சந்தையின் போக்கு 20.08.2008


ஒரு வேகத்தடை காரணமாக சரிவுகளின் வேகம் குறைந்து உள்ளது, நேற்றைய தினம் 2.30 பேக்டரை பயன் படுத்தி 1 மணி நேரத்தில் தலை கீழாக மாற்றினார்கள். காலையில் இருந்து ஆமை வேகத்தில் பக்கவாட்டில் நகர்ந்த நிப்டி 2.00 மணிக்கு நேற்றைய தினத்தின் குறைந்த பட்ச நிலையை அடைந்தது (4316.90). அனைவரும் 4300 என்ற நிலையை உடைக்கும் என்ற எதிர்பார்த்த சமயத்தில் சூதாடி சித்தர்கள் உள்ளே புகுந்து கிடு கிடு வென 4375 என்ற நிலைக்கு எடுத்து சென்றார்கள்.
அதை நம்பி 4500 / 4700 என்ற சத்தம் கேட்க ஆரம்பித்துள்ளது,

இந்த இடத்தில் 18.8.2008 அன்று எழுதியதை நினைவூட்டுகிறேன்

//மேலே 4525 வரை செல்லவும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் அதை நம்பி புதிய நிலைகளை எடுக்க வேண்டாம். (14.8.2008 ஏற்பட்ட் கேப்டவுன் இடைவெளியை நிரப்பும் பொறுட்டு மேலே செல்லலாம் என்பது என் கணிப்பு)//

அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து 2 தினங்களாய் சரிவடைந்து உள்ளது, இருந்து நம் அண்ணன் அதை கண்டு அஞ்சாமல் எதிர் நீச்சல் போடுகிறார். இறுதியில் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி நானும் நடிக்கிறதுனு சொல்லி ஓ வென அழாமல் இருந்தால் சரி.

டிரேடர்ஸ் சென்டிமென்ட் – காளை ஆனால் டெக்னிகல் அடிப்படையில் – கரடி

இன்றைய தினம் சிறு கவனம் தேவை.. இந்த மாதிரி குழப்பமான நேரங்களில் நாம் கரையில் ஒதுங்கி இருப்பது சாலச்சிறந்தது.

குறுகிய கால முதலீட்டிற்கான பரிந்துரை

Buy PBM Poly tex – 15.75 tgt 23 s/l 12

நேற்றைய பதிவுக்கு பின்னூட்டம் மிட்ட அனைவருக்கும் நன்றி.

காலையில் எனக்கும் எங்க ஏரியா தெரு நாய்க்கும் சின்ன பிரச்சினை, அது என்னை துரத்த, அதை அடிக்க நான் எனது குதிரையை நிறுத்த, என் குதிரை கால் வாரி கீழே என்னை தள்ளி விட அதை பார்த்து அந்த நாய் சிரிக்க ஒரே தாமசு போங்க…. சின்ன சின்ன காயங்களுடன் தப்பித்தேன். இப்ப நமக்குள்ள சிங்கம் சீறிகிட்டு இருக்கார், அவனை இப்படியே விடக்கூடாது, இன்று மாலையே அந்த நாயை வேட்டையாடனும் இல்லைனா அவன் கொட்டம் இன்னும் அதிகமாகும் என்று. சிங்கம் ஏதோ சமுக சேவை செய்வது போல் நினைப்பில் சொல்கிறார், ஆனால் உண்மை என்ன வென்றால் அது பார்த்து சிரித்தது நம்ம சிங்கத்துக்கு கவுரவ பிரச்சினை ஆகிவிட்டது. ஏன் என்றால் நம்ம சிங்கம் விழுந்ததை பார்த்து சில பெண்களும் சிரித்துவிட்டார்கள். அதனால் தன் பிரச்சினையை பொது பிரச்சினை ஆக்கி வஞ்சம் தீர்க்க வழி தேடுகிறார். (அந்த நாய்க்கு என்னவோ பிரச்சினை – அதுக்கு வண்டியில் போற யாரையும் பிடிப்பதில்லை. நடந்து போனா வாலாட்டும்)

நமது வலைப்பூவை யாரோ ஒரு நண்பர் தமிழிஷ் என்ற தளத்தில் பதிவிட்டுள்ளார், அவருக்கும் மிக்க நன்றி.

Advertisements

15 responses to this post.

 1. /// அவர்கள் குழப்பிய பிறகு அந்த குட்டையில் மீன் பிடிக்கலாம்.///

  தெளிந்த பிறகு மீன் பிடிக்கலாம் என சொல்லுங்கள்….குழப்பிய குட்டையில் சேறு தான் கிடைக்கும்…. பதிவிற்கு நன்றி

 2. எப்படி இப்படி ?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! களைகட்டுது

 3. thiru sabari

  அந்த வரியையே நீக்கி விட்டேன்

 4. thak you

 5. THANK YOU SAI SIR..

 6. எப்படி sai… கீழ விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலை என்கிற கதையா எழுதுறீங்க…

  Anyways, nice reading…… thanks for sharing ur experience…. 🙂

  Cheers
  Balaji

 7. அடபோங்க பாலாஜி மீசைல மட்டும் இல்ல உடம்பு எல்லாம் மண் ஒட்டிடுச்சு……

 8. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 20, 2008 at 11:50 முப

  திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய இன்றைய பதிவு Simply Superb,,,சந்தையின் தற்போதைய நிலை பற்றி தாங்கள் கூறியுள்ள விதம் மிகவும் அருமை சாய்.

  //மேலே 4525 வரை செல்லவும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் அதை நம்பி புதிய நிலைகளை எடுக்க வேண்டாம். (14.8.2008 ஏற்பட்ட் கேப்டவுன் இடைவெளியை நிரப்பும் பொறுட்டு மேலே செல்லலாம் என்பது என் கணிப்பு)// – என்ற வரிகளை மீண்டும் எங்களுக்கு நினைவூட்டியதற்கு தங்களுக்கு ஒரு சல்யுட்.

  சாய் இன்றைய கட்டுரையின் கடைசி பாராவில் தங்களுடைய நேற்றைய அனுபவத்தை மிகவும் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். அருமை சாய் அருமை அருமை. தங்களுடைய கட்டுரைகள் நாளுக்கு நாள் மெருகேறுவது மட்டுமல்ல, தங்களுடைய நகைச்சுவை உணர்வும் அவ்வாறே நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே சொல்கின்றன.

  வாழ்த்துக்கள் சாய். தங்களுடைய குறுகிய கால முதலீட்டு பரிந்துரைகள் மிகவும் நன்றாக உள்ளன. தொடரவும்.

  நன்றி சாய்

 9. இது ஒரு பெரிய பிரச்சனை தான்.. ஆனா இதுக்கு நம்ப இன்னொரு அண்ணன் அமைதிப்படை ல ஒரு வழி சொல்லிட்டார். அதுனாலையோ என்னவோ அன்னைக்கு அம்மாவசை அரசியல் ல பெரிய ஆள் ஆனாரு. அதயே நாம முன் உதாரணமா எடுத்திகிட்டு முனிசிபல் ஆபீஸ் ல புகார் பண்ணனும்.
  ” எனக்கு நேர்ந்த துன்பம் இந்த தெருவுல யார்க்கும் வரகுடாது” நு ஒரு பொது நோக்கத்தோட இத பண்றேன் நு சொல்லி பப்ளிக் கிட்ட பொலிடிக்ஸ் பண்ணி பெரிய ஆள ஆய்டனும்.

  எப்படி நம்ம யோசனை.

 10. athukulla current poiduchu. meethi current vantappuram

 11. itho marupadi vanthuten,

  adicha 6 ball la 6 six r adipen illa out aaitu poite irupen nu soldrathu indian cricket ku mattum illa indian market kum porunthum pola.. .

  intha marthri nenacha vaaipu varum athuvarai kaathirupom nu soldratha kaatlum kedacha vaaipa payanpaduthi gap la keda vettitu poiralam nu soldra unga technic romba nalla iruku sir.(option trading)

  iniku enna porutha varai short covering nu nenaiken. which is moving the mkt rit now.

  arun

 12. அருமை sai தாங்கள் சொல்லியது போல் தான் இன்று வர்த்தகம் இருந்தது. நல்ல வேலை குதிரை உங்களை உதைக்காமல் விட்டதே அதுவே பெரிய விஷயம் தான்.

 13. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 20, 2008 at 8:39 பிப

  sai sir,

  Kindly update your blog before 8 a.m. sothat a lot of people good benefit from it. kindly consider my view.

 14. ஆஹா அருன் இப்படி எல்லாம் ஐடியா இருக்கா…. ஆனால் நமக்கு தேசிய அரசியலில் வரவேண்டும் லோக்கல் நகராட்சி அரசியல் வேண்டாம்.

  திரு சுரேஷ் தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி, முயற்சிக்கிறேன்….

 15. […] கூர்ந்து கவனித்துவருகிறார்கள்.  20/8/2008 மற்றும் 19/8/2008 ஆகிய இரு தினங்களில் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: