சந்தையின் போக்கு 11.08.2008


கடந்த சில நாட்களாக நம்ம அண்ணன் என் வழி தனி வழி என்று நடை போடுகிறார்.. பங்காளிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக 6 புள்ளிகள், உயர்ந்து தன்னை நிலைப்படுத்தி கொண்டார். நம்ம பக்கத்து வீட்டுகாரனின் தடுமாற்றத்தை கண்டும் அஞ்சவில்லை.

நம்ம ஆளின் ஆறுதலால் என்னவோ, பங்காளியும்  வியாழன் அன்று ஏற்பட்ட சரிவையும் அதற்கும் மேலாக 84 புள்ளிகளையும் பிடித்து ஒரு வலுவான நிலையில் உள்ளார்.

 ஆனால் அதன் தாக்கம் இங்கு இருக்குமா என்பதில் சந்தேகமே…  கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை குறைந்து உள்ளது,  சாதகமாக அமையுமா என்பதில் பல மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

 தங்கத்தை பொறுத்த வரை – அடுத்து துவங்க இருக்கும் திருமண சீசன் / வட இந்திய திருவிழா சீசன் ஆகியவை தங்கத்தின் தேவையை/விற்பனையை நமது நாட்டில் அதிகப்படுத்தும் அதன் காரணமாகவும்  விலை ஏற வாய்ப்பு உள்ளது.

 கச்சா எண்ணெய் – தற்போதைய விலையான 115$ என்பதில் வலுவான நிலையில் இருக்கும் என்று அந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ள நண்பர்கள் கூறுகிறார்கள்… மீண்டும் அதில் ஒரு ஏற்றத்திற்கான வாய்ப்பு இருப்பதால், அதிக முதலீடு வாய்ப்புகள் உள்ளது அது உண்மை ஆகும் பட்சத்தில், அதற்கான பணம் பங்குசந்தைகளில் இருந்து தான் செல்லும் என்பதும் கவனிக்க வேண்டிய விசயம்.

 ஈரானை மையமாக வைத்து வளைகுட பகுதியில் ஒரு பதட்டம் உருவாக்கப்படுகிறது, அதற்கு நம்ம பங்காளியின் அலுகுனி ஆட்டம் தான் காரணம். (கச்சா எண்ணெயின்  விலையை  ஏற்றத்தான்)

சென்றவாரம் சொன்னதுபோல்….  இன்னும் மதில் மேல் பூனையாகத்தான் உள்ளது.

வாய்ப்புகள் – மேலே செல்ல – 25% ஆகவும் – 75% சரிவுகளுக்கும் உள்ளது. 

சில  தினங்களுக்கு தின வர்த்தகம் ( DAY TRADING) மட்டும் செய்வது நல்லது.

தற்போது துவங்கியுள்ள ஆசியசந்தைகளில் ஏற்பட்டுள்ள ஒரு உற்சாகம் நம்ம அண்ணனை என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து  பார்க்கலாம்.   

இன்று இரவு அமெரிக்க சந்தையின் நிலை குறிப்பாக அடுத்தடுத்த நாட்களில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படப்போகும் மாற்றங்களை பொறுத்துதான்  நமது சந்தையின் அடுத்த நகர்வுகள் தீர்மானிக்கப்படும்.

இன்றை நிலையில் – புதிய உயர்வுகளுக்கு ஆசைபட்டு (LONG POSITION) எடுப்பது மிகவும் ரிஷ்கானதுதான். ஏற்கனவே சரிவுகளை எதிர்பார்த்து (SHORT POSITION) எடுத்தவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

வெள்ளியன்று முடிவடைந்த சந்தையை பொறுத்து நிப்டி ஃப்யூச்சரின் நிலை –

4737–4687–4626–45994572-45474497–4452–4441–4434.

இறைவா என்னால் தீர்க்க முடிந்த சிக்கல்களைத் தீர்க்கும் வழியினையும், ஆற்றலையும் எனக்குக் கொடு!

தீர்க்க முடியாத சிக்கல்களை ஏற்றுக்கொண்டு வாழும் மனப்பக்குவத்தைக் கொடு!இந்த இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டைப்

புரிந்து கொள்ளும் அறிவைக் கொடு!

எனக்கு பிடித்த  பிராத்தனை
குறுகிய கால முதலீட்டிற்கான பரிந்துரைகள்.
Buy Voltas – 135-137 Target  160/174 Stop loss 127
 இங்கு தரப்படும் பரிந்துரைகள் அனைத்தும் குறுகிய கால லாபத்தை நோக்கமாக கொண்ட டெக்னிகல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுகின்றன.

 தயவு செய்து 5000-10000 மேல் சிறிய பங்குகளில் முதலீடு செய்யவேண்டாம். அதேபோல் 5-12% லாபத்தில் உடனடியாக வெளியேறுங்கள்.
முதலீட்டு முடிவுகளை தயவு செய்து நன்கு ஆராய்ந்து உங்களுக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் சுய நம்பிக்கையுடன் எடுங்கள.
 

 

பிற்சேர்க்கை….

நேற்று குறிப்பிட்டது போல் 2.30 பேக்டர், கவனிக்க வேண்டிய விசயம் எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக திசை மாறும்.

வெள்ளிகிழமை பதிவுக்கு – பின்னூட்டம் இட்ட திருமதி ஜான்சி , திரு மோகன் ராஜ்,  திரு பைசல், திரு அருண்,  திரு கங்கை கணேஷ், திரு சாஜ், திரு சுரேஷ்,  திரு கனக ராஜ்,  திரு சரவணன்,  திரு கனகவேல், திரு வடிவேல்சாமி,  திரு சதிஷ் திரு செல்வா, ஆகியோருக்கு மிக்க நன்றிகள்

Faizal :  thanks for your information..

Ganesh : Sure i will post new patterns.

Advertisements

10 responses to this post.

 1. நன்றி சாய் சார். சந்தை கொஞ்சம் சரிந்தால் தைரியமாக வணிகத்தில் ஈடுபடலாம்.
  ஆனால் ஒலிம்பிக் நடந்து கொண்டிருக்கும் சீனா சந்தைகள் மந்தமாகவே உள்ளன
  என்ன காரணம் ?

 2. நன்றி சாய் சார்

 3. Sir where Find Nifty Monthly Graph?

 4. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 11, 2008 at 9:43 முப

  திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய சந்தையைப் பற்றிய கட்டுரை மிகவும் அருமை. தற்போதைய சூழ்நிலையில் சந்தை இன்னும் உயரும் என்பதற்காக பங்குகள் வாங்குவது என்பது மிகவும் ரிஸ்க் என்று கூறியுள்ளீர்கள்.

  தங்களுடைய இந்த அறிவுரை எங்களைப் போன்ற வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். மிக்க நன்றி.

  தங்களுடைய இந்த பணி மேலும் மேலும் தொடர வேண்டுமாய் அனைவரின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.

  தங்களுடைய நிப்டி நிலைகள் தினவர்த்தகத்தில் ஈடுபடும் நண்பர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்.

  இனிய காலை வணக்கம்,,,,

 5. good morning sir, thank you

 6. THANK YOU FOR YOUR INFORMATION.

  KEEP IT UP SAI SIR.

 7. hi sir,

  mkt opened as we all expected… but at this momemt i was stunned by fabolus performance of ABHINAV.. wow wat a momemt…..

  i think u r absolutely correct in ur view about long positions…

  thanks for ur comment

 8. INTERESTING &INFORMATIVE HUMOROUS WRITTING. KEEP IT UP
  “BE THE CHANGE YOU WANT TO SEE IN THE WORLD”
  KEEP IT UP.

 9. Posted by கண்ணன் on ஓகஸ்ட் 11, 2008 at 3:17 பிப

  நன்றி சாய் சார்

 10. sir
  i went short on nifty at Rs.4500. on 8-08-08.pls guide me whether to hold it or to cover it(ie in loss)
  with regards
  mugham

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: