Two Bar Key Reversal (Bearish) டெக்னிகல் வரைபடம் – 4


  2 bar key reversal

Two Bar Key Reversal (Bearish)

மேலே கொடுக்கபட்டுள்ள படத்தில் உள்ளது போல் தொடர்ச்சியாக ஏற்றம்  கண்டுவரும் ஒரு இன்டெக்ஸ்/பங்கின் விலை அதன் போக்கில் (TREND) அடுத்து  வரும் நாட்களில் ஏற்படபோகும்  மாற்றத்தை தெரிவிக்கின்ற ஒரு அமைப்பு (PATTERN) தான் 2 Bar Key Reversal Pattern.

இதில் இரண்டு வகை உண்டு, 

ஒன்று  Bullish – காளை-யின் ஆதிக்கத்தை சொல்லுவது,  

மற்றொன்று Bearish  கரடி யின்  ஆதிக்கத்தை  சொல்லுவது.

மேலே உள்ளது  Bearish – கரடி யின் துவக்கம் ஆரம்பம் ஆவதை காட்டுவது.

விளக்கம்

இது குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு சரியான என்ட்ரி (Entry) / எக்சிட்(Exit) சிக்னல்களை தரும் ஒரு அமைப்பு.  தொடர்ந்து ஏற்றத்தில் அல்லது இறக்கத்தில் இருக்கும் ஒரு  சார்ட்டில் ஒரு  பார் Bar ஐ (இதற்கு சரியான தமிழ் வார்த்தை சொல்லவும்)   போன்ற இன்னொரு பார் தலை கீழாக அமைந்தால் அடுத்து தொடர்ச்சியாக 10 க்கும் குறைவான பார்களின் (Less than 10 bars)  போக்கில் ஏற்படபோகும் மாற்றத்தை சொல்லும் விதமாக இருக்கும். 

வாராந்திர சார்ட்டில் அமைந்தால் – சில வாரங்களுக்கு இறக்கத்தினை காட்டும்.  (குறுகிய கால முதலீட்டிற்கு உகந்தது)

தினச் சார்ட்டில் அமைந்தால் – அதிக பட்சம் 10 நாட்களின்  போக்கினை  காட்டும்.  (குறுகிய கால முதலீட்டிற்கு உகந்தது)

மாதந்திர சார்ட்டில் அமைந்தால் நீண்ட கால முதலீட்டிற்கு உகந்தது. (அரிதான நிகழ்வு)

அடையாளம் காண்பது எப்படி?

முதல் பாரின் (Bar length) நீளம் அதிகமாக இருக்க வேண்டும், ஆரம்பம் (open) பாரின் கீழ் நிலைக்கு அருகிலும், முடிவு Close அதிகபட்ச/மேல் நிலைக்கு அருகிலும், இருக்க வேண்டும். 

இரண்டாவது பார் முதல் பாரின் ஒரு பிம்பமாக அமைய வேண்டும். கூடுமானவரை அதே நீளம்/உயரம் இருக்க வேண்டும் – ஆரம்பம் மேல் நிலைக்கு அருகிலும் (முதல் பாரின் முடிவு),  முடிவு கீழ் நிலைக்கு அருகிலும் (முதல் பாரின் ஆரம்பம்) அமைய வேண்டும்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் , இப்படி அமைய வேண்டும்.

1st Bar 2nd Bar
அதிகபட்சம்/High = அதிகபட்சம் / High
ஆரம்பம்/Open = முடிவு / Close
முடிவு / Close = ஆரம்பம்/Open
குறைந்த/கீழ்-Low =
குறைந்த/கீழ் Low

சிறிய அளவில் வித்தியாசம் இருக்கலாம்… எந்த அளவு சரியாக இருக்கிறதோ அந்த அளவு கணிப்பு சரியாக வரும். 

சமீபத்திய உதாரணங்களை பார்ப்போம்.

நிப்டி ஃப்யூச்சர் சார்ட்டில் ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் உருவாகிய 2 Bar Key Reversal Pattern அமைப்பை மேலே உள்ள படத்தில் பார்க்கலாம்

 

1st Bar  = 17.6.2008 2nd Bar – 18.6.2008
High = 4647 = High = 4658
Open = 4571 = Close = 4566
Close = 4640 = Open = 4651
Low =  4553 = Low= 4556

அதன் தொடர்ச்சியாக 10 நாட்கள் பக்கவாட்டில் நகர்ந்ததை பாருங்கள்.

நிப்டி வாரந்திர சார்ட்டில் மே மாதம் 3-வது  மற்றும் 4-வது வாரங்களில் உருவாகிய இரண்டு 2 Bar Key Reversal Pattern அமைப்பை மேலே உள்ள படத்தில் பார்க்கலாம்.

1st Bar  2nd Bar
High = 5167 = High = 5160
Open = 4981 = Close = 4946
Close = 5157 = Open = 5157
Low =  4913 = Low= 4940

இந்த நிகழ்வுக்கு பிறகு தொடர்ச்சியாக  7/8 வாரங்கள் கரடியின் கையில் சந்தையின் குடுமி இருந்ததை பாருங்கள்.

 

தற்சமயம் – ஆகஸ்ட் 2ம் மற்றும் 3ம் வாரங்களில் ஒரு  2 Bar Key Reversal Pattern அமைப்பு உருவாகியுள்ளது. அதை பற்றிய விவரம்….. 

1st Bar  2nd Bar
High = 4615 = High = 4649
Open = 4426 = Close = 4430
Close = 4529 = Open = 4529
Low =  4362 = Low= 4421

இந்த அட்டவனையில் High/Low வில் வித்தியாசம் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது.

இதை தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக நம்ம அண்ணன் கரடியின் பின்னால் செல்கிறார்… பாருங்கள்.

இதை மட்டும் வைத்து முடிவு எடுக்க கூடாது இந்த மாதிரி ஒரு அமைப்பு கிடக்கும் சமயம்,  மிகுந்த (90%) தைரியத்துடன் முடிவு எடுக்கலாம் ஆனால் அதை மற்ற காரணிகளுடன் / டெக்னிகல் இன்டிககேட்டர்ஸ் உடன் / சந்தையை பாதிக்கும் புறக்காரணிகளுடன் சரி பார்த்து செயல் படுவது கூடுதல் பலம் / நலம்.

இந்த கட்டுரை பங்குசந்தையின் போக்கினை கணிக்க டெக்னிகல் எப்படி உதவுகிறது / எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள மட்டுமே எழுதியுள்ளேன்.  இன்னும் நூற்றுக் கணக்கான பார்முலாஸ் / டெக்னிகல் விசயங்கல் இருக்கின்றன.  ஆகையால் இதன் அடிப்படையில் எந்த ஒரு முதலீடும் செய்யாதீர்கள்.  அவ்வாறு செய்யும் பட்சத்தில் ஏற்படும் லாப நஷ்டத்திற்கு நான் பொறுப்பு அல்ல.

23 responses to this post.

 1. sir,

  this is the thing you said.. wow tats nice.. but intha chart pathi eatha information kudunga sir. ippadi mattum partha onnum puriyala enaku

  arun

 2. hello sir, thank u. sonna mathiriye post panni viteergale! romba theliva puriyara mathiri sollitteenga. once again thanks a lot sir.(mohanraj sir innum parkavillai enru ninaikkiren)

 3. திரு மோகன் ராஜ் சார்,

  உங்களுடைய பின்னூட்டத்தை என்னை விட மற்ற வாசகர்கள் தான் அதிகம் எதிர் பார்க்கிறார்கள்….

  அருன் – வேலைகளுக்கு இடையே வலையேற்றினேன் இன்னும் சிறிது நேரத்தில் அதை பற்றி விளக்கம் எழுதுகிறேன்…..

  திருமதி லதா தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி……

 4. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 27, 2008 at 6:02 பிப

  திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய இந்த சார்ட் அப்டேசன் மிகவும் நன்றாய் இருக்கிறது. அசத்திவிட்டீர்கள் சாய். மதியமே தங்களின் இந்த சார்ட்-யை பார்த்துவிட்டேன். ஆனால் வேலைப் பளு காரணமாக பின்னூட்டம் இட முடியவில்லை.

  சார்ட்டிற்கு தகுந்தவாறு தாங்கள் கொடுத்துள்ள விளக்கம் புரியும்படி தெளிவாக உள்ளது. தங்களுடைய இந்த தகவல் முற்றிலும் புதுமை எனக்கும் இன்னும் என்னைப் போல் எத்தனையோ நண்பர்களுக்கும்.

  இன்று புதிதாய் ஒரு தகவல் என்பது போல் என்று எங்களுக்கு இந்த “2 KEY BAR REVERSAL” பற்றி அருமையாய் கற்றுகொடுத்த திரு சாய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

  உண்மையில் ஒரு பின்னோட்டம் இடுவதேற்கே எங்களுக்கு பல சமயங்களில் சோம்பேறித்தனம். ஆனால் தங்களுடைய மிகுந்த பணிகளுக்கு இடையே இவ்வளவு அருமையான ஒரு கட்டுரையை சார்டுடன் தங்களது வலைப்பூவில் ஏற்றியது உண்மையில் ஒரு அருமையான விஷயம் சாய்.

  தங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் கற்று கொடுக்க உயர்ந்த உள்ளம் வேண்டும். உங்களிடம் நானும் மற்ற பின்னூட்டம் இடும் மற்றும் இந்த வலைப்பூவை பார்வையிடும் நண்பர்கள் அனைவரும் காண்கிறோம்.

  தங்களது இந்த பணி என்றும் சிறப்புடன் தொடர அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

  குறிப்பு: தோழி லதா அவர்களுக்கு வேலைப்பளு காரணமாக மதியம் பின்னூட்டம் இட முடியவில்லை. மற்றபடி இந்த CHART UPDATION- யை மதியமே பார்த்துவிட்டேன்.

 5. எளிமையான விளக்கத்துக்கு நன்றி!!

  bar – நிறைய யோசிக்க வேண்டும் போலிருக்கிறது

 6. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 27, 2008 at 6:08 பிப

  Hi Sai,

  A nice SMS for you and our Friends,

  “Don’t wait for extraordinary opportunities. Weak men wait for opportunities. Strong men men make them.

  If you wait for opportunities to occur, you will be one of the crowd.”

  Good Evening,,,,

 7. பார் பற்றி பாரில் யோசிக்கலாம் வாருங்கள் நன்பர்களே…

 8. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 27, 2008 at 6:25 பிப

  சாய் ,,,,,,

  அருமையான யோசனை,,,,,,

  ஆஹா ,,,,,,,,! கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்க,,,,,,,,,,,

 9. பார் என்றால் என்ன வென்று எளிய விளகங்களோடு தாங்கள் பதித்திருப்பது மிகவும் அருமை என்னை போன்ற சாமானியர்களுக்கு புர்யும் வகையில் மிகவும் எளிமையாக இருக்கிறது. இது போல் வாரம் ஒரு டெக்னிகல் பற்றி பகிர்த்து கொண்டால் நன்றாக இருக்கும். நன்றி

 10. திரு மோகன் ராஜ்,

  தங்களின் நீன்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி….
  உண்மைதான் மிகுந்த சிரமமான வேலை தான்

  இந்த கட்டுரையை முழுமையாக எழுதி முடிக்க 4 மணி நேரம் ஆனது…

  காலையில் அமர்ந்தவன் இப்பொழுதுதான் (6.30) எழுந்திருக்கிறேன்…, After Market Hours இதைதான் செய்தேன்.

  தினசரி சராசரியாக 600-700 வருகை பதிவாகிரது 2 கிளிக் ஒருவருக்கு என்று எடுத்து கொண்டால் கூட 300 க்கும் அதிகமானோர் தொடர்ந்து படிக்கிறார்கள்.

  அதில் பின்னூட்டம் இடுவது தங்களை போல் ஒரு சிலர் தான் (விரல் விட்டு எண்ணி விடலாம்)

  சிலருக்கு தங்களை பற்றி அறிமுகம் செய்து கொள்ள கூட நேரம் இல்லை, சிலர் SMS அனுப்புகிறார்கள் எப்படி என்றால்

  SENT TIPS…. OR TIPS OR TRIAL TIPS or Tips pls

  தங்ககளின் பெயர் / ஊர் விவரம் எழுதகூட நேரம் இருப்பதில்லை…..

  அண்மையில் நண்பர் – ஒருவரை சாட்டிங்கில் அறிமுகம் செய்து வத்தார், நல்ல நஷ்டம் அடைந்துள்ளார்… புதியவர்…. ஆர்வம் உள்ளது 24 மணி நேரமும் பங்கு வணிகம் பற்றிய சிந்தனை / ஆலோசனையில் உள்ளவர் என்று தெரிந்தது… சரி அவருக்கு உதவலாம் என்று தினசரி ஒரு டிரேடு செய்யுங்கள் நான் ஒரு பரிந்துரை தருகிறேன் என்றேன், இப்பவே சொல்லுங்க என்றார். எனக்கு சிரிப்பு தான் வந்தது சரி சில தவறுகளை(பதட்டம் / ஆர்வ கோளாறை) முதலில் குறைக்க சொல்லலாம் என்று எனது செல் நம்பரை கொடுத்து மாலையில் தொடர்பு கொள்ள சொன்னேன்.

  போன் வரவில்லை – சில நாட் களுக்கு முன்பு ஒரு மாலை நேரம் நானாக யாஹுவில் ஹாய் சொன்னேன் உடனடியா நமக்கே பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார். அது அப்படி இது அப்படி….என்று

  அதன் பிறகு what happend – u were suppose to give daily tips? எனறு கேட்டார் பாருங்க
  என்ன கொடுமை சார்……… என்று அதோடு விட்டு விட்டேன்…….

  எதற்கும் ஒரு சரியான அனுகுமுறை மிக அவசியம்…. சிறந்த உதாரணம் திருமதி ஜான்சி அக்கா அவர்களின் வெற்றி கதையை பின்னர் எழுதுகிறேன்.

  பின்னுட்டத்திற்கு எனது பின்னூட்டம் நீண்டு விட்டது……..

  வாழ்த்துகள்….. வாள்க வளமுடன்……

  பார் பற்றிய சிந்தனையிலே எழுகிறேன்……….

 11. Dear Sai,

  Long awaiting technical charts and explanations, very very clearly explain with charts, easy to understand it, Keep it up, We are waiting more technical analysis from you.

  Thanks..

 12. hi sir,

  nan than konjam avsara pattuten. konjam athigamaana aarva kolaaru. athan neenga upload panna udane vera onnum kanom nu reply kuduthen sir. but a great explanation in a easy way. tnx for ur effort sir..

 13. Dear Sai,

  Rellay good and informative

  Thanks
  Viswa

 14. tHANK YOU SAI,\
  \
  VERY NICE, GOOD WORK.KEEP IT UP

  MURUGESAN
  ABUDHABI

 15. அருமையான யோசனை

 16. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 28, 2008 at 9:42 முப

  திரு சாய்,

  தங்களின் பின்னூட்டம் கண்டத்தில் மகிழ்ச்சி. ஒரு கட்டுரையை எழுதி முடித்து அதனை முழுவதும் சரிபார்த்து பின்னர் அதற்கு தகுந்தாற்போல் சார்ட்டினை தேர்ந்தெடுத்து பின்னர் அந்த கட்டுரையை டைப் செய்து வலைப் பூவில் ஏற்றுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.

  தங்களின் அண்மைய அனுபவம் ஒன்றினை சொல்லியிருந்தீர்கள். பங்கு சந்தையில் சிறிது அனுபவம் இருந்தாலே ஒரு பெரிய வல்லுநர் அளவுக்கு பேசும் நிறைய பேர் இருக்கிறார்கள். எவரும் அந்த வகை நபர்தான் போலிருக்கிறது.

  இன்னும் சொல்லப் போனால் இந்த பங்குச்சந்தை ஒரு சமுத்திரம். தாங்கள் அதில் இறங்கி நீந்திக் கொண்டு இருக்கிறீர்கள். நாங்கள் இப்பொழுதுதான் கரையில் கால் நனைத்துக் கொண்டு இருக்கிறோம்.

  இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. கற்றுக் கொண்டே இருக்கிறோம். அதில் தங்களின் பங்களிப்பு அதிகம். இதற்கு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

  வாழ்த்துக்கள்.

 17. வணக்கம் சாய்.எவ்வளவு தெளிவான விளக்கம், high,low,open,close எல்லாவற்றையும் தொகுத்து கொடுத்து மிக அருமையாக ,technical ஆர்வம் இல்லாதவர்களும் கூட படித்து புரிந்து கொள்ளும் விதமாக அருமையாக விளக்கி உள்ளீர்கள் சாய்.மிக்க நன்றி. மோகன்ராஜ் சாரின் பின்னூட்டத்தை சாய் சாரே எதிர்பார்க்கும் பொழுது நாங்கள் எதிர்பார்ப்பதில் என்ன ஆச்சர்யம்?
  மோகன்ராஜ் சார், நீங்கள் இரண்டு நாட்களாக கேட்டிருந்தீர்கள். chart -ஐ பார்த்தவுடன் மிகவும் சந்தோசப் படுவீர்கள் என்பதால் எழுதியிருந்தேன்.

 18. சார்ட் பற்றி மிகவும் எளிமையாக

  புரியும் வண்ணம் விளக்கியுள்ளீர்கள்.

  இது போன்ற விஷயங்களை தங்கள்

  அலுவல்களுக்கிடையே சிரமம் பாராமல்

  எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு

  நன்றி.

  தொடர்ந்து எதிர் பார்க்கிறோம்.

  வாழ்த்துகள்.

 19. பங்குச்சந்தை பற்றி தெளிவான புரிதல் இல்லாத எனக்கு, ஒரு குழந்தையை தாய் கைபிடித்து வழிநடத்தி செல்வதுபோல, சரியாக வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கும் தம்பிக்கு என் நன்றி உரித்தாகுக.கடவுள் அருளால், நானும் கடந்த இரு மாதங்களாக தம்பியின் வழிகாட்டலால்,வெற்றியின் கனிகளை சுவைதுக்கொண்டிருக்கிறேன். தம்பியின் இப்பணி மேலும் சிறக்க என்னுடைய மனமர்ர்ந்த வாழ்த்துக்கள்.

 20. good morning, thank you very much.

 21. Dear Sai
  Its amazing and easy to understand.I used to watch daily yours and Saravanan sir blogs .You are the people doing very good job.I have no words to appreciate you.Thank you very much and hats off to you.
  With Love Rajkumar.

 22. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 28, 2008 at 7:37 பிப

  I appreciate your work and thank you very much sir.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: