சந்தையின் போக்கு 19.08.2008


இன்று என்ன எழுதுவது என்று புரிய வில்லை, அதே பல்லவி தான்… அதனால் சுருக்கமாக முடித்து கொண்டு வேறு ஒரு விசயத்தை பற்றி எழுதலாம்…. 

நேற்று சொன்னது போல் மார்கெட் Flat ஆகத்தான் காணபட்டது.  அதிகம் எதிர்பார்க்க பட்ட 4370 இன்று உடைபடும்.  அதன் பிறகு?   4225, 4100,4011, மற்றும் 3826 என்ற இலக்குகளை  நோக்கி பயணத்தை தொடரலாம்.

அதே நேரத்தில் கடந்த வியாழன் அன்று கேப்டவுனால் ஏற்பட்ட இடைவெளி அதிக சரிவு மற்றும் / சரிவின் வேகம் ஆகியவற்றை தடுக்கும் ஒரு வேகத்தடையாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும். (அது நிரப்பப்படாதவரை).

நேற்று நமது பங்காளி பெரிய அண்ணன் 180 புள்ளிகள் சரிவடைந்துள்ளார், தற்போது துவங்கியுள்ள ஆசிய பங்கு சந்தைகள் அனைத்தும்  மிக  மோசமாக பங்காளியை வழி மொழிகின்றன.

நம்ம அண்ணன் மட்டும் என்ன மாட்டேன் என்றா சொல்ல போகிறார்.  அது தான் நம்முடைய அணிசேரா கொள்கையையே அணுசக்தி ஒப்பந்தத்தில் அடகு வைத்து விட்டோம்.

சென்ற வாரம் நண்பர் ஒரு செய்தி அனுப்பி இருந்தார், அதே செய்தி  தற்போதைய  நாணயம் விகடனிலும் கட்டுரையாக வெளி வந்துள்ளது முடிந்தால் படியுங்கள். 

என்னவென்றால் – சப் ப்ரைம் பிரச்சினையையே தூக்கி சாப்பிடும் பெரிய பூனைக்குட்டியை அமெரிக்கா தன்மடியில் வைத்துள்ளது, அது எப்பொழுது வேண்டும் என்றாலும் வெளியில் குதிக்கலாம்.  அது கிரெடிட் கார்டு விவகாரம்….. இது அமெரிக்க வங்கிகளுக்கு ஒரு அணுகுண்டு என்றே சொல்லலாம். (அதிகபட்சம் 6 மாதத்தில் இருந்து 1 வருடகாலத்தில் இந்த கத்திரிக்காய் முத்தி கடைவீதிக்கு வந்துவிடும்)

சப் ப்ரைம் – பராவாயில்லை வீட்டுக்கு தான் கடன் கொடுத்தார்கள், ஆனால் இது அதைவிட மோசம். இது நம்மை பாதிக்குமா என்றால் நிச்சயம் பாதிக்கும் அதுவெளிவரும் சமயத்தில்.  என்ன நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

இதையும் சாமாளிப்பார்கள் மீண்டும் கச்சா எண்ணை என்ற சாட்டையை கையில் எடுத்து நம்மை போன்ற வளரும் நாடுகளின் தலையில் மிளகாய் அரைப்பார்கள்.

” நம்முடைய நேற்றுதான் இன்றைய நாள்.  இன்றைய உழைப்பு தான் நாளைய நாள்.”

எதிர்காலம் என்பது தானாக வருவதில்லை! நாம் எடுக்கும் முடிவுகளால் உருவாக்கப்படுவது!

குறுகிய கால முதலீட்டிற்கான பரிந்துரைகள்.

13.8.2008 அன்று பரிந்துரைத்த  Alok Industries யின் நேற்றைய அதிகபட்ச விலை 49.40 – 15% உயர்வு 3 தினங்களில்.

நேற்றைய பதிவுக்கு –  பின்னுட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

திரு மோகன் ராஜ் –  இந்த மாதிரி கட்டுரைகள் எழுதச்சொல்லி யாஹுவில் ஊக்கபடுத்திய நண்பர் துபாய் பாட்சா, திரு ஆர் கே மற்றும் உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எனது எழுத்து இருக்கட்டும், தங்களின் எழுத்து மிகச்சரளமாக இருக்கிறது சிறிது நேரம் ஒதுக்கி தாங்களும் ஒரு வலைப்பூ துவங்கலாம் தினசரி இல்லை என்றாலும் அவ்வப்போது எழுதலாம்.

இங்கு நான் எழுதிவரும் கருத்துகள் அனைத்தும் எனது தனிபட்ட கருத்துகள்/கணிப்புகள், எந்த ஒரு வியாபார நோக்கத்திலும் இதை நான் செய்யவில்லை,  தயவு செய்து இதை உங்களின் ஒரு நண்பரிடத்தில் விவாதிப்பது / ஆலோசிப்பது/ கருத்து கேட்பது போல் மட்டும் எடுத்து கொள்ளுங்கள்,  இந்த கட்டுரைகளை நம்பி எந்த ஒரு வியாபார முடிவும் எடுக்காதீர்கள்.

Advertisements

18 responses to this post.

 1. Thank you Mr Sai

 2. நன்றி சாய்… நாணயம் விகடனில் வெளிவந்துள்ள கட்டுரையை எங்களுக்கு அனுப்பினால் நன்றாக இருக்கும் … ஏனெனில் இங்கு (ஹைதராபாத்) நாணயம் விகடன் கிடைப்பதில்லை….

 3. மிக்க நன்றி சாய்.(இந்த ஒரு வார்த்தை மட்டும் சரியாக இருக்காது என்றும் நினைக்கிறேன்) இந்த தகவல்கள் அனைத்தையும் சேகரிக்க எத்தனை blogs, books தேட வேண்டும். அனைத்தையும் ஒரே blog-இல் தெளிவாகவும் சரியாகவும் தெரிந்துகொள்கிறோம். THANKS A LOT.

 4. விகடன் வெளியீட்டை இங்கு பதிவிட முடியாது செந்தில். மெயிலில் அனுப்புகிறேன். நண்பர்களே யாராவது முடிந்தால் “அமெரிக்கவின் அடுத்த சிக்கல்” என்ற கட்டுரை டைப் செய்து தாருங்கள்.

 5. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 19, 2008 at 9:41 முப

  திரு சாய் அவர்களுக்கு,

  தாங்கள் முதல் வரியில் கூறிய வார்த்தைகள் மிகவும் சரிதான், சந்தை நான்கு ஐந்து நாட்களாக பக்கவாட்டிலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. சாய் தங்களுடைய gap filling theory மிகவும் அருமை.

  3800 லெவல்களில் இருந்தே சந்தை மேலே செல்லும் “Gap filling” செய்வதற்காக என்று தாங்கள் சொன்னது போலவே சந்தை 4654 என்ற நிலைகள் வரை மேலே சென்றது.

  மிகவும் அருமை சாய்…..கலக்குகிறீர்கள் ,,,,

  இன்று தங்கள் கட்டுரையில் அமெரிக்காவைப் பற்றி கூறியுள்ள தகவல்கள் வியக்க வைக்கின்றன. பயமுறுத்துகின்றன. எனினும் சந்தையின் சரிவு நாம் எதிபார்த்துக் கொண்டிருக்கும் ஒன்று என்பதால் பயத்தின் அளவு குறைவுதான் சாய்.

  ஜனவரி மாதத்திய சரிவுக்கு பின்னர் ஓரளவுக்கு ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறோம் நாம் அனைவரும்.

  இந்த விஷயத்தை முன்னரே எங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்திய உங்களுக்கு எங்கள் அனைவரின் சார்பாகவும் ஒரு பெரிய ஒ ஒ ஒ ஒ

  இனிய காலை வணக்கம் சாய்…….

  தங்களது சேவை என்றும் தொடர வேண்டும் எங்களை போன்றவர்களுக்காக,,,,,

 6. Dear Sai,

  Good Morning, Thank you very much for your views.

 7. As a small invester we are able to be aware about american problems which will affect in our mkt.Thanks a lot for your clear cut views

 8. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 19, 2008 at 9:50 முப

  Saay,

  I am ready to help You. Pls send the article to type

 9. good morning sir, thank you very much.

 10. தங்களின் கட்டுரை மிக எளிமையாக உள்ளது… மிகவும் நன்றி, தொடர்ந்து எழுதுங்கள்.

  Why suddenly disclaimer Sai, did anyone say anything about your blog, whatever it is, please ignore those comments and kindly continue writing.

  Cheers
  Balaji

 11. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 19, 2008 at 1:32 பிப

  திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரைகளை படித்த பின்பு ஏற்பட்ட ஒரு சந்தோஷ உணர்வுதான் என்னை நீண்ட பின்னூட்டம் அளிக்க வைத்தன. மற்றபடி தனியாக வலைப்பூ தொடங்கி எழுதும் அளவிற்கு இன்னும் பங்கு சந்தையில் விஷயம் தெரியாது நண்பரே.

  மேலும் உண்மையை சொல்ல வேண்டுமானால் தங்களின் வலைப்பூ முலமே நான் மற்றும் என்னை போல் நிறைய நண்பர்கள் “Double Bottom, Triple bottom and Cup and handle” போன்ற டெக்னிகல் நுணுக்கங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

  தாங்கள்தான் எங்களுக்கு இது போன்று நிறைய விசயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். சந்தையைப் பற்றிய விசயங்களையும் தவறாமல் அளிக்க வேண்டும்.

  சந்தையை தவிர்த்து மற்ற பொதுவான விசயங்களை வேண்டுமென்றால் எழுதலாம். முயற்சி செய்கிறேன் சாய். தங்களின் யோசனைக்கு மிக்க நன்றி.

 12. THANK YOU!

 13. Sir ur voltas recommendation has not worked well!

 14. திரு மோகன்ராஜ்

  காலையில் அவசரத்தில் சொல்ல வந்ததை சரியாக எழுத வில்லை, பங்கு சந்தை அல்லாத உங்களுக்கு பிடித்த பிற விசயங்களை எழுதலாம்.

  80-90 களில் அதிகம் கடிதம் எழுதும் பழக்கம் நம்மிடம் இருந்து வந்தது, (நான் நண்பர்கள் ஆசிரியர்கள் என்று தினசரி கடிதம் எழுதிய காலம் உண்டு) ஆனால் காலப்போக்கில் நம்மிடம் அந்த பழக்கம் குறைந்து விட்டது.

  93-95 களில் ஈ.மெயில் புழக்கத்தில் வந்து அதை கொஞ்சம் குறைத்தது, அடுத்து மொபைல் அதிலும் ரிலையன்ஸ் வந்தபிறகு சுத்தமாக யாரும் கடித பரிமாற்றம் வைத்து கொள்வதில்லை என்று ஆகிவிட்டது. என்ன செய்வது,

  “மாறும் என்ற சொல்லை தவிர அனைத்தும் மாறும்” என்று தெரியாமலா சொன்னார் காரல் மார்க்ஸ்.

  வாழ்த்துகள்.

 15. THANK YOU SAI SIR..

 16. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 19, 2008 at 7:02 பிப

  Thank you very much for your views sir.

 17. sai you are doing really good job for new comers like me. plz keep it up , i will try to come online in trading time…thx

 18. […] கவனித்துவருகிறார்கள்.  20/8/2008 மற்றும் 19/8/2008 ஆகிய இரு தினங்களில் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: