22.07.2008 – சந்தையின் போக்கு


அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம், இன்று நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த பரபரப்புடன் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பங்கு வர்த்தகர்கள் பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

 

இன்றை அரசியல் நிகழ்வுகளால் ஏற்பட போகும் ஏற்றமோ, இறக்கமோ நிரந்தரமானது கிடையாது. தற்காலிகமாக ஏற்படப்போகும் ஒரு ஏற்ற/இறக்கத்திற்கு ஒரு காரணம், தேவைபடுகிறது. அவ்வளவுதான்.

 

ஜுன் மாத இறுதியில் இருந்து, சந்தையை மிகப்பெறும் சரிவுகளில் இருந்து தாங்கி பிடிக்கும் சக்தியாக, கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி அன்று ஏற்பட்ட (GAPE DOWN) (4350) இருந்து வருகிறது. அதேபோல் மேலே செல்ல விடாமல் தடுக்கும் விதமாக 3800/900 நிலைகளில் அடிக்கடி இரு இடைவெளி உருவாகிறது. தற்பொழுது ஜூலை 17 அன்று ஏற்பட்ட ஒரு இடைவெளி உள்ளது. (GAP UP-3800-3900).

  

இன்றைய நிகழ்வுகள், 4350 என்ற நிலைக்கு அல்லது 3800 என்ற நிலைக்கு செல்ல வழி வகுக்கும். ஆனால் அது நிரந்தரமான ஒரு ஏற்றமாகவோ, இறக்கமாக இருக்க வாய்ப்புகள் இல்லை.

 

 =======================================================================================================

 கடந்த ஒரு மாத காலமாக  உங்களில் பலருடன் யாஹூ வில். பேசிவந்தேன், இதில் நீங்கள் தெரிந்து கொன்டது என்ன என்பது எனக்கு தெரியாது.. ஏன் என்றால் உங்களில் பலருக்கு தங்களை பற்றி அறிமுகப் படுத்தி கொள்வதற்கே நிறைய தயக்கம்.

 

 ஆனால் நான் இந்த ஒரு மாத காலத்தில் தெரிந்து கொன்டது நிறைய! இந்த பங்கு சந்தை எத்தனை விசாலமானது… இதற்குள் மறைந்து கிடக்கும் வாய்ப்புகள் எவ்வளவு அது எப்படிபட்டது… என்றும்,  அரட்டை அடித்து கொன்டே டெக்னிகல் பார்த்த பொழுது இன்னும் நிறைய கற்று கொன்டேன்.

 

 

நன்பர்களே தயவு செய்து இந்த மார்கெட்டை நேசியுஙகள். நம்புங்கள். அதனுடை போக்கில் செல்ல பழகுங்கள், அதனை நாம் போகும் பாதையில் இழுக்க முயற்சிக்காதிர்கள்.. கோடானு கோடி மக்கள் இதில் உள்ளார்கள். ஒவ்வொருத்தருடைய விருப்பதிற்கு ஏற்ப அதன் போக்கு மாறாது. 

 

தினசரி 100 பாய்ன்ட் நிப்டி குறைந்தால் இன்னும் 40 நாளில் சந்தையை மூடிவிடுவார்களா. அப்படி ஆகாது நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, நாளையும் இருக்கும்.. எப்பவும் இருக்கும். நம் கவலை எல்லாம், நாம் இங்கு வெற்றியாளர்களின் வரிசையில் இருக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும், என்பதாகத்தான் இருக்க வேண்டும்..

 

இன்று பலர் என்னிடம் கேட்கும் கேள்வி, சார் சென்செக்ஸ் மீண்டும் எப்பொழுது 22000 க்கு மேலே போகும், ஏன் என்று கேட்டால், ரெம்ப லாஸ் சார். சந்தை ரெம்ப மோசமாக உள்ளது. அப்படியானால் மார்கெட் 20000 மேல் இருக்கும் போது நீங்கள் அதிகம் லாபம் பார்த்திர்களா என்றால். இல்ல சார் அந்த சமயமும் நஷ்டம் தான் என்று அதற்கான 10 காரணங்களை அடுக்குவார்கள். 

 

எனக்கு தெரிந்து மோசமான நிலையிலும் பல லட்சங்களை சம்பாத்தித்தவர்களும், மிக உச்சத்தில் / நல்ல ஏற்ற த்துடன் இருந்த காலத்தில் பல லட்சங்களை இலந்தவர்களும் இங்கு அதிகம் உள்ளார்கள்.

 

எல்லோரையும் டென்ஷன் ஆகாமல் பொறுமையாக இருஙகள் என்று சொல்கிறேன் யாரும் கேட்டதாக தெரிய வில்லை. எல்லோரும் இன்னும் ஒரு பரபரப்புடன் தான் உள்ளார்கள்.  எனக்கு தெரிந்து இந்த தொழிலில் வெற்றி பெற மிக மிக அவசியம் பொறுமை…. பொறுமை… பொறுமைதான்.

 

நான் தெய்வ  நம்பிக்கை அதிகம் உள்ளவன், யார் என்ன மதம் மொழியாக இருந்தாலும் அவரவர் தெய்வத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். நான் எப்பவும் ஒரு விசயத்தை முடியாது என்று சொல்வதே கிடையாது. பலருக்கு தெரியும், சார் எனக்கு இந்த அளவு லாஷ் என்ன பண்ணலாம் என்று கேட்கும் போது கூட ரெம்ப ஈஷி எடுத்து விடலாம் கவலை படவேண்டாம் என்றுதான் பேசுவேன். தயவு செய்து நெகடிவிவ் வைப்ரேஷனில் இருக்காதிர்கள். உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்க்கை அமையும், நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷனில் எப்பொழுதும் இருக்க பழகுங்கள். ஒரு நல்ல என்னங்களுடன் நம்பிக்கையுடன் உங்கள் நாளை துவங்குங்கள். அவநம்பிக்கையுடன் துவங்காதிர்கள்.

 

சார் மார்கெட் எப்படி என்று கேட்கும் போது கூட மார்கெட் மோசம் என்று தப்பா பேசுவது கிடையாது. நான் அந்த அளவிற்கு இந்த தொழிலை நேசிக்கிறேன். ஏன் என்றால் அது என்றும் ஏமாற்றுவது கிடையாது, நாம் ஏமாறுகிறோம், அதற்கு அதனை பொறுப்பாக்குகிறோம். மீண்டும் நினைவூட்டுகிறேன், அதன் கைபிடித்து அதன் போக்கில் செல்ல பழகுவோம், நாமாக ஒரு முடிவு எடுத்து விட்டு அதனை நம் பக்கம் வரவில்லை என்று சொல்ல வேண்டாம்.

 

எங்கள் பகுதியில் (தென்மாவட்டங்களில்) கண்மாய் அழிவு என்று ஒரு மீன் பிடி திருவிழா நடக்கும் அச்சமயம் எல்லோரும் ஒரு வித டென்ஷனா கரையில் காத்து கிடப்பார்கள். ஊர் பெரியவர் வெள்ளை கொடி அசைத்த வுடன் எல்லோரும் உள்ளே புகுந்து ஒரே அடிதடி முட்டி மோதி மீன்களை பிடிப்பார்கள். (எனக்கும் சின்ன வயதில் அனுபவம் உன்டு)

 

அப்படிதான் இங்கு அதிகமானவர்கள் என்னவோ இன்றே மார்கெட் கடைசி என்பது போல் நிறைய சம்பாதிக்க ஆசை படுகிறார்கள். அது தவறு தினசரி 2/3 டிரேடு பண்ணுங்க போதும். சிறுக சிறுக சேருங்கள்/சேமியுங்கள். சரியாக செய்தால் இதைவிட நல்ல தொழில் வேறு எதுவும் இல்லை.

 

எனக்கு தெரிந்ததை உங்களுடன் என்றும் பகிர்ந்து கொள்ள ஆர்வம் உள்ளது,

 

இது அறிவுரையோ ஆலோசனையோ கிடையாது, எனது அனுபவமே, நான் செய்த தவறுகள் ஏராளம். அதில் கற்ற பாடங்களும் அதிகம்.

Advertisements

12 responses to this post.

 1. GOOD SAI…………..KEEP IT UP.

 2. Posted by K. Mohanraj on ஜூலை 22, 2008 at 10:22 முப

  Dear Sai,,,,

  Your this article is very nice and each and every traders at this mind,,,,,,,,,,,,,,

  Patience is very important as your thought,,,,,,,,,,,,,,,

  Thanks for updating your blog,,,,,,,,,,,,

  Good Morning and Have a nice day,,,,,,,,,,,,,

 3. hello sir.

  your thoughts super,i am always ur side sir.you motivate me a lot.your article has made me come another round in share market with enthu. thankyou.

  oscarbharathi

 4. Sai,

  Good and nice article, yes all your words are correct. Thanks for your timely updates.

  Regards,
  Ganesh.

 5. Excellent Sai… thanks for sharing…

  Cheers
  Balaji

 6. Posted by JHANSI RANI on ஜூலை 22, 2008 at 12:28 பிப

  YOUR VIEW IS CORRECT.OPPORTUNITIES ARE ALWAYS UNDER OUR FEET.

 7. நீங்கள் கற்ற பாடங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

 8. Dear Sai,

  Really a good article !! I am feeling bad that I couldn’t utilise your service since I am in UK. I hope I could join with you in couple of months.

  Thanks,
  Selva

 9. சாய்கணேஷ்,

  இப்பொழுதுதான் படித்தேன்! மிக அருமையான எழுத்து நடை! சொல்ல வந்ததை நூறு சதவீதம் சரியாக எழுதி உள்ளீர்கள்.. தங்களின் அனுபவபூர்வமான கருத்துக்கள் நிச்சயம் அனைவருக்கும் பயனளிக்கும்..நிறைய எழுத ஆசை! தனிமடலில் தொடர்பு கொள்கிறேன்

 10. dear sai,
  your article is very good. thankyou for your sharing. we are waiting for your advices .
  thanks,
  suresh

 11. hi sir

  i need ur views about airtel and rel cap july future….

 12. u r right sai …plz keep it up i expect more article like this

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: