சந்தையின் போக்கு 25.8.2008


அனைவருக்கும் காலை வணக்கம்,

நமது அஞ்சா நெஞ்சன் அண்ணன் நிப்டி 50-60 புள்ளிகள் கேப் அப் ஆகா துவங்க அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது, ஆனால் 4440 யை உடைக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

அவரின் உற்சாகத்திற்கு காரணம் கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட கச்சா எண்ணையின் தடாலடி விலை சரிவு, தொடர்ந்து தங்கமும் விலை சரிந்தது  மற்றும் பங்காளி பெரிய அண்ணன் அமெரிக்கா அதை கொண்டாடிய விதம் (டவ் ஜோன்ஸ் 197 புள்ளிகள் ++).

தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளும் அதையே பிரதிபலிக்கின்றன.. 

கச்சா எண்ணை 110$ கீழ் நழுவாத வரை பயம் தேவை இல்லை என்பது எனது கருத்து.

தற்போது 114$ என்ற நிலையில் உள்ளது,  தற்போதைய விலை சரிவை பார்த்து நாம் பயப்படும் அளவிற்கு கச்சா எண்ணை  யூக வர்த்தகம் செய்வோர் கவலை அடைந்ததாக தெரிய வில்லை,  நேற்று எனது நண்பனிடம் பேசிய போது ஒரே நாளில் 7$ இறங்க முடியும் என்றால், அதனால் 6-7$ ஒரே நாளில் ஏன் ஏற முடியாது  என்றான்,  யோசிக்க வேண்டிய கேள்வியாக பட்டது.

தற்போதைய ஏற்றம் தற்காலிக மானது தான்….. (அதே பல்லவி என்று திட்டாதிர்கள்)

4400 நிலை களில் 15-20% ரிஷ்க் (ஸ்டாப் லாஸ்) எடுத்து புட் (Put) ஆப்சன் எடுத்தால் இந்த வாரம் லாபமடையலாம் என்பது எனது கருத்து.

Risk and Profit Ratio  –  15-20% Risk  (loss-if anything goes wrong)  60-80% Profit  if its goes as per our expectations.

இது எனது தனிபட்ட கருத்து தயவு செய்து தங்களிடம் உள்ள / கிடைகின்ற  தகவல்களுடன் இதை  சரி பார்த்து முடிவு எடுங்கள். 

இந்த மாத ஃப்யூச்சர் அன்ட் ஆப்ஷன் 4300 அல்லது அதற்கு கீழ் நிலைகளில் முடிவடையும் என்பது எனது எதிர்பார்ப்பு.

4546 – 4501-4429 – 43874359 – 4330 4262 – 4236 – 4229 – 4158

‘எதைச் செய்தாலும் மிகவும் சிறப்பாகவே செய்வேன்’  என்று கூறி செயல்படுங்கள்! மட்டகரமான, நடுத்தரமான செயல்களோடு சமரசம் செய்து கொள்ளாதீர்கள்….. சிறந்ததையே நாடி, சிறந்ததையே செய்யும் போது, வாழ்வில் உங்களுக்கு கிடைப்பதும் – அமைவதும் சிறந்ததாகவே இருக்கும்!

டெக்னிகல் ஆர்வம் உள்ளவர்கள் கவனத்திற்கு, ஒரு இன்ட்ரஸ்டிங்கான விசயம் நிப்டி வாரச் சார்ட்டில் (Weekly) முந்தைய வாரத்தில் ஒரு 2 பார் கீ ரிவர்சல் (2 Bar Key Reversal Bearish) உருவாகியுள்ளது. அது எனது சரிவுகளின் எதிர்பார்ப்பை  மேலும்  உறுதி படுத்தும்   விதத்தில் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.  4660 என்ற நிலை உடைபடாதவரை புதிய உயர்வுகளுக்கு வாய்ப்பு இல்லை.  இதை பற்றி இன்று மாலை விரிவாக எழுதுகிறேன்.

Advertisements

14 responses to this post.

 1. Dear Sai,

  Good Morning, Good analysis current market situation, Keep it up.

  Thanks.

 2. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 25, 2008 at 9:33 முப

  Good Morning and thank you very much for your views sir.

 3. Thx good Info ..keep it up

 4. THANK YOU SAI SIR. KEEP IT UP.

 5. good morning sir, thank you.

 6. Hi Sai, Thanks for your views…

  How are the chances for the markets to fill the gaps at 4525??

 7. மதிப்பிற்குரிய சாய், தங்கள் கருத்துக்களை சார்ட் முலம் விளக்கினால் நாங்கள் லெவல் கலை மனதில் சுலபமாக பதிய வைக்க முடியும் என நம்புகீறேன்.முயற்சிக்கவும்.நன்றி.

 8. thanks a lot for your briefly views on the market.once again thank you so much.

 9. hello sir,

  the gap up as u said was around 60.. naanum ungala polave mkt keela poga athiga vaaipu ullathaagave nenaikiren. oru chinna diff ennana i expect mkt to reach 4500 level before any fall.. iniku eve kandippa chart kaaga wait pandren.

  tnx sir

 10. VERY NEAT REPRESENTATION. I AM GAINING DAILY WITH YOUR GUIDANCE. THANK YOU

 11. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 25, 2008 at 10:31 முப

  திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரை மிகவும் அருமை. நகைச்சுவை ததும்ப மிகவும் அழகாய் கொடுத்திருக்கின்றீர்கள். தங்களுடைய எழுத்து நடை மிகவும் அருமை சாய்.

  நீங்கள் கூறிய “2 பார் கீ ரிவர்சல்” எது என்று தெரிய வில்லை சாய். தங்களுக்கு நேரம் இருப்பின் எங்களுக்காக சார்ட் இந்த கட்டுரையில் ஏற்றவும். மிகவும் உதவியாய் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு.

  தங்களுடைய நிப்டி நிலைகள் மிகவும் உதவியாய் உள்ளன. தங்களுடைய பணி என்றும் தொடர வேண்டும்.

  இனிய காலை வணக்கம்.

 12. ” ‘எதைச் செய்தாலும் மிகவும் சிறப்பாகவே செய்வேன்’ என்று கூறி செயல்படுங்கள்! மட்டகரமான, நடுத்தரமான செயல்களோடு சமரசம் செய்து கொள்ளாதீர்கள்….. சிறந்ததையே நாடி, சிறந்ததையே செய்யும் போது, வாழ்வில் உங்களுக்கு கிடைப்பதும் – அமைவதும் சிறந்ததாகவே இருக்கும்! ”

  இந்த வார்த்ததைகள் என்னை மேலும் உற்சாகம் ஊட்டுகிறது. நன்றி ஆஸ்கார்பாரதி.

 13. Thanking you sir

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: