சந்தையின் போக்கு


“தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்” என்பது நமது சந்தைக்கு இன்று மிக பொறுந்தும்……….

ஏன் என்றால் நேற்று இரவு தேள் கொட்டியது நம்ம பங்காளி “பெரிய அண்ணன்”  (அமெரிக்கா)  வீட்டில். அதை பார்த்து நம்ம ஆள் சும்மாவா இருப்பார், பதற மாட்டார் ??

ஏற்கனவே நம்ம அண்ணன் ரெம்ப களைத்துப்போய் மேலே ஓட முடியாமல்  சிரமபடுகிறார்.

இன்று மந்தமாக (கேப் டவுன் ஆகவும் வாய்ப்பு உள்ளது) ஆரம்பித்து நாள் நெடுகில் சரிவடையாலாம்.

ஏற்றம் தற்காலிகமானதுதான் என்று சொல்லி வந்தேன், அந்த தற்காலிகமான ஏற்றம் முடிவுற்றது என்று நம்புகிறேன்.

ரிலையனஸ் நிறுவன பங்குகள் நேற்றைய முடிவில் பலவீனம் அடைந்துள்ளது, கவனிக்க வேண்டிய விசயம்…..

ஜூலை 29 அன்று நான் குறிபிட்டது (5 வது பாய்ண்டாக) போல் 4640 ல் தடைபட்டு உள்ளது, உறுதி படுத்த இன்னும் ஒரு சில தினங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

இரு தினங்களுக்கு முன்பாக கூறியது போல் பணவீக்க விகிதம் 12.01 ஆக வெளி வந்துள்ளது.. (இதன் நம்பகதன்மை கேள்வி குறியாக உள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை 20% மேல் உயர்ந்து உள்ளது, ஆனால் பணவீக்க விகிதம் மட்டும் 5% அளவில் தான் உயர்ந்துள்ளதாக சொல்வது எப்படி என்று தெரியவில்லை….

உதாரணத்திற்கு – அரிசி  – 30/- அளவுக்கு உயர்ந்துள்ளது, ஒரு காலத்தில் ஏழைகளின் காய்கறி என்று சொல்லபட்ட கத்தரிக்காய் 36/- 40/- ல் உள்ளது.. நாம் பேசிக் கொண்டிருக்கும்  பணவீக்கம் தற்போது தான் அடித்தட்டு மக்களையும் பாதிக்க ஆரம்பித்து உள்ளது…..

4763 — 4720 — 4654 — 4602 — 4590 — 4566 –4509 — 4477 — 4465 — 4443

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்……  கவியரசு.

பிற்சேர்க்கை….

நேற்று குறிப்பிட்டது போல் 2.30 பேக்டர், கவனிக்க வேண்டிய விசயம் எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக திசை மாறுகிறது.

நேற்றைய பதிவுக்கு – பின்னூட்டம் இட்ட திரு மோகன் ராஜ், அருண், செந்தில் குமார், சாஜ், சுரேஷ், கனகராஜ், சரவணன், திருமதி லதா, திருமதி ஜான்சி  ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

திரு மோகன்ராஜ் – தாங்கள் கூறுவது உண்மைதான் நகைச்சுவை உணர்வு மிக அவசியம் ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் வீட்டிலும் / வெளியிலும் நம்மை சுற்றி ஒரு இறுக்கமான வேலியை போட்டு கொண்டுள்ளோம். (நானும் தான்) அது தவறு.

திரு கனகராஜ் – டாக்டர் ரெட்டி சார்ட் பார்த்தேன் டபுள் பாட்டம் இல்லை எப்படி சொன்ன்னீர்கள் என்று தெரிய வில்லை,  ஒரு ஹெட் அன்ட் ஸோல்டர் உருவாகிறது போல் தோன்றுகிறது,  புள்ளிஷ் ட்ரேன்ட் என்று எடுத்து கொள்ளலாம். வாழ்த்துகள். முய்ற்சிகள் தொடரட்டும்.  முடிந்த வரை சார்ட்டை பைலாக மாற்றி மெயிலில் அனுப்பினால் நன்றாக இருக்கும்.

Advertisements

13 responses to this post.

 1. தங்களின் ஆலோசனை நன்றி… நன்றி…

  நான் தினமும் பார்க்கும் சில வலை பகுதிகள்

  மிகவும் அருமையான வலைபகுதிகள். (அணைத்தும் ஓர் இடத்தில்)

  http://deadpresident.blogspot.com/

  பங்கு ஆலோசனை.

  http://indiaearnings.moneycontrol.com/sub_india/news.php?category=16

  மிக துல்லிமான சந்தை கனிப்புக்கு மற்றும் சிறந்த ஆலோசனை
  http://panguvaniham.wordpress.com/

  //கல்வியின் நோக்கம், காலியான மூளையை எதையோ சொல்லி நிரப்புவதல்ல. அறிவாலோ, உண்ர்வாலோ அடைபட்டுப் போயிருக்கின்ற மூளையை ஒரு திறந்த மனமாக மாற்றுவதுதான், திறந்திருக்கிற மனமே, சிக்கல்களுக்குச் சிறந்த தீர்வுகளைத் தரும்…….. //

  நீங்கள் மேலே கூறியது போல் உங்கள் சேவை மூலம் எங்கள் மூளையை ஒரு திறந்த மனமாக மாற வேண்டும்….

 2. Hai Ganesh Sir ,

  Please give any nifty Call , Put Options

  உங்கள் சேவை தினமும் தொடர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

 3. Dear Sai,

  Exaxt analysis and correct one, and when you have free time please give us more chart technical analysis. We are eagerly exciting it.

  Thanks.

 4. திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய மிகுந்த பணிகளுக்கு இடையிலும் சிறிது நேரத்தை ஒதுக்கி சந்தையைப் பற்றி இக்கட்டுரையை எழுதி தங்களது வலைப்பூவில் ஏற்றியதற்கு அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

  சந்தை தற்போது எந்த திசையில் செல்லப் போகிறது என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி.

  தங்களின் கருத்தைப் போலவே இரண்டு வாரமாக தொடர்ந்த காளையின் ஆதிக்கம் இன்றுடன் முடிவுக்கு வரும் என்று சில தகவல்கள் சொல்கின்றன.

  தற்போதைய நிலையில் பெரும்பகுதியினரின் விருப்பமும் சந்தை சிறிதாவது கீழே வரவேண்டும் என்பதுதான்.

  அப்பொழுதுதான் திரும்பவும் சந்தையில் வணிகம் செய்வதற்கு பயம் இல்லாமல் இருக்கும்.

  எனினும் பொறுத்திருந்து பார்ப்போம் சந்தையின் விளையாட்டை.

  கட்டுரைகள் அனைத்திலும் உங்கள் நடை மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. மேலும் இது போன்ற இக்கட்டான தருணங்களில் தங்களுடைய கட்டுரைகள் எங்களுக்கு மிகுந்த வழி காட்டியாக உள்ளன.

  தங்களது சேவை என்றும் தொடர வேண்டும்.

  இனிய காலை வணக்கம்,

  நட்புடன்,
  மோகன்ராஜ்.

 5. hello sir,

  unga blog la padichitu ennoda view va elutharthuku munnadi unnga nifty level paakanum nu nenachen.

  inikum pinniteenga. 4504… eappadi sir ippadi.. inbetween neenga kudukra chinna chinna karuthu sirika vaikuthu sinthikkavum vaikuthu sir…

  thodarattum intha pani

  nandriyudan
  arun

 6. தங்களின் ஆலோசனை நன்றி… நன்றி

 7. DAY BY DAY YOUR BLOG IS IMPROVING.NOTHING HAPPENS UNLESS FIRST A DREAM.

 8. ஆம் நானும் காளையின் ஆட்டம் தற்காலிகமாக முடிவிற்கு வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.3700க்கு பிறகு 4600 வரை எந்த ஒரு பெரிய காரணமும் இல்லாமல் வந்தாகிவிட்டது…..

  இறங்குமுகம் பெரிய அளவில் இருக்காது என நாம்புவோம்! 4000 வரை ஜல்லி அடித்துவிட்டு மீள வாய்ப்புகள் உள்ளன!

  தங்களின் பதிவுகள் நன்று.

  சரவணன்.

 9. THANK YOU SAI SIR…

  KEEP IT UP..

 10. திரு. சாய் கணேஷ் அவர்களின் முயற்சிக்கு முதலில் என் வாழ்த்துக்கள்.போன மாதம் எனக்கு அறிமுகம் ஆனாலும், நீண்ட நாள் அறிமுகம் ஆனவர் போன்ற உணர்வு. சந்தை பற்றிய செய்திகளை சரியாக கணித்து என்னை போன்ற சிறு முதலீட்டாளருக்கு நட்டமின்றி லாபம் மட்டுமே அடைய உறுதுணையாய் உள்ளார். வாழ்த்துக்கள்.
  SUCCESS IS THE SUM OF SMALL EFFORTS,REPEATED DAY IN & DAY OUT.

  ANY ONE WHO IS FOLLWING HIS GUIDELINES IS SURE TO SUCCEED.I AM SUCCEEDING.

 11. மிகவும் Arumai Mr.Sai…

  // திரு செல்வா எப்படி இருக்கிங்க /// ரெம்ப நாள் ………

 12. Hai Sai sir,

  தாங்கள் கூறியவாறே சந்தை தடுமாறுகின்றது. ஆனால் எதற்காக சந்தையை மேலே கொண்டு செல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சிறிய நெகடிவ் செய்திகள் கிடைத்தாலும் Nifty 4000 சாதரண டார்கெட் ஆக இருக்கலாம்
  என்றே நினைக்கிறேன்.

 13. Posted by K. Mohanraj, KARUR on ஓகஸ்ட் 8, 2008 at 4:12 பிப

  திரு சாய் அவர்களுக்கு,

  தற்போதைய சந்தையில் நீங்கள் சொன்னது போல் ஆபரேட்டர்கள் புகுந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

  ஆனால் இவர்களின் இந்த விளையாட்டில் பாவம் எத்தனை பேர் ஏமாற போகிறார்கள், துகிலுரியப்படப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

  இவ்வாறே இன்னும் ஒரு தினம் சந்தையை மேலே வைத்திருந்தால் போதும் அனைவரின் கவனமும் பங்குகளை வாங்குவதற்கு மாறிவிடும்.

  அவர்களின் எதிர்பார்ப்பும் அதுதானே, பொறுத்திருந்து பார்போம்.

  வார இறுதியை சந்தோசமாக களிக்கவும்.

  மீண்டும் திங்களன்று தங்களது வலைப்பூவில் சந்திப்போம்.

  நட்புடன்,
  மோகன்ராஜ்,
  கரூர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: