Archive for செப்ரெம்பர், 2008

இன்றைய இந்தியாவும் அமெரிக்காவும்.. சிரிக்க சிந்திக்க

நாம் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் எளிமையாக இருப்போம். நம் காந்தி தாத்தாவை போல்

ஆனால் ஆடம்பரத்தில் திளைத்த அமெரிக்கவின் இன்றைய நிலை…

இந்திய பங்கு சந்தையின் போக்கு 30.09.2008

சோதனை தீர வில்லை சொல்லி அழ யாருமில்லை… இப்படிதான் உலக பங்கு சந்தைகள் அனைத்தும் பாடிகொண்டிருக்கின்றன…  கூடவே மீடியா வேற புள்ளி விவரம் என்ற பெயரில் அலறுகின்றன..  சன் நீயூஸ்-ம் ஏனைய செய்தி தாள்களும் அலறுவதை பார்த்துவிட்டு, நம்ம வீட்டுக்கே பலர் நலம் விசாரிக்க வந்துவிட்டார்கள்…  பங்கு சந்தையில் அடியாமே.. உன் வீட்டு காரர் எப்படி இருக்கார்.. பார்த்தும்மா அந்த மனுசனுக்கு புத்தி மதி சொல்லி, காசு சேர்த்து பொழைக்கிற வழியை பாரு என்று…  இன்று குடிகாரனை கூட ஏற்று கொள்வார்கள் போல பங்கு வணிகர்களை மூணு சீட்டு சூதாடி சித்தர்களை போலத்தான் பார்க்கிறார்கள்.

அமெரிக்க அரசு அவசர கோலத்தில் கொண்டுவந்த மசோதாவை,  அவர்களின் பாராளுமன்றம் உறுப்பினர்களும்  பொறுப்பின்றி 225-205 என்ற ஓட்டில் தோற்கடித்து விட்டார்கள்.  அவர்களின் தனிபட்ட பிரச்சினைக்கு இன்று உலக நாடுகள் அனைத்தும் ஆட்டம் கண்டுள்ளன.   இருந்தும் அவர்களின் செயல் பொறுப்பில்லாமல் அமைந்தது.  இன்று என்ன புதிய திட்டம் கொண்டு வருகிறார்கள் என்று பார்ப்போம். அதிபரின் தனிபட்ட அதிகாரம் பயன் படுத்தபடும் போல் தெரிகிறது….  

இன்று சந்தையில் அது நடக்கும் இது நடக்கும் என்று சொல்ல விரும்ப வில்லை, நானும் வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.  இந்த அளவு பயம் வேண்டாம் இன்னும் சில நாட்கள் உறுதியான மனதோடு காத்திருப்பது நல்ல பயனை தரும். அதை விடுத்து  அவசரபட்டு நஷ்டத்துடன் வெளியேறினால் கிராமங்களில் சொல்லும் பழமொழி – காத்திருந்தவன் ……….  என்ற நிலைக்கு தள்ளபடுவோம்.  இன்று அரசிடம் இருந்து சில அறிக்கை / அறிவிப்புகள் ஏதாவது வெளி வரலாம்.  

இன்றைய நிலையில் நான் அடிக்கடி நண்பர்களிடம் கேட்கும் கேள்வி தான் ஆறுதலாக இருக்கும்….

தினசரி 100 புள்ளிகள் குறைந்தால் – இன்னும் 38 நாடகளில் சந்தையை மூடி விடுவார்களா??

3800 என்ற அஸ்திவாரத்தை அசைத்து பார்த்து விட்டோம்…  இருந்தும் அக்டோபர் மாதத்தின் உயர் நிலையாக குறைந்த பட்சம் 4250-4300 இருக்கும்…. இது என்னோட நிலைப்பாடு.  3600 க்கே சென்றாலும் அடிபட்ட பாம்பின் சீற்றம் போல் வேகமெடுக்கும்.

முதலீடு செய்ய விரும்பும் நண்பர்களே ….   ஆடி தள்ளுபடி ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம் என்ற சலுகை விலையில் அனைத்து பங்குகளும் கிடைகின்றன…  இந்த பங்குகளை வாங்கலாம்.

RCOM, ICICIBANK, POWERGRID, UNITECH,  ALOKTEXTILES,  TATA STEEL, RPOWER, RPL ETCC…

================================================================

நண்பர்களே,

தங்களின் வேண்டு கோளுக்கு இணங்க சில செய்திகளை எடுத்து விட்டேன்…. அதே போல் இது போன்ற விமர்சனங்கள் பற்றிய செய்திகளை இனிமேல் குறிப்பிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்…  தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி..  

சந்தையின் போக்கு 29.09.2008

வெள்ளி கிழமை நமது எதிர்பார்ப்பிற்கு மாறாக அண்ணனின் போக்கு அமைந்தது… அதே நேரம் 4100க்கு கிழே சந்தை நழுவினால் மேலும் சரிவடையும், என்று சொல்லி வந்தது போலவே அமைந்தது. காரணம் திவாலான வங்கிகளை மீண்டும் திவான்களாக மாற்ற அமெரிக்க் அரசின் யோசனையான 700$ பில்லியன் பெயில் அவுட் பேக்கேஜ் பற்றிய சந்தேகம் எழுந்ததால் ஏற்பட்ட பதட்டம் உலக பங்கு சந்தைகள் அனைத்திலும் சரிவுகளை ஏற்படுத்தியது…  அமெரிக்காவை தவிர.

உணர்ச்சி வசப்படுவதில் பங்கு வணிகர்களிடம் பல குணசித்திர நடிகர்களே தோற்று போவார்கள் போல் தெரிகிறது.

3800 இல் இருந்து 4300 நிலைக்கு 3/4  வர்த்தக தினங்களில் எடுத்து சென்றோம்.. அதி வேகம் ஆபத்தானது என்று உணர்ந்ததால் அங்கிருந்து 3/4 நாட்களில் 3980 க்கு எடுத்து வந்து விட்டோம்..

செய்திகளின் அடிப்படையில் சந்தையை வழி நடத்துகிறோம்…  இது நல்லது அல்ல. 

நல்ல வேலை சந்தை மேலும் சரிவடையாமல் இருக்க (தற்காலிகமாக) 2 காரணங்கள் கிடைத்துள்ளன.

1. அமெரிகக பாரளு மன்றத்தில் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு கிடைத்துள்ள அனுமதி. இந்த செய்தி நமது சந்தையை உற்சாகபடுத்தும்

2. $700 பில்லியன் பெயில் அவுட் மசோதாவிற்கு கிடைத்த அனுமதி. (இத்திட்டம் எப்படி செயல் பட உள்ளது,  எந்த அளவு பயனைதரும், இந்த மதிப்பீடு போதுமானதா,  மேலும் திவால் வரிசையில் காத்திருக்கும்  நிறுவனங்களின் கதி இப்படி பட்ட பல கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்)  ஆனாலும் இப்படி ஒரு முயற்சி ஆரம்பம் ஆவதில் கிடைக்கும் சின்ன சந்தோசம் நம்பிக்கையை தக்க வைக்க உதவும்.

சந்தை இன்று கேப் அப் ஆக துவங்கும்,  பெயில் அவுட்டிற்கு – ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இங்கும் உயர்வுகள் அமையும்.

 The market prices are results of decisions by buyers and sellers who are primarily influenced by human emotions rather than rational thinking.

These human emotions fall into two broad categories: FEAR and GREED.

When the majority of stock market participants are fearful, there are more sellers than buyers and the prices fall down. This is the basis of a bear market.

 

When the majority of stock market participants are greedy, there are more buyers than sellers and the prices go up. This is the basis of a bull market.

 டெக்னிகலின் அடிப்படையில் இன்னும் சரிவுகள் மீதமிருக்கின்றன ஆனால் இன்று  டெக்னிகலின் போக்கை மாற்றும் விதமாக டிரேடர்களின் மன நிலை அமையும்.. 4250-4300 க்கு மேல் சில தினங்கள் சந்தை நிலை பட்டால் டெக்னிகலின் போக்கும் மாறும்.

இன்றைய நிப்டி ஃப்யூச்சரின் நிலைகள்.

 

4290 – 4255 – 4190 – 41724150 – 41204080 – 4045 – 4030 – 4010

 

நண்பர்  மோகன்ராஜ்,  தாங்கள் கூறிய வெப்சைட் ஏற்கனவே தெரியும்,  ஆனால் அவர்களை பற்றிய தவறான தகவல்கள் / வதந்திகள் உள்ளதால் நான் தவிர்த்து விடுவேன்.  சில நாட்களுக்கு முன்பு தாங்கள் மெயிலில் அனுப்பிய http://mudraa.com/  ஒரு பயனுள்ள தளமாகும், நானும் கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்து வருகிறேன்.  தகவல்களுக்கு மிக்க நன்றி.

$700 பில்லியன் அனுமதி

நலிவடைந்த அமெரிக்க வங்கிகளை காப்பற்றும் முயற்சியாக $ 700 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதாவிற்கு அமெரிக்க பாரளுமன்றம் அனுமதி  அளித்துள்ளது…..

திங்கள் அன்று நமது சந்தை, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் இந்த Bailout மசோதா ஆகியவற்றிற்கு கிடைத்துள்ள ஒப்புதல் காரணமாக காளையின் ஆதிக்கத்தில் இருக்கும்..

உலக பங்குசந்தைகள் அனைத்தும் மிகுந்த எழுச்சியுடன் காணப்படும்….  thanks to bail out deal.

அமெரிக்க பாரளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றது இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம்

 

இன்று அதிகாலை இந்திய அணுசக்தி ஒப்பந்ததிற்கு அமெரிக்க பாரளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.  ஆதரவாக 298 ஓட்டுகளும் எதிராக 117 ஓட்டுகளும் பதிவாகியது.  இதை அடுத்து செனட் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது.  வரும் அக்டோபர் மாதம் முதல் வாரம் இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க வெளியுறவு செயலர் (அமைச்சர்) கண்டலீசா ரைஸ் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகளும் இந்த ஒப்பந்தத்தில்  கையெழுத்திடுவார்கள் என்று தெரிகிறது.

சந்தையின் போக்கு 26.09.2008

அனைவருக்கும் காலை வணக்கம்,

இன்று காலை 8 மணிக்கே இன்றைய பதிவினை வலையேற்றியும் 9.40 வரை Publish ஆக வில்லை, கரணம் தெரிய வில்லை.  

நன்றி.

சாய்கணேஷ்

வாரத்தின் இறுதி நாள்…  சந்தையில் ஆடு புலி ஆட்டம் போன்று,  கரடி காளை ஆட்டம் தான் தொடர்கிறது.. ஆறுதலனா விசயம் கடந்த ஜுன் மாத இறுதியில் இருந்து சந்தை 3900 க்கும் 4550 க்கும் இடையில் தான் ஊசலாடுகிறது.. பெரிய சாதக பாதகங்கள் எதுவும் இல்லை

திறமை உள்ள தின வர்த்தகர்கள் இந்த கால கட்டத்தில் நன்றாக பலனடைந்துள்ளார்கள்.

பங்காளி அமெரிக்கா உலகத்துக்கே அறிவுறை சொன்னது – லாபத்தில் இயங்கும் அனைத்து பொதுதுறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வாருங்கள் என்று ஆனால் கடந்த 6 மாதகாலமாக அவர்கள் நஷ்டமடையும் தனியார் நிறுவனங்களை அரசுடைமையாக்கி வருகிறார்கள். எப்போதும் தவறான ஒரு முன் உதராணங்களை  தொடங்கி வைப்பதில்  அவர்களை மிஞ்ச ஆள் இல்லை…

நெட்டில் படித்த செய்தி – கடந்த மார்ச் மாதம் BEAR STEAMS என்ற நிதி நிறுவனம் திவாலன போது  35 பில்லியன் டாலருக்கு அந்த அந்த நிறுவன்த்தை அரசுடமையாக்கியது தவறு என்பது அமெரிக்க பொருளாதார நிபுனர்களின் கருத்து.. அதை அடுத்து  அண்மையில் Fanni and Freddie  பிரச்சினை வெடிப்பதற்கு முன்பே அமெரிக்கா அரசு அரசுடமையாக்கியது.

இதை தொடர்ந்து பல முன்னனி நிறுவனங்களும் திவால் அறிவித்தால் அரசு காப்பாத்தும் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள் அதே எதிர்பார்ப்பில்தான் லேஹ்மன் பிரதர்ஸும் திவால் நிலை அறிவித்தது, ஆனால்  அந்நிறுவனத்தை காப்பாற்ற யு எஸ் அரசு முன் வரவில்லை.  அடுத்து ஏஐஜி – அதையும் வாங்கி போட்டது,  அவள் ஒரு தொடர் கதை போல் இதுவும் தொடரும்….  இன்னும் பல நிறுவனங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள்…  1 மாதத்திற்கு முன்பு நாம் எழுதிய கிரெடிட் கார்டு பிரச்சினையிலும் பல வங்கிகளுக்கு சங்குதான்.

உலகின் தலை சிறந்த லாபகரமான பொதுதுறை நிறுவனங்களுக்கு சொந்த காரர்கள் நாம்..  உலகின் தலை சிறந்த திவால் நிறுவனங்களுக்கு சொந்த காரர்கள் அமெரிக்கா.

இதற்கு அடிப்படை காரணம் சேமிப்பு பழக்கம் இல்லாதது தான்…   நமது நாட்டில் இன்னும் நிறைய வீடுகளில் பெண்கள் அடுக்களை டப்பாக்களில் ஆண்களுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருக்கும் சிறு பணம் தான் பலருடைய அவசர தேவைக்கு  உதவி வருகிறது என்பதை மனசாட்சி உள்ள அனைவரும் ஒத்து கொள்ள கூடிய விசயம்.

நம்மிடம் சேமிக்கும் பழக்கம் குறைந்து விட்டதே ஒழிய மறைய வில்லை…  கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்து வருமானத்திற்கு ஏற்ற நிறைவான வாழ்க்கை வாழ முயற்சிப்போம்…  அதற்கு இறைவனும் அருள் புரியட்டும்…  30-40 வயதில் இருக்கும் நாம்,

10-15 ஆண்டுகளுக்கு முன்பாக தந்தையரின் சொற்ப வருமானத்தில் வாழ்ந்த சந்தோசமான வாழ்க்கை, அவர்களின் வருமானத்தை விட 10 மடங்கு மேல் சம்பாதிக்கும் இன்றைய நிலையில் இருக்கிறதா என்றால் இல்லை… காரணம் இருக்கிரதை விட்டு பறக்கிரதை பிடிக்க ஆசைபடும் வாழ்க்கை முறை EMI / மாத தவனை கடன் என்ற மாய வலையில் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டிருக்கிறோம்.   1 லட்சம் சம்பளம் – கார் வீடு கிரெடிட் கார்டு என்று அனைத்து மாத தவனைகளும் போக 5ஆயிரம் தான்ட மாப்ள மிஞ்சுது என்று புலம்பும் நண்பர்கள் அனைவருக்கும் உள்ளனர்…

மன்னிக்கவும் – அமெரிக்காவை பற்றி எழுத ஆரம்பித்து அது சீரியஸனான விசயத்துக்கு வந்து  விட்டது..

இதில் நானும் அடக்கமே திருந்த வேண்டிய லிஸ்டில் முதல் இடம் எனக்கு. இதை ஏன் சொல்கிறேன் என்றால் என்னை சீண்டி பார்க்கும் அனானி நீ என்ன யோக்கியமான்னு கேட்டு மொட்டை கடுதாசி (பின்னுட்டம்) போட்டு விடுவார்.

இன்றைய சந்தை –  சிறிய அளவில் ஏற்றமடைய வாய்ப்புகள் இருக்கிறது…  4100இல் செல்லிங் பிரஸர் இருந்தும் சந்தை தக்கவைத்து கொண்டது நல்ல விசயம்

நிப்டி ஃப்யூச்சரின் நிலைகள்

4345 – 4304 – 4254 –  4214 – 4194 4158 – 4116 – 4102

சந்தையின் போக்கு – 25.09.2008

சந்தை மதில் மேல் பூனை நிலையில் தான்  தொடருகிறது.. நேற்றைய கொந்தளிப்புகள் (மேடு பள்ளங்கள்) இன்றும் தொடரும்…

அடுத்தடுத்து வரும் செய்திகளின் அடிப்படையில் தான் சந்தையின் ஏற்றம் மற்றும் மற்றும் சரிவுகள் உறுதி செய்யபடும்…

ஏற்றங்களுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது ஆனால் அதற்கு 4300 இல் நிலை பட வேண்டும்,

4050 க்கு கிழே செல்லும் பட்சத்தில் 3800 என்ற சப்போர்ட் வலுவிலக்கும் வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை…   அதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது.  அது மாதிரியான நிலை ஏற்பட்டால் ஷார்ட் செல்லிங் (விற்று வாங்குதல்) டிரேடிங் தடை செய்யபடலாம் என்ற செய்தி/வதந்தி உள்ளது. (சந்தையை காப்பாற்றும் முயற்சியாக. ) அதனால் சரிவுகளை பற்றி அதிகம் கவலை வேண்டாம்.

முடிவு என்னாவாக இருக்கும் என்று  தெரியாத ஒரு நிகழ்வின் ரிசல்ட் என்னவாக இருந்தாலும் அது சந்தையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.   ஆனால் அணுசக்தி ஒப்பந்தம் என்பது உறுதி என்று அனைவருக்கும் தெரியும்.  எதிர்த்தவர்கள் கூட இனி அதை பேசுவதில் அர்த்தமில்லை என்ற மன நிலைக்கு வந்து விட்ட சூழ்நிலையில் கையெழுத்து ஆகும் தினத்தில் பெரிதாக ஒரு ஏற்றம், பரபரப்பு  இருக்கும் என்று சொல்வதை நான் ஏற்க வில்லை.

இன்றைய தினம் 4220 மற்றும் 4100 ஆகிய  இரண்டு நிலைகளும்  மிக முக்கியமானதாக அமையும்…  அடுத்த கட்ட நகர்வுகளை உறுதி செய்யும்.

இன்றைய நிப்டி ஃப்யூச்சரின் நிலைகள்…

4365 – 4327 – 4265 – 42154206 – 4185 4131 – 4102 – 4092 – 4071

ரிலையன்ஸ் கம்யூனிகேசன் பங்கினை தற்போதை விலையில்(375) குறுகிய கால லாப நோக்கில் வாங்கலாம்.

தின வர்த்தகத்தில் ஈடுபடும் புதியவர்கள் பகல் 12.00 மணிக்கு பிறகு வர்த்தகத்தில் ஈடுபடுவது நலம். அல்லது 11.30 க்கு முன்பாக தங்களது லாபங்களை உறுதி செய்வது நன்றாக இருக்கும். காரணம்

அக்டோபர் 8ம் தேதிவரை சூரியனின் சுற்றுபாதையில் ஏற்படும் மாற்றம் காரணமாக 11.25 இல் இருந்து 12.10 வரை சந்தையின் வேலைகள்/வியாபாரம் நிறுத்தி வைக்கபட்டி ருக்கும்.  நாமளும் டீ குடிக்க போய்ட்டு வந்தா இந்த அரை மணி நேரத்தை பயன் படுத்தி விளையாடுகிறார்கள்.  ஒரு கேப் அப் அல்லது கேப் டவுனை  உருவாக்குகிறார்கள். இதை தடை செய்யவேண்டும், ஒரு தொழில் நுட்ப (டெக்னிகல்) காரணத்திற்காக சந்தையின் வேலை நிறுத்தபடும் போது, மாப்பு-களே, சாந்தையின் ஆட்டத்தை விட்ட இடத்தில் இருந்து தொடருங்கள் என்று தானே சொல்ல வேண்டும்.. அந்த கேப்ல உள்ளே புகுந்து ஆடுராங்க… நேற்றைய தினம் ஸ்டெர்லைட் பங்கு 11.20 க்கு 477.00 12.10 க்கு 516.00 இதில் சார்ட் செல்லிங் செய்தவனின் கதி… ஸ்டாப் லாஸ் எப்படி கடைபிடிக்க முடியும்…  இது ஒரு உதாரணம்  தான்.. தினசரி கவனியுங்கள் இது போன்று அதிகம் பார்க்கலாம்..

=================================================================