும், கூட ஒரு கட்டிங் சாயாவும் (வடா பாவ் + கட்டிங் டீ ) தான் பல லட்சம் பேர்களின் உணவாக உள்ளது, எனது அனுபவமும் கூட.

 

உருளைகிழங்கும் பெரிய வெங்காயமும் உற்பத்தி சப்ளை இல்லை என்றால் அங்கு ஒரு பெரிய கலவரமே வெடிக்கும் அந்த அளவுக்கு அவை இரண்டும் மும்பை மக்களுடன் இரண்டற கலந்தது.

 

ஆனால் நாம் விவசாயத்தை பற்றிய அக்கறை இல்லாமல் சென்று கொண்டிருக்கிறோம்…

 

பின் குறிப்புகாலையில் சந்தையின் போக்கு கட்டுரைதான் எழுத ஆரம்பித்தேன் அதில் ஒரு வரி அறிஞர் அண்ணாவை பற்றி குறிப்பிடலாம் என்று ஆரம்பித்தேன், அது ஒரு கட்டுரையாக மாறி விட்டது. பிழைப்புக்கு பங்கு வணிகம் செய்தாலும் இது போன்ற சமூகத்தின் மீது உள்ள ஆர்வங்களையும், கோபங்களையும் செய்திகளின் அலசல்களையும் பதிவு செய்ய வேறு ஒரு வலைப்பூ ஆரம்பிக்க முடிவு செய்துள்ளேன்.

 

10 responses to this post.

 1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! நீண்ட ஆயுளும், ஆரோக்கியமான வாழ்வும் பெற இந்நாளில் வாழ்த்துகிறேன்!!

 2. பதிவினை பற்றிய பின்னூட்டம், பதிவை படித்து முடித்த பின்…

 3. சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட இக்கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள்., இது மேலும் தொடர……………
  NO AMOUNT OF READING OR MEMORIZING WILL MAKE YOU SUCCESSFUL IN LIFE.IT IS THE UNDERSTANDING AND APPLICATION OF WISE THOUGHT WHICH COUNTS.—BOB PROCTOR,AUTHOR OF YOU WERE BORN RICH

 4. i’ve been a regular visitor to ur blog, since u started it (6M ago). But i never posted a feedback, due laziness.

  Even if we get that 64LC from swiss bank (!), most of it will again go back there, while spending on IMPROVISATION(!) of our PEOPLE.

  By giving the MONEY of a WEALTHY person to the POOR can’t MAKE them RICH, -ABRAHAM LINCOLN.

  AS u said in the ARTICLE… By INCREASING our MORAL Values by OURSELVES will ALONE make us MORE HUMAN…

  (Sorry i’ve posted this wrongly there…)

 5. திராவிட இயக்கத்தை உருவாக்கி அரசியலில் கண்ணியம் என்றால் என்ன என்பதை தனது வாழ்கையின் மூலம் உணர்த்திய நமது முன்னால் முதல்வர் அண்ணா அவர்களின் 100 பிறந்த நாளில், இப்படி ஒரு கட்டுரையை படித்தது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சார். மீண்டும் அப்படி ஒரு பொற்கால ஆட்சி கிடைப்பது கடினம்.

 6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

 7. Dear Sai,

  Excellent article !!I am much impressed rather than your share related articles..

  Pls keep the good work !!

  Thanks,
  Selva

 8. திரு ராம் பிரசாத்,
  தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி… நான் இலவசங்களை வன்மையாக எதிர்க்கிறேன்…
  மக்களின் திறமைகளை மலுங்கடிக்கும் செயல் தான்..

  //Even if we get that 64LC from swiss bank (!), most of it will again go back there, while spending on IMPROVISATION(!) of our PEOPLE.// உண்மையான வர்த்தைகள்.. அந்த அளவு நம் அரசியல் வாதிகள் மீது நம்பிக்கை உள்ளது…

  //By INCREASING our MORAL Values by OURSELVES will ALONE make us MORE HUMAN…// இதுதான் நாம் செய்ய வேண்டியது….

 9. அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்றே

  பிறந்த நாள் காணும்

  சாய் கணேஷிற்கு

  இனிய

  பிறந்த நாள்

  வாழ்த்துக்கள்………………………..

 10. SAI GANESH,

  WISH YOU HAPPY BIRTH DAY.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: