பங்கு சந்தையின் போக்கு


இன்று நமது அண்ணன் அவர்கள் தடுமாறுவார், சிறிய அளவில் கேப் டவுன் ஆகவும் வாய்ப்புகள் உள்ளது……….

நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போல் ஆசை காட்டி மோசம் செய்து விட்டார்கள்.. மதியம் 1 மணி நேரத்தில் பலர் துகிலுரியபட்டார்கள்…..  சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் இந்த நிலை வருத்தம் / கோபத்தை உன்டாக்குகிறது.

கடந்த சில தினங்களில் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் 2.30 பேக்டர் எனப்படும் 2.00 – 2.45 இடைபட்ட வர்த்தக நேரத்தில் நமது எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக சந்தையின் போக்கை மற்றுகிறார்கள்.

இன்றும் நாளையும் மிக கவனமாக இருக்க வேண்டும்…. 4720 என்பதே சவாலாக தெரிகிறது…..

அதிகம் உணர்ச்சி வசப்படாதீர்கள்…. நாமும் சந்தையின் போக்கில் தான் போக வேண்டும்.. ஆனால் இது தொடர் ஓட்டம் போன்றது……  4700 என்று சொல்கிறார்களா 4600 இல் அடுத்தவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்ர்ப்போம்…..

ஜப்பான் / சீன சந்தைகள் சரிவுகளில் உள்ளது (9.00 )  இது இங்கும் பிரதிபலிக்கும்…..

என்னை பொறுத்தவரையில்….. இதற்கு மேலே செல்ல வாய்ப்புகள் மிககுறைவு…. கீழே இழுக்கும் காரணிகள் அதிகம் உள்ளது…. இன்றைய போக்கினை பொறுத்து அடுத்த கட்டங்கள் முடிவு ஆகும்….

4768  — 4643  — 4582  — 4538 — 4494 4443  — 4431 — 4328

கல்வியின் நோக்கம், காலியான மூளையை எதையோ சொல்லி நிரப்புவதல்ல. அறிவாலோ, உண்ர்வாலோ அடைபட்டுப் போயிருக்கின்ற மூளையை ஒரு திறந்த மனமாக மாற்றுவதுதான், திறந்திருக்கிற மனமே, சிக்கல்களுக்குச் சிறந்த தீர்வுகளைத் தரும்……..  படித்தது.

நேற்றைய பதிவுக்கு – பின்னூட்டம் இட்ட திரு மோகன் ராஜ், பாலா,அருன், செந்தில் குமார், கண்ணன், பாட்ஷா, பைஸல், திருமதி லதா, திருமதி ஜான்சி  ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

FAIZAL –  முதலீடுகள் என்றும் செய்யலாம், ஆனால் நல்ல வாய்புகளை தேடவேண்டும்…  சிறியவர்களுக்கு பயன்படும் வகையில் வரும் திங்கள் முதல், தினசரி 2 நல்ல டெக்னிகல் மூவ்மென்டம் உள்ள பென்னி ஸ்டாக் எனப்படும் சிறு பங்குகளின் பரிந்துரைகளை வழங்க உள்ளேன்…. உங்களின் வலைபூவினை பார்த்தேன்…நன்றாக உள்ளது… தொடர்ந்து செய்யுங்கள்… வாழ்த்துகள்.

வாசகர்களே… உங்களிடம் நாங்கள் எதிபார்ப்பது ஒன்றும் இல்லை…. உங்களின் அன்பை தவிர… உங்களின் அன்பினை / கருத்துகளை / சந்தேகங்களை / ஆலோசனைகளை பின்னூட்டம் இடுவதில் தவறில்லையே………?

மேலும் நீஙகள் அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும் செய்திகள்(பார்த்தது/படித்தது/கேட்டது) இருந்தால் சொல்லுங்கள், இங்கு பதியலாம்… அனைவருக்கும் பயன் படட்டும்.

Advertisements

9 responses to this post.

 1. உயர்திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய வலைப்பூவில் இன்றைய கட்டுரையின் ஆரம்பத்திலிலேயே என்னுடைய பெயரை பார்த்தபொழுது மிகவும் மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும் இருந்து.

  போதாக்குறைக்கு தாங்கள் மீண்டும் ஒருமுறை இன்றைய கட்டுரையில் என்னுடைய பெயரை எழுதி விட்டீர்கள்.

  தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களைப் போன்ற டெக்னிகல் அனலிசிஸ் தெரிந்து தனக்கென ஒரு வலைப் பூவையும் அதன் மூலம் நிறைய நண்பர்களையும் கொண்டிருக்கும் ஒரு வல்லுநர் தன்னுடைய வலைப் பூவில் எங்களைப் போன்றோர்களை குறிப்பிடுவது உண்மையிலேயே ஒரு சந்தோசமான விஷயம்.

  தாங்கள் புதிதாக ஒரு புத்தகம் எழுதுவதாக தெரிவித்துள்ளீர்கள். இந்த விஷயம் என்போன்ற அனைவருக்கும் மிகவும் மிகிழ்ச்சியான ஒன்று.

  இதன்மூலம் நாங்கள் நிறைய விசயங்களை தங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்தி தருவதற்கு அனைவரின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

  தங்களுடைய பணி என்றும் தொடர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

  நட்புடன்,
  மோகன்ராஜ்.

 2. திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய நிப்டி பற்றிய நடை மிகவும் அருமையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது. தங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று நினைக்கிறேன்.

  சந்தை தரும் அதிக மன அழுத்தங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு அருமையான உணர்வு.

  தற்போதைய சூழலில் நிப்டி 4800 என்ற நிலையினை அடைவதற்கு சாத்தியக் கூறுகள் ஏதாவது இருக்கிறதா என்று தாங்கள் தெரியபடுத்தவும்.

  தாங்கள் தொடரும் இந்த சேவைக்கு எங்களைப் போன்றோரின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.

  மிக்க நன்றி.

  இனிய காலை வணக்கம்.

 3. Thanks to enter my name in your blog.I felt very happy.Nowadays i am becoming more informative by reading your blog.

 4. hello sai sir,

  thukkam gra vaarthaiya kuuda thookala soldra unga eluthu nadiku again oru hats off.. na iniku romba late. unga blog padichitu than tv poten.
  kela vanthu mela poiruku. neenga oru nalla techinical josiyakarar.
  small valu stock movements pathi neega sollaporathu enna mathiri irukavangaluku kanippa useful a irukum.

  tnx sir.

 5. நீங்கள் வெளியிட போகும் புத்தகத்தை

  மிக ஆவலுடன் விரைவில் எதிபார்கிறோம்.

  வாழ்த்துகள்……………………………………….

  KEEP IT UP SAI SIR……………………………….

 6. i think very lucky that we have a guidence from the well known technical analysors saravanan and sai. keep it up sai.thanks to enter my name in your issue.once again thanks a lot

 7. hello sai sir,
  Dr.Reddy’s labs chart made a double bottom.Am i correvt. From that bottom now it is 608/-.Pl.Explain.

 8. இது தொடர் ஓட்டம் போன்றது…… 4700 என்று சொல்கிறார்களா 4600 இல் அடுத்தவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்ர்ப்போம்…..

  Could anyboby explain what does this means?

 9. Hi Sai… hearty thanks… we all miss u for the past 2 days during market hours… please start the yahoo chat soon… 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: