சந்தையின் போக்கு 04.09.2008


இன்றைய சந்தையின் போக்கு எவ்வாறு இருக்கும்….

அதற்கு முன்பாக ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் – எனது   தனிபட்ட விருப்புகளை இங்கு திணிக்க வில்லை.   கடந்த ஒரு மாத காலமாக நான் திரும்ப திரும்ப சொல்லி வருவது, சந்தையில் ஏற்படும் ஏற்றம் நிரந்தரமானது இல்லை,   தற்காலிக மானது தான்.   தற்போதும் அந்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. 

தொடர்ந்து சரிவுகளை பற்றி எழுதி வருவதால் சில வட இந்திய அனலிஸ்ட் -களுக்கு இவர் Bullish  இவர்  Bearish என்ற பெயர் உள்ளது  போல்  தற்சமயம் என்னையும்  கரடி (Bearish)  என்று   சிலர்  சொல்வது பெருமையே.. 

நானும் போகிற போக்கில் எனக்கு தெரிந்த சில டெக்னிகல் விசயங்களை சொல்லி வருகிறேன்  ஆனால் ஒரு சிலர் தான் கூர்ந்து கவனித்துவருகிறார்கள்.  20/8/2008 மற்றும் 19/8/2008 ஆகிய இரு தினங்களில் 4525 வரை சந்தை செல்லலாம் (18.8 அன்று ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப) என்றும், அந்த இடைவெளி சரிவுகளின் வேகத்தை  தடுக்கும்  காரணியாக  அமையும் என்றும் சொல்லியிருந்தேன்.

அதேபோல் கடந்த 10 நாட்களில் நான் இங்கு எழுதி வந்துள்ள நிப்டி ஃப்யுச்சர்   நிலைகளை கவனித்தால்.  நான் நீல வண்ணத்தில் நடுவில் குறிப்பிடும் நிலைக்கும் முந்தைய நாள் நிலைக்கும் சம்மந்தம் இருக்காது ஆனாலும் அதை மைய மாக வைத்து தான் சந்தைகளின் நகர்வுகள் அமைந்திருக்கும்.

தவறுகளை சுட்டி காட்டினால் திறுத்தி கொள்ள தயாராக இருக்கிறேன்,  நல்ல கருத்துகளை  ஏற்று கொள்கிறேன். ஆனால் அநாகரிக மான முறையில் வரும் பின்னுட்  -டங்களை பிரசுரிக்க அதற்கு பதில் அளிக்க வேண்டிய அவ்சியம் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.  தங்களின் சுய விளம்பரத்திற்கு என் வீட்டு  சுவற்றில் போஸ்டர் ஒட்டும் அனானிகளின் அநாகரிகமான பின்னுட்டங்களை  நாகரிகம்  கருதி  வெளியிடவில்லை.  

ஆதரவு தரும் நல் உள்ளங்களுக்கு எனது நன்றி….. 

சரி நன்பர்களே இன்றைய சந்தையில் சரிவுகள் சிறிய அளவில் இருக்கும்.

சந்தையில் சூதாடி  சித்தர்களின்  கை ஓங்கியுள்ளது கடந்த 3  தினங்களில்  நன்றாக  தெரிகிறது.    இதை  யானை(பெரிய சரிவு) வரும் பின்னே மணி(சிறிய ஏற்றம்) ஓசை வரும் முன்னே  என்ற அளவில் தான் பார்க்கிறேன். 

4650 ஐ கடந்து 4670 களில் நிலை கொள்ளாத வரை  ஏற்றம் நிரந்தரம் இல்லை எது எப்படியோ தின வர்த்தகம் செய்ய மிக அருமையான நிலை யில் சந்தை உள்ளது.  கடந்த  3 மாதங்களில் சந்தையின் நகர்வு 4900-3800 க்கு இடையில் தான் குறிப்பாக 4600-4000 க்கு இடையில் தான அமைந்துள்ளது. 

இன்றைய சந்தையின் நகர்வுகளை தீர்மானிக்க போகும் காரணிகள்.

1.அணு ஒப்பந்தத்தை பற்றிய சர்ச்சை.

2. நாளின் மத்தியில் கருத்து கணிப்பு என்ற பெயரில் வெளிவரும் பண் வீக்க அளவின் எதிர்பார்ப்பு/ வதந்தி.

3. கடந்த ஒரு 2/3 தினங்களாய்  அமெரிக்க மற்றும் உலக பங்கு சந்தைகளில் கானப்படும்  ஒரு வித தேக்க நிலை.

டெக்னிகலும் சரிவுகளுக்கு ஏற்றவாறு ஒரு மதில் மேல் பூனையாக உள்ளது.  திங்கள் அன்று குறிபிட்ட ஹெட் அன்ட் ஷோல்டரும் காலாவதியாக வில்லை அப்படியே உள்ளது 4435 களில் இல்லாமல் போகும் என்று சொன்னது தவறு. தற்போது பார்த்தாலும்  இரண்டு  பக்கமும் ஒரே மாதிரியான நிலைகள் கானப்படுகிறது.

 அதே போல் Gap – இடைவெளி என்று பார்த்தால் 4270 நிலையில் வெள்ளியன்று ஏற்பட்டது தான் உள்ளது. அதற்கு மேல் எதுவும் இல்லை. 

4650 க்கு முன்பாக 4200-150 என்ற நிலைகளை எதிர்பார்க்கிறேன்.

இன்றைய நிப்டி ஃப்யூச்சர் நிலைகள்

4504 – 4446 – 4415 -43984363 – 4340 4307 – 4253 – 4246 – 4233

Advertisements

9 responses to this post.

 1. Good Morning and thank you very much for your views sir.

 2. சாய் தங்கள் பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.

 3. thx for your info keep it us sai

 4. வணக்கம் சாய்.நாளுக்கு நாள் blog மெருகேறி வருகிறது. வெறும் சந்தை நிலைகள் மட்டுமல்லாமல் அமெரிக்கா அரசியலிலிருந்து இந்தியா அரசியல் வரை ஆராய்ந்து விளக்கமளிப்பது மிக அருமை. மிக்க நன்றி.

 5. Dear Sai,,

  Thank you very much for your article about the market.

  We know about your calls Sai. You have said that when nifty trading 3900 levels, nifty will go up 4500 levels to fill the gap.

  So please avoid the silly comments and pls provide this article as for us.

  Good Morning and Have a nice day……..

 6. சில குள்ளநரி ஊளை இடலாம் கவலை விடுங்கள்… சாய் உங்கள் சேவை மற்றும் வலைப்பதிவு இன்றைய காலகட்டத்தில் மிக அத்தியாவசியமானது ஆகவே தொடரட்டும் உங்கள் சேவை

  நன்றி… நன்றி… நன்றி…

 7. GOOD ARTICLE.THANKS A LOT TO KNOW ABOUT WORLD MOVEMENTS.

 8. good morning sai, thank you very much your informations. don’t worry about somebody’s comments. we need your views. please kindly continue.

 9. சாய் சார்,

  யாரோ என்னவோ கூறினாலும்
  அதை பொருட்படுத்தி முக்கியத்துவம் அளிக்காமல்
  உங்கள் பணியை தொடரவும்.

  THANK YOU FOR YOUR INFORMATION.

  KEEP IT UP.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: