ஒரு சர்வே சொல்லும் செய்தி


நண்பர்கள் சிலர் சேர்ந்து சிறிய அளவில் சர்வே ஒன்று செய்தோம் அதன் விவரத்தை தற்போது நண்பர் மும்பையில் இருந்து அனுப்பி உள்ளார். அதில் சில அதிர்ச்சி மற்றும் வருந்த தக்க உண்மைகள் தெரிய வருகிறது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஏதோ ஒரு சமயத்தில் எங்களிடம் ஆலோசனைகளுக்கு வந்தவர்கள்.

இதில் நாங்களும் கலந்து கொண்டு பதில் அளித்தோம், அதில் தெரியவரும் பலதவறுகள் நாங்களும் செய்து வந்தது தான்.

இந்த சர்வேயின் நோக்கம் – பங்கு வணிகத்திற்கு யார் யார் வருகிறார்கள்,  எதற்காக வருகிறார்கள்,  வெற்றி தோல்வி என்ன. அதற்கு காரணம் என்ன என்பது தான்.

யார் எல்லாம் வருகிறார்கள் – அதிகமாக  நடுத்தர  மக்கள்  குறிப்பாக மாதச்சம்பளகாரர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள். 

எதற்காக வருகிறார்கள்  –  மாதசம்பள காரர்கள் தங்களின்  வருமானம்  குறைவு,  மாதச்செலவில் பற்றாக்குறை இருக்கிறது சின்ன சின்ன  செலவுகளை  யோசித்து  செய்ய  வேண்டியுள்ளது  இன்னும்  கொஞ்சம் கூடுதல்  வருமானம்  கிடைத்தால் நல்லது என்ற நோக்கத்தில். (இதில் கவனிக்க வேன்டியது – பற்றாகுறையான 5000-10000 என்ற எதிர்பார்ப்பில்)

சிறு  தொழில் செய்பவர்கள் – தங்களின்  தொழிலில் ஏற்படும்  பிரச்சினைகளை  சமாளிக்க  அதில்  உள்ள பணத்தை இதில் போட்டு ஏதோ பண இரட்டிப்பு / டபுளிங் செய்து  விடலாம்  என்று எதிர்பார்த்து உள்ளே வருகிறார்கள்.

உண்மையில் – இங்கு 80-90% மக்கள் தோல்வியை தழுவுகிறார்கள்.  காரணம் என்ன என்றால் – எந்த நோக்கத்திற்காக இதில் ஈடுபட்டோம் என்பதை மறந்தது, பேராசை, பயிற்சியின்மை நல்ல வழிகாட்டி இல்லாதது மற்றும் பொறுமை இல்லாதது.

ஒரு மனிதர் உபரி வருமானத்திற்கு (Side income)  இந்த தொழிலில் கால் வைத்தவர் எதிர் பாராத வகையில் 2 அல்லது 3 முறை ஆரம்பத்தில் வெற்றி பெற்ற காரணத்தால் இதில இருந்தே அவருடைய மெயின் இன்கமே வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறார். இது எந்த வகையில் நியாயம்.  சின்ன சின்ன செலவுகளுக்கு பல தடவை யோசித்து செலவு செய்து வந்தவர் இங்கு ஆயிரம், ஐயாயிரம் என்று சர்வசாதரணமாக நஷ்டத்தை எதிர்கொள்கிறார். என்ன நோக்கத்திற்காக இதில் ஈடு பட்டோம் என்பதை மறந்து விடுகிறார்கள்.

இறுதியில் குருவி சேர்ப்பது போல் அவசரதேவைக்காக சேர்த்த பணத்தினை இதில் இழந்து தவிக்கிறார்கள். சிலருடை நிலை எஸ் ஜே சூர்யா ஒரு படத்தில் இருக்கு ஆனால் இல்லை என்று சொல்பது போல் நேற்று பேங்க் பேலன்ஸ் இருந்துச்சு ஆனால் இன்று இல்லை என்று உள்ளது.

இதற்கு காரணம் – பேராசைதான் 20 ஆயிரம் வருமானம் உள்ள ஒருவர் கூடுதலாக மாதம் ஒரு 10 ஆயிரம் இருந்தால் குழ்ந்தைகளின் படிப்பு மற்றும் சில ஆடம்பர செலவுகளுக்கு உதவும் என்று ஆசைபடுதில் தவறு இல்லை. அப்படி எதிர்பார்த்து இதில் சம்பாதிப்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை, மிக எளிதாக தினசரி 500-1000 லாபம் பார்க்க வழி உண்டு.  ஆனால் அதிகமானோர் அப்படி செய்வதில்லை.

நண்பர் தனது அனுபவத்தை எப்படி எழுதி உள்ளார் என்று பாருங்கள். இதில் ஈடுபட்டவுடன் நாம் செய்யும் அலப்பறைக்கு ஒரு அளவே இல்லை.   

http://rktimes.blogspot.com/2007/10/blog-post_17.html  – முதல் பகுதி

http://rktimes.blogspot.com/2007/10/blog-post_18.html  – தொடர்ச்சி

 அதே நண்பர் நல்ல அனுகு முறைக்கு பிறகு இன்று நல்ல முறையில் செய்து வருகிறார்.

பயிற்சி – ஒருவர் அதிகமான டிரேடிங் கேப்பிட்டல் கையில் இருக்கும் போது  பயிற்சி  மற்றும்  ஆலோசனை பற்றி யோசிப்பதில்லை.  அதே கேப்பிட்டல் 10-20 ஆயிரம்  ஆன உடன் தான்  டெக்னிகல்        வகுப்பு  ஆலோசனை என்று  அதிகம்  செலவு  செய்கிறார்கள்.

 மற்ற சிறு தொழில் செய்பவர்கள் அவர்  சொன்னார், இவர் சொன்னார் என்று தங்கள் தொழிலில் உள்ள பணத்தை ஓரிரு நாட்களில் இதில் பணம் பண்ணலாம் என்று போடுகிறார்கள் அது மிக மிக தவறு. அதே போல் இதை முழு நேரத் தொழிலாக செய்ய எல்லோராலும் முடியாது/ தினசரி பணம் சம்பாதிக்க முடியாது.

இந்த தொழில் மிகவும் அருமையானது, நல்ல முறையில் செய்தால் இதை விட  சிறந்தது  வேறு இல்லை. எப்படி என்று இரண்டு நாளில் எழுது கிறேன்.

8 responses to this post.

 1. வணக்கம் திரு சாய் சார்,
  உங்களது இந்த கட்டுரை என்னை சில வருடம் பின் நோக்கி கொண்டுசேர்த்தது,
  புதிதாக சந்தைக்கு வருபவர்களுக்கு இது ஒரு பாடம்.அருமையான தகவல்{இதில் இழந்தவர்களை என்னும் போது வருத்தமாக உள்ளது.}தொகுப்பு,இது போல் புதிது புதிதாக உங்களிடம் நிறைய எதிர்பார்கிறேன்.மேலும் சிறு கோபம் இரண்டு நாள்
  காத்திருப்புக்காக……………..

  இரண்டு நாளை துரத்தும் முயற்சியுடன்,
  பாலகீதை

 2. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 20, 2008 at 8:44 முப

  YES IT’S EVERYBODY’S STORY. BUT ONE SHOULD LEARN FROM THEIR EXPERIENCES AND SET RIGHT THEIR PATH TO ACHIEVE THE TARGET.

 3. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 20, 2008 at 9:42 முப

  மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  தாங்கள் கூறுவது மிகவும் சரிதான் சாய். முதலில் பங்குச்சந்தை என்றால் என்ன என்றே தெரியாமல் உள்ளே வரும் நிறைய நண்பர்கள் முதலில் வணிகம் செய்வதற்கு சற்றே தயங்குகிறார்கள்.

  பின்னர் நண்பர்கள் தரும் தைரியத்தில் ஒரு சில பங்குகளை வாங்குகிறார்கள் நீண்ட கால முதலீட்டிற்காக. ஆனால் அந்த பங்குகள் இரு அல்லது மூன்று வாரங்களில் மேலே செல்லும்போது விற்று விடுகிறார்கள் அந்த நண்பர்களின் வேண்டுகோளின்படி. இது நல்ல விசயம்தான்.

  ஆனால் பின்னர்தான் தகுந்த வழிகாட்டுதலின்றி மிகுந்த ஆர்வ கோளாறின் காரணமாக தாமாகவே வணிகம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அதுவும் தின வணிகத்தில்.

  பின்னர் நடப்பவைதான் நமக்கு தெரிந்தவை ஆயிற்றே. புரிந்து கொண்டு பொறுமையாக செய்யும் எந்த ஒரு விசயமும் அவ்வளவு எளிதில் தோல்வி அடைவதில்லை. இதைத்தான் பங்கு சந்தை நாள் தோறும் நமக்கு கற்று கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.

  தங்களுடைய கட்டுரையில் இந்த விஷயத்தை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

  நன்றி சாய். இனிய காலை வணக்கம்.

 4. சாய் சார்,
  உங்கள் சர்வே சொல்லும் செய்தியில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் நிதர்சனமான உண்மைகள்.பங்கு வணிகத்தில் ஈடுபடுவோரின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது. இது போன்ற கட்டுரைகள் எங்களை போன்றோருக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

  உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

  நன்றி.

 5. Sai, Every beginner should read this… small article.. but i guess this is what happens to almost all the beginners in stock market…

 6. ITS VERY NICE.ITS GOOD TO LEARN FROM OTHERS EXPERIANCE.YOUR SURVEY &THIS ARTICLE BOTH R VERY USEFUL FOR ME

 7. உங்கள் சர்வே சொல்லும் செய்தியில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் நிதர்சனமான உண்மைகள்.பங்கு வணிகத்தில் ஈடுபடுவோரின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது. இது போன்ற கட்டுரைகள் எங்களை போன்றோருக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

  உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

  நன்றி.

 8. i agree with mohanraj..
  thank u
  Raghu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: