Archive for ஏப்ரல் 9th, 2008

ஆப்ஷன்ஸ்

ஆப்ஷன்ஸ்:

பெரும்பாலனவர்களுக்கு ஆப்ஷன்ஸ் என்ன என்பது தெரிவதில்லை. இன்று பல புத்தகங்கள் எளிய தமிழில் இதை எழுதி வெளிவந்துள்ளது. ஆர்வத்தில் நாம் அனைவருமே புத்தகம் வாங்குகிறோம். ஆனால், நம்மில் பலர் அதை திறந்து பார்ப்பதோடு சரி… இதற்கு நானும் விதிவிலக்கு இல்லை.. ஒரு பக்க கட்டுரையை வாசிப்பதிலே நமக்கு இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் ஒரு புத்தகத்தை படிப்பதிலே இருப்பதில்லை..

ஆகையால், முடிந்த அளவு நம்மை போன்ற சாமனியர்களுக்கு தேவையான அளவில் சுருக்கமாக எழுதுகிறேன்..

இதை எழுதுவதற்கு மேலும் ஒரு காரணம் நான் அதிகம் ஆப்ஷன் செய்கிறேன்.. எனது வலைபூவில் தினசரி ஒரு பரிந்துரை இடம் பெற உள்ளது. அது அனைவருக்கும் பயன்பட வேண்டும்…

ஆப்ஷன் – மிக குறைவான பண முதலீட்டில் நல்ல லாபம். சில சமயங்களில் மிக மிக அதிக லாபம் சம்பாதிப்பதற்கு ஒரு வழி. என்னடா இவன் லாபத்தை பற்றி சொல்கிறானே… அப்ப நஷ்டம்?…அதற்கும் வாய்ப்பு உள்ளது. தவறான முடிவு எடுக்கும் சமயத்தில் (வாங்க வேண்டியதை விற்பது, விற்க வேண்டியதை வாங்கும் பொழுதும்) அதை சந்திக்க நேரிடலாம். பயம் வேண்டாம். நாம் பாசிட்டிவ்வாக சிந்திப்போம், சரியான முடிவை சரியான நேரத்தில் எடுப்போம்.

ஆப்ஷன் என்றால் என்ன?..

இருவருக்கு இடையே ஏற்படும் ஓப்பந்தம் (அக்ரிமென்ட்). ஒருவர் வாங்குபவர் மற்றவர் விற்பவர். ஆனால், ஒரு வித்தியாசமான ஒரு வாய்ப்பினை வாங்குபவருக்கு கொடுக்கிறது. ஒப்பந்த காலத்திற்குள் ஒப்பந்த விலையில் வாங்கி கொள்ளலாம். அதே சமயம் வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

A buyer has right to buy but no obligation to buy

என்னடா குழப்புகிறானே… என்று நினைக்க வேண்டாம்….

எளிய உதாரணம்…. நமக்கு தெரிந்த ஒருவர் ஒரு இடத்தை விற்க முன் வருகிறார். 1000 சதுர அடி நிலம். 100 ரூபாய் விலை. நாம் ரூ.5000 அல்லது ரூ.10000 முன்பணம் கொடுத்து ஒரு மாதத்திற்குள் கிரயம் செய்து கொள்கிறேன் என்று அக்ரிமென்ட் செய்கிறோம்.

இந்த ஒரு மாத காலத்தில் நாம் என்ன செய்யலாம்?.

1. நமக்கு இடம் தேவை இல்லை, வேறு ஒரு நபர் 110 அல்லது 120 என்ற விலைக்கு வாங்க  தயார் என்றால்,

2. நாம் 10*1000=10000/- + நமது முன் பணத்தினை பெற்று கொன்டு அக்ரிமென்டை மாற்றி கொடுத்து விடலாம். (இதில் லாபம்)

3. மீத பணத்தை வழங்கி நமது பெயரில் கிரயம் செய்து கொள்ளலாம்.

4. வேறு ஒருவருக்கு ரூ.95/- என்ற விலையில் கை மாற்றலாம்.  (இதில் நஷ்டம்),

5.  இல்லை  என்றால் வேண்டாம் என்று கை கழுவி விடலாம். என்னவாகும் நமது முன் பணம் அனைத்தும் போய்விடும்.

இதேதான் ஆப்ஷனும்.

இங்கு லாபம் என்பது நம் பங்கின் விலை வருங்காலத்தில் என்ன ஆகும் என்று கணிப்பதை பொறுத்துத்தான் இருக்கிறது. கணிப்பு தவறானால் நஷ்டம் தான்.

தற்பொழுது நான் இன்று (09/04/2008) சொன்ன பரிந்துரையை எடுத்து கொள்வோம்.

பரிந்துரை – அசோக் லைலான்ட் கால் ஆப்ஷன் 37.50 ப்ரிமியம் 1.00

எக்ஸ்பயரி – ஏப்ரல். (ஃபியூச்சர்&ஆப்ஷன் ஒப்பந்தம் காலாவதியாகும் நாள். அந்த அந்த மாதத்தின் கடைசி வியாழக்கிழமை).லாட் சைஸ் -4775.

இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை பாருங்கள்.

நிலம். அசோக் லைலான்ட்
1000 சதுர அடி லாட் சைஸ் -4775
முன் பணம் பிரிமியம்
விலை 100 விலை 37.50
அக்ரிமென்ட் 1 மாதம் அக்ரிமென்ட் எக்ஸ்பயரி ஏப்ரல் -25

நான் இன்று 4 லாட் 1.20 என்ற பிரிமியத்தில் காலையில் வாங்கினேன்.

எனது முதலீடு 4*4775=19100*1.20 = 22920

அதை 1.70 என்ற நிலையில் முடித்து கொண்டேன்.

லாபம் – 19100*0.50 = 9550

இன்னொரு நலல செய்தி ஆப்ஷனில் புரோக்கர் கமிஷன் மிக குறைவு.

ஆப்ஷனில் இவ்வளவு லாபமா? என்று என்ன வேண்டாம். ஒரு வேளை விலை குறைந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன்..

0.20/0.30 பைசா நஷ்டத்திற்கு கொடுத்து இருக்கலாம், அல்லது டெக்னிகல் சார்ட் பார்த்து விட்டு விலையேற காத்திருக்கலாம்.

எது எப்படியோ எனக்கு அதிக படியான நஷ்டம் ஏற்பட வாய்ப்பு 23000க்கு உள்ளேதான். அதே சமயம் அசோக் லைலன்டின் விலை கேஷ் மர்க்கெட்டில் 40/- தொட்டு விட்டது
என்றால் – எனது லாபம் பல மடங்காக இருக்கலாம். பிரிமியம் 4/5 சென்றிருந்தால் நீங்களே கணக்கு போட்டு பார்க்கவும்.

ஆப்ஷன் வகைகள் :   கால் ஆப்ஷன்.

                                                    புட் ஆப்ஷன்.

இன்று இது போதும் என்று நினைக்கிறேன்….

ஆப்ஷன் டிரேடு செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டுவிட்டதற்காக எதையாவது செய்து பார்க்க வேண்டாம். (எனது அனுபவம், ஆரம்ப காலத்தில் கையை மட்டும் சுட்டு கொள்ளவில்லை உடம்பு முழுக்க சூடு.)

ஒரு பங்கின் விலை ஏற்ற இறக்கம் நிச்சயமாக தெரிகிறதா? ஓ.கே…. ஏறும் என்றால் கால் ஆப்ஷனை வாங்குங்கள்,

இறங்கும்போது புட் ஆப்ஷனை வங்குங்கள்.

 

வாழ்த்துக்கள்.
என்றென்றும் நட்புடன்….
சாய் கணேஷ்.

P.s – எனக்கு தெரிந்ததை என்னை போன்ற சாதரண மக்களுக்காக எழுதி உள்ளேன்.

சேற்றில் கிடக்கும் செந்தாமரை

சிறிய காலம் காத்திருக்க தயாராக உள்ளவர்கள்  SWAN MILLS பங்கில் முதலீடு செய்யலாம்.

தற்சமயம் – 52/- என்ற அளவில் கிடைக்கிறது.   

52 வார அதிகபட்ச விலை – 159/-

52 வார குறைந்தபட்ச விலை – 43/-

முன்னணி புரோக்கிங் நிறுவனம் எதிபார்க்கும் விலை – 200+ நான் எதிபார்க்கும் விலை –

125/- மினிமம்.

Alps Industries பங்கினை தற்போதைய (39/-) விலையில் வாங்கலாம்.  எதிபார்க்கும் விலை – 125-150/-

52 வார அதிகபட்ச விலை – 99/-

52 வார குறைந்தபட்ச விலை –  33/-

 Vijay Shanthi Builders  பங்கினை தற்போதைய (70/-) விலையில் வாங்கலாம்.  எதிபார்க்கும் விலை 110-150

52 வார அதிகபட்ச விலை – 219/-

52 வார குறைந்தபட்ச விலை –  50/-

Disclaimer

An investment involves considerable risk. Invest at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations. The writers may or may not be investing in the securities mentioned.

F/O குறிப்புகள்

MARGET - இன்று சரிவுகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன...
 
ஆப்ஷன் - 09/04/2008
Buy  - ASHOKLEYLAND  - APR CALL 37.50/- @ 1.00 TARGET 2.10 S/L - 34/-SPOT.
பியூச்சர்ஸ்  - 09/4/2008
IT NIFTY 
ACTOIN  - SHORT SELL @ 3877
TARGET  - 3788
S/L   - 3897
 
JR NIFTY
ACTOIN  - SHORT SELL @ 8122
TARGET  - 7822
S/L   - 8152
 
NIFTY (NSE50) 
ACTOIN  - SHORT SELL @ 4760
TARGET  - 4668
S/L   - 4775
 
BANK NIFTY
ACTOIN  - BUY @ 6850
TARGET  - 6965
S/L   - 6810
 
Please note 
1. ஒவ்வொரு டிரேடுக்கும் ஒரு லாட் (lot) மட்டும் எடுக்கவும்.
2. ஸ்டாப் லாஸ் - கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியது.
3. டார்கெட் - இங்கு உள்ளது முற்றிலும் டெக்னிகல் அடிப்படையாக கொண்டது. ஆனால், அதையே எதிர் பார்த்து இருக்க வேண்டாம், 
 அதற்கு முன்பாகவே வெளியேறுங்கள். Somthing is better than nothing.
 

Think better, Think Fast –  Ideas are no one’s monopoly

Dhiru Bhai Ambani