Archive for ஓகஸ்ட் 8th, 2008

சந்தையின் போக்கு

“தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்” என்பது நமது சந்தைக்கு இன்று மிக பொறுந்தும்……….

ஏன் என்றால் நேற்று இரவு தேள் கொட்டியது நம்ம பங்காளி “பெரிய அண்ணன்”  (அமெரிக்கா)  வீட்டில். அதை பார்த்து நம்ம ஆள் சும்மாவா இருப்பார், பதற மாட்டார் ??

ஏற்கனவே நம்ம அண்ணன் ரெம்ப களைத்துப்போய் மேலே ஓட முடியாமல்  சிரமபடுகிறார்.

இன்று மந்தமாக (கேப் டவுன் ஆகவும் வாய்ப்பு உள்ளது) ஆரம்பித்து நாள் நெடுகில் சரிவடையாலாம்.

ஏற்றம் தற்காலிகமானதுதான் என்று சொல்லி வந்தேன், அந்த தற்காலிகமான ஏற்றம் முடிவுற்றது என்று நம்புகிறேன்.

ரிலையனஸ் நிறுவன பங்குகள் நேற்றைய முடிவில் பலவீனம் அடைந்துள்ளது, கவனிக்க வேண்டிய விசயம்…..

ஜூலை 29 அன்று நான் குறிபிட்டது (5 வது பாய்ண்டாக) போல் 4640 ல் தடைபட்டு உள்ளது, உறுதி படுத்த இன்னும் ஒரு சில தினங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

இரு தினங்களுக்கு முன்பாக கூறியது போல் பணவீக்க விகிதம் 12.01 ஆக வெளி வந்துள்ளது.. (இதன் நம்பகதன்மை கேள்வி குறியாக உள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை 20% மேல் உயர்ந்து உள்ளது, ஆனால் பணவீக்க விகிதம் மட்டும் 5% அளவில் தான் உயர்ந்துள்ளதாக சொல்வது எப்படி என்று தெரியவில்லை….

உதாரணத்திற்கு – அரிசி  – 30/- அளவுக்கு உயர்ந்துள்ளது, ஒரு காலத்தில் ஏழைகளின் காய்கறி என்று சொல்லபட்ட கத்தரிக்காய் 36/- 40/- ல் உள்ளது.. நாம் பேசிக் கொண்டிருக்கும்  பணவீக்கம் தற்போது தான் அடித்தட்டு மக்களையும் பாதிக்க ஆரம்பித்து உள்ளது…..

4763 — 4720 — 4654 — 4602 — 4590 — 4566 –4509 — 4477 — 4465 — 4443

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்……  கவியரசு.

பிற்சேர்க்கை….

நேற்று குறிப்பிட்டது போல் 2.30 பேக்டர், கவனிக்க வேண்டிய விசயம் எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக திசை மாறுகிறது.

நேற்றைய பதிவுக்கு – பின்னூட்டம் இட்ட திரு மோகன் ராஜ், அருண், செந்தில் குமார், சாஜ், சுரேஷ், கனகராஜ், சரவணன், திருமதி லதா, திருமதி ஜான்சி  ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

திரு மோகன்ராஜ் – தாங்கள் கூறுவது உண்மைதான் நகைச்சுவை உணர்வு மிக அவசியம் ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் வீட்டிலும் / வெளியிலும் நம்மை சுற்றி ஒரு இறுக்கமான வேலியை போட்டு கொண்டுள்ளோம். (நானும் தான்) அது தவறு.

திரு கனகராஜ் – டாக்டர் ரெட்டி சார்ட் பார்த்தேன் டபுள் பாட்டம் இல்லை எப்படி சொன்ன்னீர்கள் என்று தெரிய வில்லை,  ஒரு ஹெட் அன்ட் ஸோல்டர் உருவாகிறது போல் தோன்றுகிறது,  புள்ளிஷ் ட்ரேன்ட் என்று எடுத்து கொள்ளலாம். வாழ்த்துகள். முய்ற்சிகள் தொடரட்டும்.  முடிந்த வரை சார்ட்டை பைலாக மாற்றி மெயிலில் அனுப்பினால் நன்றாக இருக்கும்.