சந்தையின் போக்கு 18.08.2008


தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறைகளுக்கு பிறகு இன்று சந்தை எதை நோக்கி செல்லும் ?

தொடர்ந்து சொல்லி வருவது போல் சந்தை ஒரு பலவீனமான நிலையில் தான் உள்ளது, அதேபோல் தற்காலிகமாக நமது சந்தை உலகசந்தைகளை  தான்  பின்தொடரும் வாய்ப்பு உள்ளது, இந்த நிலை அடுத்த  பொதுத்தேர்தல்  முடியும்  வரை தொடரும் என்றே கருதுகிறேன்.  காரணம் அதற்கு முன்பாக பெரிய தடாலடி மாற்றம் இங்கு ஏற்பட்  வாய்ப்புகள் குறைவு.

இன்றைய சந்தையில் –  கடந்த வியாழன் அன்று வெளிவந்த பணவீக்க விகிதம்,  ஊதிய கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று கொண்டது,  வியாழன் மற்றும் வெள்ளி அன்று  ஏற்பட்டுள்ள் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின்  விலை  குறைவு  ஆகியவற்றின்  தாக்கம் இருக்கும் என்று நம்புகிறேன்.

அதேபோல் வியாழன்/வெள்ளி  – உலக பங்குசந்தைகளில் பெரிய மாற்றம் இல்லை அனைத்தும் மந்தமாகத்தான் கானப்பட்டது (Dow Jones மட்டும் 120 புள்ளிகள் உயர்ந்துள்ளது)

தற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகளும் (நிக்கி யை தவிர)  மந்தமாகத்தான் காணப்படுகிறது.

4370 மிகவும் வலுவான சப்போர்ட் அது இன்று உடைபடுமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம், மேலே 4525 வரை செல்லவும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் அதை நம்பி புதிய நிலைகளை எடுக்க வேண்டாம்.  (14.8.2008 ஏற்பட்ட் கேப்டவுன் இடைவெளியை நிரப்பும் பொறுட்டு மேலே செல்லலாம் என்பது என் கணிப்பு)

மொத்தத்தில் இன்று சந்தை மந்தமாகத்தான் (Flat)  இருக்கும் என்று கருதுகிறேன்.

மனைவின் மரணத்தில் அழிகின்ற உடலைப் பார்த்தான் சாதாரண மனிதன்!    அவள்  மரணத்தில் அழிகின்ற காதலை பார்த்தான் ஷாஜஹான். 

முதல் பார்வை சோகத்தில் முடிந்தது! இரண்டாம் பார்வை தாஜ்மஹால் என்ற சாதனையில் முடிந்தது.

கடந்த மூன்று பதிவுகளுக்கு பின்னூட்டமிட்ட அனைவரின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

Advertisements

8 responses to this post.

 1. Good morning Sai, Thank You…….

 2. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 18, 2008 at 9:37 முப

  Good morning and thank you very much for your views sir.

 3. Posted by கண்ணன் on ஓகஸ்ட் 18, 2008 at 9:42 முப

  இனிய காலை வணக்கம் நன்றி

 4. hello sir,

  today u hav given one more view.. pothuva love ku example a tajmahal solvaanga..
  aana athuku ippadi oru view kuda iruku nu iniku therinthu konden.

  think this will be greatly coincide with todays market..

  tnx sir

 5. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 18, 2008 at 9:51 முப

  மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரைகள் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே செல்கின்றன. இன்றைய கட்டுரையும் மிகவும் அருமை. தாங்கள் கூறியபடி நிப்டியில் 4370 என்ற நிலைகளில் கவனமாய் இருப்போம்.

  இன்னும் சொல்லப் போனால் இதுபோன்ற பக்கவாட்டில் நகரும் சந்தைகளில் வணிகம் செய்வதென்பது கைப்பிடி இல்லாத கத்தியை சுழற்றுவது போன்றதுதான்.

  ஆனால் தங்களுடைய கட்டுரைகள் எங்களுக்கு துணையாய் இருக்கும் வரை பயமொன்றும் எங்களுக்கு இல்லை.

  தங்களுடைய மிகுந்த பணிகளுக்கு இடையிலும் எங்களுக்காக தங்கள் வழங்கி வரும் சேவைக்கு மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

  தங்களுடைய கட்டுரையில் கடைசியில் உள்ள அந்த வரிகள் மிகவும் அருமை சாய். வாழ்த்துக்கள் உங்களுக்கு.

  இனிய காலை வணக்கம்.

 6. EAGARLY WAITING FOR MONDAY …….TO READ UR BLOG………………NICE.

 7. good morning sir. thank you very much.

 8. மிகத் தெளிவாய் nifty level -களையும் அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி சாய்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: