ஒபாமா இது நியாயமா!


அமெரிக்க ஜனதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 4-ம் தேதி நடக்க உள்ளது இதில்  ஜனநாயகக்கட்சி  சார்பில் போட்டியிடுகிற வேட்பாளரை அறிவிப்பதற்கான  கட்சி  மாநாடு டென்வர் நகரில் நடந்து வருகிறது.  அந்த மாநாட்டில்  ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கபட்டு இருக்கும் முதல்  கறுப்பர் இனத் தலைவர் ஒபாமா அவர்களை  அதிகாரபூர்வமாக அக்கட்சி நியமித்தது.   நமக்கும்  சந்தோசம், வாழ்த்துவோம் வெள்ளை மாளிகையை ஒரு கறுப்பர் அலங்கரிகட்டும்  (2 மாதத்திற்கு முன்பாக அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி   விட்டு வந்தார் நம்ம அண்ணாச்சி  வைகோ…. )

அந்த மாநாட்டில் ஒபாமா நேற்று உரையாட்டினார்,  அப்போது தேர்தல் வாக்குறுதியாக பலவற்றை பேசிய போது, ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க வேலைகளை அடுத்த நாடுகளில் செய்து வாங்கும் (Out Sourcing) அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் நிறுத்தபடும் என்ற தேர்தல் “இலவசத்தை அறிவித்தார்” – இந்த அறிவிப்பு இந்திய தகவல் தொழில் நுட்ப (ஐடி) நிறுவனங்களை கலக்கமடைய வைத்துள்ளது.

அவர்களை விட ஐடி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்கள்… அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாம தான் அம்பானி சகோதரர்களின் பிரச்சினைக்கே வெடி வெடித்து தீபாவளி கொண்டாடி ரிலையன்ஸ் கம்யூனிகேசன் பங்குகளின் விலையை சரிவடைய செய்தவர்கள், தற்போது அமெரிக்க ஜனாதிபதி-யாக அதிக வாய்ப்புள்ளவராக பார்க்கபடும் ஒருவர் பேசிய இந்த பேச்சுக்கு என்ன செய்வோம்……  திங்கள் கிழமை துவங்கும் சந்தையில் ஐடி நிறுவன பங்குகளில் இந்த தாக்கம் தெரியும். 

பொறுப்பில்லாமல் பேசுவதில் மன்னரான தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் அவர்கள்தான் அன்மையில் பொறுப்பில்லாமல் இந்தியர்களின் வருமானம் அதிகரித்து விட்டதால் அதிகமாக சாப்பிடுகிறார்கள் அதனால் தான் உணவு தட்டுபாடு என்று பேசினார்…. 

ஆனால் ஜனாதிபதி ஆகும் முன்பே ஒபாமா நேற்று பேசிய பேச்சு (Election Rhetoric) (அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக அமைந்தது வருந்ததக்கது, கண்டிக்க தக்கது.  இனவெறிக்கு எதிராக போராடியவர் என்றெல்லாம் சொல்லபடும் அவர் பேசியதும் (மண்ணின் மைந்தர்களுக்கே முதலிடம்  என்ற வகையில்)  இனவெறி  தாக்குதலே/தூண்டுதலே.  

அமெரிக்காவின் ஒவ்வொரு அசைவும் மற்ற நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உலகறிந்த விசயம்…. அப்படி இருக்கையில், அவர்  நடை முறைக்கு சாத்தியமா (அமெரிக்க காங்கிரஸின் அங்கிகாரம் / செனட் அங்கிகாரம் கிடைக்குமா) என்பதை யோசிக்காமல் சொல்லிய வார்த்தைகள்,  ஓட்டு பொறுக்கும் அரசியல் வாதிகளின் பேச்சை போல் தான் இருந்தது என்றால் அது மிகை இல்லை. 

உண்மையில் நாம் அவர்களை நம்பி இருக்க வில்லை, அவர்கள் தான் தங்களின் தேவைக்கு நம்மை நம்பியுள்ளார்கள். அவர்களின் வேலை வாய்ப்புகளை நாம் தட்டி பறிக்கவில்லை. நமது தொழில் நுட்ப அறிவு, மனித வளம், குறைவான செலவீனங்கள் ஆகிய காரணங்கள் தான் அவர்களை நம்மை போன்ற வளரும் நாடுகளை தேடி வரச்செய்கின்றன.

ஆகையால் இது போன்ற பேச்சுகளால்… நமக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது… யாருக்கு தெரியும் 2 நாளில் நான் அப்படி பேச வில்லை நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளபட்டு விட்டது என்ற மறுப்பறிக்கை நமது அரசியல்வாதிகளை போல் வெளியிடலாம்.

ஒபாமா

நாங்கள் வேலை செய்து பிழைக்கிறோம் நியாயமாய்!

நீங்கள் அதற்கு கூட வேட்டு வைப்பது நியாயமா?

Advertisements

6 responses to this post.

 1. மிகவும் நுட்பமான அலசல்.திங்கள் பங்கு சந்தையில் ஐ டி நிறுவன பங்குகளில்
  இதன் எதிரொலியை எதிர் பார்க்கலாமா?

  THANK YOU FOR YOUR INFORMATION.

 2. Dear Sai,

  Good and timely analysis about OBAMA speech in American election campaign, Lets see our market how it will take it and reflect. Day by day your postings are very attractive , Keep it up.

  Thanks….

 3. Dear Ganesh,

  Thank you ,Your information very good and timely one ,realy superb

 4. I CAN ABLE TO KNOW ABOUT WORLD WIDE THROUGH YOUR BLOG VERY CLEARLY.THANKS A LOT

 5. hello sir

  think u hav used the holidays well, which is now reflecting in our blog. india la labour kammiya iruka varai out sourcing a avalavo lesa mudika mudiyaathu. oru survey greman naatla one hour ku avanga vaangara lobour a kaatlum inga 180 times kammiya irukaama. so that only benz car oda neriya parts inga tata la ready aaguthu.

  vaalga jananaayagam

 6. […] ஒபாமா இது நியாயமா! – சாய்கணேஷ் (பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க) […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: