Archive for ஓகஸ்ட் 6th, 2008

சந்தையின் போக்கு

தற்போதைய சந்தையின் ஏற்றம், நேற்றைய பதிவின் பின்னூட்டத்தில் திரு.மோகன்ராஜ் அவர்கள் கூறியது போல், பிரமிக்க வைக்கிறது/பயத்தை உருவாக்குகிறது.

தற்போதைய ஏற்றம்  இன்றைய நிலையில், (அதற்கு வாய்ப்புகள் இல்லை) , 4655 என்ற நிலையில் அல்லது 4720 நிலையில் தடைபடவேண்டும். 

ஏற்றம் / இறக்கம் இரண்டுக்கும் ஏதோ காரணம் தேவைபடுகிறது…..  சில நாட்களுக்கு முன்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு…. இன்று அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு….

நினைவூட்டல்

ஒரு அரசு 4 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறது, கடந்த 1 வருடகாலமாக பல பொருளாதார நெருக்கடிகள், சந்தைகளில் பல சரிவுகள். ஆனால் அப்போது எல்லாம் ஒன்றும் செய்யவில்லை, திடிரென்று ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து காப்பற்றி கொள்ள பல தில்லாலங்கடி வேலைகளை செய்து இந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய போது 3800 ல் இருந்து 4537 நிலைக்கு 4 வர்த்தக தினங்களில் கொண்டு சென்றார்கள், ஏதோ இந்த அரசு இருக்கும் ஒரு சில மாதங்களில் பெரிய பொறுளாதார வளர்ச்சியை மாயஜாலம் போல் நடத்தி விடுவார்கள் என்ற எண்ணத்தில். (எந்த அரசும் இறுதி நாட்களில் நாட்டின் வளர்ச்சிக்கு பாடு பட போவதில்லை அப்படி செய்தால் ஓட்டு கிடைக்காது/ ஓட்டுக்காக செய்யும் செயல்கள் வளர்ச்சியை பாதிக்கும்)…..

4700-4800 என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி என்ன செய்தார்கள் …. அடுத்த 3 வர்த்தக தினங்களில் 377 புள்ளிகள் சரிவடைய செய்தார்கள். ஏன்… முதல் 7 நாள் இந்த அரசின் மேல் இருந்த நம்பிக்கை 25/7/2008 காலையில் இல்லாமல் போனது ஏன்….. இதில் ஏமாந்தது யார் சிறியவர்கள் தான்….. அவர்களின் வேஸ்டிகள் தான் உருவபட்டன (ஜனவரி சரிவின் போது -ஒரு எஸ் எம் எஸ் ஜோக் உலாவந்தது – சில உள்ளாடை/UNDER WEAR நிறுவன பங்குகளை  வாங்குங்கள் அதன் வளர்ச்சி மிக பெரிய அளவில் இருக்கும் ஏனென்றால் அதுதான் நமக்கு மிஞ்சியது என்று)

கடந்த சில தினங்களில் ஏற்பட்ட சர்வேதச சுனக்கம் சரிவுகள் நமது அஞ்சா நெஞ்சனை எதுவும் செய்யவில்லை,  இன்று அங்கு ஏற்பட்டுள்ள உற்சாகத்தை கண்டு நமது அண்ணன் நிப்டி அவ்ர்கள் மயங்குகிறாரா இல்லையா என்று பார்ப்போம்…  நாளை வெளிவர இருக்கும் பணவீக்க விகிதம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்….  (ஒரு மாதத்தில் நல்ல அரிசியின் விலை 23/- ல் இருந்து 29/- ஆக உயர்ந்து உள்ளது… )

இன்றை தினவர்த்தகதில் – அசோக் லைலான்ட் /மாருதி நிருவன பங்குகளை கவனிக்கவும்…

ரிலயன்ஸ் நிறுவன (RNRL/RELCAP/RElIND) பங்குகள் சிறிய சரிவுகளை சந்திக்கலாம்.

4761.6 –4650.3–4592.64481.34423.6–4312.3–4254.6

இன்றைய பொருளாதாரத்தில்
“இருப்பவன் –  இல்லாதவன்”
 என்ற நிலை மாறி
“தெரிந்தவன்- தெரியாதவன்”
 என்ற வேறு பாடே முன் நிற்கிறது
 ஆம்,
முடிவெடுக்கத் தெரிந்தவர்கள் – தெரியாதவர்கள்
 என்ற நிலைதான்
இன்றைய  உலகை,
 நமது வாழ்க்கையைத் 
தீர்மானிக்கப் போகிறது!      –      அன்மையில் படித்தது
================================================================
திரு. மோகன் ராஜ் தங்களின் ஆதரவு என்னை மிகவும் சந்தோசபடுத்துகிறது…..

தாங்கள் குறிப்பிட்டது போல் 4480ல் இல்லை 4537 ல் தான் டபுள் டாப் உருவாகி உள்ளது.. ஆனால் அது இன்று மேலே உடைக்கும் பட்சத்தில் கானாமல் போகும்…. எல்லோரும் கேப் அப் என்ற நிலையில் இருக்கும் போது நாம் அதை அதை எதிர்பார்க்க முடியாது, ஆனால் பாருங்கள் எப்படி முடிவடைந்து உள்ளது 10 பாய்ன்ட் முன்ன பின்ன இல்லாமல்….. 4630 களில் தடைபட்டாலும் நாம் டபுள் டாப்பாக எடுக்கலாம்

தொடர்ந்து தங்களின் ஆதரவு தேவை ….. நம்மை போன்ற சாமனியர்களுக்கு பயன்படும் / புரியும் படியான ஒரு 50 பாட்டன் களை, ஒவ்வொன்றுக்கும் 4/5 சார்ட் களுடன் கூடிய ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் இறங்கி உள்ளேன்… அதற்காக நிறைய சார்ட்களை சேகரிக்கிறேன்…. (உதாரணத்திற்கு டபுள்பாட்டம் உருவாவ்தில் இருந்து – இறுதி வரை 4 படங்கள்). ஆகையால் தாங்கள் அடையாளம் கானூம் புதிய தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கவும்.

மேலும் பின்னூட்டம் வாயிலாக ஆதரவு நல்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி…….