சந்தையின் போக்கு 14.08.2008


அனைவருக்கும் முன் கூட்டிய சுதந்திர தின வாழ்த்துகள், மிக முக்கியமான நிகழ்வு அபிநவ் பிந்த்ரா நமக்கு தங்கத்தை சுதந்திரதின பரிசாக வழங்கியுள்ளார்.

நேற்றைய பதிவின் கருத்துகளில் எந்த மாற்றமும் இல்லை, அதே நிலை தான் தொடர்கிறது அதிகம் எதிர்பார்க்கபட்ட P-Notes பற்றிய அறிவுப்புகள் சந்தையில் பெரிய சரிவுகளை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் தாமதபடுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.

உலக சந்தைகள் அனைத்தும் ஒரு வித குழப்பமான நிலையில் உள்ளது தெரிகிறது. கச்சா என்னையின் விலை 112 $ ல் இருந்து 116 $ க்கு உயர்ந்து உள்ளது.

எதிர்பார்த்ததை போல் நேற்றைய தினம் சந்தை கேப் டவுனாக துவங்கினாலும், அதை உடனடியாக நிரப்பியது, மேலும் சரிவுகளுக்குகான அறிகுறியே.

நமது பெரிய அண்ணன் (US -Dow Jones) 110 புள்ளிகள் சரிவடைந்து பதக்க பட்டியலில், நம்மை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இன்று அவரை முந்தி செல்ல நம்ம அண்ணன் நிப்டி அவர்கள் முயற்சிப்பார், இன்றும் கேப்டவுனாக துவங்கலாம். 4475 அதற்கு அடுத்து 4440 /4370 என்ற நிலைகள் உடைபட்டால் மீண்டும் 4000 கீழ் நிலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்கவும். ஆனால் அது மிகவும் சிரமம் ஏன் என்றால் – 4440 / 4370 மிக வலுவான சப்போர்ட்டாக உள்ளது.

அடுத்த சில நாட்கள நமது சந்தையை உலக பங்கு சந்தைகள் தான் வழி நடத்தும், அடுத்து வரும் 3 நாட்கள் விடுமுறை என்பதால், மிக கவனமாக செயல் படவும்.

 டெக்னிகல் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கச்சா என்னையின் Crude 1 மணி நேர சார்ட் பார்க்கவும் 112 $ என்ற நிலையில் டபுள் பாட்டம் (3 என்று கூட சொல்லலாம்) உருவாகி 116$ என்ற நிலையில் ஒரு கப் (Cup)  உருவாகி அதன் அருகில் கூடவே ஒரு (Handle) ஹான்ட்லும் உருவாகி வருகிறது.   இதுதான் Cup and Handle Pattern

Cup and Handle

Cup and Handle

“Dont Say Yes, When You Want to Say No.”

நேற்றைய பதிவுக்கு – பின்னூட்டம் இட்ட திருமதி லதா, திருமதி ஜான்சி , திரு சபரி, திரு மோகன் ராஜ்,   திரு அருண்,  திரு சாஜ், திரு நவீன்,   திரு சதீஷ் ,  திரு முகம்,   திரு கணேஷ்,  திரு செந்தில், திரு வடிவேல்சாமி, திரு அன்சார், திரு பலா, திரு சோபன் ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

பாலா – எனக்காக ஓ போடும் உங்களை போன்ற நல் உள்ளங்களுக்கு நானும் ஒரு ஓ போடுகிறேன்.

Advertisements

19 responses to this post.

 1. நன்றி

 2. நன்றி சாய் …சந்தைகள் ‘பொறுத்தது போதும் பொங்கி ஏழு’ என்று 4500 – 4600 விட்டு வெளியே வந்தால் போதும்… 10.00 Am வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் …

 3. Dear Sai
  Thank you. Plz explain about the cup and handle pattern and how it impacts.

 4. HAPPY INDEPENDENCE DAY !!!

 5. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 14, 2008 at 9:31 முப

  மதிப்பிற்குரிய சாய் அவர்களுக்கு,

  உங்களுக்கும் மற்ற நம் நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சுதந்திர தினம் மிகவும் விசேசமானது, ஏனென்றால் இதனை நாம் ஒரு ஒலிம்பிக் தங்க பதக்கத்துடன் கொண்டாடப் போகிறோம்.

  இத்தகைய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த அபினவ் பிந்த்ராவுக்கு கோடான கோடி நன்றிகள்.

  ” P-Notes பற்றிய அறிவுப்புகள் சந்தையில் பெரிய சரிவுகளை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் தாமதபடுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.” P- Note பற்றி தாங்கள் கூறியுள்ள இந்த தகவல் மிகவும் உதவியாய் இருக்கும் எங்களுக்கு

  தாங்கள் கூறியுள்ள நிப்டி சப்போர்ட் லெவலில் கவனமாய் இருப்போம். crude oil- இன் சார்டிற்கு மிக்க நன்றி சாய். இதுவரை கப் அண்ட் கேண்டில் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததற்கு மிக்க நன்றி.

  தங்களுடைய கட்டுரைகள் மிகவும் அருமை சாய். எங்களுக்காக காலையில் சிரமம் பார்க்காது செய்யும் இந்த சேவைக்கு அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள்.

  இனிய காலை வணக்கம்.

 6. உங்கள் நகைசுவையன விளக்கம் அருமை. உங்கள் சேவை பங்குசந்தைக்கு தேவை

 7. வணக்கம் சாய் சார்,
  முதலில் ஒரு கோடி நன்றிகள்,முதல் நன்றி படத்துடன் கூடிய விளக்க வரைபடத்திற்க்கு{எளிதாக புரியும்படி உள்ளது}இரண்டாவது நன்றி இது
  போல ப்ளோக்ல என் பெயர பார்க்கவச்சதுக்கு,நண்பர் மோகன்ராஜ்
  அவர்களுக்கு ஏற்ப்பட்ட அனுபவம்{07/08/2008} எனக்கும்
  உணரமுடிகிறது.இது போல உங்களிடம் இருந்து நிறைய வரைபட
  விளக்கங்களை எதிர்பார்க்கிரறேன்.மீண்டும் ஒருமுறை மிக்கநன்றி சார்

 8. உங்கள் சேவை எங்களுக்கு தேவை.
  சார் நாளை ஏதாவது மார்க்கெட் Technical பற்றி சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி.

 9. உங்களுக்கும் மற்ற நம் நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேaன்

 10. good morning sir, your thoughts very excellent. its very useful to me. once again heartly thank you.

 11. Posted by கண்ணன் on ஓகஸ்ட் 14, 2008 at 10:10 முப

  thank you.sir

 12. hello sir and all frnds,

  சுதந்திர தின வாழ்த்துகள்…
  neenga sonnathu mathiri oru vitha kulappamana mananilai neria per ku (including me) uruvaairuku enpathu marukka mudiyaatha unmai..

  baathahangalai saathagamaaki kondonu porul serpathe nandru endru neengal andru sonnathu unmaiyaanathu indru..

  tnx sai sir..

 13. புரியக்கூடிய , படங்களுடன் கூடிய நகைச்சுவையான எழுத்து .முன்கூட்டிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்

 14. சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  உங்களுடைய சந்தையின் போக்கு பதிவு

  நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது.

  அத்துடன் வரைபடம் மற்றும் வரைபட

  விளக்கம் கொடுப்பது அருமை.

  நன்றி.

 15. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 14, 2008 at 10:33 முப

  Good Morning and thank you very much for your views sir.

 16. Advance wishes for independence day to all.மிகவும் எளிமையான புரியும்படியான விளக்கம் chart உடன் கூடிய விளக்கம் எங்களைப் போன்ற புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. nifty levels மிகச் சரியாக கொடுத்துள்ளீர்கள்.நாளைய பதிவில் cup&handle pattern விளக்கத்தை எதிர்பார்கிறோம். மிக்க நன்றி சாய்.

 17. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  வர வர நீங்க சந்தையை பற்றி அக்கு வேற ஆணி வேற ஆக்கி அலசுறீங்க….

  தினமும் உங்கள் பதிவை எதிர்பார்த்து……

 18. சார் நாளை முடிந்தால் ஏதாவது சுதந்திர தினம் பற்றி இணைஏற்றம் செய்யுங்களேன் படங்களுடன். நாளை எதிர்பார்கிறேன் . நன்றி.

 19. Posted by V.SURESH, SALEM on ஓகஸ்ட் 14, 2008 at 8:17 பிப

  We are expecting some books on intraday trading in tamil from you. kindly concentrate on it which will be useful for thousands of tamil people who are doing intraday trading. Expecting your view on this.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: