சந்தையின் போக்கு 05.09.2008


சென்றவாரம் வெள்ளி கிழமையில் இருந்து உலக பங்கு சந்தைகளின் போக்கிற்கு மாறாக நாம் சென்று கொண்டுள்ளோம் அந்த ஏற்றத்தை நேற்று போராடி தக்கவைத்துள்ளோம்.  தற்போது இரண்டு விதமான மன நிலையில் மக்கள் இருக்கிறார்கள்

1. வேறு ஏதாவது நல்ல செய்தி கிடைக்காதா இன்னும் மேலே எடுத்து செல்லலாம்.

2.உயரத்தில் வைத்து இருப்போம் ஒரு மோசமான செய்தி வந்தால் அப்படியே தள்ளி விட்டு விட்டு தப்பிக்கலாம் உயரத்தில் இருந்து விழுந்தால் தானே அடி நல்லா   இருக்கும்.

நேற்று வெளியான பண வீக்க விகிதம் 12.34 %  அதற்கு முந்தைய வாரத்தில் வெளியானதை விட  0.10 % குறைவு. அதவது பணவீக்கம் நிலைபட்டுள்ளது அவ்வளவு தான் மற்றபடி சந்தோசபட பெரிதாக ஒன்றும் இல்லை.

கடந்த ஒரு வாரமாக தடுமாறிய அமெரிக்க சந்தை நேற்று எந்த ஒரு தடுமாற்றமும் (ஏற்ற இறக்கம்) இல்லாமல்  -344 புள்ளிகள் (2.99%) சரிவடைந்து உள்ளது.  இந்த சரிவை உறுதி படுத்தும் விதமாக கடந்த வெள்ளி கிழமை ஏற்பட்ட 2 பார் கீ ரிவர்சல் பற்றி திரு சந்தோஷ் சொல்லி இருந்தார். அருமையான கணிப்பு.

தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளும் அதே நிலையில் தான் உள்ளது. 

குறைந்து வரும் கச்சா எண்ணையின் விலையால் கொஞ்சம் நிம்மதி அடைந்த நம்மை போன்ற நாடுகளை மீண்டும் கலவரபடுத்த,  வரும் 9ம் தேதி OPEC (Organization of the Petroleum Exporting Countries) எனபடும் 13 கச்சா எண்ணை உற்பத்தி நாடுகளை உள்ளடக்கிய அமைப்பின் 149 வது கூட்டம் நடக்க உள்ளது எதற்காக என்றால் 100$ கீழ் விலை செல்வதை தடுப்பதற்கு உற்பத்தியை குறைப்பது பற்றி முடிவு  எடுக்க.

(ஆமா ஆமா 100$ கீழே சென்றால் கட்டுபடியாகது தொழிழே பண்ண முடியாது, என்று சவுதி மன்னர் சன் டிவியில் பேட்டி கொடுத்தால் எப்படி இருக்கும்)

அதே போல் அமெரிக்காவை அடுத்தடுத்து மிரட்டும் புயல் அறிவிப்புகள்.

மேலே சொன்ன தகவல்களை வழங்கிய திரு ஆர்.கே அவர்களுக்கு மிக்க நன்றி.

இப்படி பட்ட சூழ் நிலைகளில் இன்று துவங்கும் நமது சந்தையின் போக்கு எப்படி அமையும்,  இன்னும் ஏறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்கள் கூட அமெரிக்கா மற்றும் உலக பங்கு சந்தைகளின் சரிவுகளை கண்டு தங்களின் லாபத்தை உறுதி செய்ய முனைவார்கள்.

என்ன ஒரு சிறிய வேகத்தடை(20 புள்ளிகள் இடைவெளி 4490-4510) ஒன்று  மேலே உள்ளது.        

4420 உடை பட்டால் 4360 மற்றும் 4300 என்ற  நிலைகளுக்கு  செல்லலாம். அதற்கு  கீழே  4270ல்  உள்ள இடைவெளி காரணமாக பெரிய சப்போர்ட் எதுவும் இல்லை. 

என்னை திட்டுபவர்களுக்கு – சந்தை 4534 ஐ கடந்தால்  4785 வரை செல்லும். ( இப்படி எழுதிய பிறகாவது சரிவடைகிறதா என்று  பார்ப்போம்)  

4654 – 4634 – 45864532 – 44844423 – 4308 – 4299

Advertisements

10 responses to this post.

 1. Good Morning and thank you very much for your views sir.

  Daily I go for trading before seeing your views and thank you once again for that sir.

 2. Good Morning

 3. பணம் பண்ண அனைவரும் படிக்க வேண்டிய BLOG.

 4. verygood,thankyou sir

 5. super sai kalakurika..neega sonna mathiri ye enaiku downtrend than keep it up

 6. Dear Sai,

  Your information is really simply superb. You have covered all the informations. It is really great Sai.

  Please continue your service for all of us.

  Good Morning and Have a nice day,,,,,,,,

 7. THANK YOU SAI.

  KEEP IT UP.

 8. good morning sai, thanks for your views.

 9. The rally from 14000 -15000 level is a short lived one played by operators.Today the market has proved this one.

 10. dear sai
  the market is almost like a sine wave.very difficult to judge the trand.short or long in every movement i met loss only. because every time it touches the stop-loss point and then reversed. pls guid me . is it wrong using stop loss?
  whether i can go short in nifty at 4300 level?

  mugham

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: