சந்தையின் போக்கு


ஒரு புரியாதா புதிராக சந்தை கடந்த 3 நாட்களாக இருந்து  வருகிறது…..  தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பது நமது சந்தைக்கு மிக பொறுந்தும்………..

ஆனால், வெள்ளி கிழமை ஏற்பட்ட ஐரோப்ப சந்தைகளின் சரிவு, அமெரிக்க சந்தையின் சிறிய தடுமாற்றம். நேற்று ஆசிய சந்தைகளின் மந்தமான நிலை/சரிவுகள், எதையும் கண்டு ஆஞ்சாமல் ஒரு “அஞ்சா நெஞ்சானாக” இருப்பதை பார்த்து சந்தோசப்பட முடியவில்லை.. பயம் தான் தோன்றுகிறது. 

அதே நேரம் பெரிய ஏற்றமோ சரிவோ இல்லாமல் அமைதியாக இருப்பதும் யோசிக்க வேண்டிய விசயம், மதில் மேல் பூனையாகத்தான் உள்ளது….  அது எங்கள் பக்கம் தான் குதிக்கும் என்றும். இல்லை, இல்லை எங்கள் பக்கம் தான் குதிக்கும் என்றும் பலர் (சாட் போனவர்களும், லாங் போனவர்களும்) சொல்லி வருகிறார்கள்.   நாமும் பொறுத்து இருந்து பார்ப்போம்….. 

நேற்றும் அமெரிக்க/ஐரோப்ப சந்தைகள் சிறிய சரிவுகளுடன் தான் முடிவடைந்துள்ளது.. தற்போதைய ஆசிய சந்தைகளும் (நிக்கி யை தவிர) சரிவுகளுடன் தான் துவங்கியுள்ளது, அதிலும் குறிப்பாக ஹாங் செங்கின் சரிவை (400 புள்ளிகள்) கவனிக்க வேண்டும்.

அஸ்திவாரம் ஸ்ட்ராங், ஆனால் தற்போது கட்டப்படும் மேல்தளம் தான் பலவீனமாக உள்ளது.

4553 – 44864439 – 4391 4335 – 4211

===========================================================

 யூனியன் வங்கியின் டபுள் பாட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்று,  யாரெல்லாம் கவனித்தீர்கள் என்று எனக்கு தெரியாது,  141.50 பாருங்கள்.

தங்களில் பலர் – உத்தியோகம் / தொழில் போன்ற பல காரணங்களால் தினவர்த்தகம் செய்ய இயலாமல் இருக்கலாம், ஆனால் இன்வெஸ்ட்மென்ட்  மற்றும் ஃப்யூச்சர் ரில் ஈடுபாட இது ஒரு நல்ல கான்செப்ட்(டபுள் பாட்டம்). சொல்லி தருவது பெரிய விசயம் இல்லை, நீங்கள் எத்தனை பேர் அதை பயன் படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம், தினசரி தேடினால் 10 டபுள் பாட்டம் கிடைக்கும்.  தேடுங்கள், சொல்லுங்கள் டீம் வொர்க் செய்வோம்.

“வானத்தில் வல்லூறுகளுடன் வட்டமிட்டுப்பறக்க ஆசைபட்டால், வான்கோழிகளோடு ஓடி கொண்டிருக்காதிர்கள்! – எங்கோ படித்தது”

Advertisements

9 responses to this post.

 1. கட்டுரை மிகவும் பயனுள்ளது, உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது வாழ்த்துகள்

  அந்த பூனை எந்த பக்கம் குதிக்கும் என்ற உங்கள் நிலைப்பாடு என்ன என்று சொல்ல வில்லை.

  வாழ்த்துகள்

 2. aaha athukulla padichuttingalaa….

  i have told my view as

  //அஸ்திவாரம் ஸ்ட்ராங், ஆனால் தற்போது கட்டப்படும் மேல்தளம் தான் பலவீனமாக உள்ளது//

  thanks kala, keep write your coments…. your coments will boost us to write more…

 3. THANKS SAI SIR…………….

 4. திரு சாய் அவர்களுக்கு,

  தங்களின் சந்தையின் போக்கினைப் பற்றிய கட்டுரை மிகவும் அருமை,,,,,,,,”மதில் மேல் பூனையாக தற்போது சந்தை உள்ளது” என்று தாங்கள் சொன்னது மிகவும் சரியான ஒன்று.

  நேற்றும் சரி, இன்றும் சரி சந்தை இவ்வாறுதான் செல்லும் என்று யாராலும் கணிக்க முடியாத ஒரு நிலையில் சந்தை தற்போது உள்ளது,,,,,,,,

  யூனியன் பேங்க் பற்றிய டபுள் பாட்டம் டெக்னிக் மிகவும் அருமை,,,,,,,,,,தற்போது நிப்டி ௪௪௮0 என்ற நிலைகளை அடையும்போது டபுள் டாப் ஏற்படும்போல் தெரிகிறது,,,,,

  தாங்கள்தான் சரியாக கூற வேண்டும் ,,,,,,,,,,,

  இனிய காலை வணக்கம்,,,,

 5. திரு சாய் அவர்களுக்கு,

  தங்களின் சந்தையின் போக்கினைப் பற்றிய கட்டுரை மிகவும் அருமை,,,,,,,,”மதில் மேல் பூனையாக தற்போது சந்தை உள்ளது” என்று தாங்கள் சொன்னது மிகவும் சரியான ஒன்று.

  நேற்றும் சரி, இன்றும் சரி சந்தை இவ்வாறுதான் செல்லும் என்று யாராலும் கணிக்க முடியாத ஒரு நிலையில் சந்தை தற்போது உள்ளது,,,,,,,,

  யூனியன் பேங்க் பற்றிய டபுள் பாட்டம் டெக்னிக் மிகவும் அருமை,,,,,,,,,,தற்போது நிப்டி 4480 என்ற நிலைகளை அடையும்போது டபுள் டாப் ஏற்படும்போல் தெரிகிறது,,,,,

  தாங்கள்தான் சரியாக கூற வேண்டும் ,,,,,,,,,,,

  இனிய காலை வணக்கம்,,,,

 6. simple(all can understand even new traders)and perfect views.thank you sai. keep it up.

 7. தமிழில் பங்குச்சந்தை பற்றி கூறும் அருமையான பதிவு.உண்மையாகவே பணம் பண்ண அனைவரும் படிக்கவேண்டிய பதிவு.

 8. வணக்கம் சாய்,

  தற்போது இந்த சந்தையின் ஏற்றத்தைப் பார்க்கும்போது மிகவும் பயமாக இருக்கிறது. ஒன்றும் விளங்கவில்லை.

  சிறிதும் இறக்கமே இல்லாத ஏற்றம், இதனை எந்த வகையில் ஏற்றுக் கொள்வது என்றே தெரியவில்லை. சந்தையினைப் பார்க்கும்போது ஒரு மிரட்சிதான் தற்போது ஏற்படுகிறது.

  எனினும் பொறுத்திருந்து பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் கண்கூடாகவே தெரிகிறது,

  இது போன்ற வேளைகளில் எங்களுக்கு உங்களைப் போன்றோர்களின் கட்டுரைகள்தான் வழிகாட்டி.

  தங்கள் சேவையினை என்றும் தொடரவும்,,,,,

  வாழ்த்துக்கள்,,,,,,,,,,,,

 9. Posted by கனகராஜ் on ஓகஸ்ட் 10, 2008 at 1:24 பிப

  வணக்கம் திரு சாய் கணேஷ் தங்களின் பதிலுக்கு நன்றி. முதல் மறுமொழிக்கே பதில் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.மீண்டும் நன்றி. கனகராஜ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: