இந்த பெருமை அனைத்தும் இறைவனுக்கே….


 Thursday, August 7, 2008 1:32 PM

 From: @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@.com>

To: “SaiGanesh” top10saiganesh@rediffmail.com  Cc:  top10sai@yahoo.com

—–Inline Attachment Follows—–

அன்புள்ள சாய்கணேஷ்,

ஒரு சிறு தகவல் கீழே கொடுத்துள்ளேன்.

 31.05.08 முதல் இன்று வரை நான் f&o ல் பெற்றது – சுமார் 1,40,000/=.எனது சுயமுயற்சியில் நான் பெற்றது சுமார் 40,000 மட்டுமே.மீதி சுமார் 1.0 lacக்கு தாங்கள்தான் காரணம். இந்த தகவல் தங்களின் ஊக்கத்திற்காக மட்டுமே.to be frank with you, i feel that a new door has opened ahead of my path.. am not telling from the perspective of making money but from the view of satisfaction while making money..    

நான் தங்களது பதிவை எனது கூகுள் ரீடரில் வைத்துள்ளதால், படிப்பதோடு  சரி. பின்னூட்டங்கள் இட முடிவதில்லை.இதுபோலத்தான்,திரு.சரவணன் அவர்களது பதிவையும், இரண்டு வருடங்களாக படித்து வந்தாலும் பின்னூட்டங்கள் இடுவதில்லை.  @@@@@@@@@@@@@@@@@@@ @@@@ @@@ @@ @@ @@@@@@@@@@ @@@@ @@@@@ @@@@ @@@@@ @@@ @@@@ @@@@@ @@@@@@@@@@ @@@@@@@@@@@@@@@@@@@@@

 கண்டிப்பாக தங்களது பதிவுகளை பல நூறு பேர் தினமும் படிக்கிறார்கள். ஆனால், பின்னூட்டங்கள் சில பேரால் மட்டுமே இடப்படுகின்றன.ஆனால் கண்டிப்பாக தமிழ் நண்பர்களின் மத்தியில் நீங்கள் இருவரும் அசைய முடியாத பிம்பத்தை பெற்றுள்ளீர்கள்.இது நிச்சயம்!!    

நீங்கள் புத்தகம் எழுத ஆரம்பித்து உள்ளதாக இன்றுதான் அறிந்தேன்.மிகுந்த மகிழ்ச்சியும், வாழ்த்துகளும். பங்குவணிகம் சார்ந்த நல்ல நூல்கள் தமிழில் மிகவும் குறைவு.தங்களது நூல் அந்த வரிசையில் இடம்பிடிக்க வாழ்த்துக்கள். தங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில் கிழக்கு பதிப்பகத்தை தொடர்பு கொள்ளலாம் .அவர்கள் இந்த மாதிரி புதிய முயற்சிக்கு நிறைய ஊக்கமளிப்பார்கள். கிழக்கு பதிப்பகம், திரு.பத்ரி அவர்களின் மின்னஞ்சல் முகவரி – bseshadri@gmail.com. தங்கள் முயற்சி வெற்றியடைய மீண்டும் வாழ்த்துகள்.புதிய புத்தகங்கள் மற்றும் புதிய எழுத்தாளர்கள்  தொடர்பாக அவர் எழுதியுள்ள பதிவின் இணைப்பை விரைவில் தேடி எடுத்து தருகிறேன். 

 கீழே சில இணையதள இணைப்புகளை கொடுத்துள்ளேன்.தங்களுக்கு உதவும் என நம்புகிறேன் (தாங்கள் ஏற்கனவே இந்த தளங்களை பார்த்திருக்கவும் வாய்ப்புண்டு).

 பின்வரும் நாட்களில் நிறைய எழுத முயற்சிக்கிறேன் ( பின்னூட்டம் உட்பட). 

 அன்புடன்
@@@@@@@@@@@@@.@@

 ============================================================================================

நண்பர் திரு, @@@@@@@@@@@ அவர்களே

 தங்களின் மனம் திறந்த மடல் கிடைத்தது,  மிக்க மகிழ்ச்சி.  அதை படிக்கும் போது ஏற்பட்ட இனம் புரியா ஒரு உணர்வினை   வார்த்தைகளால்  சொல்ல தெரியவில்லை.   சிம்ப்ளா சொல்ல வேண்டும் என்றால்,  “ஆனந்தம்”.  இப்படி ஓபனாக எழுத எத்தனை பேருக்கு மனம் வரும். 

 தங்களுடன் 3 மாத பழக்கம் தான் (அதுவும் தொலைபேசியுலும்/ வலைப்பூவிலும்)  என்றாலும்தாங்கள் என்மீது காட்டும் அன்பும்ஆதரவும்  பல ஆண்டுகாலம் தங்களுடன் பழகியது போல் உணர்கிறேன்.  அதற்கு நான் நன்றி சொல்ல என்றும் கடமை பட்டுள்ளேன்.

 இந்த பெருமை அனைத்தும் “இதனை இதனால் இவன் முடிக்கும்”  என்று  என்னை  வழிநடத்தும் சாய் பாபா  மற்றும்  பிள்ளையார் பட்டி விநாயகரை  யே  சேரும்.  (கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் சந்தோஷம் என்பவர் நீங்கள்)

 தங்களின் கடிதத்தை பதிவாக இட அனுமதித்ததுக்கு  மிக்க நன்றி, கூடுமானரை தங்களின் அடையாளத்தை வெளிபடுத்தா வண்ணம், பதிவிடுகிறேன்.  

 தங்களின் வெற்றிக்கு எனது பரிந்துரைகளை விட, தங்களின் வியாபார அனுகுமுறை தான் முதற் காரணம்.

 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 

 குத்தொக்க சீர்த்த இடத்து.

 (பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.)

 இந்த திருக்குறள் நமது பங்கு வணிகத்திற்கு மிக பொறுந்தும்.

 தாங்களின் செயலும் அது போல் தான் உள்ளது, கடந்த 2 மாதங்களில் சுமார் 200 பரிந்துரைகள்  நான் வழங்கி இருந்தாலும் அதில் நீங்கள் பயன்படுத்தியது எனக்கு தெரிந்து 7 ல் இருந்து 10 ஆகத்தான் இருக்கும். 

என்ன தான் நாங்கள் பரிந்துரைத்தாலும் ஏற்கனவே நான் ஒரு முறை சொன்னது போல் அதன் வெற்றி / தோல்வி தங்களின் என்ட்ரி (Entry) / எக்சிட் (Exit) –ல் தான் உள்ளது.

 நண்பரே எனக்கு ஒரு பேராசை கூடிய விரைவில் 10L/ 25L / 50L / 75L /1C என்ற  அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி தங்களின் பயணம் அமைய வேண்டும், அதற்கு நானும் ஒரு கருவியாக இருக்க வேண்டும்.

 Satisfy the person who expect from YOU

 rather than

surprising the  person who has never expected

anything from you.

தாங்கள் அனுப்பிய இந்த எஸ் எம் எஸ் –  போல் என்னை தேடிவரும் நபர்களுக்கு என்னால் முடிந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.

தாங்கள் தொகுத்து வழங்கிய இணையதளங்கள் அனைத்தும் மிகவும் பயண் உள்ளது, அதன் பலன் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

வாழ்க வளமுடன்.

என்றென்றும் நட்புடன்.

சாய்கணேஷ். 

www.incrediblecharts.com/
www.stockcharts.com
www.chartfilter.com
http://www.4shared.com/network/search.jsp?sortType=1&sortOrder=1&sortmode=2&searchName=edward+magee+&searchmode=2&searchName=edward+magee+&searchDescription=&searchExtention=&sizeCriteria=atleast&sizevalue=10&start=0
www.tradingfives.com
http://chart-patterns.netfirms.com/bearflag.htm
http://www.stockblogs.com/Category.aspx?uniqueId=3
http://www.trading-naked.com/library/LBR_Scalp_setups.pdf
http://scans.marketgauge.com/help/Guide%20to%20Effective%20Daytrading.pdf
http://candlesticker.com/Cs74.asp
http://www.swing-trade-stocks.com/support-files/howtoreadcharts.pdf

2 responses to this post.

  1. எங்கள் அனைவரின் எண்ணத்தையும் அவரே பதிவு செய்து விட்டார். நான் மட்டும் காரணமல்ல என்று தங்களின் தன்னடக்கத்தையும் பெருந்தன்மையையுமே வெளிப்படுத்தியுள்ளீர்கள்.உங்களின் புத்தகம் தமிழ் பங்கு வணிக உலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும். அதற்கு எங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
    மிக்க நன்றி சாய்.

  2. THANGALATHU SEVAI THODARATTUM.

    VAALTHUKAL.

    NANDRI.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: