Archive for ஓகஸ்ட் 22nd, 2008

சந்தையின் போக்கு 22.08.2008

நேற்று காலதாமதமாக எழுதிய காரணத்தால் சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல வில்லை அதற்காக வருந்துகிறேன். வரும் நாட்களில் அதை தவிர்க்க முயற்சிக்கிறேன்

FNO Expiry க்கு இன்னும் 5 வர்த்தக தினங்களே உள்ளது, அதை மையமாக வைத்து விளையாட ஆரம்பித்துள்ளார்கள் என்று சொன்னது போல் ஆட்டத்தை ஆரம்பித்துளார்கள், இந்த ஆடுபுலி ஆட்டம் இன்னும் 5 நாட்கள் தொடரும்.

உயர்வுகள் நிரந்தரமானது இல்லை, சரிவுகள் தான் நிதர்சனம் என்று பேசிவந்த என்னை போன்றவர்களையே செவ்வாய்/புதன் சந்தைகள் குழப்பியது உண்மையே. அதே நேரத்தில் 4550 க்கு மேல் வாய்ப்பு இல்லை என்று உறுதியாக நம்பினேன்.

இன்றும் சிறிய அளவில் சரிவடையலாம், 4330 களில் துவங்கினால் நாள் நெடுகில் 4200 நோக்கி செல்லும், காலையில் கேப்டவுனாக துவங்கினால் 4330 நிலை நோக்கி மேலே வரலாம்.

அடுத்த சில நாட்கள் டெக்னிகலை விட டிரேடர் சென்டிமென்ட்கள் தான் பிரதிபலிக்கும்.

சில நினைவூட்டல்கள்.

//மேலே 4525 வரை செல்லவும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் அதை நம்பி புதிய நிலைகளை எடுக்க வேண்டாம். (14.8.2008 ஏற்பட்ட் கேப்டவுன் இடைவெளியை நிரப்பும் பொறுட்டு மேலே செல்லலாம் என்பது என் கணிப்பு)//

அதே போல் 4300 இல் இருந்து மேலே4450 க்கு எடுத்துச் சென்றார்கள், அதை நம்பி புதிய நிலைகள் எடுத்தவர்கள் நேற்றைய தினம் சூதாடி சித்தர்களால் துகிலுரியப்பட்டார்கள்.

//கச்சா எண்ணெய் 110 $ என்ற வலுவான சப்போர்ட்டுடன் இருப்பது அடுத்து வரும் நாட்களில் ஜெட் வேகத்தில் செல்லும் என்பதை உறுதி படுத்துகிறது.//

தற்போது 121$ விலைக்கு உயர்ந்துள்ளது, தங்கமும ஒரு 836$ என்ற நிலைக்கு சென்றுள்ளது.

//அஸ்திவாரம் ஸ்ட்ராங், ஆனால் தற்போது கட்டப்படும் மேல்தளம் தான் பலவீனமாக உள்ளது//

4.08.2008 அன்று சொன்னது (4550 நிலைகளில்)

நேற்று வெளிவந்த பணவீக்க விகிதம் 12.63

குறைந்திருந்த இதன் வேகம் தற்போது உயர்ந்து வரும் கச்சா   எண்ணையின்   விலையால் மேலும் அதிகரிக்க செய்யும்.

எதிர்வரும் மாதங்களில் – மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேன்டிய மத்திய அரசு  சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

தற்போது 6 வது ஊதிய கமிசனின் பரிந்துரைகளை ஏற்று கொண்டுள்ளது அதை நமது தமிழகமும் அமல் படுத்த முன் வந்துள்ளது.

உடனடியாக எந்த ஒரு தடாலடி மாற்றமும் ஏற்பட போவதில்லை…. இந்த நிலையில் நிதி அமைச்சரை மாற்ற போகிறார்களாம் அதனால் என்ன பலன் ஏற்பட போகிறது. இவர்களை போன்ற சிறந்த, மிகச்சிறந்த (so called) நிர்வாகிகளால் ஒன்றும் ஆகப்போவதில்லை நமக்கு தேவை சிறந்த தலைவர்கள்.

(சிறந்த பொருளாதார நிபுணர்கள் திரு அலுவாலியா, மான்பு மிகு டாக்டர் மன்மோகன்சிங், திரு ப.சிதம்பரம் மற்றும் திரு ரங்கராஜன் ஆகியோர் என்ன செய்தார்கள், அதற்கு மக்களின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பரவாயில்லையே)

குறுகிய கால முதலீட்டிற்கான பரிந்துரைகள்.
Buy Timex  –  21  –  Target  –  25    Stopp Loss  – 18.50

இங்கு தரப்படும் பரிந்துரைகள் அனைத்தும் குறுகிய கால லாபத்தை நோக்கமாக கொண்ட டெக்னிகல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுகின்றன.  தயவு செய்து 10000 மேல் சிறிய பங்குகளில் முதலீடு செய்யவேண்டாம். அதேபோல் 5-12% லாபத்தில் உடனடியாக வெளியேறுங்கள். முதலீட்டு முடிவுகளை தயவு செய்து நன்கு ஆராய்ந்து உங்களுக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் சுய நம்பிக்கையுடன் எடுங்கள.