Archive for ஓகஸ்ட் 19th, 2008

ஒரு சர்வே சொல்லும் செய்தி

நண்பர்கள் சிலர் சேர்ந்து சிறிய அளவில் சர்வே ஒன்று செய்தோம் அதன் விவரத்தை தற்போது நண்பர் மும்பையில் இருந்து அனுப்பி உள்ளார். அதில் சில அதிர்ச்சி மற்றும் வருந்த தக்க உண்மைகள் தெரிய வருகிறது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஏதோ ஒரு சமயத்தில் எங்களிடம் ஆலோசனைகளுக்கு வந்தவர்கள்.

இதில் நாங்களும் கலந்து கொண்டு பதில் அளித்தோம், அதில் தெரியவரும் பலதவறுகள் நாங்களும் செய்து வந்தது தான்.

இந்த சர்வேயின் நோக்கம் – பங்கு வணிகத்திற்கு யார் யார் வருகிறார்கள்,  எதற்காக வருகிறார்கள்,  வெற்றி தோல்வி என்ன. அதற்கு காரணம் என்ன என்பது தான்.

யார் எல்லாம் வருகிறார்கள் – அதிகமாக  நடுத்தர  மக்கள்  குறிப்பாக மாதச்சம்பளகாரர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள். 

எதற்காக வருகிறார்கள்  –  மாதசம்பள காரர்கள் தங்களின்  வருமானம்  குறைவு,  மாதச்செலவில் பற்றாக்குறை இருக்கிறது சின்ன சின்ன  செலவுகளை  யோசித்து  செய்ய  வேண்டியுள்ளது  இன்னும்  கொஞ்சம் கூடுதல்  வருமானம்  கிடைத்தால் நல்லது என்ற நோக்கத்தில். (இதில் கவனிக்க வேன்டியது – பற்றாகுறையான 5000-10000 என்ற எதிர்பார்ப்பில்)

சிறு  தொழில் செய்பவர்கள் – தங்களின்  தொழிலில் ஏற்படும்  பிரச்சினைகளை  சமாளிக்க  அதில்  உள்ள பணத்தை இதில் போட்டு ஏதோ பண இரட்டிப்பு / டபுளிங் செய்து  விடலாம்  என்று எதிர்பார்த்து உள்ளே வருகிறார்கள்.

உண்மையில் – இங்கு 80-90% மக்கள் தோல்வியை தழுவுகிறார்கள்.  காரணம் என்ன என்றால் – எந்த நோக்கத்திற்காக இதில் ஈடுபட்டோம் என்பதை மறந்தது, பேராசை, பயிற்சியின்மை நல்ல வழிகாட்டி இல்லாதது மற்றும் பொறுமை இல்லாதது.

ஒரு மனிதர் உபரி வருமானத்திற்கு (Side income)  இந்த தொழிலில் கால் வைத்தவர் எதிர் பாராத வகையில் 2 அல்லது 3 முறை ஆரம்பத்தில் வெற்றி பெற்ற காரணத்தால் இதில இருந்தே அவருடைய மெயின் இன்கமே வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறார். இது எந்த வகையில் நியாயம்.  சின்ன சின்ன செலவுகளுக்கு பல தடவை யோசித்து செலவு செய்து வந்தவர் இங்கு ஆயிரம், ஐயாயிரம் என்று சர்வசாதரணமாக நஷ்டத்தை எதிர்கொள்கிறார். என்ன நோக்கத்திற்காக இதில் ஈடு பட்டோம் என்பதை மறந்து விடுகிறார்கள்.

இறுதியில் குருவி சேர்ப்பது போல் அவசரதேவைக்காக சேர்த்த பணத்தினை இதில் இழந்து தவிக்கிறார்கள். சிலருடை நிலை எஸ் ஜே சூர்யா ஒரு படத்தில் இருக்கு ஆனால் இல்லை என்று சொல்பது போல் நேற்று பேங்க் பேலன்ஸ் இருந்துச்சு ஆனால் இன்று இல்லை என்று உள்ளது.

இதற்கு காரணம் – பேராசைதான் 20 ஆயிரம் வருமானம் உள்ள ஒருவர் கூடுதலாக மாதம் ஒரு 10 ஆயிரம் இருந்தால் குழ்ந்தைகளின் படிப்பு மற்றும் சில ஆடம்பர செலவுகளுக்கு உதவும் என்று ஆசைபடுதில் தவறு இல்லை. அப்படி எதிர்பார்த்து இதில் சம்பாதிப்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை, மிக எளிதாக தினசரி 500-1000 லாபம் பார்க்க வழி உண்டு.  ஆனால் அதிகமானோர் அப்படி செய்வதில்லை.

நண்பர் தனது அனுபவத்தை எப்படி எழுதி உள்ளார் என்று பாருங்கள். இதில் ஈடுபட்டவுடன் நாம் செய்யும் அலப்பறைக்கு ஒரு அளவே இல்லை.   

http://rktimes.blogspot.com/2007/10/blog-post_17.html  – முதல் பகுதி

http://rktimes.blogspot.com/2007/10/blog-post_18.html  – தொடர்ச்சி

 அதே நண்பர் நல்ல அனுகு முறைக்கு பிறகு இன்று நல்ல முறையில் செய்து வருகிறார்.

பயிற்சி – ஒருவர் அதிகமான டிரேடிங் கேப்பிட்டல் கையில் இருக்கும் போது  பயிற்சி  மற்றும்  ஆலோசனை பற்றி யோசிப்பதில்லை.  அதே கேப்பிட்டல் 10-20 ஆயிரம்  ஆன உடன் தான்  டெக்னிகல்        வகுப்பு  ஆலோசனை என்று  அதிகம்  செலவு  செய்கிறார்கள்.

 மற்ற சிறு தொழில் செய்பவர்கள் அவர்  சொன்னார், இவர் சொன்னார் என்று தங்கள் தொழிலில் உள்ள பணத்தை ஓரிரு நாட்களில் இதில் பணம் பண்ணலாம் என்று போடுகிறார்கள் அது மிக மிக தவறு. அதே போல் இதை முழு நேரத் தொழிலாக செய்ய எல்லோராலும் முடியாது/ தினசரி பணம் சம்பாதிக்க முடியாது.

இந்த தொழில் மிகவும் அருமையானது, நல்ல முறையில் செய்தால் இதை விட  சிறந்தது  வேறு இல்லை. எப்படி என்று இரண்டு நாளில் எழுது கிறேன்.

சந்தையின் போக்கு 19.08.2008

இன்று என்ன எழுதுவது என்று புரிய வில்லை, அதே பல்லவி தான்… அதனால் சுருக்கமாக முடித்து கொண்டு வேறு ஒரு விசயத்தை பற்றி எழுதலாம்…. 

நேற்று சொன்னது போல் மார்கெட் Flat ஆகத்தான் காணபட்டது.  அதிகம் எதிர்பார்க்க பட்ட 4370 இன்று உடைபடும்.  அதன் பிறகு?   4225, 4100,4011, மற்றும் 3826 என்ற இலக்குகளை  நோக்கி பயணத்தை தொடரலாம்.

அதே நேரத்தில் கடந்த வியாழன் அன்று கேப்டவுனால் ஏற்பட்ட இடைவெளி அதிக சரிவு மற்றும் / சரிவின் வேகம் ஆகியவற்றை தடுக்கும் ஒரு வேகத்தடையாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும். (அது நிரப்பப்படாதவரை).

நேற்று நமது பங்காளி பெரிய அண்ணன் 180 புள்ளிகள் சரிவடைந்துள்ளார், தற்போது துவங்கியுள்ள ஆசிய பங்கு சந்தைகள் அனைத்தும்  மிக  மோசமாக பங்காளியை வழி மொழிகின்றன.

நம்ம அண்ணன் மட்டும் என்ன மாட்டேன் என்றா சொல்ல போகிறார்.  அது தான் நம்முடைய அணிசேரா கொள்கையையே அணுசக்தி ஒப்பந்தத்தில் அடகு வைத்து விட்டோம்.

சென்ற வாரம் நண்பர் ஒரு செய்தி அனுப்பி இருந்தார், அதே செய்தி  தற்போதைய  நாணயம் விகடனிலும் கட்டுரையாக வெளி வந்துள்ளது முடிந்தால் படியுங்கள். 

என்னவென்றால் – சப் ப்ரைம் பிரச்சினையையே தூக்கி சாப்பிடும் பெரிய பூனைக்குட்டியை அமெரிக்கா தன்மடியில் வைத்துள்ளது, அது எப்பொழுது வேண்டும் என்றாலும் வெளியில் குதிக்கலாம்.  அது கிரெடிட் கார்டு விவகாரம்….. இது அமெரிக்க வங்கிகளுக்கு ஒரு அணுகுண்டு என்றே சொல்லலாம். (அதிகபட்சம் 6 மாதத்தில் இருந்து 1 வருடகாலத்தில் இந்த கத்திரிக்காய் முத்தி கடைவீதிக்கு வந்துவிடும்)

சப் ப்ரைம் – பராவாயில்லை வீட்டுக்கு தான் கடன் கொடுத்தார்கள், ஆனால் இது அதைவிட மோசம். இது நம்மை பாதிக்குமா என்றால் நிச்சயம் பாதிக்கும் அதுவெளிவரும் சமயத்தில்.  என்ன நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

இதையும் சாமாளிப்பார்கள் மீண்டும் கச்சா எண்ணை என்ற சாட்டையை கையில் எடுத்து நம்மை போன்ற வளரும் நாடுகளின் தலையில் மிளகாய் அரைப்பார்கள்.

” நம்முடைய நேற்றுதான் இன்றைய நாள்.  இன்றைய உழைப்பு தான் நாளைய நாள்.”

எதிர்காலம் என்பது தானாக வருவதில்லை! நாம் எடுக்கும் முடிவுகளால் உருவாக்கப்படுவது!

குறுகிய கால முதலீட்டிற்கான பரிந்துரைகள்.

13.8.2008 அன்று பரிந்துரைத்த  Alok Industries யின் நேற்றைய அதிகபட்ச விலை 49.40 – 15% உயர்வு 3 தினங்களில்.

நேற்றைய பதிவுக்கு –  பின்னுட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

திரு மோகன் ராஜ் –  இந்த மாதிரி கட்டுரைகள் எழுதச்சொல்லி யாஹுவில் ஊக்கபடுத்திய நண்பர் துபாய் பாட்சா, திரு ஆர் கே மற்றும் உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எனது எழுத்து இருக்கட்டும், தங்களின் எழுத்து மிகச்சரளமாக இருக்கிறது சிறிது நேரம் ஒதுக்கி தாங்களும் ஒரு வலைப்பூ துவங்கலாம் தினசரி இல்லை என்றாலும் அவ்வப்போது எழுதலாம்.

இங்கு நான் எழுதிவரும் கருத்துகள் அனைத்தும் எனது தனிபட்ட கருத்துகள்/கணிப்புகள், எந்த ஒரு வியாபார நோக்கத்திலும் இதை நான் செய்யவில்லை,  தயவு செய்து இதை உங்களின் ஒரு நண்பரிடத்தில் விவாதிப்பது / ஆலோசிப்பது/ கருத்து கேட்பது போல் மட்டும் எடுத்து கொள்ளுங்கள்,  இந்த கட்டுரைகளை நம்பி எந்த ஒரு வியாபார முடிவும் எடுக்காதீர்கள்.