சந்தையின் போக்கு


தற்போதைய சந்தையின் ஏற்றம், நேற்றைய பதிவின் பின்னூட்டத்தில் திரு.மோகன்ராஜ் அவர்கள் கூறியது போல், பிரமிக்க வைக்கிறது/பயத்தை உருவாக்குகிறது.

தற்போதைய ஏற்றம்  இன்றைய நிலையில், (அதற்கு வாய்ப்புகள் இல்லை) , 4655 என்ற நிலையில் அல்லது 4720 நிலையில் தடைபடவேண்டும். 

ஏற்றம் / இறக்கம் இரண்டுக்கும் ஏதோ காரணம் தேவைபடுகிறது…..  சில நாட்களுக்கு முன்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு…. இன்று அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு….

நினைவூட்டல்

ஒரு அரசு 4 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறது, கடந்த 1 வருடகாலமாக பல பொருளாதார நெருக்கடிகள், சந்தைகளில் பல சரிவுகள். ஆனால் அப்போது எல்லாம் ஒன்றும் செய்யவில்லை, திடிரென்று ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து காப்பற்றி கொள்ள பல தில்லாலங்கடி வேலைகளை செய்து இந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய போது 3800 ல் இருந்து 4537 நிலைக்கு 4 வர்த்தக தினங்களில் கொண்டு சென்றார்கள், ஏதோ இந்த அரசு இருக்கும் ஒரு சில மாதங்களில் பெரிய பொறுளாதார வளர்ச்சியை மாயஜாலம் போல் நடத்தி விடுவார்கள் என்ற எண்ணத்தில். (எந்த அரசும் இறுதி நாட்களில் நாட்டின் வளர்ச்சிக்கு பாடு பட போவதில்லை அப்படி செய்தால் ஓட்டு கிடைக்காது/ ஓட்டுக்காக செய்யும் செயல்கள் வளர்ச்சியை பாதிக்கும்)…..

4700-4800 என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி என்ன செய்தார்கள் …. அடுத்த 3 வர்த்தக தினங்களில் 377 புள்ளிகள் சரிவடைய செய்தார்கள். ஏன்… முதல் 7 நாள் இந்த அரசின் மேல் இருந்த நம்பிக்கை 25/7/2008 காலையில் இல்லாமல் போனது ஏன்….. இதில் ஏமாந்தது யார் சிறியவர்கள் தான்….. அவர்களின் வேஸ்டிகள் தான் உருவபட்டன (ஜனவரி சரிவின் போது -ஒரு எஸ் எம் எஸ் ஜோக் உலாவந்தது – சில உள்ளாடை/UNDER WEAR நிறுவன பங்குகளை  வாங்குங்கள் அதன் வளர்ச்சி மிக பெரிய அளவில் இருக்கும் ஏனென்றால் அதுதான் நமக்கு மிஞ்சியது என்று)

கடந்த சில தினங்களில் ஏற்பட்ட சர்வேதச சுனக்கம் சரிவுகள் நமது அஞ்சா நெஞ்சனை எதுவும் செய்யவில்லை,  இன்று அங்கு ஏற்பட்டுள்ள உற்சாகத்தை கண்டு நமது அண்ணன் நிப்டி அவ்ர்கள் மயங்குகிறாரா இல்லையா என்று பார்ப்போம்…  நாளை வெளிவர இருக்கும் பணவீக்க விகிதம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்….  (ஒரு மாதத்தில் நல்ல அரிசியின் விலை 23/- ல் இருந்து 29/- ஆக உயர்ந்து உள்ளது… )

இன்றை தினவர்த்தகதில் – அசோக் லைலான்ட் /மாருதி நிருவன பங்குகளை கவனிக்கவும்…

ரிலயன்ஸ் நிறுவன (RNRL/RELCAP/RElIND) பங்குகள் சிறிய சரிவுகளை சந்திக்கலாம்.

4761.6 –4650.3–4592.64481.34423.6–4312.3–4254.6

இன்றைய பொருளாதாரத்தில்
“இருப்பவன் –  இல்லாதவன்”
 என்ற நிலை மாறி
“தெரிந்தவன்- தெரியாதவன்”
 என்ற வேறு பாடே முன் நிற்கிறது
 ஆம்,
முடிவெடுக்கத் தெரிந்தவர்கள் – தெரியாதவர்கள்
 என்ற நிலைதான்
இன்றைய  உலகை,
 நமது வாழ்க்கையைத் 
தீர்மானிக்கப் போகிறது!      –      அன்மையில் படித்தது
================================================================
திரு. மோகன் ராஜ் தங்களின் ஆதரவு என்னை மிகவும் சந்தோசபடுத்துகிறது…..

தாங்கள் குறிப்பிட்டது போல் 4480ல் இல்லை 4537 ல் தான் டபுள் டாப் உருவாகி உள்ளது.. ஆனால் அது இன்று மேலே உடைக்கும் பட்சத்தில் கானாமல் போகும்…. எல்லோரும் கேப் அப் என்ற நிலையில் இருக்கும் போது நாம் அதை அதை எதிர்பார்க்க முடியாது, ஆனால் பாருங்கள் எப்படி முடிவடைந்து உள்ளது 10 பாய்ன்ட் முன்ன பின்ன இல்லாமல்….. 4630 களில் தடைபட்டாலும் நாம் டபுள் டாப்பாக எடுக்கலாம்

தொடர்ந்து தங்களின் ஆதரவு தேவை ….. நம்மை போன்ற சாமனியர்களுக்கு பயன்படும் / புரியும் படியான ஒரு 50 பாட்டன் களை, ஒவ்வொன்றுக்கும் 4/5 சார்ட் களுடன் கூடிய ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் இறங்கி உள்ளேன்… அதற்காக நிறைய சார்ட்களை சேகரிக்கிறேன்…. (உதாரணத்திற்கு டபுள்பாட்டம் உருவாவ்தில் இருந்து – இறுதி வரை 4 படங்கள்). ஆகையால் தாங்கள் அடையாளம் கானூம் புதிய தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கவும்.

மேலும் பின்னூட்டம் வாயிலாக ஆதரவு நல்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி…….

 

Advertisements

10 responses to this post.

 1. வணக்கம் திரு.சாய் சார்,
  அழகான விளக்கம்,எளிமையான நடை தொடரனும் உங்கள் சேவை.
  எனது கணினியில் ஏட்பட்ட குளறுபடியால் கடந்த ஒரு வாரமாக ப்லோக்
  காண இயலவில்லை.இந்த உரையாடல் கூட இணையதள கடையில் இருந்து
  தான் எழுதுகிறேன்.இது போல் பல சுவாரசியமான தகவல்கள் உங்களிடமிருந்து
  எதிர்பார்கிறேன்…..நன்றி

 2. திரு சாய் அவர்களுக்கு,

  தங்களுடைய சந்தையினைப் பற்றிய கட்டுரைக்கு மிகவும் நன்றி. தங்களுடைய சந்தையின் மீதான பார்வையும் அதை தங்கள் வலைப் பூவில் தாங்கள் வெளிப்படுத்தும் விதமும் மிகவும் அருமை,,,,

  சொல்லப்போனால் சந்தை நேற்று ஏற்படுத்திய வியப்பிலிருந்தே இன்னும் முழுதாக மீளாத நிலையில் மீண்டும் பெடரல் வங்கியின் முடிவு வடிவில் மீண்டும்,,,,,,,,

  நன்றாக சந்தையினை ஆட்டுவிக்கிறார்கள் ஒரு பாம்பாட்டியினைப் போல்,,,,,,,

  பொறுமை மட்டுமே இந்த மாதிரியான சமயங்களில் கை கொடுக்கும் உற்ற நண்பன் என்று நினைக்கிறேன்,,,,,,

  இனிய காலை வணக்கத்துடன்,
  மோகன்ராஜ்.

 3. thanks a lot for your views .keep it up sai sir
  thank u so much

 4. EASILY UNDERSTANDABLE CHARTS.GOOD EFFORT

 5. திரு.மோகன்ராஜ் மற்றும் திரு.சாய் அவர்களுக்கு நன்றி… சந்தை நேற்று ஏற்படுத்திய வியப்பிலிருந்தே இன்னும் முழுதாக மீளாத நிலையில் பொறுமையாக இருக்கும் படி கூறி இருக்கின்றீர்கள்….

  தற்போது உள்ள நிலையில் எப்போது புதிய முதலீடு துவங்கலாம் என்று கூறினால் நன்றாக இருக்கும்.

  திரு.சாய் அவர்கள் ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறி இருக்கின்றீர்கள் தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். உங்களின் முதல் பிரதி வாங்க நான் ரெடி…

 6. திரு சாய் அவர்களுக்கு,

  தங்களின் எழுத்து நடை மிகவும் ரசிக்கும் படியும் பயனுள்ளதாகவும் உள்ளது. மென்மேலும் தங்களது பனி சிறப்பாக தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.

  நன்றி.

 7. Thanks a lot Sai…

 8. thx for your info ..keep it up

 9. Posted by கண்ணன் on ஓகஸ்ட் 7, 2008 at 2:12 முப

  திரு சாய் அவர்களுக்கு,
  தங்களுடைய சந்தையினைப் பற்றிய கட்டுரைக்கு மிகவும் நன்றி.மென்மேலும் தங்களது பனி சிறப்பாக தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.

  நன்றி.

 10. THANKS………………….

  SIR…………………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: