சந்தையின் போக்கு 22.08.2008


நேற்று காலதாமதமாக எழுதிய காரணத்தால் சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல வில்லை அதற்காக வருந்துகிறேன். வரும் நாட்களில் அதை தவிர்க்க முயற்சிக்கிறேன்

FNO Expiry க்கு இன்னும் 5 வர்த்தக தினங்களே உள்ளது, அதை மையமாக வைத்து விளையாட ஆரம்பித்துள்ளார்கள் என்று சொன்னது போல் ஆட்டத்தை ஆரம்பித்துளார்கள், இந்த ஆடுபுலி ஆட்டம் இன்னும் 5 நாட்கள் தொடரும்.

உயர்வுகள் நிரந்தரமானது இல்லை, சரிவுகள் தான் நிதர்சனம் என்று பேசிவந்த என்னை போன்றவர்களையே செவ்வாய்/புதன் சந்தைகள் குழப்பியது உண்மையே. அதே நேரத்தில் 4550 க்கு மேல் வாய்ப்பு இல்லை என்று உறுதியாக நம்பினேன்.

இன்றும் சிறிய அளவில் சரிவடையலாம், 4330 களில் துவங்கினால் நாள் நெடுகில் 4200 நோக்கி செல்லும், காலையில் கேப்டவுனாக துவங்கினால் 4330 நிலை நோக்கி மேலே வரலாம்.

அடுத்த சில நாட்கள் டெக்னிகலை விட டிரேடர் சென்டிமென்ட்கள் தான் பிரதிபலிக்கும்.

சில நினைவூட்டல்கள்.

//மேலே 4525 வரை செல்லவும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் அதை நம்பி புதிய நிலைகளை எடுக்க வேண்டாம். (14.8.2008 ஏற்பட்ட் கேப்டவுன் இடைவெளியை நிரப்பும் பொறுட்டு மேலே செல்லலாம் என்பது என் கணிப்பு)//

அதே போல் 4300 இல் இருந்து மேலே4450 க்கு எடுத்துச் சென்றார்கள், அதை நம்பி புதிய நிலைகள் எடுத்தவர்கள் நேற்றைய தினம் சூதாடி சித்தர்களால் துகிலுரியப்பட்டார்கள்.

//கச்சா எண்ணெய் 110 $ என்ற வலுவான சப்போர்ட்டுடன் இருப்பது அடுத்து வரும் நாட்களில் ஜெட் வேகத்தில் செல்லும் என்பதை உறுதி படுத்துகிறது.//

தற்போது 121$ விலைக்கு உயர்ந்துள்ளது, தங்கமும ஒரு 836$ என்ற நிலைக்கு சென்றுள்ளது.

//அஸ்திவாரம் ஸ்ட்ராங், ஆனால் தற்போது கட்டப்படும் மேல்தளம் தான் பலவீனமாக உள்ளது//

4.08.2008 அன்று சொன்னது (4550 நிலைகளில்)

நேற்று வெளிவந்த பணவீக்க விகிதம் 12.63

குறைந்திருந்த இதன் வேகம் தற்போது உயர்ந்து வரும் கச்சா   எண்ணையின்   விலையால் மேலும் அதிகரிக்க செய்யும்.

எதிர்வரும் மாதங்களில் – மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேன்டிய மத்திய அரசு  சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

தற்போது 6 வது ஊதிய கமிசனின் பரிந்துரைகளை ஏற்று கொண்டுள்ளது அதை நமது தமிழகமும் அமல் படுத்த முன் வந்துள்ளது.

உடனடியாக எந்த ஒரு தடாலடி மாற்றமும் ஏற்பட போவதில்லை…. இந்த நிலையில் நிதி அமைச்சரை மாற்ற போகிறார்களாம் அதனால் என்ன பலன் ஏற்பட போகிறது. இவர்களை போன்ற சிறந்த, மிகச்சிறந்த (so called) நிர்வாகிகளால் ஒன்றும் ஆகப்போவதில்லை நமக்கு தேவை சிறந்த தலைவர்கள்.

(சிறந்த பொருளாதார நிபுணர்கள் திரு அலுவாலியா, மான்பு மிகு டாக்டர் மன்மோகன்சிங், திரு ப.சிதம்பரம் மற்றும் திரு ரங்கராஜன் ஆகியோர் என்ன செய்தார்கள், அதற்கு மக்களின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பரவாயில்லையே)

குறுகிய கால முதலீட்டிற்கான பரிந்துரைகள்.
Buy Timex  –  21  –  Target  –  25    Stopp Loss  – 18.50

இங்கு தரப்படும் பரிந்துரைகள் அனைத்தும் குறுகிய கால லாபத்தை நோக்கமாக கொண்ட டெக்னிகல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுகின்றன.  தயவு செய்து 10000 மேல் சிறிய பங்குகளில் முதலீடு செய்யவேண்டாம். அதேபோல் 5-12% லாபத்தில் உடனடியாக வெளியேறுங்கள். முதலீட்டு முடிவுகளை தயவு செய்து நன்கு ஆராய்ந்து உங்களுக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் சுய நம்பிக்கையுடன் எடுங்கள.

 

Advertisements

15 responses to this post.

 1. Good information.. Thank you Sai

 2. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 22, 2008 at 9:25 முப

  Dear Sai,

  Thank you very much for your information about the market.

  Operators are playing heavily in this market. Your information is very helpful for all of us in this bearish market.

  You are doing wonderful job for us amidst your tighten busy shcedule. Thank you very much Sai.

  Good Morning and have a nice day.

 3. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 22, 2008 at 9:39 முப

  Thank you very much for your views sir.
  The ups and downs of the market is due to operators.

 4. தங்களுடைய ‘technical analysis’ திறனை கண்டு வியக்கிறேன்… ஆனால் தங்களுடைய அரசியல் சார்ந்த கருத்துகளின் மீது எனக்கு உடன்பாடில்லை… எனது சிறிய கருத்து வேறுபாட்டினை தெரிவிக்க விரும்பினேன்… அதனுடைய விளைவே இந்த பின்னூட்டம்… 🙂

 5. good morning sir, thank you very much for your views.

 6. YOUR BLOG HELPS ME TO BE CAUSIOUS.KEEP IT UP.

 7. hello sir,

  neenga ethirpaartha frequency la mkt poitu iruku nu nenaiken. oru oru time inflation data varum pothu previous date revise aaguthu. athigamaaga.

  thirai maraivu kaariyangal, saamaniyanuku ettatha pulapaadatha pala nigalvugal nadappathu unmaiyo unmai.

  neenga soldrathu mathiri vilipodu irupathu mattume itharkaana theervu.

  tnx sir

 8. திரு.செந்தில்

  அரசியல் என்றாலே நிச்சயம் கருத்து வேறுபாடு இருக்கும் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருந்தால் அரசியலே இல்லை….

  திரு லாலு பற்றிய எனது கருத்து உங்களுக்கு உடன் பாடு இல்லை என்று நினைக்கிறேன்.

  நான் அவர் நல்லவரா இல்லையா என்ற ஆராய்ச்சியில் இரங்க வில்லை,

  நஷ்டத்தில் இயங்கி வந்த இந்திய ரயில்வேயை லாபத்தில் கொண்டுவர என்னிடம் மந்திர கோல் இல்லை என்று தற்போதைய நிதி அமைச்சர் போல் சொல்லாமல் அதே பொருளாதர நெருக்கடியில் எப்படி சமாளித்தார். (டீசல் தான் அதிகம் தேவை ரயில்வேக்கு) வெற்று புள்ளி விவரங்களை மற்றும் தராமல் உபரி நிதியாக பல ஆயிரம் கோடிகள் கையிருப்பில் இருப்பு வந்தது எப்படி….. சற்று யோசித்து பாருங்கள் அந்த நிலைக்கு கொண்டு வரவில்லை என்றால் இன்றை டீசல் விலை உயர்வில் திவலாகி இருக்கும்.

  அவர் தலைவர்…. தலைமை பண்பு உளளது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தார் நல்ல நிர்வாகிகளை கொண்டு செய்து முடித்தார்….

 9. திரு சாய் அவர்களின் லாலு பற்றிய கருத்துக்களை நான் முழுமையாக ஏற்கிறேன்

 10. Sai.. I agree to your views on Laloo… if Laloo is not a good leader, then why IIM invites him for a guest lecture…. he is certainly a good leader, leave about his personal history and allegations on cow feed scandal…. atleast, he wipes that off with excellent railway management.

  And, please continue writing… 🙂

  Cheers
  Balaji

 11. UNGALUDAIYA PATHIVUM ATHARKKU VARUM

  MARUMOZHIGALUM MIGAVUM

  SUVAARASYAMAAGA

  IRUKKIRATHU.

  THANK YOU FOR YOUR INFORMATION SIR.

  KEEP IT UP.

 12. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 22, 2008 at 4:11 பிப

  திரு சாய் அவர்களுக்கு,

  சூதாடி சித்தர்கள் இன்றைய சந்தையை பெருமளவில் ஆட்டுவிக்காமல் விட்டுவிட்டார்கள் பாவம் என்று.

  லல்லு பிரசாத் பற்றி தாங்கள் கூறிய கருத்துக்கள் ஏற்கக் கூடியதே. இங்கு நிதியமைச்சர் சிதம்பரம் கூறிய “என்னிடம் மந்திர கோல் இல்லை” என்ற வார்த்தைகளை சரியான இடத்தில் கூறியுள்ளீர்கள்.

  தங்களுடைய பதிவை தினந்தோறும் எங்களுக்காக வலைப்பூவில் சிரமம் பார்க்காது ஏற்றி வருகின்றீர்கள். தங்களுடைய பணி மென்மேலும் சிறக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

  இனிய மாலை வணக்கம்.

 13. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 23, 2008 at 9:55 முப

  Kindly give week’s stock market analysis, next week forecast and intraday techniques during saturday/sunday/holidays so that we can use your views during these holidays. it will make your blog more lively. Kindly consider this suggestion sir.

 14. thx sai keep it up

 15. Dear Sai Sir,

  Today you have posted the two Bar key reversal pattern with example is simply super. These things is very useful for me and like new people who is eager to learn.

  kindly continue like this type of pattern atleat every week……….

  Thanking you

  S.Kanagavel – Tuticorin

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: