சந்தையின் போக்கு 01.09.2008


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,

மந்தமாக துவங்கிய ஆகஸ்ட் மாதம், தனது இறுதி நாளில் மிகுந்த பரபரப்புடன் முடிந்துள்ளது… அதை பார்த்து சந்தோச படுவதா… வருத்த படுவதா என்ற குழப்பம் காணப்படுகிறது.

வெள்ளியன்று சொன்னது போல் அண்ணன் பாம்பாக சீறினார்… ஆனால் யாரும் எதிர் பாரதவிதமாக அதை தக்கவைத்து கொண்டது ஆச்சரியம். நான் எதிர்பாத்தது 4320-4290 களில் அன்று சந்தை முடிவடையும் என்று. அவ்வாறாகமல் 4310 களில் இருந்து மக்கள் “சென்டிமென்டல் டிரைவ்” வாக மேலே இழுத்து சென்றார்கள். அப்போது கூட 4360 உடைபடாது என்று சொன்னேன். 4360 ஐ உடைக்க 3 / 4 முறை முயற்சித்து 3.20க்கு தான் 4362/65 அடைந்தது. இறுதியில் 4355 இல் முடிவடைந்தது. இந்த வேகம் ஏன் என்ற கேள்விக்கு பதில் யாரிடமும் இல்லை. பண வீக்க விகிதம் குறைந்தது…. காரணம் இல்லை. GDP பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. இதில் இன்னொரு ஆச்சரியமான விசயம் – பொதுவாக வெள்ளிகிழமைகளில் 2.30-3.30 மணிக்குள் Safe Players களால் நடை பெறும் செல்லிங் இல்லாதது.  ஏன்? சந்தை மேலும் மேலே செல்லும் என்ற எதிர்பார்ப்பா ?

அன்மை காலமாய் சந்தை சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்ற அளவில் தான் சென்று கொண்டுள்ளது.

டெக்னிகல் என்ன சொல்கிறது…..

நிப்டியின் 5 மினிட் சார்ட்டில் வெள்ளியன்று ஒரு டபுள் டாப் உருவானதை விளக்கும் படம்.

 

தினசரி சார்ட்டில் ஒரு ஹெட் அன்ட் ஷோல்டரை பார்க்கலாம்…   இது இன்னும் சந்தை பலவீனமாக இருப்பதை தான் காட்டுகிறது எம்.ஏ.சி.டி மற்றும் சில டெக்னிகல் இன்டிகேட்டர்ஸும் அதை உறுதி செய்கின்றன.  தற்சமயம் நிப்டியின் முக்கியமான சப்போர்ட் 4190/80. அதுவே இந்த ஹெட் அன்ட் ஷோல்டரின் நெக் லைன் (கழுத்து) என்று சொல்லலாம்.  அந்த கழுத்து (4180) அறுபட்டால் / சந்தை நழுவினால் 3900 வரை செல்லலாம்.

 இதன் எதிர் பக்கம் நிப்டி 4430/40 நிலைகளை கடந்து நிலை கொண்டால் இந்த ஹெட் அன்ட் ஷோல்டர் காலாவதியாகிவிடும், அடுத்த நிலைகளாக 4525/4650 வரை செல்ல வாய்ப்பு உருவாகும்.

நாம் ஏற்கனவே பார்த்த 2 பார் கீ ரிவர்சல் அமைப்பின்  தொடர்ச்சி சென்ற வாரம் எதிர் பார்த்தது போலவே அமைந்தது, ஆனால் வாரத்தின் முடிவு வாரத்துவக்கத்தின் மேல் முடிந்தது குழப்பம் அடைய செய்துள்ளது.  (வெள்ளி அன்று ஏற்பட்ட அதிக ஏற்றத்தின் காரணமாக)

இந்த வாரத்தில் கவனிக்க வேண்டிய நிப்டியின் நிலைகள்  

4635 – 4517 – 4438 – 4320 – 4241 – 4123 – 4044
 
இந்த மாதத்தில் கவனிக்க வேண்டிய நிப்டியின் நிலைகள்
 
5020 – 4824 – 4592 – 4394 – 4164 -3968 – 3736  

இன்றைய சந்தை எப்படி இருக்கும் என்று பார்ப்போம், இது வரை டெக்னிகலில் என்ன நிலை என்று பார்த்தோம், இதையே மாற்றும் சக்திகளான புறக்காரணிகள் என்ன சொல்கின்றன. 

நம்ம பங்காளி  வெள்ளி யன்று 170 புள்ளிகள் சரிவடைந்துள்ளார்.

கூடவே ஒபாமா ஐடி கம்பனிகளின் வயிற்றில் புளியை வார்த்தது. (தனி கட்டுரை கீழே உள்ளது).

தற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகளும் சரிவில் உள்ளது.

தங்கம் / கச்சா எண்ணை மார்கெட்டில் பெரிய மாற்றம் இல்லை. 

இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது நம்ம அண்ணன் தடுமாறுவார், கேப் டவுன்  ஆக துவங்குவார் என்றே எதிர் பார்க்கிறேன்.  இல்லை மந்தமாக துவங்கி நாள் நெடுகில் தெற்கு  நோக்கி  செல்வார்.

4435 – 4180  இரண்டும் அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் துருப்பு சீட்டுகள்.

இன்றைய நிப்டி ஃப்யூச்சரின் நிலைகள்

4408 – 4380 – 4322 – 4272 4268 – 4250 4202 – 4179 – 4167 – 4154
 

அனைத்து NSE பங்குகளுக்கான(1250) (PIVOT) பிவோட் லெவெல்களை PDF தொகுப்பாக கொடுத்துள்ளேன்.  விருப்பமுள்ளவர்கள் பக்கத்தில் உள்ள My Files -ல் இருந்து டவுன் லோடு செய்யலாம். (File Name – NSEPIVOTLEVEL01092008). 

11 responses to this post.

 1. Once again grate post. Keep it up and keep going.

  Few days ago your are requesting some help on excel, Please send me your excel file with requirement details. I will try to help you out.

 2. Good morning and thank you very much for your views sir.

 3. திரு சாய் , வணக்கம் தாங்கள் கடந்த வார வியாழக்கிழமை வரைவுள்ள ஒரு மணி நேர சார்ட் கவன்னியுங்கள் அதில் MACD POSSITIVE DIVERGENCE வுருவகி இருப்பதை கவனித்தால் தங்களின் வெள்ளிக்கிழமை (பாயிண்ட் வுயர்வுக்கு ) விடை கிடைக்கும் என நம்புகிறேன். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை DOW EOD சார்ட் 2 பார் கீ ரிவர்சல் பேட்டர்ன் வுருவாகி இருப்பதை கவனிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். ஒபாமா அவர்களின் கருத்தை தமிழில் மிக தெளிவாக தாங்கள் விளக்கம் தந்தது மிக மிக அருமை . தங்களின் பனி தொடர, இறைவனும் மகிழ்வான். (மக்கள் சேவையே மகேசன் சேவை)வாழ்த்துக்கள் .நன்றி.

 4. Dear Sai,

  Good morning and thank you very much for your views and postings….

 5. Dear Sai,

  Your article is really simply superb. You have done a great job for all of us Sai.

  Your article covers all the matters like US indices and gold and crude oil. It is very useful for us.

  Your chart updation and the explain of it is wonderful. and the Obama’s talks you have uploaded by tamil is also superb.

  Hearty thanks for you Sai.

  Good Morning and Have a nice day,,,,,,,,,

 6. sai = charts

  u hav proven once again sir. ethume paarka =ma mkt trading ku vantha intha mathiri neenga kudukum pothu vera enna venum. very nice..

  tnx sir

 7. good morning sai sir. your views are very excellent. please keep it up. my hearty congragelations.

 8. திரு சந்தோஷ்,,

  தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.. நிப்டியில் 1 மணி சார்ட் பார்த்தேன் சென்ற வாரமே,… அதனால் தான் வெள்ளி அன்று பாம்பின் சீற்றம் என்றும் கேப் டவுன் என்றும் எழுதினேன். இருந்தாலும் 146 பாய்ண்ட்கள் என்பது கொஞ்சம் அதிகம்.

  டவ்வில் – 2 பார் கீ ரிவர்சல் பற்றிய தங்களின் தகவல்களுக்கு நன்றி – நான் கவனிக்கவில்லை. இன்று மாலை பார்க்கிறேன்.

  தொடர்ந்து தங்களின் கருத்துகளை தெர்ரிவிக்கவும்….

  தங்களுடைய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி…..

  வாழ்க வளமுடன் …. நலமுடன்….

 9. sai sir,

  thanks for your information.

 10. thx for your info sai ..really useful for us

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: