Archive for ஓகஸ்ட் 25th, 2008

Performance (பரிந்துரைகளின் செயல்பாடுகள்)

Monday, August 25, 2008
Cash and Future – Day Trading
Calls Target Result
Sell Relinfra – 1002 990/983 Target Achieved – Low 980
Sell RelCap 1270 1260/1250 Target Achieved – Low 1255
Sell SBI 1365 1355/1348 Target Achieved – Low 1352
Sell Sun TV 243 240.00 Target Achived -Low 240.10
Sell ICICI 665 660/655 Target Achieved – Low 653
Sell Adlabs 513 508/505 Target Achieved – Low 497
Sell BHEL 1725 1700/1690 Target Achieved – Low 1678
Future
Calls Target Result
Sell Ranbaxy -519 515/509 Target Achived -Low 504
Sell Renuka – 128 126/5 Traget Achived – Low 124.85
Option
Calls Target Result
22/8 – Buy Ispat 25 call at 0.85 1.40 Target Achieved – High 1.40
22/8- Buy Idea Cel 85 call -0.90 1.35/1.75 Call closed at 0.85/0.90

இந்த பெருமையும் என்னை வழி நடத்தும் இறைவனையே சாரும்

இன்று தனிபட்ட முறையில் எனது பரிந்துரைகள், அவற்றின் செயல்பாடுகளினால் எனக்கு மிகுந்த சந்தோசத்தையும் ஊக்கத்தையும் அளித்தன,  காரணம் அவை டார்கெட்டை அடைந்ததால் இல்லை, என்னை மேலும் ஊக்கபடுத்தும் விதமாக அவை செயல்பட்ட சூழ்நிலை.   இன்று காலையில் சொன்னது போல் 60 புள்ளிகள் கேப் அப் ஆனது, 4400 உடையாது என்று நிச்சயமாக நம்பினேன் அதை தொடர்ந்து நான் எடுத்த நிலை அனைத்தும் சார்ட் கால்ஸ் தான். காலையில் அதிகமானவர்கள் லாங் கால்ஸ் கொடுத்த பொழுது, நான் சார்ட் கால்ஸ் மட்டும் வழங்கியதால் சில நண்பர்கள் என் மீது கோபம் அடைந்தனர், அதை தொடர்ந்து நான் கீழ் கண்ட செய்தியை  அனுப்பினேன்.

Dear friends – i dont think mkt will go up further but at the same time we can not expect major corection today itself. so please book profit as soon as possible, also pls follow the s/l. pls dont over trade in month end. play safe in small qtys.

every one is giving buy call – but based on my tech tools / indicators mkt will go down, also if u r not satisfied with today’s calls better u should avoid trading, and watch the market. nothing wrong on it.”

கடந்த 2 தினங்களில் அதிகம் Chart  Reading / Home Work செய்ததற்கு கிடைத்த வெற்றியே இது.  தற்பெருமையா   என்றால் இல்லை என்று சொல்ல மாட்டேன் இருந்தாலும் இதை எழுதுவதற்கு காரணம் என்னை ஆசுவாசப்படுத்தி   கொள்ளவும மேலும், படிக்கும் சிலருக்கு  எப்படி  பட்ட சந்தை நிலை களிலும் பணம் சம்பதிக்கலாம் என்ற நம்பிக்கை   வரவும், சந்தை எப்படி தனது போக்கினை (Trend) மாற்றுகிறது, அதை தெரிந்து கொள்ள டெக்னிகல் எந்த அளவு  உதவுகிறது  என்பதை   புரிந்து   கொள்ளவும் தான்.

(காலையில் என் மீது கோபபட்ட நண்பர்களே தங்களின் கோபத்தையும், அக்கறையையும் ஆதங்கத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது ஆகையால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, என்ன  Buy Calls கொடுத்த அவர்களை நம்பிய அளவுக்கு நம் (என்) திறமையின் மீது  நம்பிக்கை   வரவில்லையே என்பது கொஞ்சம் உறுத்தியது, நான் யாரையும் குறை சொல்ல வில்லை அவர்கள் மிகப் பெரிய அனலிஸ்ட்கள் அந்த அளவிற்கு நான் பெரியவனும் இல்லை,  டெக்னிகல் விசயங்களில் பலவிதமான இன்டிகேட்டர்ஸ் / பார்முலாஸ் இருக்கிறது ஒவ்வொருவரும் அவர் அவர்களுக்கு   பிடித்தாமான   வழிகளை கையாழுகிறார்கள், நானும் சில எளிய வழிகளை (கேப் பில்லிங் போன்ற ) தான் பின்பற்றுகிறேன். அதிகம் சிரமமான (தலையை சுற்றி  மூக்கை   தொடுவது போன்ற)  கணக்கு பார்முலாவில் உள்ளே செல்வதில்லை.)

சந்தையின் போக்கு 25.8.2008

அனைவருக்கும் காலை வணக்கம்,

நமது அஞ்சா நெஞ்சன் அண்ணன் நிப்டி 50-60 புள்ளிகள் கேப் அப் ஆகா துவங்க அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது, ஆனால் 4440 யை உடைக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

அவரின் உற்சாகத்திற்கு காரணம் கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட கச்சா எண்ணையின் தடாலடி விலை சரிவு, தொடர்ந்து தங்கமும் விலை சரிந்தது  மற்றும் பங்காளி பெரிய அண்ணன் அமெரிக்கா அதை கொண்டாடிய விதம் (டவ் ஜோன்ஸ் 197 புள்ளிகள் ++).

தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளும் அதையே பிரதிபலிக்கின்றன.. 

கச்சா எண்ணை 110$ கீழ் நழுவாத வரை பயம் தேவை இல்லை என்பது எனது கருத்து.

தற்போது 114$ என்ற நிலையில் உள்ளது,  தற்போதைய விலை சரிவை பார்த்து நாம் பயப்படும் அளவிற்கு கச்சா எண்ணை  யூக வர்த்தகம் செய்வோர் கவலை அடைந்ததாக தெரிய வில்லை,  நேற்று எனது நண்பனிடம் பேசிய போது ஒரே நாளில் 7$ இறங்க முடியும் என்றால், அதனால் 6-7$ ஒரே நாளில் ஏன் ஏற முடியாது  என்றான்,  யோசிக்க வேண்டிய கேள்வியாக பட்டது.

தற்போதைய ஏற்றம் தற்காலிக மானது தான்….. (அதே பல்லவி என்று திட்டாதிர்கள்)

4400 நிலை களில் 15-20% ரிஷ்க் (ஸ்டாப் லாஸ்) எடுத்து புட் (Put) ஆப்சன் எடுத்தால் இந்த வாரம் லாபமடையலாம் என்பது எனது கருத்து.

Risk and Profit Ratio  –  15-20% Risk  (loss-if anything goes wrong)  60-80% Profit  if its goes as per our expectations.

இது எனது தனிபட்ட கருத்து தயவு செய்து தங்களிடம் உள்ள / கிடைகின்ற  தகவல்களுடன் இதை  சரி பார்த்து முடிவு எடுங்கள். 

இந்த மாத ஃப்யூச்சர் அன்ட் ஆப்ஷன் 4300 அல்லது அதற்கு கீழ் நிலைகளில் முடிவடையும் என்பது எனது எதிர்பார்ப்பு.

4546 – 4501-4429 – 43874359 – 4330 4262 – 4236 – 4229 – 4158

‘எதைச் செய்தாலும் மிகவும் சிறப்பாகவே செய்வேன்’  என்று கூறி செயல்படுங்கள்! மட்டகரமான, நடுத்தரமான செயல்களோடு சமரசம் செய்து கொள்ளாதீர்கள்….. சிறந்ததையே நாடி, சிறந்ததையே செய்யும் போது, வாழ்வில் உங்களுக்கு கிடைப்பதும் – அமைவதும் சிறந்ததாகவே இருக்கும்!

டெக்னிகல் ஆர்வம் உள்ளவர்கள் கவனத்திற்கு, ஒரு இன்ட்ரஸ்டிங்கான விசயம் நிப்டி வாரச் சார்ட்டில் (Weekly) முந்தைய வாரத்தில் ஒரு 2 பார் கீ ரிவர்சல் (2 Bar Key Reversal Bearish) உருவாகியுள்ளது. அது எனது சரிவுகளின் எதிர்பார்ப்பை  மேலும்  உறுதி படுத்தும்   விதத்தில் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.  4660 என்ற நிலை உடைபடாதவரை புதிய உயர்வுகளுக்கு வாய்ப்பு இல்லை.  இதை பற்றி இன்று மாலை விரிவாக எழுதுகிறேன்.