அணு சக்தி ஒப்பந்தம் – ஒரு கழுகு பார்வை…


அணு சக்தி ஒப்பந்தம்

இன்று இதை பற்றி பேசாத ஆளே இல்லை…. அப்படி இருக்கும் போது நீ மட்டும் ஏன்டா எதுவும் எழுதாம சும்மா இருக்கிறாய் என்று நமக்குள்ளே இருக்கும் சிங்கம் சீன்டி பார்த்ததின் விளைவே இந்த கட்டுரை

இதற்காக இரண்டு நாளாய் சேகரித்த தகவல்களின் தொகுப்பு 200 பக்கம் இருக்கும், ஆனால் அதை ஒரு கழுகின் பார்வை போன்று சுருக்க மாக பார்ப்போம்.

ஆனந்தம்….

NSG எனப்படும் அணு ச‌க்‌தி‌ தொ‌‌ழி‌ல்நு‌ட்ப நாடுக‌ள் குழு‌வி‌‌ன் (Nuclear Suppliers Group – NSG) ‌ அனும‌தி கோ‌ரி இ‌ந்‌தியா சா‌ர்‌பி‌ல் அமெ‌ரி‌க்காவால் மு‌ன் மொழியப்பட்டுள்ள தீர்மான வரை‌வுக்கு அனுமதி கிடைத்து விட்டது. நாடே சுதந்திரம் அடைந்ததை போல் உற்சாகத்தில் இருக்கிறது என்ற தோற்றத்தை சில பத்திரிக்கை மற்றும் தொலை காட்சிகளும் சொல்லி நம்பவைக்க முயற்சிக்கிறார்கள். நாமும் நம்பி விட்டோம். சந்தோசம் அடைவோம்.

இதில் என்ன சந்தோசம் என்று கேட்டால் 35 வருடங்களாக தனிமை படுத்த பட்ட இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி.. என்று சொல்கிறார்கள். இது பெரும் பொய் 35 ஆண்டுகளாக தனிமைபட வில்லை, தனித்து இருந்தோம் என்பது தான் உண்மை.

சீனா 1964ல் அணு குண்டு சோதனையை நடத்தி இருந்த நேரத்தில்

1968ல் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் பார பட்சமாக இருப்பதாக சொல்லி கையெழுத்திட நம் முன்னோர் மறுத்து விட்டார்கள். நாமே மறுத்த ஒரு விசயத்தை எப்படி தனிமை படுத்த பட்டதாக சொல்வது.

தொழில் நுட்பத்தில் தனிமை படுத்த பட்டோமா என்றால் அதுவும் இல்லை. உலக விஞ்ஞானிகளுக்கு சிறிதும் சளைத்தவர்கள் அல்ல நமது தேசத்தின் விஞ்ஞானிகள் 1940 களிலேயே ஹோமி பாபா அவர்கள் அணு ஆராய்ச்சியை ஆரம்பித்து விட்டார்.(விமான விபத்தில் அவர் மரணம் அடைந்தது நமது துரதிஷ்டம்.) – எந்த ஒரு நாட்டின் உதவியும் இல்லாமல் 1974 மே 18 அன்று இந்தியா முதல் அணு குண்டு சோதனையை நடத்தியது. இந்தியாவா? அணு குண்டு சோதனையா? இது எப்படி சாத்தியம்! என்று உலக நாடுகள் அலறின குறிப்பாக அமெரிக்காவும் சீனாவும்.. அதன் பிறகு உலக நாடுகளின் நிர்பந்ததிற்கு பயந்து நமது விஞ்ஞானிகளை அடக்கி வாசிக்க வைத்தார்கள் என்பது வேறு விசயம்.

அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு விதிக்கபடும் கடுமையான தடைகள் இந்தியாவுக்கும் விதிக்கபட்டன. இருந்தும் சோவியத் யூனியன், பிரான்ஸ் ஜெர்மனி, சுவிடன் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் உதவிகளை செய்துள்ளன.

ஜெர்மனி நிறுவனம் ஒன்று நமக்கு ரகசியமாக 100 கிலோ பெரிலியம் கொடுத்ததுக்காக அந்த நிறுவனத்துக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர்களை அபராதம் விதித்தது.

ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் அளவுக்கு மீறிய நெருக்கடியால் நமது விஞ்ஞானிகள் மீண்டும் ஒரு முறை சோதனை நடத்தி நமது பலத்தை உலகுக்கு பறைசாற்ற வேண்டும் என்றார்கள்.

அதற்கு 1996ல் அப்போதைய பாரத பிரதமர் திரு நரசிம்மராவ் அனுமதியளித்தார்ஆனால் இதை செயற்கைகோள் மூலமாகவோ அல்லது வேறு உளவாளிகள் வழியாகவோ தெரிந்து கொண்ட அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் ஏய் இந்தியா என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு என்று மிரட்ட, சோதனை கைவிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 1998 மே 11 மற்றும் 13ஆகிய தேதிகளில் திரு வாஜ்பாய் அவர்கள் ஆசைபட்டதற்காக 5 அணு குண்டுகளை நமது விஞ்ஞானிகள் வெடித்து காட்டி உலக நாடுகளை மீண்டும் நம்மை திரும்பி பார்க்க வைத்தனர்.

இதை டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தலைமையிலான விஞ்ஞானிகள் கச்சிதமாக அமெரிக்க செயற்கை கோள்களின் பார்வையில் மண்ணை தூவி செய்து முடித்தார்கள் என்பதை நாம அனைவரும் நன்கு அறிவோம்.

இவற்றை எல்லாம் கவனித்தோம் என்றால் எந்த வகையிலும் தனிமை படுத்த படவில்லை என்பது தெரியும், நாமாக தனித்து இருந்தோம் என்பது தெளிவாக தெரியும். எத்தனை பெரிய தடைகளை விதித்தாலும் நமது விஞ்ஞானிகள் சாதிக்கும் திறமையை பெற்றவர்களே. ஆனால் அவர்களுக்கு இருந்த மிகப்பெரிய தடைகள் நமது அரசியல் வாதிகளே. (இந்த இடத்தில் மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரை பாராட்டியே ஆக வேண்டும், அவருடைய அரசியல் பற்றி மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம் ஆனால் 1968 களில் தொடங்கி 1984 வரை அவர் நம் நாட்டின் அணுசக்தி, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு துறை விஞ்ஞானிகளை ஊக்கபடுத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவரை பற்றிய பலசம்பவங்களை கனவு நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தனது அக்னி சிறகுகள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.)

எப்பொழுதும் NSG –யின் கதவு திறந்து தான் இருந்தது. நாம் நினைத்து இருந்தால் என்றோ அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அவர்களுடன் கை கோர்த்து இருக்கலாம். தேவைபட்டால் அதில் திருத்தம் கோரி இருக்கலாம்..

தற்போது கூட அந்த ஒப்பந்தத்தில் நம்மை கையெழுத்திட அமெரிக்கா வற்புறுத்த வில்லை காரணம் அந்த அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டம் – 1968 ல் அணு ஆயுதம் வைத்திருந்த நாடுகளால் கொண்டுவரப்பட்டது அதன்படி அவர்களை தவிர வேற யாரும் அணு ஆயுதம் வைத்திருக்க கூடாது என்ற ரூல் தான். இன்று நம்மிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்பது உலகுக்கே தெரியும் இருந்தும் இன்றும் நம்மை யாரும் குறிப்பாக அமெரிக்கா இந்தியா அணு ஆயுத வல்லரசு” (Nuclear Power) என்று ஏற்று கொள்ளவில்லை.. ஏன்?

கையெழுத்திடாத மற்ற நாடுகளுக்கு விதிக்கபடும் கடுமையான தடைகள் இந்தியாவுக்கும் விதிக்கபட்டன. இருந்தும் சோவியத் யூனியனும், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி, சுவிடன் ருமேனியா ஆகிய நாடுகள் உதவிகளை செய்துள்ளன.

NSG நாடுகளை திருப்தி படுத்தவே அமெரிக்க நாடாளுமன்றத்தின் அயலுறவு குழுவின் தலைவர் ஹோவர்ட் பெர்மான் அவர்கள், பாருங்கள்இந்தியாவின் குடுமி எப்படி எங்கள் கையில் உள்ளது, அவர்கள் இனிமேல் எப்பொழுதும் அணு குண்டு சோதனை செய்ய முடியாது அப்படி செய்தால் உடனடியாக ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்து விடுவோம், அவ்வாறு ரத்து ஆனால் ஏற்படும் நஷ்டம் என்னவென்று அவர்களுக்கு நன்றாக தெரியும் எனவே மறந்தும் அப்படி செய்ய மாட்டார்கள் என்று 8 மாத பழைய ரகசிய கடிதத்தை வெளியிட்டார்.

இந்த ஒப்பந்தம் முழுவதும் அமெரிக்காவின் தீவிர முயற்சியால் அவர்களின் ஏற்பாட்டால் அவர்களுக்காகவே நிறைவேற்றபடுகிறது.

அதற்கான விளக்கமும் அந்த ரகசிய கடிதத்தில் உள்ளது. (இந்தியாவின் மின்சாரத் தேவைக்கு உதவ என்று சொல்லவில்லை.) இந்தியாவை அணு உலைகளுக்கான இலாபகரமான சந்தை” (Lucrative Market) என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

கிடைத்துள்ளது வெற்றி என்றே எடுத்து கொண்டாலும் அது ஒரு கறை படிந்த வெற்றியே

போபர்ஸ் பீரங்கிகள் கார்கில் போரில் முக்கிய பங்கு வகித்தது ஆனாலும் நமது நினைவிற்கு வருவது என்னவோ சுவிஸ் வங்கியும், குவத்ரோச்சியும் தான் அது போல

இந்த ஒப்பந்தத்தை நினைக்கும் நேரத்தில் அண்மையில் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கிய குதிரை பேரம் மற்றும் பாரளுமன்றத்தில் கொட்டபட்ட பணம் ஆகியவை தான் நிச்சயம் நம் நினைவிற்கு வரும்.

இதன் அடுத்த கட்டமாக அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தின் வரைவை தனது பாராளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுக்கும் ஆனால் நாம் மட்டும் இதன் ரகசியங்களை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை அல்லது இணையதளங்களில் தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஏன் இந்த மூடு மந்திரம். Equal partner என்று சொல்லும் போது நமக்கு மட்டும் ஏன் இந்த சாபக்கேடு? இது தான் நடுநிலையாளர்களின் கேள்வி.

இந்த ஒப்பந்தத்தால் தற்போது பங்கு சந்தைக்கு என்ன உடனடி பலன் என்ன என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை.

எதை தின்றால் வயிற்று வலி போகும் என்ற நிலையில் உள்ள சந்தைக்கு, அணு சக்தி ஒப்பந்தம், உணர்ச்சி வசப்பட்டு ஒரு 200 புள்ளிகள் உயர்த்த வேண்டுமானால் உதவலாம். மீண்டும் நாம் வேறு காரணம் தேட வேண்டியது தான்.

அணுசக்தி துறைக்கு உதவக்கூடிய கட்டுமானம் மற்றும் இதர தொழில் நுட்ப துறை பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்வது பலனளிக்கும். உதாரணம் L&T, HCC, BHEL, Rolta etc….

கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் திட்டங்களின் வேலை வேகப்படுத்தபடும் அதற்காக ரஷ்யாவுடன் போடபட்டுள்ள ஒப்பந்தங்களில் NSG நாடுகளால் ஏற்பட்டிருந்த நிர்பந்தங்கள் நீங்கியுள்ளது. மற்றபடி இந்த ஒப்பந்தத்தால் முழுமையான பலன் கிடைக்க குறைந்தது ஏழு ஆண்டுகள் ஆகும் என்பது அத்துறை சார்ந்த விஞ்ஞானிகளின் கருத்து.

அதாவது புதிய அணு உலைகளுக்கான திட்டம் மற்றும் வடிவமைத்தல் போன்ற செயல்களுக்கு குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு அதற்கான சாதனங்களை நமக்கு சப்ளை செய்ய சம்மந்த பட்ட நாடுகளுக்கு 3ல் இருந்து 4 ஆண்டுகள் தேவை படும். கட்டுமானம் நிறுவுதல் போன்ற வேலைகள் என்று குறைந்தது 8-9 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த ஒரு புதிய திட்டமும் நடைமுறைக்கு வரப்போவதில்லை.

அதே நேரத்தில் அமெரிக்க நாட்டின் உதவியால் தயாரிக்கபடும் மின்சாரத்தின் உற்பத்தி செலவு என்ன என்பதை யாரும் உறுதி படுத்தவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விசயம்.

அணு சக்தி ஒப்பந்ததின் ஆரம்பம் , கடந்து வந்த பாதை ,சாதக பாதகங்கள் மற்றும் நமது மின்சார தேவை அதில் அணு சக்தியின் பங்கு ஆகியவை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் .

 

Advertisements

7 responses to this post.

 1. Good morning.

  A good article

 2. evvalavu arumaiyana vilakkamana pathivu.mikka nanri

 3. அருமை அருமை மிக அருமை. இதை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். இப்பொழுது ஆரம்பம் ஆவது கிடைத்துள்ளது. தகவல் மிகவும் உதவியாக இருந்தது சாய் சார்.
  எனக்கு இந்த ஒப்பந்தத்தில் ஒரு சிறு சந்தேகம். சிறிது நாட்கள் அல்லது வருடங்கள் uranium மூலப்பொருளை பயன்படுத்துவார்களாம். பிறகு thorium பயன்படுத்துவார்களாம். இதில் விஷயம் என்னவென்றால் இந்த thorium நமது நாட்டில் கிடைப்பதில்லை. இது நம்மை அமெரிக்கா சார்பு நாடக மாற்றும் என்று எனக்கு ஒரு சந்தேகம்.
  ஒரு வேலை பின்னாளில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் முறிந்தால், thorium supply உடனடியாக நிறுத்தப்படும் நிலைக்கு வந்தால், இதை பயன்படுத்தி பழகிய நமக்கு எந்த மாதிரியான நிலை ஏற்ப்படும் ??

 4. அணு சக்தி ஒப்பந்தம் – ஒரு கழுகு பார்வை

  கூர்மையான அலசல்.

  நன்றி.

 5. திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரை,,,,,,,,,,,வாழ்த்திக் கூற வார்த்தைகளை தேடுகிறேன். அவ்வளவு அற்புதமாக தகவல்களை சேகரித்துக் கொடுத்துள்ளீர்கள் சாய்.

  அணு சக்தி ஒப்பந்தம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்த எங்களுக்கு உங்கள் கட்டுரை நல்ல தீனி. மிகப் பெரிய கட்டுரையை மிகவும் அழகாய் கொடுத்துளீர்கள் சாய். தாங்கள் இதற்காக சேகரித்த தகவல்கள் 200 பக்கம் என்பது மலைக்க வைக்கிறது. தங்களுடைய மிகுந்த வேலைப் பணிகளுக்கு இடையில் இந்த வேலையை தாங்கள் செய்து முடித்து பாராட்டுக்குரிய ஒரு விஷயம் சாய்.

  ஆங்கில தினசரிகளில் வரும் விசயங்களை படித்தாலும் அதை முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. அந்த குறையை தாங்கள் போக்கி விட்டீர்கள்.

  தங்களுடைய இதுபோன்ற பணிகள் எங்களுக்காக மேலும் தொடர தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

  வாழ்த்துக்களுடன்,
  கே. மோகன்ராஜ். கரூர்.

 6. ஹலோ சாய்,
  வணக்கம். அணுசக்தி ஒப்பந்தம் பற்றி மேலோட்டமாக மட்டுமே தெரிந்த எனக்கு தங்களின் கட்டுரை மிகவும் பயனுள்ள முறையில் இருந்தது. மிக்க நன்றி. 200 பக்கங்கள் குறிப்பு எடுத்து, எங்களுக்கு விளக்கம் அளிப்பது எளிதான செயல் அல்ல. தங்களின் கடினமான உழைப்பிற்கு தங்கள் blog வாசகர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி. தங்களின் மேலான பணி தொடர வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  நவீன்

 7. அருமை அருமை. அணுசக்தி பற்றி இப்படி தெளிவான ஆழமான சார்பற்ற கட்டுரைகள் வரவில்லை என்றே நினைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: