இந்திய அணு ஒப்பந்தத்தில்- அமெரிக்கா போட்ட அணுகுண்டு


இது தான் சந்தை எதிர் பார்த்த மோசமான செய்தியா!  இப்படி ஒரு அணுகுண்டு வெடிக்கப்போவது தெரிந்து தான் சூதாடி சித்தர்கள் நமது சந்தையை கடந்த வெள்ளிகிழமையில் இருந்து ஆட்டி படைக்க ஆரம்பித்தார்களா?

இதற்கான பதில் இன்று கிடைக்கும்.

உலக நாடுகளை ஆசை காட்டி மோசம் செய்யும் அமெரிக்காவை பற்றிய ஒரு செய்தியை அதுவும் அவர்கள் நாட்டில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல பத்திரிக்கை வெளியுட்டுள்ளது.  குறிப்பாக “இந்தியாவை தவறான பாதைக்கு  (தவறாக வழிநடத்தும்) அழைத்து செல்லும் திருவாளர் புஷ் என்று குறிபிட்டுள்ளது. 

செய்தியின் சுருக்கம் பின்வருமாறு.

The Bush administration has told the US Congress that Washington will terminate nuclear trade with India if New Delhi conducts a nuclear test, and the same assurance should be written into any Nuclear Suppliers Group (NSG) green signal to India, Washington’s non-proliferation lobby asserted on Tuesday.

அதவது டாம் லான்டோஷ் (Tom Lantos)  தலைமையிலான அமெரிக்க பாரளுமன்ற கமிட்டி எழுப்பிய 45 தொழில் நுட்ப கேள்விகளுக்கு பதிலாக திருவாளர் புஷ் அவர்களின் நிர்வாகம் 26 பக்க ரகசிய கடிதத்தை எழுதியுள்ளது. அதில் தான் இந்தியா இனிமேல் அணு ஆய்த (போக்ரான் போன்ற) சோதனை மேற்கொள்ளக்கூடாது/ மேற்கொள்ளவும் முடியாது அவ்வாறு மேற்கொண்டால் உடனடியாக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்,   மூலப்பொருட்கள்  வழங்குவது நிறுத்தபடும் என்று தெளிவாக குறிப்பிடபட்டுள்ளது.

இதில் இன்னொரு விசயம் – இதை பற்றி ஏற்கனவே இந்திய அரசுக்கு தெரியும் என்று அமெரிக்க வெளியுறவு அதிகாரி தெரிவித்துள்ள கருத்து.

வெறும் வாயை மென்று வந்த எதிர்கட்சிகளுக்கு விநாயகர் சதுர்த்தி பிரசாதமாக அவல் கிடைத்துள்ளது.  அடுத்து வரும் நாட்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதற்கு பிறகும் – ‘We have right to test, US has right to react’  என்று எங்கள் மீசையில் மண்ணு ஒட்டவில்லை என்று மறுபளிக்கும்  இந்திய ஆட்சியாளர்களின் போக்கை நினைத்து சிரிப்பு தான் வருகிறது.

மேலும் விரிவான செய்திகளுக்கு ஆங்கில நாளிதழ் Times of India  இனைப்புகள்

 • ‘We have right to test, US has right to react’
 • US lobby uses “Bush secret letter” to torpedo N-deal
 • US stand may not leave India room for compromise
 • Bush leaves enough wiggle room in Nuke deal
 • Nothing new in letter; we kept India informed: US
 • Special: Indo-US nuclear deal
 • Advertisements

  6 responses to this post.

  1. திரு சாய் அவர்களுக்கு,

   இனிய காலை வணக்கம்.

   தங்களின் இந்த கட்டுரை மிகவும் பிரமாதம் சாய். நேற்று மாலை இந்த செய்தியை டிவியில் பார்த்தபொழுது அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

   ஆனால் தங்கள் கட்டுரையை இப்பொழுது படித்த பின்புதான் அந்த செய்தியின் “seriousness” தெரிகிறது. மிகவும் அழகாய் கொடுத்துள்ளீர்கள் சாய். கூடவே இந்த செய்தி பற்றிய விசயங்களை மேலும் தெரிந்துகொள்ள தாங்கள் வழங்கியுள்ள இணைப்புகள் மிகவும் அருமை.

   இப்படி ஒரு அருமையான கட்டுரையை தொகுத்து எங்களுக்கு வழங்கிய தங்களுக்கு ஒரு சல்யுட்.

   தங்களது இந்த பணி என்றும் சிறப்புடன் தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

  2. Dear Sai,

   Good Morning…

   Thank u very much for your details.
   Ur update daily trade information is very useful to me. Keep it up…..

  3. ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் ‘ என்று முன்னோர்கள் காரணத்துடன் தான் கூறியுள்ளார்கள். நேற்று இரவு செய்திகளில் இந்த வரிகளை பார்த்து மண்டையை உடைதுக்கொண்டிருந்தேன். ஆனால் அதன் பொருள் என்னவென்று புரியவில்லை.

   ‘ BUSH SECRET LETTER’ , BUSH GOV MISLEAD INDIA’ என்ற செய்திகள் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது, ஒரு வணிகனாக இல்லாமல் ஒரு இந்தியனாக இந்த சேதியின் முக்கியத்துவம் என்ன என்று ஒரு நடுளிளையாலரிடமிருந்து தெரிந்து கொள்ள நினைத்து உங்களை தொடர்பு கொள்ள எண்ணினேன் ஆனால் அதற்கு வேலை கொடுக்காமல் தாங்களே பிரசுரிதுவிட்டேர்கள்.

   மிகவும் நன்றி சாய் சார். தங்களது நிப்டி நிலைகள் பற்றி சொல்வதற்கு எனக்கு வயதும் இல்லை அனுபவமும் இல்லை. நான் நிப்டி நிலைகளை காண கணினியை உயிர் ஊட்டியவுடன் எனது கண்ணில் பட்ட நிலை 4446.

  4. thank you very much mr sai. keep it up.

  5. வணிகச் செய்திகள் மட்டுமன்றி,
   மக்களுக்கு தேவையான நாட்டு நடப்பு செய்திகளையும்,
   அவர்கள் புரிந்து கொள்வதற்கு ஏற்றவாறு எளிய தமிழில்
   தொகுத்து வழங்கிய
   சாய் சார் அவர்களுக்கு மிக்க நன்றி

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  w

  Connecting to %s

  %d bloggers like this: