சந்தையின் போக்கு 12.09.2008


அமெரிக்க சந்தையின் அடுத்த தலைவலியாக வந்திருப்பது Merrill Lynch & Co Inc  அதை பற்றி  “I think the market’s telling you that if Lehman is going to go away, Merrill is probably the next victim,”  என்று  Malcolm Polley (chief investment officer at Stewart Capital Advisors) என்பவர் சொல்லி உள்ளார்.

சந்தை நேற்று எதிர்ப்பார்த்ததை போல் நகர்ந்தது .ஆனால், பெரிய சரிவில் இருந்து தப்பியது/ தாமதம் ஆனப்து ஆச்சரியம். 29/8 அன்று 4210-4270  இல் ஏற்பட்ட இடைவெளி நிரப்பபடும் என்று எதிர்பார்த்தேன். 

இன்றும் நேற்றைய சரிவுகள் தொடரும் என்று எதிர்ப்பார்ப்புடன் இருந்தேன் ஆனால், அதற்கான வாய்ப்பு குறைந்து விட்டது. இன்று சந்தை சிறிய அளவில் தன்னை நிலை படுத்தி கொள்ள முயற்ச்சிக்கும்.   அதற்கு பண வீக்க விகிதம் மற்றும் அமெரிக்க ஆசிய சந்தைகளில் ஏற்பட்டிருக்கும் சிறிய ஏற்றங்கள் உதவியாக இருக்கும்.  

சென்ற வாரம் சொன்னது போல் பணவீக்க விகிதம்  நிலைப்பட்டு வருகிறது. அல்லது நிலை படுத்தப்பட்டு வருகிறது.   ஆனால் இதனால் இன்னும்  சாமன்யர்களுக்கு  பயன்  கிடைக்க  வில்லை.  அத்தியாவசிய பொருட்களின் விலை எதுவும் குறைய வில்லை.  குறைந்து வரும் கச்சா  எண்ணெய்யின் விலை காரணமாக பொது துறை  நிறுவனங்களின் நஷ்டம் குறைந்துள்ளது.  நிலைப்படுத்த பட்டிருக்கும் பணவீக்கம் பெரிதாக சந்தையை மேலே எடுத்து செல்ல உதவாது.  மேலும் உயர்ந்து அதிக பொருளாதார நெருக்கடியை உருவாக்கவில்லை என்று மகிழ்ச்சி அடையலாம்.  சென்ற வருடம் பண வீக்க விகிதம் 3% – 4% அளவில் தான் இருந்தது,  இருந்தும் ஜனவரியில் எதிர்பாராத ஒரு சுனாமி சந்தையை சுழற்றி அடித்தது. சந்தை யை பாதிக்கும் ஆயிரகணக்கான காரணிகளில் பணவீக்கமும் ஒன்று.

அணு சக்தி ஒப்பந்தம் அமெரிக்க பாரளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது….  பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை கையெழுத்திட அமெரிக்கா அழைத்துள்ளது.  நமது தில்லி செய்தியாளர் – அணு சக்தி ஒப்பந்தத்தை பயன்படுத்தி முன் கூட்டியே தேர்தலை சந்திக்க ஆளும் அரசு முடிவு செய்துள்ளதாகவும். அணு சக்தி ஒப்பந்தத்தின் மகிமைகளை மிக பெரிய அளவில் விளம்பரபடுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.  இந்தியா ஒளிர்கிறது – விளம்பரத்திற்கு ஏற்பட்ட கதி இதற்கும் ஏற்படாமல் இருந்தால் சரி.

அண்மையில் நிதி அமைச்சர் தமிழக முதல்வரை சந்தித்து பேசியதையும் அதற்கு அடுத்த சில தினங்களில் ரூபாய் 1/- க்கு அரிசி திட்டம் அறிவிக்க பட்டதையும் குறிப்பிட்டார்.   (இதே நிதியமைச்சர் தான் முந்தைய தேர்தலின் கதாநாயகன் ரூபாய் 2/- க்கு அரிசி திட்டமும்  / இலவச வண்ண தொலைக்காட்சி திட்டமும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.)

இதை இங்கே சொல்ல காரணம் அவ்வாறு தேர்தல் நடந்தால், அதன் முடிவு எவ்வாறு இருக்கும்? என்று இன்றைய நிலையில் கணிக்க இயலாது.  அந்த மாதிரி சமயங்களின் சந்தையின் நிலை திரிசங்கு சொர்க்கம் போன்றே இருக்கும்.  

இன்றைய நிப்டி ப்யூச்சரின் நிலை

டாப் – 4607-4574- 4516-44764464 – 44454398-4368-4354-4348 பாட்டம்

இன்றைய  PIVOT LEVELS 

=================================================================

இன்றைய தினம் அமெரிக்க செய்திகளை படிக்கும் போது – இரண்டு செய்திகள் கண்ணில் பட்டது,  அதை படித்து அதிர்ச்சி அடைந்தேன் (இது பங்கு வணிகத்திற்கு சம்மந்தம் இல்லாதது.) 

அதிர்ச்சி 1 –  ஒரு இளம் பெண் தனது படிப்புக்காக  தன்னையே இணைய  தளத்தில் ஏலம் விட முடிவு செய்துள்ளது. 

சந்தோசம் 1 – அங்கும் ஊழல் இல்லாமல் இல்லை.

Advertisements

16 responses to this post.

 1. Thank you very much for your views sir. I think market may go up slightly and day traders will utilise that opportunity to book their profits.

 2. நீங்கள் கொடுக்கும் PIVOT TRADING LEVELS விபரம் பயனளிக்கும் ஒன்றாக இருக்கிறது.
  தொடரவும். நன்றி.

 3. திரு சாய் அவர்களுக்கு,

  இன்றைய கட்டுரையை அருமையான தகவல்களுடன் மிகவும் அழகாய் கொடுத்துள்ளீர்கள் சாய். இந்த கட்டுரை மட்டும் அல்ல நீங்கள் தினந்தோறும் வழங்கி வரும் சந்தை பற்றிய கட்டுரைகள் அனைத்தும் மிகவும் அருமை. இதை வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை அடி மனதிலுருந்து வரும் உணர்வுகள் இவை.

  மிகுந்த பணிகளுக்கு இடையிலும் சிரமம் பார்க்காது தகவல்களை சேகரித்து தாங்கள் வழங்கும் இந்த பணியை பாராட்ட எங்களிடம் வார்த்தைகள் இல்லை.

  தாங்கள் எப்பொழுதும் இதை தொடர்ந்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

  இனிய காலை வணக்கம்.

 4. PIVOT LEVEL CHART IS VERY USEFUL

 5. வணக்கம் சாய் சார்,

  //பணவீக்க விகிதம் நிலை பட்டு வருகிறது அல்லது நிலை படுத்த பட்டு வருகிறது//. அருமையான வார்த்தைகள். இப்பொழுதே தேர்தலை பற்றி சிந்திக்க ஆரம்பித்தால் நிச்சயமாக ஒரு மனதுடன் வணிகம் செய்ய இயலாது. இதற்கு மேல் அணு ஒப்பந்தத்தை குறை கூற நான் தயாராய் இல்லை. ஆனால் அதை பயன்படுத்தி லாபம் செய்ய எண்ணியுள்ளேன். அவர்கள் மட்டும் தான் சம்பாதிக்க வேண்டுமா?

  கீழே தாங்கள் கொடுத்துள்ள இணைப்பு வியப்பை தந்தது.

  நன்றி

  சிம்பா.

 6. good morning sai sir, thanks for your informative articles.

 7. மிகவும் அருமை… நன்றி சாய் நேற்று சந்தை 4300 கீழ் சென்று விட்டது இன்று தாங்கள் 4398-4368-4354-4348 பாட்டம் என்று பதிவு செய்து இருப்பது குழப்பமாக உள்ளது.

  சரிவு எதுவரை தொடரும் எனக்கு கூற முடியுமா?

 8. சந்தை எந்த ஒரு காரணம் இல்லாமல், அன்றாடம் கிடைக்கும் செய்திகளால் வழி நடத்த படுகிறது/ அவதி படுகிறது…. சந்தை 4150 வரை செல்ல வேண்டும் ஆனால் இது சீராக இருக்க போவதில்லை. மேடு பள்ளங்களுடன் தான் இருக்கும்

 9. 4348 ஐ அடையும் பட்சத்தில் சந்தை மேலே வரும் என்பதை சொல்லவே பாட்டம் என்று குறிப்பிட்டேன்…. அதற்கு கீழே சப்போர்ட் இல்லை என்பதையும் சொல்ல….

 10. A rally from 14000-15000 and 15000-14000 .Definitely intraday traders would have got benefit from this rally and not investors.

 11. Your new format for comments look very excellent. Keep it up. You are making your website very attractive day by day. It gives immense pleasure to view your comments as well your new format.

 12. திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய இந்த புது வலைத்தள நிறம் மிகவும் அழகாக உள்ளது. கண்களுக்கு pleasing- ஆக இருக்கிறது.

  மேலும் பின்னூட்டங்களில் வரும் டிசைன் அருமையாக இருக்கிறது. தங்களுடைய முந்தைய வலைத்தளத்தின் நிறத்தை காட்டிலும் இது மிகவும் அற்புதமாய் இருக்கிறது.

  வாழ்த்துக்கள் சாய்.

  இனிய காலை வணக்கம்,,,,,,,,

 13. திரு சுரேஷ் மற்றும் மோகன் ராஜ்

  இதற்கு முந்தைய format-ல் பின்னுட்டங்கள் பார்க்க / படிக்க தெளிவாக இல்லாமல் இருந்தது உண்மைதான் அதற்காகத்தான் மாற்றினேன்…
  தங்களின் பாரட்டுகளுக்கு மிக்க நன்றி….

 14. hi there, i dont know to write in Tamil. If you dont recog me, it’s my page that you visited other day and left a comment about NYMEX CRUDE CHART.

  To answer your query, you can get that chart from 321energy.com. USE RIGHT CLICK method to get its URL-ADDRESS and use HTML IMAGE TAG img()to paste it in ur blog page.

  similarly, basemetals.com will yield you the other charts.

  hunky dory,
  noolo

 15. சாய்,
  இந்த புதிய வலை தள அமைப்பும் வண்ணமும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் இருக்கிறது.
  உங்கள் எழுத்துநடையும் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது.
  நீங்கள் கொடுக்கும் புள்ளிவிபரங்கள் கணிப்பு சரியாகவே உள்ளது.
  கடந்த 04.09.2008 அன்று நீங்கள் கீழ்க்கண்டவாறு சொல்லி இருந்தீர்கள்.

  //4650 க்கு முன்பாக 4200-150 என்ற நிலைகளை எதிர்பார்க்கிறேன்.//

  நீங்கள் சொல்லும்பொழுது nifty fut. நிலை 4500+ என்ற நிலையில் இருந்தது.அப்போதைய எதிர்பார்ப்பு 4600 மற்றும் 4700 என்று இருந்த பொழுது நீங்கள் மட்டும் nifty 4200-150 வரும் என கணிப்பு அளித்தீர்கள். கடந்த 12.09.2008 அன்று முடிவடைந்த nifty fut. நிலை 4200+ நீங்கள் சொன்னது போலவே!!!

  4200 PE எடுத்ததில் நான் லாபமடைந்தேன்.

  உங்களுடைய வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி……

  தொடரட்டும் உங்கள் சேவை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: