சந்தையின் போக்கு 13/08/2008


ஆஹா! என்ன ஒரு சந்தோசம்,  ஆச்சரியம்!   நேற்று தேள் கொட்டியது நமக்கு ஆனால் பாருங்கள், பங்காளி பெரிய அண்ணனுக்கு நெறி கட்டி விட்டது.   என்ன கொடுமை சார் இது. பங்காளி நாள் நெடுகிலும் சரிவடைந்து முடிவில் 140 புள்ளிகள் சரிவை கண்டுள்ளார்.

தற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகளிலும் அமெரிக்க சந்தையின் தாக்கம்  அதிகமாக தெரிகிறது.

என்னை போன்று இந்த சரிவை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு – இது சுகமான தேள் கடி.

இன்று நமது சந்தை கேப்டவுனாகத்தான்  ஆரம்பம் ஆகும் என்று எதிர் பார்க்கிறேன். (சரிவின் வேகத்தை தடுக்கும் காரணியாக)

 4435-4420 என்ற நிலைகளை கவனிக்க வேண்டும்.  இந்த நிலைகள் உடைபட்டு 4400 க்கு கீழ் சென்றால்… டன்டணக்காதான் FII’s  சரோஜா சாமான் நிக்காலோ என்று  பெட்டி படுக்கையை கட்டி விடுவார்கள்.

அடுத்த இரு தினங்கள் மிக எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்,  சூதாடி சித்தர்கள் சிறிய வர்த்தகர்களை ஏமாற்றும் சில வித்தைகள் காட்டுவார்கள்.

 4713-4669–4646–4599–4562-45354500–4471–4441–4370.

இந்த வரைபடத்தை பாருங்கள் 4650 நிலையை உடைக்க 2/3 முறை முயற்சித்தும் அது நடக்க வில்லை. இந்த நிலை உடைபடாதவரை அதிகம் சரிவுகளுக்குதான் வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். இதை அதிக வாய்பப்பில்லாத ஒரு வாய்ப்பாக ஜூலை 29 அன்று குறிப்பிட்டதை கவனிக்கலாம்.

டபுள் டாப்

டபுள் டாப்

சிக்கல்களைத் தீர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால் நம்முடைய சிக்கலே, எது சிக்கல், ஏன் சிக்கல், என்ன விதமான சிக்கல் என்று புரிந்து கொள்ள முடியாதது தான்!
நேற்று படித்தது.
குறுகிய கால முதலீட்டிற்கான பரிந்துரைகள்.
BUY NAGARJUNA FERT @ 42-43 TARGET 57 S/L 36

BUY Alok Industries @ 40-43 TARGET 67 S/L 36  – You Can invest in this counter for long term also – இந்த நிறுவனத்தை பற்றி எனக்கு நன்கு தெரியும் என்பதால்.

இதன் வளர்ச்சி மிக நன்றாக உள்ளது, இந்திய  ஜவுளித்துறையில்  தனக்கென்று தனி இடத்தை பிடித்து உள்ளது குறிப்பிடதக்கது.

மலரும் நினைவு – எனக்கு பங்கு சந்தையின் துவக்கம் இவர்களின் முதல் பப்ளிக் வெளியீட்டில் தான்.

இங்கு தரப்படும் பரிந்துரைகள் அனைத்தும் குறுகிய கால லாபத்தை நோக்கமாக கொண்ட டெக்னிகல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுகின்றன.

 தயவு செய்து 10000 மேல் சிறிய பங்குகளில் முதலீடு செய்யவேண்டாம். அதேபோல் 5-12% லாபத்தில் உடனடியாக வெளியேறுங்கள்.

முதலீட்டு முடிவுகளை தயவு செய்து நன்கு ஆராய்ந்து உங்களுக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் சுய நம்பிக்கையுடன் எடுங்கள.

நேற்றைய பதிவுக்கு – பின்னூட்டம் இட்ட திருமதி ஜான்சி , திரு மோகன் ராஜ்,  , திரு அருண்,  திரு சாஜ், திரு நவீன்,   திரு சதீஷ் ,  திரு முகம்,   திரு கணேஷ்,  திரு சரவணன்  திரு சோபன் ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

திரு மோகன் ராஜ் – தங்களின் பின்னுட்டத்திற்காகவே அதிகம் எழுத ஆசை, பதிவை வலையேற்றிய உடன் சின்ன குழந்தை போல் அடிக்கடி கிளிக் செய்து பார்க்கிறேன், தங்களின் பின்னூட்டம் என்ன என்று பார்ப்பதற்காக.

திரு முகம் – இன்று உங்கள் முகம் மலர்ந்த முகமாக இருக்கும் என்று நம்புகிறேன்

சதீஷ் – என்னுடைய யாஹு ஐ டி – top10sai@yahoo.com, வாழ்த்துகள்.

திரு சோபன் – சொல்கிறேன் என்று வருத்தபடாதீர்கள், எவ்வளவு பொறுமை சார். ஸ்டாப் லாஷ் என்று ஒன்று இருக்கிறது அது மிக அவசியம். நிப்டியை பொறுத்தவரை அதிபட்சம் 40/50 பாய்ன்ட்ஸ் அதற்கு மேல் காத்திருக்க கூடாது.  இன்றை நிலையில் வரும் ஆனா வாரது…. என்று தான் சொல்ல முடியும்.  தயவு செய்து அனைவரும் ஷ்டாப் லாஸ் சரியான இடத்தில் புக் செய்யுங்கள்.   சதீஷ் உங்களுக்கும் தான்.

Advertisements

14 responses to this post.

 1. மிகவும் நகைச்சுவையான, தெளிவான, மிகத் துல்லியமான கணிப்பு. புதியவர்களுக்கும் புரியும்படியான விளக்கம். fantastic sai.
  thanks a lot.

 2. எளிமையான மற்றும் உபயோகமான விளக்கம்

 3. நன்றி சாய்…

 4. Thanks Sai for your technical charts articles, good analysis, keep it up.

 5. 100% thks 100% ok

 6. வணக்கம் திரு.சாய் சார்,
  முதலில் செந்தில் மதுரை அவர்களுக்கு,ஒரு மனமார்ந்த நன்றி…..
  {எனது கணினி சரி செய்து குடுத்ததற்கு} ப்லோக் களைகட்டுகிறது
  வாழ்த்துக்கள் சார்,உங்கள் விளக்கம் நகைச்சுவையுடன் கூடிய
  ரசிக்கும் படியான எழுத்து.வரைபட விளக்கம்கு நாங்க ஒரு பெரிய
  ஓ போடுறோம்.உங்களிடம் இருந்து இது மாதிரி நிறைய புதுமைகளை
  எதிர்பார்க்கிறேன்.மேலும் நீங்க தினம் ஒரு மொழி குறுப்பிடுவது அருமை
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்………நன்றி சார்

 7. good morning sir, your comments about market very useful thank you.

 8. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 13, 2008 at 10:02 முப

  திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய எழுத்து நடை அட அடடா! மிகவும் அருமை. மிகவும் நன்றாக இருக்கிறது. தாங்கள் கூறியபடி இந்த தேள் கடி மிகவும் சுகமானதுதான் நம்மைப் போன்றவர்களுக்கு.

  எவ்வளவு நாட்கள் இதை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தோம். நேற்றும் இன்றும்தான் அந்த வாய்ப்பை நமது அண்ணன் நிப்டி நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்.

  பொறுத்திருந்து பார்ப்போம் நமது அண்ணனின் விளையாட்டை. இந்த மாதிரியான தருணங்களில் உங்களுடைய கட்டுரைகள்தான் சாய் எங்களுக்கு மிகுந்த வழிகாட்டியாக உள்ளது.

  உங்களுடைய கட்டுரையை தினமும் காலை படித்தால்தான் மிகுந்த மன நிறைவு. உங்களுக்கு நன்றி என்ற ஒரு சொல் மட்டும் போதாது என்றே நினைக்கிறேன்.

  இருப்பினும் மனமார்ந்த நன்றி எங்கள் அனைவரின் சார்பாகவும்.

  தங்களுடைய சார்ட் அப்டேசன்க்கு மிக்க நன்றி.

  நேற்று படித்து நீங்கள் எழுதியிருக்கும் வரிகள் மிகவும் அருமை.

  இனிய காலை வணக்கம்.

  தாமதத்திற்கு மன்னிக்கவும் சாய்.

 9. dear sai
  you are correct.

 10. Thanks Sai, this is a learning curve, will keep the SL in future trades, hoping for the good. Please continue writing.

  Cheers
  Soban

 11. hello sir,,

  again today late.. i hav missed the poening of the mkt.. but late a unga blog padikum pothu athu than nify la nadakuthu… so miss pannitame nu varuthamilla..
  but u hav given me some important tips to watch out during mkt hours.. tnx to u…
  iniku neenga kuduthu formula la graph oditu iruku sir..

  arun

 12. A journey of a thousand miles begins with a single step. So you have started

 13. keep it up sai.

  thanks.

 14. நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: