சந்தையின் போக்கு 09.09.2008


இது வரை எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை 150, அவற்றில் சிறிய மற்றும் தேவையற்ற பதிவுகள் என்று சிலவற்றை களையெடுத்தாலும்  உருப்படியான பதிவுகள் குறைந்தது 100   தேறும் என்று நினைக்கிறேன்.  தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று தெரியாமலே வலைப்பூ ஆரம்பித்தேன்.  இந்த 3 மாதத்தில் நல்ல நண்பர்கள்/உறவுகள் என்று 20 பேராவது  கிடைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் பின்னூட்டம் இடத்தெரியாது / நேரம் இல்லை என்று அமைதியான பார்வையாளர்களாக நிறைய நண்பர்கள் இருப்பது அவர்கள்  தொலை பேசியில் பேசும் போது தெரிகிறது.

ஆங்கிலத்தில் ஏராளமான தகவல்கள் / வலைப்பூக்கள் இணையம் எங்கும் கொட்டி கிடக்கின்றன அவற்றோடு ஒப்பிட்டு பார்த்தால் நான் செய்தது/செய்வது ஒரு பெரிய  விசயம் இல்லை.

இருந்தும் எனக்கு கிடைத்த தங்களின் வாழ்த்துகளுக்கும் ஆதரவுக்கும் நான் தகுதியுடையவானா என்று யோசிக்கிறேன்.  அந்த அன்பையும்,  ஆதரவையும் என்றும் தக்கவைத்து கொள்ள மேலும் முயற்ச்சிக்கிறேன்.

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்…..

என்றென்றும் நட்புடன் -சாய்கணேஷ்

================================================================

அமெரிக்கா என்னடா உங்களை அணு குண்டு சோதனை நடத்த கூடாது என்று சொல்வது, நீங்கள் நடத்த வில்லையென்றால் போங்கடா நான் ஒரு அணு குண்டு சோதனையை நடத்த தயராகிறேன் என்று ஒருவர் சொல்லி வருகிறார்.

பாகிஸ்தானா? இல்லை ஈரானா? என்று யோசிக்காதிர்கள் அப்படி சொல்லி வருவது நம்ம அண்ணன் நிப்டியார் தானுங்கோ…….

அது காளையா கரடியா என்பது தெரியாது ஆனால் உள்ளே எரிமலையாக கனன்று கொண்டு இருப்பது மட்டும் உண்மை…

ஆகஸ்ட் மாதம் இறுதியில் FnO Expiry , டெக்னிகல் வேலை செய்யாது என்று  அதிகமானோர் ஒதுங்கி இருந்த சமயத்தில் சந்தை தெளிந்த நீரோடையாக, FnO Expiry   அன்று கூட டெக்னிகலின்  கட்டுபாட்டில்  இருந்தது அதற்கு அடுத்த நாளில் இருந்து  புரியாத புதிராக மாறியது.  தினசரி கேப் அப் அல்லது கேப் டவுன் என்று செல்கிறது  இந்த மாதிரி  நாட்களில் சந்தையை கணிப்பது என்பது எளிது அல்ல.    தினவர்த்தகம் செய்யவும்   ஏற்றதாக   இல்லை.  சரி பொஸிஷன் எடுக்கலாம் என்றால் ஓடுவது இரண்டு குதிரை (கேப் அப்/ கேப் டவுன்) எதிலோ   ஒன்றின்  மீது   பணத்தை கட்டுவோம் என்ற சூதாட்டம் போல் உள்ளது.

ஏதோ ஒரு பக்கம் வெடித்தால் சரி….

நேற்று மாலை நன்பர்கள் சிலரிடம் சொன்னது போல் இன்றை சந்தை கேப் டவுனாகதான் துவங்கும்

நேற்றைய தினம் Fannie மற்றும் Freddie பிரச்சினை என்ற டியுனுக்கு ஆசிய சந்தைகள் போட்ட குத்தாட்டம் கொஞ்சம் ஓவராதான் இருந்தது, அந்த அளவுக்கு அமெரிக்கா ஆடவில்லை.

நேற்று ஓவரா ஆடிய களைப்பா என்று தெரிய வில்லை இன்று  ஆசிய சந்தைகள் அனைத்தும் சிவப்பு கம்பளம் விரித்துள்ளார்கள்.

அணு சக்தி ஒப்பந்தத்திற்கு இனிமேல் சந்தை ஆடாது என்று நினைக்கிறேன்,  ஒரு வேளை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் அந்த வரலாற்று சிறப்பு மிக்க நாளில் (அதை அதரிப்பவர்களுக்கும,  இல்லை அது அடிமை சாசனம் என்று சொல்பவர்களுக்கும்)  ஒரு குத்தாட்டம் போடலாம். அதன் பிறகும் யாருக்கும் அதை பற்றி கவலை இருக்க போவதில்லை.

ஒபாக் நாடுகள் கச்சா எண்ணை உற்பத்தியின் இலக்கை தற்போதைக்கு குறைக்க போவதில்லை என்று சொல்லி இருப்பது கச்சா எண்ணையின் விலை குறைய உதவியுள்ளது இருந்தாலும் இன்றை கூட்டத்தின் முடிவில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு பிறகு தான் நிலைமை தெரிய வரும். உபரி உற்பத்தியையாவது குறைப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

4502 – 4470 – 4423 – 4412 – 4386-4369 – 4338 – 4300 – 4299 – 4283

Advertisements

14 responses to this post.

 1. Good Morning and thank you very much for your views sir. I start my intraday after seeing your views sir.
  It is a caution and also encouragement to do the intraday trading. Keep it up. Expecting your books on intraday techniques/stock market views.

 2. திரு சாய்,

  இன்றைய கட்டுரையும் அருமை. ஒவ்வொரு நாளும் அன்றைய கட்டுரைக்காக தாங்கள் அனைத்து விசயங்களையும் சேகரித்து அவற்றை மிகவும் அழகாய் தந்துகொண்டு இருக்கிறீர்கள்.

  ஆங்கிலத்தில் எத்தனையோ வலைப்பூக்கள் இருந்தாலும் நமது தாய்மொழியாம் தமிழில் அவற்றிற்கு நிகராக ஒரு வலைப் பூவை எங்களுக்காக நடத்தி வரும் தங்களின் சேவை போற்றுவதற்கு உரியது.

  தங்களுடைய பதிப்புகள் அனைத்துமே மிகவும் அருமை சாய். சந்தையை பற்றி மட்டும் எழுதாமல் அதை சார்ந்த மற்ற விசயங்களையும் கட்டுரையாக எழுதி தாங்கள் வழங்குவது ஒரு அருமையான விஷயம்.

  தங்களது இந்த பணி என்றும் தொடர வேண்டும்.

  இனிய காலை வணக்கம்.

 3. Sir,

  Eppati tamil type seyvathu?

 4. thankyou sir,

 5. திரு ராஜேந்திரன்

  தமிழில் டைப் செய்ய இந்த இணைப்பை முயற்சி செய்யவும்..

  http://www.google.com/transliterate/indic/Tamil
  இது எளிமையான வழி

  இன்டர் நெட் தொடர்பில்லாமல் கடிதம் கட்டுரை என்று எழுத உள்ளுர் புத்தக கடை அல்லது புத்தக திருவிழாக்களில் கிடைக்கும் மென்பொருளை பயன் படுத்தவும்…..

  250/- ல் இருந்து 600/- என்ற விலையில் கிடைக்கிறது.

 6. மிக்க நன்றி சார்

 7. வாழ்த்துக்கள்.
  தமிழ் மொழியில் சிறந்த வலைப் பூ இதுவே.எங்களைப் போல் புதியவர்களுக்கு மிகவு பயனுள்ளதாக உள்ளது.உங்களது சேவை தொடரவும் சிறக்கவும் எங்கள் வாழ்த்துக்கள்.

 8. Thanks Sai… These days I am just watching the markets whenever I find time… and as you said its only gap up or gap down… looks like difficult time for investors/traders. Lets wait for the break out from this range. Happy trading.

 9. எங்களைப் பொறுத்தவரை உங்கள் பதிவுகள் அனைத்துமே பயனுள்ளவைகள் தான் சாய் சார்

 10. வணக்கம் சாய் சார்,

  நூறு பதிவுகள் முடிந்தது என்று நீங்க கூறிய பிறகுதான் , நாட்கள் எவ்வளவு வேகமாக செல்கிறது என்று தெரிகிறது. வாழ்த்துக்கள் சாய், என்று சொல்லும் அளவிற்கு எனக்கு வயதில்லை. ஆனால் இது என்றும் தொடர வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். (பக்கத்துல இருந்தா இந்நேரம், ஆளுக்கு ஒரு 5000 தை கையில் எடுத்து – நிலாவுக்காக நு சொல்லி cheers அடிச்சிருக்கலாம்).
  //ஓடுவது இரண்டு குதிரை (கேப் அப்/ கேப் டவுன்) எதிலோ ஒன்றின் மீது பணத்தை கட்டுவோம் என்ற சூதாட்டம் போல் உள்ளது.// மிக அருமை சார். இப்பொழுது நடப்பதை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

 11. எங்களை போன்ற புதியவர்களுக்கு உங்களுடைய
  அனைத்து கட்டுரைகளுமே சிறந்த வழிகாட்டி.
  உலக அளவிலான பொருளாதார மற்றும்
  அரசியல் காரணிகளை அலசி ஆராய்ந்து
  அதனை எளிய எழுத்து நடையுடன்
  எங்களுக்கு புரியும் வண்ணம்
  தருகிறீர்கள்.

  இந்த சேவையினை மேலும் உற்சாகத்துடன்
  நீங்கள் புரிய வேண்டும் என்பதே எங்கள்
  எண்ணம். தொடருங்கள் ……………………..

  வாழ்த்துக்கள்.

  நன்றி.

 12. ஒரு கட்டுரை எழுத எவ்வளவு உழைப்பு தேவை .அதுமட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் சந்தையை கணிப்பது சவாலான வேலை.தொடரட்டும் இப்பணி

 13. வாழ்த்துக்கள் சாய் சார்,
  நீங்கள் 150, பதிவுகள் எழுவதற்கு எவ்வளவு உழைத்திருப்பீர்கள் என்று,
  உங்கள் வலைப்பூவை பற்றி சில நாட்களுக்கு முன்பே அறிந்த எனக்கு
  அதில் உள்ள அனைத்து தொகுப்புகளையும் படித்தபின்பு
  நன்றாக உணர முடிகிறது.
  உங்கள் பதிவுகள் அனைத்துமே என்னைப் போன்றவர்களுக்கு
  மிகுந்த பயனுள்ளதாக இருந்தது, இருக்கிறது,இருக்கபோகிறது.
  உங்கள் சேவை தொடர மீண்டும் எனது வாழ்த்துக்கள் .
  ராஜி

 14. “அதே நேரத்தில் பின்னூட்டம் இடத்தெரியாது / நேரம் இல்லை என்று அமைதியான பார்வையாளர்களாக நிறைய நண்பர்கள் இருப்பது”—I AM ALSO ONE AMONG THEM…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: